Monday, March 23, 2026

த³ஶாவதாரஸ்துதி 02-08-2026

 

Radhe Krishna 22-03-2026

In Praise of Vishnu in His Ten Incarnations

1.மத்ஸ்ய 

த³ஶாவதாரஸ்துதி : 1
ப்ரோஷ்டீ ²ஶவிக் ³ரஹ ஸுநிஷ்டீ ²வநோத் ³த⁴த-
விஶிஷ்டாம்பு ³சாரிஜலதே⁴
கோஷ்டா ²ந்தராஹிதவிசேஷ்டாக ³மௌக⁴ 
பரமேஷ்டீ ²டி³த த்வமவமாம் ।
ப்ரேஷ்டா ²ர்கஸூநுமநுசேஷ்டா ²ர்த ²மாத்மவித
 ³தீஷ்டோ யுகா ³ந்தஸமயே
ஸ்தே ²ஷ்டா ²த்மஶ ்ரு ’ங்க ³த்⁴ரு ’தகாஷ்டா ²ம்பு ³வாஹந வராஷ்டாபத ³ப்ரப⁴தநோ ॥ 1॥

2. ஹயக்ரீவ 

க²ண்டீ ³ப⁴வத் ³ப³ஹுளடி ³ண்டீ ³ரஜ்ரு ’ம்ப⁴ண-
ஸுசண்டீ ³ க்ரு ’தோ த³தி⁴ மஹா-
காண்டா ³தி சித்ர க³தி ஶௌண்டா ³த்³ய -
ஹைமரத ³ பா⁴ண்டா ³ ப்ரமேய சரித ।
சண்டா ³ஶ்வகண்ட ²மத ³ ஶுண்டா ³ல- 
து³ர்ஹ்ரு ’த³ய க³ண்டா ³ பி⁴-க ²ண்டா ³கர தோ ³-
ஶ்சண்டா ³ மரேஶஹய துண்டா ³க்ரு ’தே- த்³ரு’ஶம
க ²ண்டா ³மலம் ப்ரதி ³ஶ மே ॥ 2॥

3.  கூர்மா

கூர்மாக்ரு ’தே த்வவது நர்மாத்ம ப்ரு ’ஷ்ட ²த்⁴ரு ’த 
ப⁴ர்மாத்ம மந்த ³ர கி ³ரே
த⁴ர்மாவலம்ப ³ந ஸுத⁴ர்மாஸதா ³கலித
ஶர்மா ஸுதா⁴விதரணாத் ।
து³ர்மாந ராஹுமுக ² து³ர்மாயி தா ³நவஸு
மர்மாபி⁴பே⁴த ³ந படோ
த⁴ர்மார்க காந்தி வர வர்மா- ப⁴வாந் -
பு⁴வந நிர்மாண தூ⁴த விக்ரு ’தி : ॥ 3॥

4. தந்வந்தரி 

                    த⁴ந்வந்தரே ऽங்க ³ருசி த⁴ந்வந்தரே ऽரிதரு-                        த⁴ந்வந்ஸ்தரீப⁴வஸுதா⁴ -
பா⁴ந்வந்தராவஸத ² மந்வந்தராதி⁴க்ரு ’த -
தந்வந்தரௌஷத⁴நிதே⁴ ।
த³ந்வந்தரங்க ³ஶுகு ³த³ந்வந்தமாஜிஷு -
விதந்வந்மமாப் ³தி⁴ தநயா-
ஸூந்வந்தகாத்மஹ்ரு ’-த³தந்வராவயவ- 
தந்வந்தரார்திஜலதௌ⁴ ॥ 4॥


5,6  மோகினி 

யா க்ஷீரவார்தி⁴மத ²நாக்ஷீணத ³ர்பதி ³தி-
ஜாக்ஷோபி⁴தாமரக ³ணா-
பேக்ஷாப்தயே ऽஜநி வலக்ஷாம்ஷுபி ³ம்ப ³ஜித-
³தீக்ஷ்ணாலகாவ்ரு ’தமுகீ ² ।
ஸூக்ஷ்மாவலக் ³நவஸநாக்ஷேபக்ரு ’த்குச- 
கடாக்ஷாக்ஷமீக்ரு ’தமநோ -
தீ ³க்ஷாஸுராஹ்ரு ’தஸுதா⁴க்ஷாணிநோ ऽவது
ஸு ரூக்ஷேக்ஷணாத் ³த⁴ரிதநு : ॥ 5॥

6.

ஶிக்ஷாதி ³யுங்நிக ³ம -தீ ³க்ஷாஸுலக்ஷண-
பரிக்ஷாக்ஷமா-விதி⁴ஸதீ
தா ³க்ஷாயணீ க்ஷமதி ஸாக்ஷாத் ³ரமாபிந
ய தா ³க்ஷேபவீக்ஷணவிதௌ⁴ ।
ப்ரேக்ஷாக்ஷிலோப⁴கரலாக்ஷார ஸோக்ஷித 
பதா ³க்ஷேபலக்ஷிதத⁴ரா
ஸா ऽக்ஷாரிதாத்மதநு பூ⁴க்ஷாரகாரிநிடி
லாக்ஷாக்ஷமாநவது ந: ॥ 6॥








7. வராஹி 

நீலாம்பு ³தா ³-ப⁴ஶுப⁴ ஶீலாத் ³ரிதே ³ஹத⁴ர -
கே ²லாக்⁴ரு ’தோத⁴தி⁴து⁴நீ -
ஶைலாதி ³யுக்த நிகி ²லேலா கடாத் ³யஸுர 
தூலாடவீத ³ஹந தே ।
கோலாக்ரு ’தே ஜலதி⁴ காலாசலாவயவ -
நீலாப் ³ஜத ³ம்ஷ்ட்ர த⁴ரணீ -
லீலாஸ்பதோ ³ருதர மூலாஶியோகி ³வர 
ஜாலாபி⁴வந்தி ³த நம : ॥ 7॥

8. நரசிம்ஹ 

த³ம்போ⁴லிதீக்ஷ்ணநக ² ஸம்பே⁴தி ³தேந்த் ³ரரிபு -
கும்பீ⁴ந்த் ³ர பாஹி க்ரு ’பயா
ஸ்தம்பா⁴ர்ப⁴ காஸஹநடி ³ம்பா⁴ய த³த்தவர 
க³ம்பீ⁴ரநாத ³ ந்ரு ’ஹரே ।
அம்போ⁴தி⁴ஜாநுஸரணாம்போ⁴ஜ
பூ⁴பவநகும்பீ⁴நஸேஶக ²க³ராட்
கும்பீ⁴ந்த் ³ரக்ரு ’த்தித⁴ர ஜம்பா⁴ரிஷண்முக 
²முகா ²ம்போ⁴ருஹாபி⁴நுத மாம் ॥ 8॥

9, 10  வாமன 

பிங்கா ³க்ஷ -விக்ரம துரங்கா ³தி ³ 
ஸைந்ய சதுரங்கா ³ வலிப்த த³நுஜா -
ஸாங்கா ³த்⁴வரஸ்த ² ப³லி ஸாங்கா ³வபாத ஹ்ரு ’ஷி-
தாங்கா ³ மராலிநுத தே ।
ஶ ்ரு ’ங்கா ³ரபாத ³நக ² துங்கா ³க்³ர-பி⁴ந்ந கந 
காங்கா ³ண்ட ³பத்திதடிநீ -
துங்கா ³தி மங்க ³ள -தரங்கா ³பி⁴பூ⁴த ப⁴ஜ 
காங்கா ³க⁴ வாமந நம : ॥ 9॥









10.

த்⁴யாநார்ஹ வாமநதநோநாத ² பாஹி 
யஜமாநா ஸுரேஶவஸுதா⁴ -
தா ³நாய யாசநிக லீநார்த ²வாக் ³வஶித
நாநாஸத ³ஸ்யத ³நுஜ ।
மீநாங்கநிர்மலநிஶாநாத ²கோடில
ஸமாநாத்ம மௌஞ்ஜிகு ³ண கௌ -
பீநாச்ச ²ஸூத்ரபத ³யாநாதபத்ரகர
காநம்யத ³ண்ட ³வரப்⁴ரு ’த் ॥ 10 ॥

11.  பரசுராம 

தை⁴ர்யாம்பு ³தே⁴ பரஶுசர்யாதி⁴க்ரு ’த்தக ²ல-
வர்யாவநீஶ்வர மஹா -
ஶௌர்யாபி⁴பூ⁴த க்ரு ’தவீர்யாத்மஜாதபு⁴ஜ
வீர்யாவலேபநிகர ।
பா⁴ர்யாபராத⁴குபிதார்யாஜ்ஞயாக ³லித
நார்யாத்மஸூக ³லதரோ
கார்யாபராத⁴மவிசார்யார்யமௌக⁴ஜயி
வீர்யாமிதா மயி த³யா ॥ 11 ॥

12 - 22 ராம - in between ஸ்லோக 15 - சீதா 

ஶ்ரீராமலக்ஷ்மணஶுகாராம பூ⁴ரவது
கௌ ³ராமலாமிதமஹோ -
               ஹாராமரஸ்துத யஶோராமகாந்திஸுத                    நோராம லப்த கலஹ  ।
ஸ்வாராமவர்யரிபு வீராமயார்தி⁴கர 
சீராமலாவ்ரு ’தகடே
ஸ்வாராம த³ர்ஶநஜமாராமயாக ³த
ஸுகோ⁴ராமநோரத ஹர ॥ 12 ॥







ஶ்ரீகேஶவப்ரதி ³ஶநாகேஶ ஜாதகபி-
லோகேஶ ப⁴க் ³நரவிபூ⁴ -
ஸ்தோகேதரார்திஹர-ணாகேவலார்தஸுக-
 ²தீ⁴கேகி-காலஜலத ³ ।
ஸாகேதநாத ²வரபாகேரமுக் ²யஸுத 
கோகேந ப⁴க்திமதுலாம்
ராகேந்து ³ பி ³ம்ப ³முக ² காகேக்ஷணாபஹ 
ஹ்ரு ’ஶீகேஶ தே ऽங்க்⁴ரிகமலே ॥ 13 ॥

ராமே ந்ரு ’ணாம் ஹ்ரு ’த³பி⁴ராமேநராஶிகுல-
பீ⁴மே மநோ ऽத்³யரமதாம்
கோ ³மேதி ³நீஜயிதபோ ऽமேயகா ³தி⁴ஸுத-
காமேநிவிஷ்ட மநஸி ।
ஶ்யாமே ஸதா ³ த்வயி ஜிதாமேயதாபஸஜ
ராமே க³தாதி⁴கஸமே
பீ⁴மேஶசாபத ³லநாமேயஶௌர்யஜித-
வாமேக்ஷணே விஜயிநி ॥ 14 ॥

காந்தாரகே ³ஹக ²ல-காந்தாரடத் ³வத ³ந-
 காந்தாலகாந்தகஶரம்
காந்தாரயாம்பு ³ஜநிகாந்தாந்வவாயவிது
⁴காந்தாஶ்மபா⁴தி ³பஹரே ।
காந்தாலிலோலத ³ள -காந்தாபி⁴ஶோபி⁴தில-
-காந்தாப⁴வந்தமநுஸா
காந்தாநுயாநஜித காந்தாரது ³ர்க ³கட-
காந்தா ரமாத்வவது மாம் ॥ 15 ॥

தா ³ந்தம் த³ஶாநநஸுதாந்தம் 
த⁴ராமதி⁴வஸந்தம் ப்ரசண்ட ³தபஸா
க்லாந்தம் ஸமேத்ய விபிநாந்தம் த்வவாப 
யமநந்தம் தபஸ்விபடலம் ।
யாந்தம் ப⁴வாரதிப⁴யாந்தம் மமாஶு 
ப⁴க ³வந்தம் ப⁴ரேண ப⁴ஜதாத்
ஸ்வாந்தம் ஸவாரித ³நுஜாந்தம் த⁴ராத⁴ர-
நிஶாந்தம் ஸ தாபஸவரம் ॥ 16 ॥



ஶம்பாப⁴சாபலவ-கம்பாஸ்தஶத்ருப ³ல-
ஸம்பாதி ³தா-மிதயஶா :
ஶம் பாத ³தாமரஸ-ஸம்பாதிநோ ऽலமநு
கம்பாரஸேந தி ³ஶ மே ।
ஸம்பாதிபக்ஷிஸஹஜம் -பாபராவண
ஹதம் பாவநம் யத ³க்ரு ’தா :²
த்வம் பாபகூபபதிதம் பாஹி மாம் தத ³பி
 பம்பாஸரஸ்தடசர ॥ 17 ॥

லோலாக்ஷ்யபேக்ஷிதஸுலீலாகுரங்க ³வத
⁴கே ²லாகுதூஹலக ³தே
ஸ்வாலாபபூ⁴மிஜநி-பா ³லாபஹார்யநுஜ-
பாலாத் ³ய போ⁴ ஜயஜய ।
பா ³லாக் ³நித ³க்³த⁴புரஶாலாநிலாத்மஜநி
பா ²லாத்தபத்தலரஜோ
நீலாங்க ³தா ³தி ³கபிமாலாக்ரு ’தாலிபத
 ²மூலாப்⁴யதீதஜலதே⁴ ॥ 18 ॥

தூணீரகார்முக க்ரு ’பாணீகிணாங்க
பு⁴ஜபாணீரவிப்ரதிமபா :⁴
க்ஷோணித⁴ராலிநிப⁴-கோ⁴ணீமுகா ²தி ³க⁴ன 
வேணீஸுரக்ஷணகர : ।
ஶோணிப⁴வந்நயந -கோணீஜிதாம்பு³நிதி⁴
பாணீரிதார்ஹணமணி -
ஶ்ரேணீவ்ரு ’தாங்க்⁴ரி-ரிஹ வாணீஶஸூநுவர
வாணீஸ்துதோ விஜயதே ॥ 19 ॥

ஹுங்காரபூர்வமத ² டங்காரநாத ³மதி
பங்காவதா⁴ர்யசலிதா
லங்காஶிலோச்சய-விஶங்காபதத் ³பி⁴து ³ர-
 ஶங்கா ऽऽ ஸ யஸ்ய த⁴நுஷ : ।
லங்காதி⁴போ ऽமநனுத யம் காலராத்ரிமிவ 
ஶங்காஶதாகுலதி⁴யா
தம் காலத ³ண்ட ³ஶதஸங்காஶகார்முக-
ஶராங்காந்விதம் ப⁴ஜ ஹரிம் ॥ 20 ॥




தீ⁴மாநமேயதநு-தா⁴மார்தமங்க ³ளத ³
நாமா ரமாகமலபூ⁴ -
காமாரிபந்நக ³ப-காமாஹிவைரிகு ³ரு-
ஸோமாதி ³வந்த் ³யமஹிமா ।
ஸ்தே ²மாதி ³நாபக ³த-ஸீமாவதாத்ஸக ²ல-
ஸாமாஜராவணரிபூ
ராமாபி⁴தோ ³ ஹரிரபௌ⁴மாக்ரு ’தி : 
ப்ரதன-ஸாமாதி ³வேத ³விஷய : ॥ 21 ॥

தோ ³ஷாத்மபூ⁴வஶது-ராஷாட ³திக்ரமஜ
ரோ ³ஷாத்மப⁴ர்த்ரு ’வசஸா
பாஷாணபூ⁴தமுநி-யோஷாவராத்மதனு 
வேஷாதி ³தா ³யிசரண : ।
நைஷாத ³யோஷித ³ஶுபே⁴ஷாக்ரு ’த³ண்ட ³ஜனி -
தோ ³ஷாசராதி ³ஶுப⁴தோ ³
தோ ³ஷாக் ³ரஜந்மம்ரு ’திஶோஷாபஹோ ऽவது ஸுதோ ³ஷாங்க்⁴ரிஜாதஹநநாத் ॥ 22 ॥

23 - 31 கிருஷ்ணா 

வ்ரு ’ந்தா ³வநஸ்த ²பஶுப்ரு’ந்தா ³வநம் -வினுத-
வ்ரு ’ந்தா ³ரகைகஶரணம்
நந்தா ³த்மஜம் நிஹதநிந்தா -³க்ரு ’தா ³ஸுரஜ-
நம் தா ³மப ³த்³த⁴ஜட ²ரம் ।
வந்தா ³மஹே வயமமந்தா ³வ-தா ³தருசி
மாந்தா ³க்ஷகாரிவத ³நம்
குந்தா ³லித ³ந்தமுத கந்தா ³ஸித-ப்ரப⁴த-
நுந்தா ³வராக்ஷஸஹரம் ॥ 23 ॥

கோ ³பாலகோத்ஸவக்ரு ’தாபார-ப⁴க்ஷ்யரஸ
ஸூபாந்நலோப(க)குபிதா
ஶாபாலயாபித-லயாபாம்பு -³தா ³லிஸலி-
லாபாயதா⁴ரிதகி ³ரே ।
ஸ்வாபாங்க -³த³ர்ஶநஜ தாபாங்க- ³ராக ³யுத
கோ ³பாங்க ³நாம்ஶுகஹ்ரு ’தி -
வ்யாபாரஶௌண்ட ³ விவிதா⁴பாயதஸ்த்வமவ 
கோ ³பாரிஜாதஹரண ॥ 24 ॥



கம்ஸாதி ³காஸத ³வதம்ஸாவநீபதி
விஹிம்ஸாக்ரு ’தாத்மஜநுஷம்
ஸம்ஸாரபூ⁴தமிஹ ஸம்ஸாரப ³த்³த⁴மந
ஸம் ஸாரசித்ஸுக ²தநும் ।
ஸம்ஸாத⁴யந்தமநிஶம் ஸாத்த்விக
வ்ரஜமஹம் ஸாத ³ரம் ப³த ப⁴ஜே-
ஹம்ஸாதி ³தாபஸரி-ரம்ஸாஸ்பத ³ம் பரம-
ஹம்ஸாதி ³வந்த் ³யசரணம் ॥ 25 ॥

ராஜீவநேத்ர விது ³ராஜீவ மாமவது 
ராஜீவகேதநவஶம்
வாஜீப⁴பத்திந்ரு ’பராஜீரதா ²ந்விதஜ
ராஜீவக ³ர்வஶமந ।
வாஜீஶவாஹ ஸிதவாஜீஶ தை ³த்யதநு
வாஜீஶபே⁴த ³கரதோ :³
ஜாஜீகத ³ம்ப ³நவராஜீவமுக் ²யஸும-
ராஜீஸுவாஸிதஶிர : ॥ 26 ॥

காலீஹ்ரு ’தா ³வஸத ²காலீயகுண்ட ³லிப
காலீஸ்த ²பாத ³நக ²ரா
வ்யாலீநவாம்ஶுகரவாலீக ³ணாருணித-
காலீருசே ஜய ஜய ।
கேலீலவாபஹ்ரு ’த-காலீஶத ³த்தவர-
நாலீகத் ³ரு’ப்ததி ³திபூ⁴ -
சூலீககோ ³பமஹி-லாலீதநூகு⁴ஸ்ரு ’ண-
தூ⁴லீகணாங்கஹ்ரு ’த³ய ॥ 27 ॥

க்ரு ’ஷ்ணாதி ³பாண்டு ³ஸுதக்ரு ’ஷ்ணாமந :ப்ரசுர-
த்ரு ’ஷ்ணாஸு-த்ரு ’ப்திக ரவாக்
க்ரு ’ஷ்ணாங்கபாலிரத க்ரு ’ஷ்ணாபி⁴தா⁴க⁴ஹர-
 க்ரு ’ஷ்ணாதி ³ஷண்மஹிள போ :⁴ ।
புஷ்ணாது மாமஜித நிஷ்ணாதவார்தி⁴முத ³
நுஷ்ணாம்ஶுமண்ட ³ல ஹரே
ஜிஷ்ணோ கி ³ரீந்த் ³ரத⁴ர விஷ்ணோ வ்ரு ’ஷாவரஜ
 த்⁴ரு ’ஷ்ணோ ப⁴வாந்கருணயா ॥ 28 ॥





ராமாஶிரோமணித⁴ராமாஸமேத-
 ப³லராமாநுஜாபி⁴த⁴ ரதிம்
வ்யோமாஸுராந்தகர தே மாரதாத தி ³ஶ 
மே மாத⁴வாங்க்⁴ரிகமலே ।
காமார்தபௌ⁴மபுரராமாவலீப்ரணய
வாமாக்ஷிபீததநுபா⁴
பீ⁴மாஹிநாத²முக ²வைமாநிகாபி⁴மத(நு)
 பீ⁴மாபி⁴வந்த் ³யசரண ॥29 ॥


ஸக்ஷ்வேளப⁴க்ஷ்யப⁴யத³க்ஷிஶ்ரவோக³ணஜ-
லாக்ஷேபபாஶயமநம்
லாக்ஷாக் ³ரு’ஹஜ்வலநரக்ஷோஹி³ம்ப³ப³க-
பை⁴க்ஷாந்நபூர்வவிபத :³ ।
அக்ஷாநுப ³ந்த⁴ப⁴வரூக்ஷாக்ஷர-ஶ்ரவண
ஸாக்ஷாந்மஹிஷ்யவமதீ
கக்ஷாநுயாநமத⁴-மக்ஷ்மாபஸேவந-
மபீ⁴க்ஷ்ணாப-ஹாஸமஸதாம் ॥ 30 ॥

23 - 31 கிருஷ்ணா 

சக்ஷாண ஏவ நிஜபக்ஷாக் ³ரபூ⁴த ³ஶ
ஶதாக்ஷாத்மஜாதி ³ஸுஹ்ரு ’தா ³ம் -
ஆக்ஷேபகாரிகுந்ரு ’பாக்ஷௌஹிணீ-
ஶதப ³லாக்ஷோப⁴தீ ³க்ஷிதமநா : ।
தார்க்ஷ்யாஸிசாபஶரதீக்ஷ்ணாரிபூர்வநிஜ
லக்ஷ்மாணி சாப்யக ³ணயந்
வ்ரு ’க்ஷாலயத்⁴வஜரிரக்ஷாகரோ ஜயதி 
லக்ஷ்மீபதிர்யது ³பதி : ॥ 31 ॥

32. புத்தா கல்கி 

பு³த்³தா⁴வதார கவிப ³த்³தா⁴நுகம்ப குரு 
ப³த்³தா⁴ஞ்ஜலௌ மயி த³யாம்
ஶௌத் ³தோ⁴த ³நிப்ரமுக ²ஸைத் ³தா⁴ந்திகாஸுக ³ம
பௌ ³த்³தா⁴க ³மப்ரணயந ।
க்ருத் ³தா⁴ஹிதாஸுஹ்ரு ’தி-ஸித் ³தா⁴ஸிகே ²டத⁴ர-
 ஶுத் ³தா⁴ஶ்வயாந கமலா-
ஶுத் ³தா⁴ந்த மாம் ருசிபிநத் ³தா⁴கி ²லாங்க ³ 
நிஜமத் ³தா⁴வ கல்க்யபி⁴த⁴ போ :⁴ ॥ 32 ॥

33.  நாராயணா 

ஸாரங்க ³க்ரு ’த்தித⁴ரஸாரங்க ³வாரித⁴ர-
 ஸாரங்க ³ராஜவரதா ³-
ஸாரம் க³தா ³ரிதரஸாரம் க³தாத்மமத ³-
ஸாரம் க³தௌஷத⁴ப ³லம் ।
ஸாரங்க ³வத்குஸுமஸாரம் க³தம் ச தவ 
ஸாரங்க ³மாங்க்⁴ரி-யுக ³ளம்
ஸாரங்க ³வர்ணமபஸாரம் க³தாப் ³ஜமத ³
ஸாரம் க³தி ³ம்ஸ்த்வமவ மாம் ॥ 33 ॥

34.  பலஸ்துதி 

க்³ரீவாஸ்யவாஹதநுதே ³வாண்ட ³ஜாதி ³-
த³ஶபா⁴வாபி⁴ராமசரிதம்
பா⁴வாதிப⁴வ்யஶுப⁴தீ⁴வாதி ³ராஜயதி-
பூ⁴வாக் ³விலாஸநிலயம் ।
ஶ்ரீவாக ³தீ⁴ஶமுக ²தே ³வாபி⁴நம்யஹரி-
ஸேவார்சநேஷு பட ²தா -
மாவாஸ ஏவ ப⁴வி-தாவாக் ³ப⁴வேதர
ஸுராவாஸலோகநிகரே ॥ 34 ॥

இதி ஶ்ரீமத் ³வாதி ³ராஜபூஜ்யசரண விரசிதம்
ஶ்ரீத ³ஶாவதாரஸ்துதி : ஸம்பூர்ணம்
பா⁴ரதீரமணமுக் ²யப்ராணாந்தர்க ³த ஶ்ரீக்ரு ’ஷ்ணார்பணமஸ்து
Encoded by Anand Ravipati
Proofread by Meera Tadipatri(mtadipatridvaita.net), Shrisha Rao (shrao@dvaita.org)
dashavatarastuti.pdf 5

Sunday, January 18, 2026

மனம் உடைந்த முரளி

ராதே கிருஷ்ணா 18-01-2026


மனம் உடைந்த முரளி 


அம்பத்தூரில் ஏகாம்பர ஐயர் தெருவில் கந்தசுவாமி அவர்களின் வீட்டில் 1950ம் வருடம் ஜூன் மாதம் 5ம் தேதியில் பிறந்தேன். LIC ரங்கா ராவ் லட்சுமி தம்பதியினருக்கு இரண்டாவதாக பிறந்தேன். எனது அக்கா பாமா அவர்கள் முதலில் பிறந்தார்கள், அடுத்து நான் பிறந்தேன். குடும்பத்தில் மூத்த மகனாகப்பிறந்தேன். மூத்தவனாகப்பிறந்தவன் படும் கஷ்ட நஷ்டங்களைப்பற்றி நான் விவாதிக்க வரவில்லை.  எனக்கு அடுத்ததாக பிருந்தா, சந்திரா , மற்றும் அடுத்து அனந்தபத்மநாபன் 1959ல் பிறந்தான், ஆறாவதாக ராகவேந்திரன் 1961ம் ஆண்டு பிறந்தான்.

மூத்தவனாகப்பிறந்ததால் குடும்பத்தலைவரின் பொறுப்புகளில் நானும் பங்கேற்க வேண்டும் என்றாகியது. அப்பா அவருக்குரிய கட்டுப்பாட்டுகளோடு அவருக்கு துணையாக அம்மாவும் நடந்துகொண்டார்கள்.  முதலில் அக்கா பாமாவின் திருமணம் 1971ம் வருடம் நடந்தது. பாவா அவர்கள் டெலிக்ராப் ஆபீசில் பனி புரிந்தார். எனது அக்கவின் திருமணம் நடந்தபோது எனக்கு உபநயனம் நடந்தது. அவர்களுக்கு இரட்டையர் என்று  ஒரு மகளும் மகனும் இருவருக்கும் ஒரு மணி நேரம் வித்தியாசத்தில் 1974ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதியில் பிறந்தனர்.

அது ஒரு சுவையான சம்பவம், இப்போது அதைப்பற்றி விவரிக்கப்போவதில்லை. அடுத்ததாக பிருந்தாவிற்கு திருநெல்வேலி மாப்பிள்ளையுடன் இனிதாக திருமணம் நடந்தது. அவளை புகுந்தவீட்டிற்கு நான் அழைத்துச்சென்று விட்டு வந்தேன்.  அவர்கள் ஆவடிக்கு அருகில் கோவர்தகிரியில் லட்சுமிபுரம் இடத்தில் வீடு அமைத்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் ரங்கநாதன் சத்யநாராயணா என்றும் சூர்யகலா என்று பெண்ணும் பிறந்து வளர்ந்தார்கள்.  சந்திராவிற்கு அனந்தபத்மநாபன் என்பவருக்கு மனம் முடித்து மகன் ஒன்று மகள் ஒன்று பிறந்து வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அதன்பிறகு அனந்தபத்மநாபன் அனந்தவராத சதுர்தசி அன்று பிறந்தான். டிகிரி படிப்பு முடித்து சேஷாசயீ என்பவரது மகள் ஜெயந்தியை மணந்து அமெரிக்காவில் பிறந்த தன இரண்டு மகள்கள்களுக்கு மனம் முடித்து இன்பமாக வரழ்ந்து வருகின்றனர். இளையபிள்ளையாக ராகவேந்திரன் 1961ல் பிறந்து ஆன் மூலம் அரசாளும் என்பதற்கு ஏற்ப விஜயலக்ஷ்மி என்பவரை மணந்து இரண்டு மகள்களைப்பெற்று வளர்த்து மணமுடித்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.

நம் கதைக்கு வருவோம். 1966ம் ஆண்டு பள்ளிப்படிப்பு முடித்து, அப்பாவின் விருப்பத்திற்கு நியூ காலேஜில் சேர்ந்து படித்தேன். மகர ராசியில் பிறந்த நான் தனது உச்ச கிரகமான சனி வாசம் செய்யும் இடத்திலேயே பிறந்தேன்.

சனி விளையாட ஆரம்பித்தது. PUC யில் மதிப்பெண் குறைவாகப்பெற்றதால் அதன் பிறகு மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். அதற்குள் ஒரு வருடம் வீணாகுமே என்று ஆவடி பாலிடெக்னிக்கில் சேர்ந்து எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ சேர்ந்து, விருப்பப்படமாக எலக்ட்ரானிக்ஸ் எடுத்து 1970 ல் முடித்து வந்தேன். 

முதலில் டன்லப் பாக்டரியில் பராமரிப்பு பணியில் இரண்டு வாரம் வேலை செய்தேன். பிறகு கொரட்டூர் துணை மின் நிலையத்தில் தொழில் பழகுணராக சேர்ந்து ஒருமாதம் பனி புரிந்தேன். 

அப்பா அவர்கள் என்னை கடிந்துகொண்டு , வேலை தேடும் விளம்பரங்களைப்பார்ப்பதையே இல்லை என்று கேட்டார். IIT யில் வேலை சேர விளம்பரம் வந்துள்ளது என்றார். அதற்கு நான் அனுப்பி எனக்கு அபப்ளிகேஷன்  வந்து விட்டது என்றேன், காண்பித்துவிட்டேன். 

அப்பாவின் சாஸ்வதநிதியின் மாதாந்தரியத்தொகையை நான் ஆதம்பாக்கம் சென்று கட்டிவந்தேன்.

பிருந்தாவின் திருமணத்திற்கு என்னால் ஆனா உய்தவி செயதேன். அம்பத்தூரில் ப்ருத்விபக்கத்தில் இருக்கும் சுதாவின் சித்தி சித்தப்பா இருந்தார்கள். அவர்கள் மூலம் திருவல்லிக்கேணியில் இருக்கும் திரு, வெங்கோபாச்சார் நாகம்மாள் அவர்களின் மகள் சுதாவை அம்பத்தூரில் சித்தி வீட்டில் பெண் பார்த்து அக்டோபர் 30ம் தேதியில் திருச்சான்னூரில் (கீழ் திருப்பதி) சபா மண்டபத்தில் இனிதே நடந்தேறியது.

முதலில் கல்பாக்கததில் 15, முதல் அவின்யூவில் இருந்தேன். அப்போது மோகன் மாலதி என்பவரது நட்பு கிடைத்தது. சாத்தனூர் பயணத்தின் போது ஏற்பட்ட நட்பின் காரணமாக மோகன் மாலதி அவர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.சில மாதங்களில் சுதா பிரசவத்திற்கு சென்னை வந்துவிட்டாள். 

வாராவாரம் வெள்ளிக்கிழமை மலை கல்பாக்கம் - தாம்பரம், நுணக்கம்பக்கம், அம்பத்தூர் என்று சரியாக 8:10க்கு வீடு வந்து சேருவேன்.

ஜூலை மாதம் 22ம் தேதி ராஜகோபால் பிறந்தான்.   சில மாதங்களுக்குப்பிறகு திருக்கழுக்குன்றத்தில் சுப்பிரமணிய முதலியார் மூலமாக வீடு பார்த்து குடியேறினோம். நான் அங்கிருந்து காலையில் 7:15 மணிக்கு    108 நம்பர் பஸ்ஸில் கல்பாக்கம் சென்று ஆபிஸ் பஸ் பிடித்து ஆபீஸ் செல்வேன். மலையில் வீட்டிற்குச்செல்வேன். பஸ்ஸில் வரும்போதே அங்குள்ள கண்ணியப்பா மற்றும் புவநேசவரி தியேட்டரில் என்ன படம் என்று பார்த்து  மறுநாள் மாலை அந்த படத்திற்க்குப்போவோம். சுமார் 2 வருடம் அந்த வாழ்க்கை தொடர்ந்தது. 


கணவன் - மனைவி:*

வாழ்க்கைப் பயணத்தின் இறுதித் துணைகள்


திருமணம் என்பது புகைப்படங்களில் சிரிக்கும் இரு முகங்களின் கதை மட்டுமல்ல. ஒரே வீட்டில் வசிக்கும் இரு உயிர்கள் ஆயிரம் முறை உடைந்துபோனாலும், உலகிற்குத் தெரியாமல் அமைதியாகத் தங்களை மீண்டும் ஒன்று சேர்த்துக்கொள்ளும் கதையே அது.


கணவன்-மனைவி உறவில் அன்பு மட்டுமே இருப்பதில்லை. அங்கே கோபம் இருக்கிறது; ஈகோ இருக்கிறது; மனக்காயங்கள் இருக்கின்றன... யாரும் பேசிக்கொள்ளாத மௌன நாட்கள் இருக்கின்றன. "அவர் ஒருபோதும் மாறப்போவதில்லை" என்று மனைவி உணரும் வலி இருக்கிறது; "அவள் என்னை ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை" என்று கணவன் உணரும் வேதனை இருக்கிறது.


ஆனாலும், ஒரு விசித்திரமான உண்மை இருக்கிறது...  

கணவன் தாமதமாக வீட்டுக்கு வரும்போது, ​​கதவு திறக்கும் சத்தம் கேட்டாலே அந்த மனைவி விழித்துக்கொள்கிறாள். அதே கணவன், கோபத்தில் இருந்தாலும், மனைவி சாப்பிடவில்லை என்று தெரிந்தால் அவளுக்கு முன்னால் உணவை எடுத்து வைக்கிறான்.


இதற்குப் பெயர்தான் திருமணம்.


குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது வீடு நிறைந்து வழிகிறது. பெற்றோர்கள் தங்கள் வாழ்வை குழந்தைகளின் படிப்பு, திருமணம், வேலை, பேரக்குழந்தைகள் என அவர்களுக்காகவே அர்ப்பணிக்கிறார்கள். ஆனால் ஒரு நாள், குழந்தைகள் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிடுகிறார்கள். மெல்ல மெல்ல, வீடு வெறுமையாகிறது.


அப்போது, ​​இருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.


ஒரு காலத்தில் எரிச்சலூட்டிய அதே குறட்டைச் சத்தம் ஒரு நாள் கேட்கவில்லை என்றால், கண்கள் கலங்குகின்றன. "அதிகம் பேசாதே" என்று ஒரு காலத்தில் கடிந்துகொண்ட அதே குரல் என்றென்றைக்குமாக மௌனமாகிவிட்டால், வீட்டின் சுவர்கள் கூட வெறுமையாகத் தோன்றுகின்றன.


அவர்கள் மறைந்த பிறகு, பலர் ஆறுதல் கூற வருவார்கள். ஆனால் இரவில் படுக்கையில் ஏற்படும் அந்த வெறுமையை யாராலும் நிரப்ப முடியாது. மருந்து கொடுத்த கையை, "சாப்பிட்டாயா?" என்று கேட்ட குரலை, கோபத்திற்குப் பின்னாலும் அக்கறையை ஒளித்துவைத்த கண்களை யாராலும் திரும்பக் கொண்டுவர முடியாது.


எனவே நினைவில் கொள்ளுங்கள்... சண்டையே போடாத தம்பதிகள் சிறந்தவர்கள் அல்ல.  

சண்டைக்குப் பிறகும் பிரிந்து செல்லாமல் ஒன்றாகவே இருப்பவர்களே சிறந்த தம்பதிகள்.


திருமணத்தில், அன்பை விடவும் 'விட்டுக்கொடுத்தல்' (சரிசெய்துகொள்ளுதல்) பெரியது.


விட்டுக்கொடுத்தலை விடவும் 'பொறுமை' பெரியது.


பொறுமையை விடவும் பெரியது... இறுதிவரை ஒன்றாகவே இருக்கும் அந்த மனம்தான்.


குறும்பு, கூச்சம், சண்டைகள், மௌனம், துன்பம், மகிழ்ச்சி, கண்ணீர், சிரிப்பு, சமரசம் - இவை அனைத்தும் இணைந்ததே திருமணத்தை புனிதமாக்குகிறது.


உங்கள் துணை உயிருடன் இருக்கும்போதே அவர்களின் மதிப்பை உணருங்கள். ஏனெனில், இறப்பிற்குப் பின் சிந்தப்படும் கண்ணீரை விட, உயிருடன் இருக்கும்போது அளிக்கப்படும் மரியாதையே மிகவும் புனிதமானது.


நினைவில் கொள்ளுங்கள்... வாழ்க்கையில் ஒருபோதும் மிகச்சிறந்த (குறைகளற்ற) துணையை நீங்கள் பெற முடியாது. *ஆனால், குறைகளை ஏற்றுக்கொண்டு இறுதிவரை உங்களுடனேயே இருக்கும் துணையை விடப் பெரிய வரம் வேறெதுவும் இல்லை.

வாழ்க வளத்துடன்

வாழ்க நலத்துடன்.🙏









Friday, February 7, 2025

ரசப்பொடி 07-02-2025

 ராதே கிருஷ்ணா 07-02-2025


தமிழ்நாடு ரெசிப்பீஸ், புதிய படத்தைச் ஆல்பத்தில் சேர்த்துள்ளார்: பொடி வகைகள்❤️❤️❤️ — Dindigul இல்.

4 நா 
3- வகையான ரசப்பொடி.....
உடுப்பி ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீர் மிளகாய் - இரண்டரை கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - கால் கப்
* வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன்
* கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 ஆர்க்கு
* தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, மிளகாயைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டுச் சூடாக்கி தனியா, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும் (தனியா, கறிவேப்பிலையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்). ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். உடுப்பி ரசப்பொடி தயார். இந்தப் பொடி ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்........
💥❤️💥❤️💥❤️💥❤️💥❤️💥❤️💖💖💖💖👍👍👍👍👍👍👍👍👍👍
ஆந்திரா ரசப்பொடி
தேவையானவை:
* காய்ந்த மிளகாய் - 2 கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - அரை கப்
* வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
* மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
* கட்டிப் பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆந்திரா ரசப்பொடி தயார்... ஓம் 💥🙏🙏
🍁🔥🍁🔥🍁🔥🍁🔥🍁🔥😊🔥😊💖💖💖💖💖💖👍👍👍👍👍👍👍
மைசூர் ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீரி மிளகாய் - 15 (அ) 20
* தனியா (மல்லி) - அரை கப்
* மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கொப்பரைத் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். மைசூர் ரசம் செய்யும்போது இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்....