Thursday, February 8, 2024

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் சுலோகங்களுக்கான பொருளடக்கம் 08-03-2022

 

sudham_2000@yahoo.com 
From:sudham_2000@yahoo.com
To:Rangarao Narasimhan,Rangarao Narasimhan,Rangarao Narasimhan,sudhavenkoba@gmail.com
Tue, Oct 25, 2022 at 7:37 AM
Radhe Krishna 08-03-2022



FRIDAY, DECEMBER 17, 2021

பொருளடக்கம்

 ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் சுலோகங்களுக்கான பொருளடக்கம் 


ஸ்ரீகிருஷ்ணன் அருளிய பகவந்நாம விளக்கம் 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அறிமுகம் 


கேட்டானய்யா கேள்வி! 




ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம சுலோகங்கள் வரிசையாக : 

001) விச்வம் விஷ்ணு: 

002) பூதாத்மா 

003) யோகோ யோகவிதாம் 

004) ஸர்வ: 

005) ஸ்வயம்பூ: 

006, 007) அப்ரமேய:, அக்ராஹ்ய: 2 சுலோகங்கள் 

008) ஈசான:  

009) ஈச்வர:  

010) ஸுரேச: 

011) அஜ: 

012) வஸு; 

013) ருத்ர: 

014) ஸர்வக: 

015) லோகாத்யக்ஷ: 

016) ப்ராஜிஷ்ணு: 

017) அதீந்த்ர: 

018) வேத்ய: 

019) மஹாபுத்தி: 

020) மஹேஷ்வாஸ: 

021) மரீசி: 

022) அம்ருத்யு: 

023) குரு: 

024) அக்ரணீ:  

025) ஆவர்தன: 

026) ஸுப்ரஸாத: 

027) அஸங்க்யேய: 

028) வ்ருஷாஹீ 

029) ஸுபுஜ: 

030) ஓஜ: 

031) அம்ருதாம்சூத்பவ: 

032) பூதபவ்யபவந்நாத: 

033) யுகாதிக்ருத் 

034) இஷ்டோSவிசிஷ்ட: 

035) அச்யுத: 

036) ஸ்கந்த: 

037) அசோக: 

038) பத்மநாப: 

039) அதுல: 

040) விக்ஷர: 

041) உத்பவ: 

042) வ்யவஸாய: 

043) ராம: 

044) வைகுண்ட: 

045) ருது: 

046) விஸ்தார: 

047) அநிர்விண்ண: 

048) யக்ஞ: 

049) ஸுவ்ரத: 

050) ஸ்வாபந: 

051) தர்மகுப் 

052) கபஸ்திநேமி: 

053) உத்தர: 

054) ஸோமப: 

055) ஜீவ: 

056) அஜ: 

057) மஹர்ஷி: 

058) மஹாவராஹ: 

059) வேதா: 

060) பகவாந் 

061) ஸுதந்வா 

062) த்ரிஸாமா 

063) சுபாங்க: 

064) அநிவர்த்தீ 

065) ஸ்ரீத: 

066) ஸ்வக்ஷ: 

067) உதீர்ண: 

068) அர்சிஷ்மாந் 

069) காலநேமிநிஹா 

070) காமதேவ: 

071) ப்ரஹ்மண்ய: 

072) மஹாக்ரம: 

073) ஸ்தவ்ய: 

074) மநோஜவ: 

075) ஸத்கதி: 

076) பூதாவாஸ: 

077) விச்வமூர்த்தி: 

078) ஏகோ நைக: 

079) ஸுவர்ணவர்ண: 

080) அமாநீ 

081) தேஜோவ்ருஷ: 

082) சதுர்மூர்த்தி: 

083) ஸமாவர்த்த: 

084) சுபாங்க: 

085) உத்பவ: 

086) ஸுவர்ணபிந்து: 

087) குமுத: 

088) ஸுலப: 

089) ஸஹஸ்ரார்ச்சி: 

090) அணு: 

091) பாரப்ருத் 

092) தனுர்தர: 

093) ஸத்த்வவாந் 

094) விஹாயஸகதி: 

095) அநந்தஹுதபுக்போக்தா 

096) ஸநாத் 

097) அரௌத்ர: 

098) அக்ரூர: 

099) உத்தாரண: 

100) அநந்தரூப: 

101) அநாதி: 

102) ஆதாரநிலய: 

103) ப்ரமாணம் 

104) பூர்புவஸ்வஸ்தரு: 

105) யக்ஞப்ருத் 

106) ஆத்மயோநி: 

107) சங்கப்ருந்நந்தகீ 

108) வனமாலீ 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கற்பதால் விளையும் பலன்கள் 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கற்பதால் விளையும் பலன்கள்

கேசவனின் புகழ் பாடும் ஆயிர நாமங்கள் இவை. திவ்யத்தின் திரட்டு இவை. இவற்றைப் பாடினாலோ, கேட்டாலோ இவ்வுலகிலும் மற்று அவ்வுலகிலும் அசுபம் என்பது சிறிதும் நெருங்க இயலாது. வாழ்க்கையில் பல தொழில்களில் உள்ளோரும் இதனால் பலன் பெறுகின்றனர். பல நோக்குகள் உள்ளோரும் தம் தம் நோக்கத்தில் இதனால் வெற்றி பெறுகின்றனர். அறிவு மற்றும் ஞானம் குறித்து முனைபவர்களுக்குத் தெளிந்த தத்துவ ஞானம் ஏற்படுகிறது. உலக வாழ்க்கையில் நியாயமான முறையில் சிறக்க வேண்டும், நல்ல ஆட்சியாளர்களாக வெற்றி பெற வேண்டும்; நல்ல வியாபாரிகளாகச் செழிக்க வேண்டும்; அலுவலகப் பணிகளில் நல்ல வளர்ச்சியும், சந்தோஷமும் அடைய வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஆயிர நாமம் கற்பதால் நல்ல பலன் உண்டாகிறது. நல்ல புகழ், கீர்த்தி, பெருமை முதலியன இதைக் கற்பவர்களுக்கு உண்டாகின்றன. நோயிலிருந்து விடுதலை; பயத்திலிருந்து விடுதலை; ஆபத்திலிருந்து விடுதலை; மனத்துயர்களினின்றும் விடுதலை இவையெல்லாம் இதைக் கற்பதால் விளைகின்றன. தினமும் பக்தியுடன் ஆயிர நாமங்களால் துதிப்பவர் பல இடர்ப்பாடுகளையும் கடக்கின்றனர். வாஸுதேவனைச் சரணடைந்து வழிபடும் மனிதர் அனைத்துப் பாங்களினின்றும் விடுபட்டு என்றும் நிலைத்த பெருநிலையான பிரம்மத்திடமே செல்கின்றனர். 

ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித் | 
ஜன்மம்ருத்யு ஜரா வ்யாதிபயம் வாப்யுபஜாயதே || 

வாஸுதேவனின் பக்தர்கள் அசுபம் என்றால் என்ன என்றே அறியார்கள். அவர்களுக்கு பிறப்பால் பயம், இறப்பால் பயம், முதுமையால் பயம், வியாதியினால் பயம் என்பவை ஒரு நாளும் உண்டாகா. 

புருஷோத்தமனின் பக்தர்கள் எப்படி இருப்பார்கள்? 

அவர்களிடம் குரோதம் இருக்காது; மாச்சரியம் என்பது இருக்காது; லோபத்தனம் இருக்காது; நன்மையற்ற மதி என்பது இருக்காது. மாறாகப் பலவித புண்ணியங்களும் அவர்களிடத்தே ஒருங்கு திகழும். அப்படி இருப்போரே புருஷோத்தமனின் பக்தர்கள் ஆவர். 

என்ன கஷ்டம் இருந்தாலும், என்ன இடைஞ்சல்கள் இருந்தாலும், என்ன வியாதிகள் இருந்தாலும், மனக்கிலேசங்கள் இருந்தாலும் ’நாராயண’ என்னும் நாமத்தை உச்சரிப்பதால் அத்தனை துக்கங்களும் விடுபட்டுச் சுகம் ஏற்படுகிறது. 

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா 
புத்யாSSத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் | 
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி || 

உடலால், வாக்கால், மனத்தால், இந்திரியங்களால், புத்தியால், என்னால் நானாகவோ அல்லது பிரகிருதியின் சுபாவத்தாலோ எதை எதைச் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே பரமாகச் சமர்ப்பித்து விடுகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***
வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ | 
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது || 


வனமாலையைத் தரித்தவரும், கௌமோதகீ என்னும் கதையைத் தரித்தவரும், சார்ங்கம் என்னும் வில்லுடையவரும், சங்கம் சக்ரத்தைத் தரித்தவரும், நந்தகீ என்னும் ஒள்வாள் தரித்தவரும் ஆன திருமால் ஆகிய ஸ்ரீமாந் நாராயணர், விஷ்ணு, வாஸுதேவர் நம்மைக் காப்பாற்றட்டும். 

***
ரதாங்கபாணிரக்ஷோப்ய: ஸர்வப்ரஹரணாயுத: || 
ஸர்வப்ரஹரணாயுத: ஓம் நம:


சங்கப்ருத் -- பிரகிருதி தத்வத்தையே சங்கமாகக் கொண்டு தரிக்கிறார் 

நந்தகீ -- வித்யைகளின் முழுத்தொகுதியான நந்தகி என்னும் வாளைத் தரிப்பவர் 

சக்ரீ -- மனம் என்னும் தத்துவத்தையே சக்ரமாகத் தரிக்கிறார் 

சார்ங்கதந்வா -- இந்திரியங்கள் எல்லாம் எழுகின்ற மூலமான அகங்கார தத்துவத்தைச் சார்ங்கம் என்னும் வில்லாகத் தரிக்கிறார் 

கதாதர: -- புத்தி தத்துவம் என்னும் கௌமோதகீ என்னும் கதையைத் தரிக்கிறார் 

ரதாங்கபாணி: -- ரதத்தின் அங்கமான தேர்ச்சக்கிரத்தை அன்றோ கையிலேந்திச் சுழட்டியபடி அன்று என்னை நோக்கி வந்தார் இந்தத் தேவகீநந்தனர்! 

அக்ஷோப்ய: -- சரணாகதி அடைந்தவர்களைக் காத்தே தீருவது என்னும் அவருடைய தீர்மானமான உறுதியை அவர் தம்மாலும் கூட அசைக்க முடியாது என்பதால் அவர் அக்ஷோப்யர் 

ஸர்வப்ரஹரணாயுத: -- இந்த ஆயுதம்தான் என்று இல்லாமல் கணக்கற்ற ஆயுதங்கள் உடையவர். அதுமட்டுமின்றி எதையும் எந்நேரத்தும் எவ்வாறும் ஆயுதமாக ஆக்கிக்கொள்ளும் வல்லபர். 

மீண்டும் ஸர்வப்ரஹரணாயுத: என்னும் நாமத்தைச் சொல்வதால் மிக உயர்ந்த கிரந்தமான ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவு அடைகிறது என்பதைக் காட்டுகிறது. ஓம் என்னும் பிரணவத்தைச் சொல்லுவதால் ஸர்வமங்களமும் உண்டாவதைக் குறிக்கிறது. நம: என்று சொல்லி முடிப்பதால் திருமாலைச் சரணடைந்தோம் என்பதற்கு அடையாளமாக நம்மால் செய்யலாகும் அனுஷ்டானம் நம: என்னும் கைகூப்புச் செய்கையே என்பது உணர்த்தப் படுகிறது. ஸ்ரீவைகுண்டத்திலும் நித்யசூரிகளும் கூட எப்பொழுதும் நம: நம: என்று கைகூப்பியவண்ணம் திகைத்துப் பார்த்தவண்ணம் நிற்கின்றனர் என்று சுருதியே முழங்குகிறது. 

***
ஆத்மயோநி: ஸ்வயம்ஜாதோ வைகாந: ஸாமகாயன: | 
தேவகீநந்தன: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசந: || 


ஆத்மயோநி: -- உலகின் அடிப்படைக் காரணமும் அவரே; பக்தர்களுடன் பாலில் இனிப்பு போல் கலந்து பழகும் பண்பினர் 

ஸ்வயம்ஜாத: -- உலகின் நிமித்த காரணமும் அவரே; பக்தர்களின் பிரார்த்தனைகள் இல்லாமலும் சில சமயம் அவரே அவதாரம் எடுக்கின்றார் 

வைகாந: -- அவர் அருளால் ஜீவன் முக்தி அடையும் பொழுது பவநோய் என்பது இருந்த சுவடே தெரியாமல் அகழ்ந்து அகற்றப்பட்டு விடுகிறது. 

ஸாமகாயந: -- அழுகையில் புதைந்திருந்த ஜீவர்கள் முக்தியில் ஆனந்தத்தில் முழுகிப் பாடி உகக்கும்படி ஆக்குகின்றார் 

தேவகீநந்தன: -- இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்த திவ்ய நாமங்கள் எல்லாம் இதோ இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தத் தேவகீ நந்தனனைக் குறித்துத்தான் என்பதை அறிவாயாக 

ஸ்ரஷ்டா -- உங்கள் உறவினன் போலும், நண்பன் போலும் இருக்கும் இந்தத் தேவகீநந்தனனே உலகைப் படைத்தவன். இதுவே உண்மை. 

க்ஷிதீச: -- புவியின் தலைவன் இவனே. எனவேதான் பூமியின் துயர் தீர்க்க அவதரித்துள்ளான். 

பாபநாசந: -- அவனை நினைத்தாலே போதும். பாபங்கள் பறந்தோடும். 

***

யக்ஞப்ருத் யக்ஞக்ருத் யக்ஞீ

யக்ஞப்ருத் யக்ஞக்ருத் யக்ஞீ யக்ஞபுக் யக்ஞஸாதந: | 
யக்ஞாந்தக்ருத் யக்ஞகுஹ்யமந்நமந்நாத ஏவ ச || 


யக்ஞப்ருத் -- யக்ஞத்தின் முழுமையையும் பேணிக் காப்பவரும், குறைகளை நிறைவு செய்து முழுமை அடைய வைப்பவரும் அவரே 

(யக்ஞம் என்பது தேவதைக்காகச் செய்யப்படும் திரவியத் தியாகம் என்று ஒரு பொருள். மேலும் ஆழ்ந்து நோக்கினால் மனிதன் தன்னிடம் இருக்கும் கண்ணிற்குத் தெரிந்த சௌகரியங்களைக் கண்ணிற்குத் தெரியாததும் எதிர்காலத்தில் மிகுந்த முயற்சியால் அடையப்பட வேண்டியதுமான இலட்சியங்களுக்காகத் தியாகம் செய்துதான் பெற வேண்டியிருக்கிறது. அந்த இலட்சியங்கள் ஆரம்பத்தில் விழுமியங்கள் என்னும் வடிவில்தான் கருத்துகளாக இருக்கின்றன. மிகச் சிறந்த இலட்சியம் கடவுளை அடைதல். ஆத்ம ஞானம் என்னும் பெருநிலை. ஆனால் அதுவோ இன்று கண்ணுக்குத் தெரிவதாக இல்லை. இன்று கண்கண்ட சுகங்களான பொருள், இன்பம் ஆகியவற்றில் நாட்டத்தை விட்டுத்தான் அந்தப் பெரும் இலட்சியத்தை நோக்கிப் பெரும் யக்ஞம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த யக்ஞத்தில் தியாகம் செய்யப்படுவதோ மூன்று விஷயங்கள். ஒன்று நான், எனது என்னும் அகங்காரத்தையும், மமகாரத்தையும் தியாகம் செய்தல். இரண்டு, நான் தான் செயல்களைச் செய்கிறேன் என்னும் கர்த்தா என்னும் எண்ணத்தை விடுதல். மூன்று பலன்களில் நாட்டத்தை விடுதல். ஆத்ம ஞானம் என்னும் இலக்கை எட்டத் தடையாய் இருப்பவை இவை. இந்த யக்ஞத்தில் அவன் அருளே ஆரம்பம் முதல் நிறைவு வரையிலும் துணை) 

யக்ஞக்ருத் -- உலகில் மக்களின் நன்மைக்காக வேண்டி இந்த யக்ஞம் என்னும் முறையை அவரே ஏற்படுத்தியுள்ளார் 

யக்ஞீ -- யக்ஞத்தின் தலைவரும் பிரபுவும் அவரே 

யக்ஞபுக் -- யக்ஞத்தின் பலன்களை அனுபவிப்பவரும் அவரே 

யக்ஞஸாதந: -- யக்ஞம் நிறைவேறுவதற்கான துணையாக இருப்பவரும் அவரே 

யக்ஞாந்தக்ருத் -- பிரம்மஞானம் அடைவதே அனைத்து யக்ஞங்களின் இறுதி இலட்சியம். அந்தப் பிரம்ம ஞானத்தை அருள்வதன் மூலம் அவரே யக்ஞாந்தக்ருத் ஆகிறார். 

யக்ஞகுஹ்யம் -- தங்களுக்குப் பிடித்த சில பலன்களுக்காகச் செய்யப்படுவது யக்ஞம் என்னும் சாதாரண கருத்துள்ளவர்களுக்குப் புரியாத கருத்து, ‘ஏன் யக்ஞத்தை மூவிதத் தியாகத்துடன் கடவுளைக் குறித்தே செய்ய வேண்டும்?’ என்பது. யக்ஞத்தின் முழுமையாகக் கடவுள் இருப்பதால் அவரைக் குறித்து, அவருக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் யக்ஞம் அனைத்து நிறைவையும் இயல்பாகவே பெற்று நிற்கும். யக்ஞத்தின் இரகசியம் கடவுளே என்பதால்தான் யக்ஞகுஹ்யம் எனப்படுகிறார். 

அந்நம் -- உயிரையும், உடலையும் வளர்ப்பது அன்னம். உயிர்களையும், உலகங்களையும் போஷிப்பவர் ஆகையால் திருமால் அந்நம் எனப்படுகிறார் 

அந்நாத: -- உணவைத் துய்ப்பவரை அந்நாதர் என்று சொல்லலாம். அனைத்துப் பலன்களையும் உள்ளுயிராய் நின்று திருமாலே துய்ப்பவர் ஆக இருப்பதால் அவரே அந்நாத: எனப்படுகிறார். 

ஏவ ச - திருமாலே உணவும், உண்போனும் இரண்டுமாக இருக்கின்றார் என்று வலியுறுத்துகிறது. 

***

THURSDAY, DECEMBER 16, 2021

பூர்புவ: ஸ்வஸ்தருஸ்தார:

பூர்புவ: ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ: | 
யக்ஞோ யக்ஞபதிர் யஜ்வா யக்ஞாங்கோ யக்ஞவாஹந: || 


பூர்புவ: ஸ்வஸ்தரு: -- பூமி, புவர்லோகம், ஸுவர்லோகம் என்னும் மூவுலகிலும் ஜீவர்கள் தம்தம் கர்மங்களினால் உந்தப்பட்டுப் பிறப்பு இறப்பு என்ற மாற்றங்களுக்கு ஆட்பட்டுத் திரிவது பறவைகள் கிளைக்குக் கிளை பறந்து திரிவதைப் போன்றது ஆகும். ஜீவர்களாகிய பறவைகள் தங்கி இளைப்பாறும் தருவாக, மரமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவே. 

தார: -- ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பவர் ஆகையால் தார: 

ஸவிதா -- அனைத்து உலகங்களையும் படைத்தவர் ஆகையால் ஸவிதா 

ப்ரபிதாமஹ: -- பிதாமஹர் ஆகிய பிரம்மனையும் படைத்தவர் ஆகையால் ப்ரபிதாமஹ: 

யக்ஞ: -- தாமே யக்ஞ ரூபமாக நின்று பக்தர்களுக்குப் பலன்களைத் தருகிறார் 

யக்ஞபதி: -- யக்ஞத்தின் ஸ்வாமி அவரே 

யஜ்வா -- அவரே யக்ஞம் இயற்றுவோரின் உள்ளே அந்தர்யாமியாக இருப்பதால் அவரே யஜமானர் (யக்ஞம் இயற்றுவோர்) என்று அறியப்படுகிறார். 

யக்ஞாங்க: -- யக்ஞத்தையே தம் சரீரமாகக் கொண்ட யக்ஞ வராஹர்; துணையாகச் செய்யப்படும் வேள்விகளும் தாமே ஆனவர். 

யக்ஞவாஹந: -- சரீரம் நல்லபடியாக இருந்தால்தான் எந்த அறமும் இயற்ற முடியும். அதுபோல் யக்ஞங்கள், ஆத்ம சாதனங்கள் எல்லாம் இயற்கை, ஆரோக்கியம், சூழ்நிலை என்று பலவிதமான காரணங்கள் நன்கு அமையப் பெற்றால்தான் நடைபெற்றுப் பலன்களை அடையலாகும். அந்தக் காரணங்கள் உட்பட அனைத்திற்கும் அவர் அருள் இருந்தால்தான் நடக்கும் என்பதால் அவரே யக்ஞத்தைச் சுமந்து செலுத்தி, நடைபெற வைத்து, பூர்த்தியாக ஆக்கிப் பலன்களையும் தருகிறார் என்பதால் அவரே யக்ஞவாஹனம் எனப்படுகிறார். 

***

ஸ்ரீகிருஷ்ணன் அருளிய பகவந் நாம விளக்கம்

பகவந் நாமங்களுக்கு உரையாசிரியர்கள் பொருள் சொல்லி அதைத்தான் படித்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணனே தன்னுடைய ரகஸ்யமான நாமங்களுக்கு என்ன பொருள் என்று அர்ஜுனனுக்கு விளக்குவதை ஸ்ரீ மஹாபாரதம், சாந்தி பர்வம் பதிவு பண்ணி வைத்திருக்கிறது. இதைக் கிட்டத்தட்ட ஸ்ரீ கிருஷ்ணன் எழுதிய உரை என்றே கொள்ளலாம் போல இருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்னது -

ஓ! பாரதனே! முக்காலத்திலிமுள்ள எல்லாருக்குமே விஷ்ணுவானவர் தலைவர். வணங்கப்படத் தக்கவர். பூசிக்கப்படத் தக்கவர். குந்தி புத்திரனே! புகல் அளிப்பவரும், வரம் அளிப்பவருமான விஷ்ணுவை நமஸ்காரம் செய்; வணங்கு. துயரடைந்தவன், ஞானத்தை விரும்புபவன், பொருளை விரும்புபவன், ஞானி ஆகிய நால்வரும் என்னுடைய பக்தர்களே. மற்ற தெய்வங்களை வணங்குபவர்களும் என்னையே வணங்குகிறார்கள், விருப்பத்தை விட்டு, கர்மங்களைக் கர்ம யோகமாகச் செய்யும் ஞானிகளுக்கு நானே கதி. பயனை விரும்பும் பக்தர்களுக்குப் பலனானது அழிவுடையது. ஆனால் என்னையே விரும்பும் பக்தர்களின் பலனோ அழியாதது. ஞானி மிகச்சிறந்த முக்தியை அடைகிறான். ஞானத்துடன் கூடிய அனுஷ்டானம் உடையவர்கள் பிரம்மாவையோ, ஈசவரரையோ மற்றத் தேவர்களையோ தொழுதாலும் என்னையே பயனாக அடைவார்கள். ஓ! பார்த்தனே! பக்தர்களைப் பற்றிய இந்தச் சிறப்பானது உனக்குச் சொல்லப்பட்டது. ஓ! குந்திபுத்திரா! நீயும் நானும் நர நாராயணர்களாகக் கருதப்பட்டவர்கள். பூபாரத்தைத் தொலைப்பதற்காக மனுஷ்ய சரீரத்தில் பிரவேசித்தோம்.

ஓ! பாரதனே! ஆத்மாவைப் பற்றிய யோகங்களை அறிகிறவனும், நிவிருத்தி ரூபமான வளர்ச்சியைச் செய்கின்றவனும், என்றும் இருப்பவனான நான் ஒருவனுமே நரர்களுக்குப் பிரசித்தமான ஸ்தானம். அப்புக்கள் நரனிடமிருந்து உண்டாயின. ஆகையால் அப்புக்கள் நாரங்கள் என்று சொல்லப்படுகின்றன. முதன்முன்னம் அவை எனக்கு ஸ்தானமாயின. எனவே எனக்குப் பெயர் நாராயணன்.

நான் எல்லாமுமாகி சூர்யன் கிரணங்களால் மறைப்பது போல் மறைக்கிறேன். அதனாலும் அனைத்து உயிர்களுக்கும் வசிக்கும் இடமாக நான் இருப்பதால் எனக்குப் பெயர் வாசுதேவன்.

ஓ! பாரதனே! எல்லாப் பிராணிகளுக்கும் அடங்கும் இடமாகவும், உற்பத்தி ஆகும் இடமாகவும் நான் இருக்கிறேன். என்னால் ஆகாயமும், பூமியும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றன. என்னுடைய காந்தி மிகப்பெரியது. பூதங்களில் பிரவேசித்து ஜகத்தாய் இருக்கிறேன். எங்கும் பரந்து நீக்கமற நிற்கிறேன். எனவே என் பெயர் விஷ்ணு.

இந்திரியங்களை அடக்கித் தவம் செய்வோர் பலர். அவர்களில் சிலர் தேவ லோகத்தை அடைய விரும்புகின்றனர். சிலர் பூமியில் சிறந்த நிலையை விரும்புகின்றனர். சிலர் உயர்ந்த நிலைகளை அடைய விரும்புகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் எண்ணம் பூர்த்தி அடைய வேண்டி என்னை விரும்புகின்றார்கள். அதனால் என் பெயர் தாமோதரன்.

அன்னம், வேதங்கள், ஜலம், அமிருதம் இவையிற்றுக்கு ப்ருச்னி என்று பெயர். அவைகளை எப்பொழுதும் நான் என்னுள் சுமப்பதால் எனக்கு ப்ருச்னி கர்ப்பன் என்று பெயர்.

உலகங்களைத் தபிக்கச் செய்கின்ற சூர்யன், அக்னி, சந்திரன் இவர்களுடைய கிரணங்கள் பிரகாசிக்கின்றன. இவைகள் என்னுடைய கேசங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆகையால் என்னுடைய பெயர் கேசவன்.

சூர்யனும், சந்திரனும் கிரணங்கள் என்று பெயர் கொண்ட என்னுடைய கேசங்களாலே உலகத்தை அடிக்கடி விழிக்கச் செய்தும், தபிக்கச் செய்தும் தனித்தனியாக கிளம்புகிறார்கள். போதிப்பதனாலும், தபிக்கச் செய்வதனாலும் உலகத்திற்குச் சந்தோஷம் ஏற்படும். ஓ! பாண்டு புத்திரனே! சூரியனாலும், சந்திரனாலும், அக்னியாலும் செய்யப்படும் இந்தக் கர்மங்களால் ஈசானனும், வரமளிப்பவனும் உலகங்களை உண்டு பண்ணுகிறவனுமான எனக்கு ஹ்ருஷீகேசன் என்று பெயர்.

நான் வீடுகளில் நடக்கும் யாகங்களில், 'இலோபஹூத' என்கிற மந்திரத்தினால் அழைக்கப்பட்டுப் பாகத்தை 'ஹரிக்கிறேன்', உள்வாங்குகிறேன். அப்பொழுது என்னுடைய நிறமும் ஹரித வர்ணமானது. எனவே எனக்குப் பெயர் ஹரி.

தாம என்றால் உலகங்களின் சாரமான பகுதி. விசாரிக்கப்பட்ட உண்மை எதுவோ அது ரிதம். எனவேதான் என் பெயர் ரிததாமா என்பது.

முன் காலத்தில், பூமியானது ஜலத்தில் முழுவதும் முழுகிப் போய், ஜலத்தின் குகை என்பதனுள் சென்று மறைந்தது. அவ்வாறு மறைந்த பூமியாகிய 'கோ'வை நான் தேடி அடைந்தேன் என்ற காரணத்தால் என் பெயர் கோவிந்தன்.

அவயவங்கள் அற்றவன் என்பதனால் எங்கும் உள்புகுந்து பிரவேசிப்பவன். அதன் காரணமாக எனக்குச் சிபி ஆவிஷ்டன் என்ற காரணத்தால் சிபிவிஷ்டன் என்ற பெயர் வந்தது. யாஸ்கர் என்ற முனிவர் இந்த நாமத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல யாகங்களிலும் சிபிவிஷ்டன் என்றே யாகம் செய்தார். அவர் அவ்வாறு சிபிவிஷ்டன் என்று ஜபித்ததால் அவருக்கு மறைந்து போன நிருக்தம் என்ற வேதச் சொற்களை ஆய்கின்ற நூல் மீண்டும் கிடைத்தது.

எல்லாப் பிராணிகளுக்கும் க்ஷேத்திரஜ்ஞன், அதாவது உணர்வு உருவாக இருப்பவன் நான். எனவே ஒரு பொழுதும் நான் பிறப்பவனுமில்லை, பிறந்தவனுமில்லை, பிறக்கின்றவனுமில்லை. எனவே என் பெயர் அஜன் - பிறவாதவன் என்பதாகும்.

குந்தியின் புத்திரா! அற்பமானவையும், அமங்களமானவையும் என்னால் ஒரு பொழுதும் சொல்லப்பட்டதில்லை. என்னுடைய வாக் சக்தி என்றும் தவறானது இல்லை. உண்மையானதும் ஆகும். கண்ணுக்குப் புலப்படும் மண், நீர், தீ ஆகிய மூன்றும், கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஆகாயம் ஆகிய இரண்டும் ஸத் - உள்ளதாக என் நாபி கமலத்தில் வைக்கப்பட்டமையாலும் என் பெயர் சத்யன்.

தனஞ்சயா! ஸத்வ குணத்திலிருந்து நான் ஒரு நாளும் நழுவாதவன். முன்னர் எப்பொழுதும் நழுவியதும் இல்லை. ஸத்வம் என்பதே என்னால் செய்யப்பட்டது என்னும் அளவிற்கு எனக்கு மிகவும் அணியானது. நான் எவ்வளவு ஜன்மம் எடுத்தாலும் சரி, ஸத்வ குணம் என்பது என்னிடம் கிஞ்சித்தும் மாறுவது கூட இல்லை. காரணம் என் ஜன்மங்கள் கிருபையின் காரணமாக ஏற்படுவன. கர்மத்தின் காரணமாக இல்லை. எப்பொழுதும் நிறைந்த ஸத்வ குணம் உடைமையால் என்னிடம் தோன்றும் கர்மங்கள் அனைத்தும் நிஷ்காம கர்மங்களே அன்றி வேறு எதுவும் கிடையாது. எப்பொழுதும் நிஷ்காமனாய் இருப்பதால் என்னைச் சதா களங்கம் அற்றவன் என்று அறிவாயாக. என்னைப் பிரம்மத்தை அறிந்தவர்கள் பார்க்கிறார்கள். மற்றவர்களால் நான் பார்க்கப்படுவதில்லை. பிரம்ம வித்துக்களும் என்னைக் காண்பது எப்படி என்றால் ஸாத்வதம் என்கிற பாஞ்சராத்திர சாத்திரத்தால் உண்டான ஞானத்தினால் பார்க்கிறார்களே அன்றி வேறு விதத்தால் அன்று. மேற் சொன்ன காரணங்களால் எனக்குப் பெயரே ஸாத்வதன் என்பதாகும்.

ஓ பார்த்தா! அர்ஜுனா! நான் இரும்பினால் செய்யப்பட்ட பெரிய கலப்பைக் கொழுவாக ஆகி பூமியைக் கீறுகிறேன், அதாவது கர்ஷணம் செய்கிறேன். என்னுடைய நிறமோ கார்வண்ணம். எனவே எனக்குப் பெயர் கிருஷ்ணன் என்பதாகும்.

நான் நீரையும், பூமியையும் சேர்த்தேன். வாயுவையும் ஆகாயத்தையும் சேர்த்தேன். நெருப்பையும், வாயுவையும் சேர்த்தேன். அதனால் விரியாமல் மடங்குதல் என்பது, அதாவது குண்டம் என்பது என்னிடம் இல்லாத ஒன்றாக அறியப்பட்டது. குண்டம் அற்றவன், மடங்குதல் அற்றவன் என்ற காரணத்தால் (வி+குண்ட) வைகுண்டன் என்பது என்னுடைய பெயராக ஆனது.

அமைதியே உருவான பிரம்மமே மேலானது. அதைப் போன்று உலகில் அனைத்தையும் தாங்கும் தத்துவமான தர்மம் என்பதும் மேலானது. பரம் என்று இவை சொல்லப்படுகின்றன. நான் அந்தப் பரத்திலிருந்து நழுவாதவன் ஆகையாலே என்னுடைய பெயர் அச்சுதன் ஆகும்.

பிருதிவியாகிய உலகமும், ஆகாயமும் எங்கும் வியாபித்தவை. எனவே அனைவராலும் அறியப்படும் அளவிற்குப் பிரசித்தமானவை. அவைகளைச் சேர்த்து நான் தரித்திருக்கும் காரணத்தால் நிரூபணத்துடன் சொல்கிறார்கள் என்னை அதோக்ஷஜன் என்று. அப்படி அதோக்ஷஜன் என்றே என்னை வேதங்களை அறிந்தவர்களும், வேதங்களின் அர்த்தங்களை விசாரிக்கின்றவர்களும் யாக சாலையில் சிறப்பான ஓர் இடமான பிராக்வம்சம் என்னும் ஸ்தானத்தில் என்னை அதோக்ஷஜன் என்றே கானம் செய்கிறார்கள். அதனாலும் நானே அதோக்ஷஜன் என்று அறிந்து கொள்ளலாம். பரம ரிஷிகள் ஒரே குரலில் கூறியதாவது, 'பிரபுவான நாராயணரைத் தவிர உலகில் வேறு அதோக்ஷஜன் இல்லை' என்பதாகும்.

உலகத்தில் அக்னியின் ஜ்வாலை என் உருவம் ஆகும். அந்த ஜ்வாலையில் சேர்ந்த கிருதம், (செயல் அல்லது செயலுக்குக் குறியீடான நெய்) அந்தக் கிருதங்கள் பிராணிகளின் பிராணனைத் தரிக்கிறது. எனவே நன்கு கவனம் உள்ள வேத அறிஞர்களால் எனக்குக் கிருதார்ச்சிஸ், (கிருதங்கள் சேரும் அர்ச்சிஸ், அக்கினி) என்னும் பெயர் வழங்கப்பட்டது.

மூன்று தாதுக்கள் உயிர்களுக்குக் கர்மத்தால் உண்டாகின்றன. அவை பித்தம், சிலேஷ்மம், வாதம் என்று பிரசித்தமானவை. இவை சங்காதம், ஒன்று கூடியவை என்று சொல்லப்படுகின்றவை. இவைகளால் ஜந்துவானது தரிக்கப்படுகிறது. இவை குறைந்தால் ஜந்துவானது குறைவு அடைகிறது. அதனால் ஆயுர் வேதத்தை அறிந்தவர்கள் என்னை திரிதாது என்று அழைக்கிறார்கள்.

ஓ பாரதனே! விருஷம் என்பது நிகண்டுவின்படி பார்த்தால் 'பூஜ்யமான தர்மம்' என்று பொருள். என்னை மிக உயர்ந்த தர்மம் என்று அறிவாயாக. கபி என்றால் வராஹம் என்று பொருள். ஆதலால் கச்யபர் என்னும் சிருட்டி கர்த்தா என்னை விருஷாகபி என்று அழைத்தார்.

வேதத்தை அறிந்தவர்களும், தேவர்களும் என்னுடைய ஆதியையும், மத்யத்தையும், முடிவையும் ஒரு போதும் அறிகிறதில்லை. ஆகையால் ஆதி நடு முடிவு அற்றவன் ஆகிய என்னை, ஈசவரனும், உலகங்களின் சாக்ஷியுமான என்னை விபு என்று அழைக்கிறார்கள்.

ஓ தனஞ்சயா! சுத்தமானவைகளும், கேட்பதற்கு இனிமை உள்ளவைகளுமான வார்த்தைகளையே நான் இவ்வுலகில் கேட்கிறேன். பாவங்களை ஒரு போதும் கேட்பதில்லை. அதனால் என் பெயர் சுசிச்ரவஸ், தூய கேள்வியன் என்பதாகும்.

நான் முன்காலத்தில் ஒற்றைக் கொம்புடைய வராஹமாய்ப் பூமியை எடுத்ததால் என்னுடைய பெயர் 'ஏகச்ருங்கன்' என்பதாகும். வராஹ ரூபத்தை எடுத்த நான் உயர்ந்தவைகளான தோள், நாசிகை, தெற்றுப்பல் ஆகிய இம்மூன்றும் உயர எழுந்த நிலையில் இருந்ததால் த்ரிககுத் என்று அறியப்பட்டேன்.

ஞானத்தை விசாரிக்கும் அறிஞர்களால் நான் விரிஞ்சன், விசேஷமாய்த் தத்துவங்களை லயம் செய்கிறவன் என்று அறியப்பட்டேன். சேதனன் மூலமாக எல்லா உலகங்களையும் செய்கின்ற அந்த விரிஞ்சி ஆகிய பிரம்மாவும் நானே.

உறுதியான நிச்சயத்தையுடைய சாங்கியர்களான ஆசாரியர்கள், நான் வித்யையின் சகாயம் உள்ளவன் ஆகையாலும், ஆதித்ய மண்டலத்தில் இருப்பவன் ஆகையாலும், சநாதனனுமான என்னைக் 'கபிலன்' என்று அழைக்கிறார்கள்.

வேதத்தில் துதிக்கப்பெற்றவரும், எப்பொழுதும் யோகிகளால் பூஜிக்கப்படுகிறவரும், விபுவும், காந்தியுள்ளவருமான ஹிரண்யகர்ப்பரும் நானே.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***


ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்

பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை ஈர்த்ததும், பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவ்ய நாமங்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது. அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான்.

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதைச் சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். ( ‘விஷ்ணும் ஸஹஸ்ரமூர்தானம் சராசரபதிம் விபும் | ஸ்துவந் நாமஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் அபோஹதி ||’ - சரக ஸம்ஹிதா, சிகித்ஸா ஸ்தானம், ஜ்வர சிகித்ஸா). மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம். என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விடப் பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம். 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு Aufrecht அவர்களின் கணக்குப்படி 15 வியாக்கியானங்கள் பட்டியலிடப்படுகின்றன என்று தகவல் தருகிறார் ஸ்ரீ அநந்தகிருஷ்ண சாஸ்திரியார். அவை - 

1) ப்ருஹத் பாஷ்யம்
2) விஷ்ணு வல்லபம்
3) ஆநந்த தீர்த்தரின் உரை
4) கிருஷ்ணாநந்தரின் உரை
5) கங்காதர யோகீந்திரரின் உரை
6) பாரசர பட்டரின் பாஷ்யம்
7) மஹாதேவ வேதாந்தியின் உரை
8) ரங்கநாதாசாரியரின் உரை
9) ராமாநந்த தீர்த்தரின் உரை
10) ஸ்ரீராமாநுஜரின் உரை
11) வித்யாரண்ய தீர்த்தரின் உரை
12) பிரஹ்மாநந்த பாரதியின் உரை
13) ஸ்ரீ சங்கராசாரியரின் உரை
14) சுதர்சன பட்டரின் உரை
15) கோவிந்த பட்டரின் உரை 

இவையும் சிலவே. இவை தவிர சுலோக ரூபத்தில் நாமங்களை விளக்கிக் காரிகைகளாகச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு.
*


ஸ்ரீ பகவந் நாமாம்ருத ரஸோதயம் என்பது ஸ்ரீபகவந் நாம போதேந்திர ஸரஸ்வதி செய்த அற்புதமான நூல். முழுக்க முழுக்கப் பகவந் நாமத்தின் மகிமையை ஆசாரியர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரின் வாக்குகளைக் கொண்டு நிர்ணயிக்கிறார் ஸ்ரீ போதேந்திரர். (தமிழில் இந்த நூலைச் சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்). 

"நாவலிட் டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே நின் நாமம கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே!" என்று பாடுகிறார் ஆழ்வார். 

'ஒரு தடவை நீ அவன் நாமத்தைச் சொன்னால் பாபங்களின் குடியிருப்பில் சுனாமியே வந்துவிடுகிறது' என்கிறார் கபீர். 

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்கள் தமது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் அசைக்க முடியாமல் நாம சித்தாந்தமே செய்கிறார். அவர் செய்த நாம சித்தாந்தப் பகுதியை அழகாகச் சுருக்கித் தருகிறார் தமது ஸ்ரீபகவந் நாம ரஸோதய நூலில் ஸ்ரீ போதேந்திரர். 

"வசமிழந்து நாமகீர்த்தனம் செய்தாலும் சிம்மத்தைக் கண்ட மிருகங்கள் போல் பாபங்கள் ஓடிவிடும். நாமகீர்த்தனமே குப்பைகளை அக்னிபோல் எல்லா பாபங்களையும் பொசுக்கிவிடும். நரகத்தைத் தரும் மிக உக்கிரமான கலிகல்மஷம் ஒருதரம் செய்த நாமஸ்மரணத்தாலேயே (கடவுள் நாமத்தின் நினைவு) நாசமாகும். 

" தெரிந்தோ தெரியாமலோ வாஸுதேவ கீர்த்தனம் செய்தால் தண்ணீரில்பட்ட உப்புபோல் பாபம் கரைந்துவிடும். ஒருதரம் கோவிந்த நாமத்தைச் சொன்னாலும் பலபிறவிகளில் செய்த பாபங்கள் அனலில்பட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். 

" ஹரி என்ற இரண்டு எழுத்தை ஒருதரம் உச்சரித்தவன் கூட மோக்ஷத்திற்காக மூட்டை கட்டிவிட்டான். 

"'நாராயண' என்ற நாமம் இருக்கிறது. வாக்கும் வசமாக இருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் நரகில் விழுகின்றனரே! என்பதுதான் அதிசயம். நரகவேதனைப் படும் ஜீவனைப் பார்த்து யமன் கேட்கிறானாம், 'ஏனடா! நீ கேசவனை பூஜிக்கவில்லையா? இங்கு வந்து அவதிப்படுகிறாயே!' 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஞான புத்திரன் என்று கொண்டாடப்பட்ட சுவாமி பிரம்மாநந்தர் கூறுவது -- 

"Repeat his name and call upon him. He is very near and he is dear to all. Why should he not reveal himself? Open your heart to him. He will guide you along the right path. There is nothing more purifying than his name and meditation upon him. He is our very own. He easily becomes revealed to us." 

தாரக் மஹராஜ் என்னும் சுவாமி சிவாநந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யர். அவர் கூறுவது -- 

"It is people with gross ideas alone who think that the more one tells beads, the more propitious does God become. Does He really look at the number? He only watches how much the heart is dedicated to Him. If the proper divine mood prevails, what does it matter whether you keep count or not?" 

ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் ஒவ்வொருவரும் ஆன்ம சாதனையில் நன்கு பழுத்த பெரும் மகான்கள். அவர்களில் சுவாமி அத்புதாநந்தர் என்னும் லாட்டு மஹராஜ் என்பவர் விசேஷமானவர். ஸ்ரீராமகிருஷ்ணர் நிகழ்த்திய அற்புதம் இந்த லாட்டு மஹராஜ் என்பதாலேயே சுவாமி விவேகாநந்தர் இவருக்கு அத்புதாநந்தர் என்னும் துறவுத் திருநாமத்தைச் சூட்டினார். அத்புதாநந்தர் என்பவரை ஜப சித்தர் என்றே கூறலாம். இவரை ஒப்பிட்டால் ஸ்ரீராமகிருஷ்ணர் படிப்பறிவில் மிகவும் கற்றவர் என்று சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு லாட்டு படிப்பறிவு சிறிதும் இல்லாதவர். ஆனால் ஆன்ம சாதனையினாலும், குருவின் பேரருளாலும் லாட்டு மஹராஜ் அடைந்த ஆன்மிகப் பெருநிலை சொல்லும் அளவன்று. அவர் ஜபத்தைப் பற்றிக் கூறும் கருத்து -- 

"Sri Ramakrishna used to say that before starting to chant the name of the Lord, one should salute the name. One should take refuge in the name of the Lord. The name and the named, that is, the Lord, are one." 

நாம மஹிமையைப் பற்றி அதை அனுஷ்டித்தவர்கள் சொன்னவற்றைத் தொகுத்தாலே பல பெரிய நூல் அளவிற்கு வந்துவிடும். நான் சொல்லக் கூடியது -- நல்ல பொழுது போக்கு. தத்துவச் சிந்தனைக்குச் சுருக்கு வழி. தனிமை மிகவும் இனிமை என்று ஆக்கவல்ல உயர்ந்த சத்சங்கம் இந்த நாம ஜபம் என்பது ஆகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


***

கேட்டானய்யா கேள்வி!

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்||

தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம்
என நீர் கருதும் தர்மம் எது?
பிறவிச் சுழற்சியெனும் பெருந்தளையினின்றும்
எதை ஜபிப்பதால் மானிடர் விடுபடல் ஆகும்?

இவ்வாறு யுதிஷ்டிரன் கேட்க பீஷ்மன் உரைத்த பதில்தான் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். இதில் ஜந்து என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லவா? இதில் ஒரு விசேஷம் இருக்கிறது. அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடிப் பிறந்த உயிர் அனைத்தும் குறிக்கப்படுகிறது. இந்த விசேஷத்தைக் காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ஜந்து: என்றால் பிறவியெடுத்த அனைத்து உயிரும் என்ற பொருளில் ஜந்து: - ஜனன தர்மா: என்கிறார். அது மட்டுமின்றி இன்னும் விளக்கமாக 'அநேந ஜந்து சப்தேந ஜப அர்ச்சன ஸ்தவநாதிஷு யதாயோக்யம் ஸர்வப்ராணிநாம் அதிகாரம் ஸூசயதி' என்று விளக்கம் அளிக்கிறார்.

பொருள் - இந்த ஜந்து சப்தத்தால் ஜபம், அர்ச்சனை, ஸ்தவம் ஆகியன செய்ய முடிந்த அனைத்து உயிர்களுக்கும் அதிகாரம் இருப்பது குறிப்பிடப்படுகிறது. ஆண், பெண், இளையர், முதியோர், குழந்தைகள் என்று அனைவருக்குமான வழி இஃது.

ஸ்ரீ பராசர பட்டரும் இந்த ஜந்து எனும் சொல்லுக்கு அப்படியே ஜனன தர்மா: பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்றுதான் பொருள் எழுதுகிறார். 

எனவே இவர் சொல்லலாமா அவர் சொல்லலாமா என்னும் தவறான எண்ணங்களுக்கு இடம் தருவோர் பாபம் புரிவோர். செய்யற்க.

கேட்டதெல்லாம் கேட்டான் தருமன். ஆனால் மனம் அமைதியுறவில்லை. வழி வழியாக வரும் சமுதாய ஒப்பந்த அமைப்புகளாகிய வழக்கமும், சட்டமும், நெறிகளும் வேண்டியது பார்த்தாயிற்றே! தன் பெயரே தர்ம புத்திரன். தர்மங்களின் பெயரால் தன் குடும்பமே நடுத்தெருவில் வந்து நின்ற கதை மறந்துவிடுமா என்ன? தர்மத்திற்கு மேல் தர்மமாகத் தன் உயிர் ஊசலாடும் நிலையிலும் அர்ஜுன பாண தீர்த்தமாகப் பொழிகின்றாரே பாட்டன், இவரே அதே தர்மங்கள், வழிவழி வழக்கங்கள் என்று சொல்லிக் கட்டுண்டு நின்றவர்தாமே! மறைகிறான் மஹாவிரதன். உயிர் போகும் முன் போய்க் கேள் என்று கேசவன் சொல்லத் தாங்கள் வந்து கேட்ட பொழுது கோவிந்தன் புகழ் பாடிக் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாரே! விதியால் ஏவப்பட்டு அன்றோ தன் வாழ்வும், ஏன் அனைத்து பிராணிகளின் வாழ்வும் இயங்குகின்றன. நேற்று காட்டில் காய் கனி கிழங்கு, இன்று அரசக் கட்டில் என்று தன்னை விதி வைக்கும் சதுரங்கக் காய் என்று தானே சொல்ல வேண்டும். எவ்வளவு தர்மங்கள் கேட்டு என்ன.. எத்தனை தர்மங்கள் இருந்தும் என்ன... இயங்கும் ஒரே தர்மம் சூட்சுமமான விதியின் தர்மம் தானே. சாத்திரங்கள் பல கற்றோரும் ஆசைச் சகதியில் சிக்கிச் சிறப்பை இழப்பதையும் பார்க்கிறோம்; கள்ளும் இறைச்சியும் விற்கும் ஒருவன் கருத்தெல்லாம் கடவுளிடம் வைத்துத் தூய்மையின் உருவமாகிறான். உலகையாளும் மன்னன் தன் புலன்களை ஆளத்தெரியாமல் பெண்ணிற்கும் மண்ணிற்கும் பொன்னிற்கும் அடிமையாகிப் புன்மை அடைகிறான். தன் உடலே தன் வசமற்ற வேசியோ தன் உள்ளத்தைப் பரம்பொருளுக்கு நிவேதனமாக்கி உன்னதம் அடைகிறாள். ஆனால் வழிவழியாக மனிதர்கள் யாத்த தர்மங்களோ, மனிதருக்கு விதித்த தர்மங்களோ வண்டி வண்டியாய் இருக்கின்றன. இதுதானே பாட்டன் கூறிய இதுகால்வரை கேட்ட அறப்பொழிவு உணர்த்துவது. இன்றிருந்து நாளை மறையும் உடலில் கோத்து வைத்த தர்ம படலங்கள் எண்ணிறந்தவை. ஆனால் என்றும் அழியாத ஆன்மாவின் இயல்பில் செழிக்கும் அந்த ஒரே தர்மம் எது? வந்து போகும் வாழ்க்கைக்குக் கடலாய்த் தர்மங்கள் இருக்கின்றன. பிறவியால் வராத வழியாகவும், மரணத்தால் போகாத நிலையாகவும் உள்ள ஆத்ம கடைத்தேற்றத்திற்கு உத்தமமான அந்தத் தர்மம் என்ன? விதியின் கைப்பாவை என்று உள்ள வாழ்க்கையில் அனைத்தும் அசுபம்தானே. எது சுபம் என்று தன்னியல்பிலேயே உணரத்தக்கதாய் இருக்கிறதோ அந்தச் சுபம் என்பதை மானிடர் எப்படி அடையலாம்?

சொல்லப்பட்டவற்றில் இல்லை சூட்சுமம். சொல்லில்தான் இருக்கிறது. ஆம். சிறைக் கைதியாகிக் கர்மச் சங்கிலிகளில் பிணைப்புண்டு பிறவியினின்றும் பிறவிக்குப் பிணைக்கைதியாகி இழுப்புண்ணும் நம் ஜீவன் ஏதோ ஒரு சொல்லை மறந்துவிட்டது. அதைச் சொன்னால் சங்கிலிகள் விட்டுப் போகும். சிறைக் கதவுகள் விலகும். சிறகு முளைக்கும். சிந்தை சிறக்கும். சிறப்பின் பாதை திறக்கும். சவமெனக் கிடந்த வாழ்வு சிவமெனச் சிறந்து பொலியும். அந்தச் சொல்? சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்ய சொல் ஒன்று வேண்டும். தேடித் தேடிக் கடைசியில் வாயில் இருக்கிறது வாய்மை. சொல்லில் இருக்கிறது சுதந்திரம். கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்? எதைச் சொல்லுவதால் பிறவி உயிர்கள் பிறவிச் சுழல் என்னும் கடுந்தளைக் கட்டு அவிழ விடுதலை பெறலாகும்? அதை அறிவானா நம் பாட்டன்? கேட்டுப் பார்ப்போமா? பதில் வருமா? அல்லது பழைய தர்மக்கட்டு ஒன்றை விரிப்பானா? 

கேட்டதெல்லாம் கேட்டு மீண்டும் கேட்கிறான் யுதிட்டிரன் என்கிறார் வைசம்பாயனர். என்ன கேட்டான் அப்படி? ஆறு கேள்விகள் கேட்டான் தருமன். மிக்குயர்ந்த பெருந்தெய்வம் எது? அறுதியான இறுதி நிலையம் உயிர்களுக்கு எது? சுபம் அடைய யாரைத் துதிப்பது? யாரைப் பூஜை செய்வது? தர்மங்களில் சிறந்த தர்மம் உங்கள் கருத்துப்படி எது? எந்த ஜபத்தால் உயிர்கள் முத்தி அடைகின்றன? தாகத்திற்குத் தவிக்கும் மனிதன் காதில் தண்ணீர் பற்றிய செய்திதான் முதலில் விழும். தருமனுக்கு உயிரின் பிரிவு என்பது என்றோ நடக்கப் போகும் ஒன்று. ஆனால் பாட்டனுக்கு அது நிகழ்காலம். அதுவும் நீட்டிவைத்த நிகழ்காலம். The moment of dying extended to obey his wish but still remains a moment.

புறத்திலும் அம்புப் படுக்கை. அகத்தின் மர்ம ஸ்தானத்திலும் அம்புப் படுக்கை. அம்புகளின் கூரிய முனைகளாகிய மலர்களால் தன் வாழ்வு என்னும் படையலைக் கண்ணனுக்கு ஆக்குகிறான் காங்கேயன். உண்மையில் அவன் ஒருவனே வீரன். ஆனால் அவன் உபதேசம் செய்வதோ ஆன்ம தீரத்தைப் பற்றி. அவனைச் செய்ய வைக்கிறான் அச்சுதன். ஆகாதவற்றை ஆக்குவோன். கூடாதவற்றைக் கூட்டுவோன். பேசாதவற்றைப் பேச வைப்போன்; பாராதவற்றைப் பார்க்கவும் அவன் அருளல்லால் நமக்கு ஏது கதி?

வென்று வேலெடுத்த விரை திண் தோளையும், வரையன்ன உடலையும் வீழ்ச்சியின் ஆயிரம் நாவுகளாகச் சுவைக்கின்றன ஆயிரம் அம்புகள்.
ஆனால் மடியும் உடலின் ஒற்றை நா உரைப்பதோ மடியாத உயிருக்கு ஆயிரம் நாமங்கள். அம்புகளின் தாகம் தீரக் கிடந்தவன் தன் அம்புதாகம் தீர விழைந்தக்கால், அம்பால் நீரூட்டித் தாகம் தீர்த்தவனின் தேர்ச் சாரதியை அன்பால் பரவுகிறான் புனிதநீர்ப் புதல்வன். தவித்த உயிர்த்தாகத்திற்குக் காதில் முதலில் விழுவதோ ஆறாவது கேள்வி. 'எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?' அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். --

"நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்; இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல் அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்"

பராசர பட்டரின் உரை பேசுகிறது --

"திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்; அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல்தன்மை கொண்டவன்; அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால் மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்."

அம்பின் நுனி குளிக்க அம்பின் துளி குளிரக் கிடந்து உரைத்தவனின் அன்பு மொழி நம் வாழ்வின் வறட்சியைப் போக்காதோ!

வீரர்களின் வாழ்க்கை வில், அம்பு, வேல், கவசம், போர், அழிவு, காப்பு என்றிருப்பது. வீரர்களின் பிதாமகன் இங்கு மரணத்தின் முற்றத்தில் கிடந்தபடி அழியா உயிருக்கு ஆக்கம் தேடுகிறான். இந்த உயிரை நலியும் அறியாமை, உலக ஆசைகள், மாயை என்னும் பகை முடிக்கும் ஆயுதத்தைப் பேரனுக்குப் போதிப்பதுபோல் உலகிற்கு அளிக்கிறான். உயிரின் இந்த ஓயாப் போரில் கைகண்ட ஆயுதம், வாய்கண்ட ஆயுதமாக இருக்கிறது. வினைகளின் கட்டை அவிழ்க்கும் மர்மம் பெயர்ச்சொல்லில் இருக்கிறது. அந்த ஆயுதத்தை தன் வீர வாழ்க்கையின் பழக்கத்தால் விளக்குகிறான்.

'தருமா! எந்த ஆயுதத்திற்கும் தேவதை உண்டு, பீஜம் உண்டு, சக்தி என்பது உண்டு, இதயம் என்பது உண்டு. அந்த ஆயுதத்திற்கான பிரயோஜனம் என்பதும் உண்டு. சாதாரணமாகப் போர் ஆயுதங்களுக்கு எஃகு என்பதைப் பீஜம் என்று கூறுவோம். ஏனெனில் காரணம் ஆகிய எஃகிலிருந்துதான் ஆயுதம் உருவாகிறது. ஆயுதத்தின் அழிக்கும் திறன் அதன் முனையின் கூர்மையில் இருக்கிறது என்ற காரணத்தால் ஆயுத முனையைச் சக்தி என்று சொல்வது வழக்கம். ஆயுதத்தின் மையப் பகுதியானது அதன் இயக்கம் வேகம் இலக்கு நாட்டம் முதலிய அம்சங்களுக்கு முக்கியமாகக் கேந்திரம் என்பதால் இதயம் என்று சொல்லப்படுகிறது. ஓர் ஆயுதம் என்றால் அது என்றும் வெறும் அலங்காரமாகவும் பொழுது போகவும் செய்யப்படுவது அன்று. ஆயுதம் என்று ஒன்று உருவானால் அதற்குப் பிரயோஜனம் என்று ஒன்று கண்டிப்பாக உண்டு. பொதுவாக நாம் அறிந்து பழகிய ஆயுதங்கள் சத்ரு வதம் என்னும் பயனை நோக்காக உடையன. ஆனால் தருமா! நான் சொல்லப்போகும் இந்தப் புருஷோத்தமனின் ஆயிர நாமங்கள் என்பதும் ஒரு வகையில் ஓர் ஆயுதம்தான். சத்ரு வதம் என்பதையும் நோக்காக உடையதுதான். இந்த ஆயுதத்திற்கும் கண்டறிந்த ரிஷிகள், தேவதை என்று உண்டு. இந்தத் தேகம் நிலையில்லாதது. அதை அழிக்க வரும் எதிரிகளே சத்ருக்கள் என்று ஆயுதங்களை எறிந்து அழிக்கத் தக்கவர்கள் என்றால், இந்த ஆத்மாவிற்கு எதிரிகளாக வரும் அறியாமை, உலக ஆசைகளின் வேகம், மாயை, காமம், குரோதம் லோபம், மதம், மாச்சரியம், மோகம் ஆகிய சத்ருக் கூட்டங்கள் மாயாவிகளிலும் மாயாவிகளான பகைகள். மற்ற புறப்பகைகள் உன் உடைமைகளைக் கைப்பற்றி, உன் இருப்பிடத்தைக் கைப்பற்றிப் பின் உன்னை அழிக்கும். ஆனால் இந்தக் கொடிய அகப்பகைகளோ முதலில் உன்னை அடிமைப் படுத்திப் பின்னர் உன் நித்ய வாழ்வு, அளவிலா ஆநந்தம், எல்லையற்ற ஞானம் ஆகிய உன் சொந்த இயல்புகளாகிய செல்வங்களை உன்னைக் கொண்டே தங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடும். இவற்றுக்கு அழிவு என்பது ஒரே ஆயுதத்தினால்தான். அதுதான் பகவானின் நாமஜபம்.

இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள். வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி. பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்குச் சந்தஸ். தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு. பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது. தேவகீநந்தன: என்பது சக்தி. திரிஸாமா என்பது இதயம். அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம். பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியைத் தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும், போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.' என்கிறான் பீஷ்மன். மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி அவன் சொன்னவை இவை. அவனைவிட வீரனும் இருந்ததில்லை. அவனுடைய சொற்களைவிட தீரமும் இருந்ததில்லை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பிரணவமும் நமஸ்காரமும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம் என்கிறோம். பிறகு நாமாவளி என்கிறோம். நூல்களிலும் முதலில் செய்யுள் வடிவில் இரண்டு இரண்டு வரிகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள். அப்புறம் வரிசையாகப் பெயர்ப் பட்டியல் மாதிரி போட்டு எல்லா நாமங்களிலும் தொடக்கத்தில் பிரணவமும், அந்த நாமத்தின் முடிவில் நம: என்றும் போட்டு முடித்திருக்கிறார்கள். 

அப்படியென்றால் ஸ்தோத்திரம் என்றால் என்ன? நாமாவளி என்றால் என்ன? இரண்டு விதங்களிலும் அதே ஆயிரம் நாமங்கள்தாமே வருகின்றன? என்று ஒரு நண்பர் கேட்டார். அவருக்குத் தந்த விளக்கத்தை இங்கேயும் தருகிறேன். 

ஸ்தோத்திரம் என்பது பகவானின் நாமங்களைச் செய்யுள் வகை ஒன்றில் பாக்களாகச் சேர்த்துத் தரப்படும் வடிவம். இங்கு அனுஷ்டுப் என்னும் சந்தத்தில் ஸ்ரீவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களும் செய்யுள் வடிவில் தரப்பட்டிருக்கின்றன. இப்படித் தந்தால் அந்த வடிவத்தில் அதற்குப் பெயர் ஸ்தோத்திரம். 

சரி. அனுஷ்டுப் சந்தம் என்றால் என்ன? அதாவது வடமொழியில் பொதுவாக ஒரு செய்யுள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வரிகள் இருக்கும். முதல் வரியின் முடிவில் | - இப்படி ஓர் ஒற்றைக் கோடு இட்டிருக்கும். இரண்டாவது வரி அந்தச் செய்யுளின் முடிவு வரியாக இருக்கும். அதன் முடிவில் || - இப்படி இரண்டு செங்குத்துக் கோடுகள் இடப்படும். அப்படி இட்டால் அந்தச் செய்யுள் முடிவடைகிறது என்று பொருள். 

ஒவ்வொரு வரியையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதிக்கும் பாதம் என்று பெயர். அப்படி என்றால் ஒவ்வொரு செய்யுளிலும் இரண்டுவரிகள் இருக்கும். ஒவ்வொரு வரியிலும் இரண்டு பாதங்கள் இருக்கும். ஆக மொத்தம் ஒவ்வொரு செய்யுளும் நான்கு பாதங்கள் கொண்டது. ஒவ்வொரு பாதத்திலும் எண்ணினால் எட்டு உயிரெழுத்துகள் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வரிக்கும் 16 உயிரெழுத்துகள். முழுச் செய்யுளுக்கு 32 உயிரெழுத்துகள். அப்படி உள்ள செய்யுளுக்கு அனுஷ்டுப் சந்தஸ் என்று பெயர். 

இப்பொழுது தர்ம புத்திரன் கேட்ட கேள்வி ச்லோகம், அதையே எடுத்துக்கொள்வோம். 

கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யேகம் பராயணம் | 
ஸ்துவந்தக்கம் கமர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா:சுபம் || 

இதில் 1) கிமேகம் தைவதம் லோகே, 2) கிம்வாப்யேகம் பராயணம், 3) ஸ்துவந்தக்கம் கமர்ச்சந்த:, 4) ப்ராப்நுயுர் மாநவா:சுபம் - என்பன நான்கு பாதங்கள். 

ஒவ்வொரு பாதத்திலும் எண்ணிப்பாருங்கள். எட்டு உயிரெழுத்துகள் இருக்கும். இப்படிப் பாடுவது அனுஷ்டுப் சந்தஸ். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் முழுவதும் இப்படி அனுஷ்டுப் சந்தஸில் பாடப்பட்டிருக்கிறது. இது ஸ்தோத்திரம். 

இந்த ஸ்தோத்திரம் தொடங்கும் போது ஹரி: ஓம் என்று ஹரி நாமத்தோடும், பிரணவத்தோடும் தொடங்கி முடிவில் ஸர்வப்ரஹரணாயுத ஓம் நம இதி என்று நமஸ்காரத்தில் முடிகிறது. அதாவது இது எப்படி என்றால் ராமா கிருஷ்ணா கோபாலா நாராயணா அச்சுதா என்று வரிசையாகக் கூப்பிட்டு உனக்கு நமஸ்காரம் என்று ஸ்தோத்திர முடிவில் வணங்குவது.

இனி நாமாவளி என்னும் வடிவத்திற்கு வருவோம். ஒவ்வொரு நாமத்தையும் ப்ரணவத்தோடு சொல்லி இன்ன பெயர் கொண்ட கடவுளே உனக்கு நமஸ்காரம் என்று முடித்து, மீண்டும் அடுத்த நாமத்திற்கும் அப்படியே செய்வது. இந்த  வடிவத்தில் ஒவ்வொரு நாமத்தோடும் நான்காம் வேற்றுமை உருபு சேரும். ராமனுக்கு, கிருஷ்ணனுக்கு, நாராயணனுக்கு, அச்சுதனுக்கு என்று. 

ஏன் ப்ரணவம் சொல்லவேண்டும்? ஏன் சொல்கிறோம்? அங்குதான் ஒரு முக்கியமான சூக்ஷுமம் இருக்கிறது. நாம் யாரையாவது மனிதர்களைப் பார்த்தால் அவர் பெயரைச் சொல்லியே நினைத்தோ வணக்கம் சார் என்கிறோம். இங்கு நாம் வணங்குவது ஓர் ஆளை அன்று. ஏதோ பெரிய அதிகாரி, சக்ரவர்த்தி என்பவரை நாம் வணங்கவில்லை. நாம் இங்கு வணங்குவது எல்லாம் அனைத்துப் பிரபஞ்சமாகவும் ஆகி, அனைத்தினுள்ளும்  இருக்கும் அந்தப் பரம தத்துவமான ஆத்மாவையே, பரமாத்மாவையே நாம் வணங்குகிறோம். அந்தப் பரமாத்மாவைக் குறிப்பிடும் பெயர் பிரணவம். 
எனவேதான் பிரணவத்தைச் சொல்லி வணங்குகிறோம். பரமாத்மாவாகிய ராமனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய கிருஷ்ணனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய அச்சுதனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய நாராயணனை வணங்குகிறேன் என்பதை நமக்கு மனத்தில் தியானிக்கப் பிரணவம் தூண்டுகிறது. 

அந்தந்த நாமத்தின் முடிவில் நம: என்பது என்ன? நம: என்பதில் இரண்டு எழுத்துகள் உள்ளன. ந + ம:. ம: என்றால் எனக்கு என்று பொருள். அதனோடு ந என்னும் எதிர்மறை ஒட்டைச் சேர்த்தால் எனக்கு இல்லை என்று பொருளாகும். எனவே ஒவ்வொரு நாமத்தையும் 'பரமாத்மாவுக்கு என்னை நான் உரியவன் என்று உணர்கிறேன், நான் எனக்கு உரியவன் இல்லை' - என்று பரமாத்மாவிடம் நம் அஹங்கார மமகாரங்களை அதாவது நான் எனக்கு என்னும் எண்ணங்களை ஒப்படைத்துவிடுதலுக்குப் பெயர்தான் நமஸ்காரம். 

ஆனால் எல்லோரும் சர்வ சாதாரணமாகத் தெருவில் யாரையாவது பார்த்தால் கூட 'நமஸ்காரம் சார்' என்கிறோம். என்ன பொருள் இருக்கிறது? நாம் நமஸ்காரம் என்பதன் பொருளைச் சரியாக உணராததால் அப்படிச் சொல்லுகிறோம். பரவாயில்லை. அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று இல்லை. ஆனால் அப்படிச் சொல்வதோடு ஒரு சிந்தனையையும் நாம் மனத்தில் கூடச் சேர்த்துக்கொண்டால் போதும் அதுவே, அதாவது தெருவில் யாரையாவது நாம் பார்த்துச் சொல்லும் வணக்கமே, நமஸ்காரமே கூட உயர்ந்த வழிபாடாக ஆகிவிடும். என்ன சிந்தனையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்? அதாவது நாம் வணங்குவது அந்த மனிதருக்குள் அந்தர்யாமியாக வீற்றிருக்கும் பகவானுக்குத்தான், நாராயணருக்குத்தான் நாம் வணங்குகிறோம் என்ற சிந்தனையைச் சேர்த்துக்கொண்டால் போதும், அங்கும் நம் நமஸ்காரம் பொருள் வாய்ந்ததாக ஆகிவிடும். அப்படி மனிதருக்குள் வீற்றிருக்கும் நாராயணரை அவ்வாறு சிந்தித்து வழிபடுவதே சிறந்த பூஜை என்கிறார் விவேகாநந்தர். நரனுக்குள் நாராயணனை வழிபடுவதே மிக உயர்ந்த பூஜை முறை என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். 

ஆனால் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? கொஞ்சம் ஏடாகூடமாகச் செய்கிறோம். அவ்வளவே. என்னவென்றால் மனிதர்கள் சிலரைத் தெய்வங்களாகக் கருதி வழிபடுகிறோம். சிந்தனை செம்மையானால் செயலும், வணக்கமும் செம்மை ஆம். 

சரி நாமாவளிக்கு வருவோம். அப்படிப் பிரணவத்துடன் நாமம் நமஸ்காரம் ஆகிய வடிவத்தில் ஒவ்வொரு நாமத்தையும் ஜபிக்கும் போது அதுவே சிறந்த தியானமாக ஆகிறது. கூடவே ஒவ்வொரு நாமத்திற்கும் பூக்களை இட்டு நாராயணனைத் தொழுதக்கால் அதுவே சிறந்த அர்ச்சனை ஆகிறது. ஏன் பூக்களை இட்டு அர்ச்சிக்கிறோம்? உள்ளம் என்பது மலர வேண்டும். மலர்ந்த உள்ளத்தில்தான் மாதவன் வீற்று அருள் புரிவான். உள்ளம் மலர்வது என்பது என்ன? உலகக் கவலைகள், ஆசைகள், புலன் நாட்டங்கள், கீழ்மை, பொறாமை, வஞ்சம், அஹங்காரம் ஆகிய வாட்டங்கள் எல்லாம் நீங்கி உள்ளம் உள்முகமாகக் கடவுளை நோக்கி விரிவதுதான் மலர்வது என்று பொருள். அவ்வாறு 'என் உள்ளம் உன்னை நோக்கி மலர வேண்டும்' என்று அவனிடம் பிரார்த்திக்கும் புறச் சடங்கே பூக்களை இட்டு அர்ச்சிப்பதன் உட்பொருள். 

எனவேதான் நாமாவளி என்ற வடிவத்தில் வரிசையாக ஆயிரம் நாமங்களையும் கொடுத்திருக்கிறார்கள். எப்படியும் நாம் இழந்து போகாமல் இருக்க நமது முன்னோர்கள் செய்து வைத்துப் போன நம் சொத்துகள் இவை. 
யார் யாரையோ அர்ச்சிக்கிறோம், யார் யாரையோ துதி பாடுகிறோம், யார் யாரையோ அல்ப விஷயங்களுக்கு வணங்குகிறோம், நாம் வணங்கும் அவர்களோ நமக்கு முன் போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். இது ஒரு பக்கம்.... ஆனால் நம் முன்னோர்களோ நாம் வணங்க வேண்டியது எங்கே எப்படி என்று பல வடிவங்களில் தந்துள்ளனர். ஆனால் அதை நாம் அவமானம் என்று கருதுகிறோம். பரவாயில்லை. தெரிந்துகொள்ளும் வரையில்தானே தடுமாட்டம்!  
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***


SUNDAY, OCTOBER 24, 2021

How To Love INFINITY?

ஸ்ரீமஹாவிஷ்ணுவை துதிக்கும் ஸ்தோத்திரம், ஆயிரம் நாமங்களால் நமஸ்காரம் செய்யும் நாமாவளி. புஷ்பங்கள் இட்டு அர்ச்சிக்கும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை, இவையெல்லாவற்றிற்கும் அடிப்படை என்ன? நாம் யார்? அவன் யார்? இந்த இரண்டுதானே. அவன் என்றால் ஏதோ நம்மைப் போல் ஓர் ஆளில்லை என்பது தெரிகிறது. அதாவது பிறந்து வளர்ந்து உருவம் மாறி பெருத்து இளைத்து அதெல்லாம் உடைய ஓர் ஆள் இல்லை. இதெல்லாம் இல்லாமல் ஓர் ஆள் இருக்க முடியுமா? ஏதோ காயகல்பம் அது இதுன்னு கதைகள் உண்டே அன்றி, அங்கும் நீண்ட நாள் இருக்கலாம் என்றுதான் கதை, அப்புறம் முதுமை, மரணம் என்று இயற்கை முந்திக்கொள்ளும் என்றுதான். எப்படிப் பார்த்தாலும் பல அங்கங்கள் ஒருங்கிணைந்து ஓருடல், ஓருருவம் என்றால் அதெல்லாம் ஒருநாளில் மறைந்துதான் ஆகவேண்டும். 

வேதாந்த தேசிகர் பாடுகிறார் - எல்லா தேவர்களும் கர்மச் சங்கிலியில் பூட்டியபடி ரோல்பரேடில் நிற்கிறார்கள். காலம் நியதி இரண்டும் அவர் அவர்கள் அந்தஸ்துக்குத் தக்கபடி வரிசையில் நிறுத்தியிருக்கிறது. மிக நீண்ட நாள் வாழும் தேவன் முன்னாடி நிற்கிறான். மிகக் குறுகிய வாழ்நாள் உடைய ஜந்து பின்னால் நிற்கிறது. மிகத் தள்ளி வரிசையில் நிற்கும் மனிதர் முன்னால் நிற்கும் தேவர்களிடம் தங்கள் கர்மத் தளையை அவிழ்த்துவிடுமாறு கெஞ்சிக் கையை நீட்டினால், அவர்கள் தங்கள் கைகளைப் பதிலுக்குக் காட்டுகின்றனர். வரிசையில் நிற்பவர் ஒருவருக்கொருவர் எங்கே விடுவித்துக் கொள்வது? சுதந்திரமான தத்துவம் எதுவோ அதுவன்றோ விடுவிக்கவல்லது. 

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கிறார் -- முக்குணங்களும் தளைகள்தாம். சத்வம் அதில் கொஞ்சம் நல்ல தளை. அவ்வளவுதான். ஒரு காடு. மனிதன் ஒருவன் மூன்று திருடர்களிடம் மாட்டிக்கொண்டு விட்டான். ஒருவன், 'ஏய் இவனைக் கொன்று போட்டு இவன் பொருட்களைக் கவர்வோம்' என்கிறான். அவன் தமோகுணம். இன்னொருவன், 'ஏய் இவனைக் கொல்வதால் நமக்கு என்ன லாபம்? கட்டிப் போட்டுவிட்டுக் கவர்வோம். இவனால் போலீசுக்குத் தெரிவிகக முடியாது' என்கிறான். அவன் ரஜோகுணம். மூன்றாமவனோ கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து, 'ஐயோ பாவம், இப்படியே நீ இங்கே கிடந்தால் ஏதாவது மிருகங்கள் வந்து அடித்துவிடும். பாவம் நீ ஏன் சாக வேண்டும்? வா காட்டின் எல்லை வரையில் வந்து உன்னை நகரத்துக்குள் போக வழிகாட்டிவிட்டுச் செல்கிறேன்' என்று அவிழ்த்துவிட்டு அழைத்துச் செல்கிறான். அவன் சத்வகுணம். ஆனால் எல்லைக்கு வந்ததும் மனிதன் நன்றிப் பெருக்கால், 'அண்ணே! வாங்க வந்து ஒருவாய் காப்பித் தண்ணி குடித்துவிட்டுப் போங்க' என்று அழைக்கிறான். அந்த மூன்றாமவனோ, 'ஐயய்யோ! நான் நகரத்துள் வரமுடியாதப்பா! நான் மாட்டிக்கொள்வேன். போய்வா' என்கிறான். சத்வ குணம் நல்லவன். ஆனால் அவனும் திருடனே. சமுதாயத்தில் நடமாட முடியாது. அதுபோல் முக்குணங்களும் பிரம்மத்திடம் அண்ட முடியாது. ஏதோ சத்வ குணம் பிரம்மத்தை நோக்கி வழிகாட்டும். அம்மட்டே. 

வேதம் முழுதும் மூன்று குணங்களை விஷயமாகக் கொண்டது அர்ச்சுனா! நீயோ மூன்று குணங்களும் கடந்தவனாக இரு - என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில். அவனே சொல்கிறான் - மூன்று குணங்களால் ஆன என் மாயையானது கடத்தற்கரியது அர்ச்சுனா. யாராலும் தங்கள் தங்கள் முயற்சியால் கடந்துவிட முடியாது. என்னையே சரணடைகிறவன் எவனோ அவன் இந்த முக்குணங்களைக் கடந்தவனாக ஆகிறான். 

ஆக ஒன்று தெரிகிறது. ஸ்ரீமந் நாராயணன் என்பது ஓர் ஆளில்லை நம்மைப் போல், ஏன் யாரையும் போல். அவன் சரி இந்த உலகில் இயங்கும் எவ்வளவோ தத்துவங்கள் போன்று ஒரு தத்துவமோ என்றால் அதுவும் இல்லை. சரி ஏதாவது பெரிய ஜோதி உருவமா என்றால் அப்படியும் இல்லை. இல்லை பெரிய ஸ்தானமா நிலையா ம் ம் இல்லை. 

இதனைத்தையும் உள்ளடக்கிய முழுமை. இந்தத் தத்துவங்களோடு எல்லாம் ஒன்றாக வைத்து எண்ண முடியாத பரம தத்துவம். 

இந்த ஜோதிகள் இவற்றோடு எல்லாம் வைத்து நினைக்க முடியாத பரம ஜோதி. 

இந்த நிலை அந்த நிலை என்று அழிவுறும் நிலைகள் எதிலும் வைத்து எண்ண முடியாத பரம தாமம், நிலை. 

அத்தனையையும் தனக்கு உடலாகவும், தான் அனைத்தினுள்ளும் ஒன்றாகிக் கலந்து உயிராகி நிறைந்து நிற்பதால் பரம ஆத்மா. 

இப்படிச் சொன்னால் எப்படி சார் நினைத்துப் பார்ப்பது? அதனால்தான் அசிந்த்யன். 

பகுதி படாத முழுமை. அதனால்தான் அவ்யயன். 

ஆனாலும் அவனுக்கு, அந்த முழுமைக்கு, அந்த நாராயண பரஞ்சோதிக்கு, நாராயண பரந்தாமத்திற்கு, நாராயண பர தத்துவத்திற்கு ஓர் உருவம் தந்து பார்க்கிறது ஸ்ரீமத் பாகவதம். 

அவனுடைய பாதங்கள் இந்தப் பூமி. 

விண்ணுலகம் அவன் சிரம். 

இடைப்பட்ட வானம் அவனுடைய நாபி. 

ஞாயிறு அவன் கண். 

வாயு அவன் நாசி. 

திசைகள் அவன் செவிகள். 

சந்திரன் அவன் மனம். 

மாயை அவன் முறுவல் 

மரங்கள் அவன் ரோமங்கள் 

மேகங்கள் அவன் குழல் கற்றை 

அவன் மார்பில் இருக்கும் கௌஸ்துபம்
சுத்த ஜீவ சைதன்யம் 

இப்பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? என்று தெரிகிறதா? அவன் மார்பில் திகழும் கௌஸ்துபம் நாம். ஜீவர்கள். 

ஜீவர்களின் கூட்டத் திகழ்ச்சி ஸ்ரீவத்ஸம் 

வனமாலை மாயையின் விசித்ர குணங்கள் 

அவனுடைய மஞ்சள் ஆடை வேதம் 

அவன் அணிந்த முப்புரி நூல் மூன்று அக்ஷரங்கள் கொண்ட பிரணவம். 

அநந்தனாகிய ஆதிசேஷன் அவ்யாக்ருதம். 

அவன் அமரும் பத்மம், தர்மம் ஞானம் என்ற இதழ்கள் உடைய சுத்த ஸத்வம் 

பிராணன் கதையாகிய கௌமோதகி 

அப்பு தத்துவம் பாஞ்சஜன்யம் 

அக்னி தத்துவம் சுதர்சனம் 

அதாவது என்னவென்றால் முழுமைக்கு உருவம் தந்து தந்து இந்த மனம் தோல்வி அடைவதுதான் இதன் வெற்றி. ஏனெனில் உருவம் தந்து இந்த மனம் வென்றுவிட்டால் அப்பொழுது அது தோல்வி. மனத்தால் கிரஹிக்கக் கூடிய எதுவும் பரம் தத்துவமாக ஆகிவிடமுடியாது. ஆனாலும் உருவம் தராமல் மனம் ஒன்றை மனம் கொள்ள முடியாது. எனவேதான் தேர்வு பெற பரிட்சை எழுதாமல் தோல்வி அடைய பரிட்சை எழுதவைக்கின்றன தியான ச்லோகங்கள். நினைத்துப் பார்த்து மனத்தில் வாங்க முயன்று அந்த முழுமையில் தான் அமிழ்ந்து போகும் போதுதான் கரையேற முடிகிறது. வெறும் கடலில் விழுந்து அமிழ்ந்து போனால் கரை ஏறமுடியாது. ஆனால் இந்தப் 'பெரும் புறக்கடலில்', 'கிருபா சமுத்திரத்தில்' அமிழ்ந்து போனால் தான் வாழ்வு. அப்படி அமிழக் கற்றவர்கள்தாம் ஆழ்வார்கள். 

ஸ்ரீராமகிருஷ்ணர் நரேனை ஒரு முறை ஒரு கேள்வி கேட்டார். 'அப்பா! நீ சச்சிதாநதமாகிய ரஸம் ஊற்றிய ஒரு பாத்திரத்தின் விளிம்பில் ஒரு தேனியாக உட்கார்ந்திருக்கிறாய். எப்படி அந்தத் தேன் ரஸத்தை அருந்துவாய்?' 

ஜாக்கிரதையாக விளிம்பில் கெட்டியாக ஊன்றியபடித் துருத்தியை நீட்டி நீட்டி அருந்துவேன். 

ஏன்? 

ஆம். தவறினால் அதற்குள் விழுந்து இறக்க நேரிடுமே! 

அடடா! குழந்தாய்! இது பிறப்பு இறப்பு என்பதையே நீக்கும் அமிர்தக் கடல் ஆயிற்றே! நீ எதற்குப் பயப்பட வேண்டும்? இதற்குள் ஆழ்ந்து அமிழ்ந்தால் என்ன? அமிழ்ந்து போகப் போக நித்யத்வம் அன்றோ? மரணம் அன்றோ மறைந்து போகும். 

அந்தத் தத்துவத்தை அன்றோ தியானித்து இங்கே ஸ்ரீமஹாவிஷ்ணு என்று ஆயிர நாமங்களால் ரீங்காரம் இட்டுலவும் வண்டாக ஆகச் சொல்கிறது பீஷ்மனின் ஜீவ நாதம். 

தியாயந் ஸ்துவந் நமஸ்யம்ச 

தியானம் செய், தோற்றுப் போ! 

துதி செய், தோற்றுப் போ! 

அந்தத் தோல்விக்கு வெற்றிவாகை பாடு! 

அதுதான் நமஸ்காரம். 



How To Love INFINITY?

நீங்கள் INFINITYஐ காதல் செய்து பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதுதான் ஸ்ரீமந் நாராயணனைத் தியானம் செய்வது என்பது. எல்லாவிதத்திலும் அநந்தம். இடத்தால் எல்லைப் படாத அநந்தம். காலத்தால் எல்லைப் படாத அநந்தம். பொருளால் எல்லைப்படாத அநந்தம். புரியவில்லை. எப்படி இத்தகைய ஓர் வஸ்துவைக் காதல் செய்வது? எனவேதான் பரவஸ்து. 

கூகிள் மேப்பில் காட்டுகிறார்கள். சும்மா பத்தாயிரம் கணக்கில் ஒரு பெருக்கம் போனாலே பூமியே கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அவ்வளவு பொடியாய். அந்தப் பொடியில் எங்கோ எங்கோ பொடி நுண் நுனிக் கோண் கூறின் சதத்தில் ஒன்று. நாம் அநந்தத்தை, இன்ஃபினிடியைக் காதல் செய்வது என்று நினைத்துப் பாருங்கள். ஆனாலும் அந்த அநந்தம், அந்தப் பராத்பரம், அந்தப் பரவஸ்து, அந்தப் பரம ஆத்மா தன்னை இந்த அணு பரிமாணம் உள்ள ஜீவன் நினைக்கவும், காணவும், பூஜிக்கவும், ஸ்தோத்திரம் செய்யவும் ஆகலாம்படி அவனுக்கு எந்த எந்த உருவம் பிடிக்கிறதோ அந்த உருவத்தில் எல்லாம் தன்னை எல்லைக்கு உட்பட்டது போல் ஒரு மாயையை ஆக்கிக்கொண்டு வந்து இவன் முன் நிற்கிறதே! இது என்ன இது என்ன இது என்ன என்று மூர்ச்சை ஆகிறார் பீஷ்மர். 

அந்த அநந்தம், அந்தப் பரம்பொருள், எல்லையற்ற பராபர வஸ்து இப்படி ஓர் ஆய்ச்சிக் கை வெண்ணைக்கு அழுவதும் இதழ் நெளிப்பதுமாய் இருந்து ஏங்கி நின்ற எளிவே என்று நினைத்தார் நம்மாழ்வார். ஆறுமாச காலம் அப்படியே மூச்சுப் பேச்சின்றி மோகித்துக் கிடந்தார். இந்தப் பகுதியை கூரேசர் எடுத்து விளக்க ஆரம்பித்தார். 'ஆழ்வாருக்கு ஓடுகின்ற பா4வம் அறியாதே நாம் யார் இருந்து இதற்குப் பாசுரம் இடுவது!' என்று காலாழ்ந்தார் நெஞ்சாழ்ந்தார் கண் சுழன்றார், கண்ண நீர் வார 'இன்று இத்துடன் விட்டால் ஆகாதோ!' என்று அதிலேயே பரவசமாகிக் கிடந்தார். எழுந்து சென்ற வைணவர்கள் எம்பெருமானாரிடம் சென்றார்கள். எம்பெருமானாரோ காத்துக் கிடக்கிறார். 'என்ன சொன்னார் கூரேசர் இன்றைக்கு?' இந்த இடம் வந்தவாறே பரவசமானார், 'ஆழ்வார்க்கு ஓடுகின்ற பாவம் அறியாதே நாம் யார் இருந்து இதற்கு என்ன பாசுரம் இடுவது' என்று பேச்சோய்ந்தார், கண்ணீர் அளறில் ஆழ்ந்தார் என்றார்கள். அதற்கு எம்பெருமானார், 'என்ன பரம சேதநனோ! என்ன பரம சேதநனோ, ஆழ்வான்!' என்றார். அதுமுதல் கூரத்தாழ்வான் என்றே பக்த குலம் குலாவத் தொடங்கியது. 

'அவ்வளவு பெரியவன் கிடீர்! நம்முன்னே இவ்வளவு எளியனாய் ஏவின செய்யும் சேவகனாய், தூது போ என்றால் ஓலை கட்டிக்கொண்டு தூது போவான் ஒருவனாய் நிற்கிறான் இந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா!' என்று சொல்ல வருகிறார் பீஷ்மர். சொல்ல முடியவில்லை. நெஞ்சடைக்கிறது. அப்பொழுதே பிராணன் பிரிந்துவிடுமோ என்று பயம் பிடிக்கிறது. 

அற்புதமான கவிதை. சௌந்தர்யமெல்லாம் சிமிழ்ப்புறப் பெய்த சொற்கள். அநந்தம் என்பது உருவம் கொண்டது போல் உயிர்கள் முன் நடிக்கும் என்றால், அந்தச் சாகசத்தையும் சொல்லாடித் தோற்கின்ற வெற்றி இந்தக் கவிதை - தியான ச்லோகம். 

பாலால் ஆகிய பெருங்கடல். ஏன் பால்? பால் என்பது ஜீவ ரசம். 

பாற்கடலின் கரை எதனால் ஆனது? 

தூய ரத்தினங்கள் வில் எறியும் சுடர் பரப்புதான் கரைமணல். 

முத்துமாலைகளால் ஆகிய ஆசனம். ஸ்படிக மணி போன்று பளிங்கிடும் முத்துகளால் ஆனவையோ அவர் அங்கங்கள்? 

ஆசனத்தின் மேலே விதானமிடும் மேகங்கள் தாம் கர்ப்பம் சுமந்த அமுதத்தை அவ்வப்பொழுது பிலிற்றும் சாரல். 

சங்கம் ஒருகை, சக்கரம் ஒருகை, கதை ஒருகை, லீலா பதுமம் ஒருகையில். அந்த முகுந்தன்! 

அடுத்த ச்லோகம் இந்தச் சித்திரத்தைப் பெரும் புதிர் வியப்பாக ஆக்குகிறது. உங்கள் கற்பனையைக் கட்டி அதில் உங்களை ஏற்றிப் பின் அதை உடைத்துக் கற்பனாதீதமான அநந்தத்தின் முற்றத்தில், அரங்கன் திருமுற்றத்தில் உங்களை இடுகிறது தியான ச்லோகம். இப்படி ஓர் திருவின் மணாளன் வீற்ற கோலம், அந்த முகுந்தன் யார்? அவர் எப்படி இருப்பார்? அவரா? 

அவருக்கு இந்த பூமிதான் பாதங்கள்.
அவருக்கு இந்த வானம் நாபி.
வாயு பிராணன்
சந்திரன் சூரியன் இருகண்கள்
திக்குகள் காதுகள்
திய: என்னும் விண்ணுலகு தலை
அக்கினி வாய்
சமுத்திரம் அடிவயிறு
எந்த வயிற்றில் தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள்,
நாகர், கந்தருவர், அசுரர் என என என விரிந்த உலகு
விசித்திரமாக விளையாடிக் களிக்கிறதோ
அந்த மூவுலக வடிவினர்தாம் ஈசராகிய
இந்த விஷ்ணு
இந்த விஷ்ணுவாகிய ஈசரை நமஸ்கரிக்கிறேன். 

அந்தப் பரமாத்மாவாகிய வாஸுதேவருக்கு நமஸ்காரம் 

எப்படி இந்த விராட் சொரூபத்தை மனத்தில் வாங்குவது? கவிதையாக்கிப் பார்த்தாலும் கற்பனையின் கீல்கள் உடைந்து போகின்றன. அந்தத் தோல்வியைக் கண்டு பரம கருணை ஏற்படுகிறது அந்த எல்லையற்று எல்லையற்று எல்லையற்றதான் ஒன்றில். தூய்மையான யோகிகளின் இதயத்தில் பரம தயையால் நாம் புரிந்துகொள்ள வேண்டி, அஃது ஓர் உருவம் கொள்கிறது. 

சாந்தமான வடிவு
அரவணைமேல் சயனம்
நாபியில் மலர்ந்த தாமரை
தேவர்களுக்கெல்லாம் நாயகன்
உலகின் ஆதாரம்
ககனமாகிய ஆகாயத்தைப் போன்ற தன்மை
மேகம் போன்ற நிறம்
திருவின் கேள்வன்
அந்தக் கேண்மையால்
கமலமென மலர்ந்த கண்கள்
யோகிகளின் உளத்தே
தியானத்தால் புலப்படும் அருள்
பவ பயத்தைப் போக்கும் அபயம்
ஸர்வ லோகங்களுக்கும் ஏக நாதன்
அந்த விஷ்ணுவை என் ஆற்றாமையால்
வணங்கியவண்ணமே இருப்பன் யான். 

கார்மேகமன்ன மேனி
மஞ்சள் பட்டில் ஆடை
திருமறு மார்வம்
உயிர்க்குல மணி விடுசுடரால்
ஒளிர்தரு அங்கங்கள்
முளரி அலர்ந்தன்ன
விரிந்த கண்கள்
புண்ணியர் புடைசூழ் சுற்றம்
உலகனைத்துக்கும் ஒரே நாதன்
விஷ்ணுவை வந்தித்து உவப்பேன் 

(பொருளனைத்துக்கும் ஆதி
புவியைத் தாங்கும் பொறை
பல்லுருவம் கொண்ட பரிவு
பிரபுவான விஷ்ணுவிற்கு நமவே) 

கையன சங்கமும் நேமியும்
தலையன கிரீட குண்டலமும்
பொன்னாடையரையும்
பதுமநல் பார்வையும்
ஆரமார் மார்வம்
விளங்குயிர் மணியும்
நாற்கரம் திகழும்
விஷ்ணுவை வணங்குவன் தலையால். 

பாரிசாத தருநிழலும் பொன்னரிமாத் தவிசும்
கார்மேகவண்ணமும் கண்புடைபரந்த நோக்கும்
அணிதிகழ் இருக்கையும் திங்களேய்க்கு முகமும்
நாற்கரமும் திருமறுமார்வும் கொண்டு
ருக்மிணி சத்ய பாமையுடன் விளங்காநிற்கும்
ஸ்ரீகிருஷ்ணனைச் சரணம் எய்துகிறேன். 


இது ஏதோ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் இருப்பது. பக்தர்கள் உவப்பது என்று மட்டுமன்று. சங்க காலப் புலவோர் மெய்மறந்து சொல் மறந்து வாய்வெருவி நிற்பது. நம்ப முடியவில்லையோ? இதோ - 

"ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, 

மாவுடை மலர் மார்பின்
(ஸ்ரீவத்ஸ வக்ஷ:)
மைஇல் வால் வளை மேனி
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய
வாய்வாங்கும் வளை நாஞ்சில்,
ஒரு குழை ஒருவனை; 

எரிமலர் சினைஇய கண்ணை;
பூவை விரிமலர் புரையும் மேனியை;
மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை;
(ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்)
மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை;
(ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்) 

மால் வரை எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை;
சேவல் அம் கொடியோய்!
(கருட த்வஜா!)
நின் வலவயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும் 

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே." 

(பரிபாடலில் பகுதி, பிறைக்கோட்டினுள் வடமொழிப் பகுதி ஒப்பு நோக்க நான் கொடுத்தது) 

பீஷ்மன் பரவசத்தில் தியான நிஷ்டையில் ஆழ்ந்ததும், நம்மாழ்வார் ஆறுமாசம் மோகித்து மூச்சு பேச்சின்றிக் கிடந்ததும், சொல்ல வந்த கூரேசர் சொல்லொழிந்து கண்ணருவி இழியப் பரவசமானதும், பரிந்து பரமனைப் பரவும் பரிபாடலும் எந்த சேதநருக்காக என்று நினைக்கின்றீர்கள்? நமக்காக எல்லாம் நமக்காக.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

விச்வம் விஷ்ணுர் வஷட்கார:

ஹரி: ஓம். 

விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன: ||


விச்வம் - அனைத்தும் ஆனவர் 

விஷ்ணு: -- அனைத்தின் உள்ளும் உயிரானவர் 

வஷட்கார: -- அனைத்தையும் தன்பால் வசீகரிப்பவர் 

பூத பவ்ய பவத் ப்ரபு: -- சென்றது நின்றது வருவது அனைத்தின் பிரபுவும் அவரே 

பூதக்ருத் - அனைத்தையும் உருவுடையதாய் ஆக்குபவர் அவரே 

பூதப்ருத் -- உண்டான அனைத்தையும் தாங்குபவர் அவரே 

பாவ: -- இருப்பது என்பதே அவர்தான் 

பூதாத்மா -- உயிர்களின் உள்ளுயிராய் இருப்பவர் 

பூதபாவன: -- உயிர்களை உருவு கொண்டவையாய் இலங்கச் செய்பவர் 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

பூதாத்மா பரமாத்மா ச

பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ்ஸாக்ஷீ க்ஷேத்ரக்ஞோSக்ஷர ஏவ ச || 



பூதாத்மா -- உள்ளுயிராயிருந்தும் உடல்களுடைய களங்கம் தொடாத தூயர்

பரமாத்மா ச -- தமக்கு உள்ளுயிராய்ப் பிறிதொன்று இல்லாது தாமே அனைத்தின் உயிராய் நிற்பவர்

முக்தானாம் பரமா கதி: -- முக்தர்களுக்கான அறுதியான கதி அவர்

அவ்யய: -- தாம் மாறாதவர், தம்மை அடைந்தாரையும் மாறாநிலையில் உய்ப்பவர்

புருஷ: - தம்மை அடைந்தாரை என்றும் புதிதாய் ஆனந்திப்பவர்

சாக்ஷீ - முக்தர்களின் ஆனந்தத்திற்கு சாக்ஷியாய் என்றும் ஆனந்திப்பவர்

க்ஷேத்ரக்ஞ: -- அறிவுக்கு அறிவாய் நின்று உயர்நிலையை அறிபவர்

அக்ஷர: -- மாற்றமும் எல்லையும் அற்றவர்

ஏவ ச -- இவ்வண்ணமே என்றும் இருப்பவர். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

யோகோ யோகவிதாம் நேதா

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாநபுருஷேச்வர: | 
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமாந் கேசவ: புருஷோத்தம: || 


யோக: -- தம்மை அடையத் தாமே வழியானவர் 

யோகவிதாம் நேதா -- தம்மை அடைய வழியறிந்து நடத்தும் தலைவர் 

ப்ரதாநபுருஷேச்வர: -- உலகமும் உயிர்களும் தாமேயாளும் ஈச்வரர் 

நார‌ஸிம்ஹவபு: -- நரம் கலந்த சிங்கமாய் அடியார்களைக் காப்பாற்றுபவர் 

ஸ்ரீமாந் -- திருமகள் எப்பொழுதும் உறையும் வடிவினர் 

கேசவ: -- அழகிய கேசம் திகழும் உருவம் 

புருஷோத்தம: -- ஜீவர்கள் அனைவரை விடவும் மிகவுயர்ந்தவர் 

Srirangam Mohanarangan 


ஸர்வஸ் சர்வ சிவ:

ஸர்வச்சர்வச்சிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: | 
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபு: ஈச்வர: || 


ஸர்வ: -- ஒவ்வொன்றும் அவரே 

சர்வ: -- பாபம் அனைத்தையும் அழிப்பவர் 

சிவ: -- மங்களம் அனைத்தின் உறைவிடம் 

ஸ்தாணு: -- நிலையாக நமக்கு மங்களத்தை அருள்பவர் 

பூதாதி: -- பூதங்கள் அனைத்தின் முதல் 

நிதிரவ்யய: -- அழியாப் பெருநிதியம் 

ஸம்பவ: -- அவதாரங்கள் எடுத்து அருள்பவர் 

பாவன: -- சாதுக்களைக் காப்பவர் 

பர்த்தா -- அனைத்தையும் தாங்கி வளர்ப்பவர் 

ப்ரபவ: -- ஒளிமிகும் பிறப்பு உடையவர் 

ப்ரபு: -- மனிதராய்ப் பிறந்தும் முக்தி தரும் பிரபு அவர் 

ஈச்வர: -- அவதாரத்தால் மிகுந்து விளங்கும் ஈச்வரர் அவரே 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


ஸ்வயம்பூ: சம்புராதித்ய:

ஸ்வயம்பூச் சம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதிநிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || 


ஸ்வயம்பூ: -- கருணையால் பிறந்து அருள்பவர் 

சம்பு: -- ஆனந்தம் அளிப்பவர் 

ஆதித்ய: - ஸூர்ய மண்டலத்தில் உறைபவர் 

புஷ்கராக்ஷ: -- மலர்ந்த தாமரைக் கண்ணினர் 

மஹாஸ்வன: -- வேதமெங்கும் பெருக ஒலிக்கும் புகழினர் 

அநாதிநிதந: -- அவதரித்தாலும் ஆதியோ அந்தமோ அற்ற உருவினர் 

தாதா -- இயற்கைக்கு உயிர் நல்கும் பிரான் 

விதாதா -- உயிர்களை முக்தியை நோக்கிப் போற்றி வளர்ப்பவர் 

தாதுருத்தம: -- படைக்கும் நான்முகர்க்கும் பெரியவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

அப்ரமேய:, அக்ராஹ்ய: (2 சுலோகங்கள்)

அப்ரமேயோ ஹ்ருஷீகேச: பத்மநாபோSமரப்ரபு: | 
விச்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ்ஸ்தவிரோ த்ருவ: || 


அப்ரமேய: -- அறிவதற்கு அரியர் 

ஹ்ருஷீகேச: -- புலன்களுக்குப் புகலிடமானவர் 

பத்மநாப: -- படைப்பு மலரும் நாபியை உடையவர் 

அமரப்ரபு: -- அமரர்க்கெல்லாம் அவரே ப்ரபு 

விச்வகர்மா -- நான்முகன் தோன்றுவதற்கு முன்னமே தத்துவங்களைப் படைப்பவர் 

மனு: -- படைப்பைக் குறித்துச் சிந்திப்பவர் 

த்வஷ்டா -- படைப்பு நிகழும் சூழலைப் படைப்பவர் 

ஸ்தவிஷ்ட: -- அனைத்திற்கும் அற உயர்ந்த பெரியோன் 

ஸ்தவிர: -- எல்லாக் காலத்திலும் இருப்பவர் 

த்ருவ: -- ஏது நிகழினும் எந்த மாற்றமும் அண்டாதவர்

Srirangam Mohanarangan 

*** 

அக்ராஹ்ய: சாச்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூத: த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

*
அக்ராஹ்ய: - எவ்விதத்திலும் எந்தக் கரணத்தினாலும் சிக்காதவர் என்னும்படி அனைத்துக்கும் முதற்காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருப்பவர்.

சாச்வத: - மாறி மாறி வரும் படைப்பு ஒடுக்கம் ஆகியவைகளில் ஓய்வின்றி ஒரே படித்தாய் இருப்பவர்.

க்ருஷ்ண: - தம் லீலையாகிய சிருஷ்டி ஸ்திதி லயம் ஆகியவைகளில் மாறாத ஆனந்த மூர்த்தியாய் இருப்பவர்.

லோஹிதாக்ஷ: - தம் மாறாத மகிழ்ச்சிக்கு அடையாளமாகச் செந்தாமரை நிறமான கண்களைப் படைத்தவர்.

ப்ரதர்தன: - பிரளயகாலத்தில் அனைத்தையும் நாம ரூபங்களை நீக்கி ஸம்ஹரிப்பவர்.

ப்ரபூத: - பிரபஞ்சத்தில் அனைத்தும் ஸம்ஹரிக்கப்பட்டாலும் மாற்றமும் அளவும் அற்ற போக ஸ்தானமாகப் பரமபதத்தை உடையவர்.

த்ரிககுப்தாமா - மும்மடங்கு பிரபஞ்சத்தினும் பெரிது என்னும் அளவிலாத பெருக்கம் உடைய த்ரிபாத் விபூதி என்னும் பரமபதத்தை உடையவர்.

பவித்ரம் - தோஷங்கள் அனைத்துக்கும் எதிர்த்தட்டான பரிசுத்த ஸ்வரூபம் உடையவர்.

மங்களம்பரம் - தம்மைத் தியானிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் அருளும் பரம்பொருளாய் இருப்பவர்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

ஈசான: ப்ராணத: ப்ராணோ

ஈசான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டச்ச்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || 


ஈசான: -- அனைத்தையும் உள்ளிருந்து ஆண்டு நடத்துபவர். 

ப்ராணத: -- அடியார் தம்மை நோக்கி வருவதற்கான வலுவையும் தாமே அளிப்பவர். 

ப்ராண: - அடியார்க்கு உயிரினும் மேலான உயிராய் இருப்பவர். 

ஜ்யேஷ்ட: - பழமைக்கும் பழமையான பரம்பொருள். 

ச்ரேஷ்ட: -- எத்தனை புகழினும் அதற்கும் எட்டாது சிறந்தவர். 

ப்ரஜாபதி: -- அயர்வறும் அமரர்கள் அதிபதி. 

ஹிரண்யகர்ப்ப: -- சத்வமே உருவான பொன்னுலகின் ஆருயிர். 

பூகர்ப்ப: -- பூமியையும் தம்முள் கருவாய்ப் பேணி வளர்க்கும் தாய்மை. 

மாதவ: -- திருவுக்கும் திருவாகிய செல்வர். 

மதுஸூதந: -- மதுவென்னும் புலன்களை ஒடுக்குவதில் அடியார்க்கு உதவி. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


ஈச்வரோ விக்ரமீ தந்வீ

ஈச்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதக்ஞ: க்ருதிராத்மவாந் || 


ஈச்வர: -- உலகை ஆள்வதைப் போல முக்தியிலும் ஆளும் ஈச்வரர் 

விக்ரமீ -- தடைப்படாத சங்கல்பம் உடையவர் 

தந்வீ - குறித்த இலக்கைத் தவறாது எய்யும் வில் உடையவர் 

மேதாவீ -- பல அறிவுகளையும் ஒரே நேரத்தில் கிரகிப்பவர் 

விக்ரம: -- வேதவடிவான கருடன் மீது எங்கும் தடையின்றிச் செல்பவர் 

க்ரம: -- எதையும் அளந்து அகப்படுத்தும் விரிவுடையவர் 

அநுத்தம: -- உயர்வற உயர்ந்தவர் 

துராதர்ஷ: -- எதனாலும் எட்டாத நிலையுடையவர் 

க்ருதக்ஞ: -- அடியார் செய்யும் மிகச்சிறு முனைப்பையும் மிகவும் போற்றுபவர் 

க்ருதி: -- நாம் செய்யும் எந்த நற்செயலும் அவர் செய்ய வைப்பதுவே 

ஆத்மவாந் -- நற்செயல் புரிபவரைத் தம் உயிர்போல் கருதுபவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

ஸுரேச: சரணம் சர்ம

ஸுரேச: சரணம் சர்ம விச்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ்ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யயஸ்ஸர்வதர்சந: || 


ஸுரேச: -- தேவர்கள் அதிபதி 

சரணம் -- அனைவர்க்கும் உற்ற புகலும் காப்பும் ஆனவர் 

சர்ம -- புகலடைந்தோர்க்குப் பொன்றா பேரின்பம் 

விச்வரேதா: -- அனைத்திற்கும் அனைத்து காரணமுமாய் ஆனவர் 

ப்ரஜாபவ: -- உயிர்க்குல முழுமைக்கும் உற்ற நிலையம் 

அஹ: -- இருளேயற்ற ஒரு பெரும் பகலாய் ஒளிர்பவர் 

ஸம்வத்ஸர: -- கால வடிவாய் உயிர்களுக்குள் இருந்து கைதூக்கி விடுபவர் 

வ்யால: -- பக்தியுடன் உற்றோரை ஒரு பொழுதும் விலக்காது அணைத்துக் கொள்ளும் பரந்த அருள் கைகளை உடையவர் 

ப்ரத்யய: -- உணர்வும் நம்பிக்கையும் ஆனவர் 

ஸர்வதர்சந: -- பக்தர்களுக்குத் தம் மகிமை அனைத்தையும் ஒளிக்காது காட்டுபவர் 

Srirangam Mohanarangan 

அஜஸ்ஸர்வேச்வரஸ்ஸித்த:

அஜஸ்ஸர்வேச்வரஸ்ஸித்த: ஸித்திஸ்ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநிஸ்ருத: || 


அஜ: -- கருணையால் அவதரிப்பதன்றிக் கர்மம் காரணமாகப் பிறவாதவர். 

அடியார்களின் பிறவித் துன்பத்தை நீக்குபவர். 

ஸர்வேச்வர: -- அனைத்துத் தடைகளையும் அகற்றி அடியார்களுக்கு அருள்பாலிப்பவர். 

ஸித்த: -- அடியார்க்கு அருள எப்பொழுதும் சித்தமாக இருப்பவர் 

ஸித்தி: -- அடைய வேண்டிய லட்சியமாய் இருப்பவர் 

ஸர்வாதி: -- அனைத்து பலன்களையும் அருளும் மூலமாக இருப்பவர் 

அச்யுத: -- அடியார்களை என்றும் நழுவ விடாதவர் 

வ்ருஷாகபி: -- தர்மத்தின் உருவான கோல வராஹர் 

அமேயாத்மா -- அளக்கலாகா பெருமையும் அருளும் கொண்டவர் 

ஸர்வயோக விநிஸ்ருத: -- அனைத்து வழிகளையும் அவரே நடத்துவதால் எந்த யோகத்தாலும் அடையப்படக் கூடியவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


அஜஸ்ஸர்வேச்வரஸ்ஸித்த:

அஜஸ்ஸர்வேச்வரஸ்ஸித்த: ஸித்திஸ்ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநிஸ்ருத: || 


அஜ: -- கருணையால் அவதரிப்பதன்றிக் கர்மம் காரணமாகப் பிறவாதவர். 

அடியார்களின் பிறவித் துன்பத்தை நீக்குபவர். 

ஸர்வேச்வர: -- அனைத்துத் தடைகளையும் அகற்றி அடியார்களுக்கு அருள்பாலிப்பவர். 

ஸித்த: -- அடியார்க்கு அருள எப்பொழுதும் சித்தமாக இருப்பவர் 

ஸித்தி: -- அடைய வேண்டிய லட்சியமாய் இருப்பவர் 

ஸர்வாதி: -- அனைத்து பலன்களையும் அருளும் மூலமாக இருப்பவர் 

அச்யுத: -- அடியார்களை என்றும் நழுவ விடாதவர் 

வ்ருஷாகபி: -- தர்மத்தின் உருவான கோல வராஹர் 

அமேயாத்மா -- அளக்கலாகா பெருமையும் அருளும் கொண்டவர் 

ஸர்வயோக விநிஸ்ருத: -- அனைத்து வழிகளையும் அவரே நடத்துவதால் எந்த யோகத்தாலும் அடையப்படக் கூடியவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


வஸுர் வஸுமநாஸ் ஸத்ய:

வஸுர்வஸுமநாஸ்ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: || 


வஸு: -- ஆனந்தபூர்ணமாக இருப்பவர், அடியார்களுடன் என்றும் ஆனந்திப்பவர் 

வஸுமநா: -- பெரும் நிதி போல் பக்தர்களிடம் பெரும்பற்று உடையவர் 

ஸத்ய: -- அடியார்க்கு என்றும் பொய்க்காது நன்மையே புரிபவர் 

ஸமாத்மா -- வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர் 

ஸம்மித: -- பத்தியுடையவர்க்கு எளிமையானவர் 

ஸம: -- அடியார்களை உயர்வு தாழ்வு, புதியவர் பழையவர் என்ற எந்தப் பிரிவினையும் கொள்ளாமல் ஒரே போன்று நோக்குபவர் 

அமோக: -- பிரார்த்தனைகளைத் தவறாமல் அருளும் தயாளர் 

புண்டரீகாக்ஷ: -- பரமபதத்தில் உள்ளவர்களின் கண்ணாக இருப்பவர் 

வ்ருஷகர்மா -- அறவழியில் நிற்கும் நல்லவர்களின் நன்மையை என்றும் அருள்பவர் 

வ்ருஷாக்ருதி: -- அறத்தின் உருவானவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

ருத்ரோ பஹுசிரா பப்ரு:

ருத்ரோ பஹுசிரா பப்ரு: விச்வயோநி: சுசிச்ரவா: |
அம்ருதஸ் சாச்வதஸ் ஸ்தாணு: வராரோஹோ மஹாதபா: || 


ருத்ர: -- தமது அழகாலும், கல்யாண குணங்களாலும், அருட்செயல்களாலும் பக்தர்களை ஆனந்தக் கண்ணீர் வடிக்கச் செய்பவர். 

பஹுசிரா: -- ஆயிரம் தலைகளால் படைப்பைத் தாங்குபவர் 

பப்ரு: -- பிரபஞ்சத்தின் ஆதாரமாய் இருப்பவர் 

விச்வயோநி: -- பக்தகோடிகள் அனைவரோடும் ஒன்றுறக் கலக்கும் சீலர் 

சுசிச்ரவா: -- பக்தர்களின் வாய்மொழியை அமுதம் என உவப்பவர் 

அம்ருத: -- பக்தர்களுக்கு என்றும் பேரமுதமாய் இருப்பவர் 

சாச்வதஸ்ஸ்தாணு: - நிலைத்த அமுதம், மாறாத அமுதம் அவரே 

வராரோஹ: -- அடைய வேண்டிய உயர்வற உயர்ந்த இலட்சியம் அவரே 

மஹாதபா: -- உயர்வற உயர்ந்த இலட்சியமாய் இருப்பதோடு அதை அடைவிக்கும் மிக்குயர்ந்த தவமாகவும் தானே இருப்பவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

ஸர்வக: ஸர்வவித்

ஸர்வக: ஸர்வவித்பாநு: விஷ்வக்ஸேநோ ஜநார்த்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || 


ஸர்வக: - அனைத்திலும் ஊடுகலந்து தாங்குபவர் 

ஸர்வவித்பாநு: - அனைத்தையும் அறிவதும் உண்டாக்குவதுமான பேரொளி அவர் 

விஷ்வக்ஸேந: - எங்கும் பரவி நின்று காக்கும் பெரும் படையாய் இருப்பவர் 

ஜநார்த்தந: - பக்தர்களின் நன்மைக்கு இடையூறான தீமையை அழிப்பவர் 

வேத: - உலகிற்கு வேதம் என்னும் பெருவிளக்கைத் தருபவர் 

வேதவித் - வேதப்பொருளாய் நிற்பவர் 

அவ்யங்க: - வேதப் பொருளுணரத் துணையாய் நிற்பவர் 

வேதாங்க: - வேதமே தம் திருமேனியாய் நிற்பவர் 

வேதவித் - வேதப் பொருள் எங்கும் விளக்கமுறச் செய்பவர் 

கவி: - வேதத்தைக் காணும் ரிஷியும் அவரே 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷ:

லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷ: தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹ: சதுர்தம்ஷ்ட்ர: சதுர்புஜ: || 


லோகாத்யக்ஷ: - உலகை நேரடியாகத் தாமே கண்காணிப்பவர் 

ஸுராத்யக்ஷ: - தேவர்களையும் அவரே கண்காணிக்கிறார் 

தர்மாத்யக்ஷ: - தர்மத்தையும் அவரே கவனிக்கின்றார் 

க்ருதாக்ருத: - ஆக்கலும் அழித்தலும், செய்கையும் பலனும் அவரே 

சதுராத்மா சதுர்வ்யூஹ: - நால்விதமான இயல்பாகியும் நான்கு வியூஹமூர்த்திகளாகவும் இருப்பவர் 

சதுர்தம்ஷ்ட்ர: - நரம் கலந்த சிங்கமாய் இருப்பவர் 

சதுர்புஜ: - சங்கம் சக்ரம் கதை சார்ங்கம் என்று நான்கு படை தரிக்கும் கரங்கள் நான்குடையவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

ப்ராஜிஷ்ணுர் போஜனம்

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா ஸஹிஷ்ணு: ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விச்வயோநி: புநர்வஸு: || 


ப்ராஜிஷ்ணு: -- எங்கும் நிறைந்த பேரொளியாய், தம்மை தியானிக்கும் பக்தர்களுக்குத் தன்னைக் காணச் செய்பவர் 

போஜனம் -- பக்தர்களுக்குத் தாமே உண்ணும் உணவாய் இருப்பவர் 

போக்தா -- பக்தர்களின் அன்பைத் துய்ப்பவர் 

ஸஹிஷ்ணு: -- அடியார்களின் தவறுகளை சகித்துக் கொள்ளும் இயல்புடையவர் 

ஜகதாதிஜ: -- உலகைக் காக்க வேண்டித் தாமே முதன்முன்னம் அவதாரம் எடுப்பவர் 

அநக: -- அவதாரம் எடுத்துப் பிறப்பினும் பிறவியின் தீங்கு அண்டமுடியாதவர் 

விஜய: -- பிரபஞ்சத்தில் எப்பொழுதும் வெற்றியாய் நிற்பவர் 

ஜேதா -- அனைவரையும் வென்று தம்முள் அடக்குபவர் 

விச்வயோநி: -- அனைத்திற்கும் தாமே ஆதியான காரணம் 

புநர்வஸு: -- ஒவ்வோருயிரிலும் அந்தராத்மாவாய் இருப்பவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

அதீந்த்ரஸ் ஸங்க்ரஹ:

உபேந்த்ரோ வாமன: ப்ராம்சு: அமோகச்சுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ்ஸங்க்ரஹஸ்ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: || 


உபேந்த்ர: -- இந்திரனுக்கு இளவல்; இந்திரர்க்கும் மேற்பட்டவர்
(முன் நாமம் புநர்வஸு: ராமனைக் குறிக்கும், உபேந்திரன் கிருஷ்ணனைக் குறிக்கும்.- ஸ்ரீ பட்டர்) 

வாமன: -- இந்திரனுக்காக் குறள் வாமனனாய்ச் சென்று இரந்தவர் 

ப்ராம்சு: -- நின்றளந்த நெடுமாலாய் வளர்ந்த திருவிக்கிரமர் 

அமோக: -- தாம் செய்வதனைத்தும் நல்லவர்க்கு மங்களமாய் அமையும் பெற்றியர் 

சுசி: -- தம்மை தியானிப்பார்க்குத் தூய்மை நல்குபவர்; தாம் எதுவும் எவரிடத்தும் வேண்டாத தூயர் 

ஊர்ஜித: -- எவரையும் வென்றடக்கும் விறலுடையோர் 

அதீந்த்ர: -- இந்திரர்க்கும் பிரபுவாய் ஆனவர் 

ஸங்க்ரஹ: -- பக்தியால் தம்மை எய்தும், கட்டவும் ஆனவர் 

ஸர்க்க: -- படைப்பனைத்தின் மீதும் தம் பாத அடையாளம் பதித்து உறவை நிலைநாட்டியவர் 

த்ருதாத்மா -- ஆத்மாக்கள் அனைத்திற்கும் இருப்பு நல்கும் பேருயிர் 

நியம: -- அனைத்து உயிர்களையும் நியமிப்பவர் 

யம: -- இதயத்தில் வீற்று உயிரனைத்தையும் ஆள்பவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

வேத்யோ வைத்ய:

வேத்யோ வைத்யஸ்ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || 


வேத்ய: -- இந்த உயிர்கள் தம்மை அறியவேண்டி அவதாரங்கள் எடுப்பவர் 

வைத்ய: -- பவநோய் என்னும் உலக ஆசையாம் பிணியை அகற்றும் வைத்தியர் 

ஸதாயோகீ -- அடியார்களின் நலனுக்காக என்றும் விழிப்புடன் முனைபவர் 

வீரஹா -- ஆற்றல் மிக்க அசுரரை அழிப்பவர் 

மாதவ: -- உயர்ந்த ஞானத்தின் தலைவர் 

மது: -- ஞானியர் களிக்கும் தேனாக இருப்பவர் 

அதீந்த்ரிய: -- புலன்களுக்கெட்டாப் பேரமுதாய் இருப்பவர் 

மஹாமாய: -- எங்கும் இருப்பினும் இந்திரியங்களுக்குப் புலனாகாத மாயை வாய்ந்தவர் 

மஹோத்ஸாஹ: -- படைத்தல் காத்தல் ஒடுக்கல் என்பதில் என்றும் உத்ஸாகம் நிறைந்தவர் 

மஹாபல: -- பிரபஞ்சத்தையே இலகுவாகத் தாங்கும் பெரும்பலம் கொண்டவர்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

மஹாபுத்திர் மஹாவீர்ய:

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாசக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேச்யவபு: ஸ்ரீமான் அமேயாத்மா மஹாத்ரித்ருத் || 


மஹாபுத்தி: -- அனைத்தையும் அறியும் மகாபுத்தியுடையவர் 

மஹாவீர்ய: -- எந்த மாற்றங்கள் நிகழினும் தம்மில் எந்த மாற்றமும் ஏற்படாத பெரும் வீரியம் கொண்டவர் 

மஹாசக்தி: -- ஆக்கும் ஆற்றலும் ஆக்கப்படும் பொருளுமாய் இருக்கும் மஹாசக்தி ஆனவர் 

மஹாத்யுதி: -- அளவிறந்த பேரொளி அவர் 

அநிர்தேச்யவபு: -- அறுதியிட ஒண்ணா வடிவினர் 

ஸ்ரீமான் -- திருமகள் கேள்வர் 

அமேயாத்மா -- அளவிலாப் பெருமையர் 

மஹாத்ரித்ருத் -- பெருமலைகளையும் தாங்கும் ஆதாரம் அவரே
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

மஹேஷ்வாஸ: மஹீபர்த்தா

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ்ஸதாம் கதி: |
அநிருத்த: ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || 


மஹேஷ்வாஸ: -- அம்பு பொய்க்காத பெருவில் வீரர் 

மஹீபர்த்தா -- உலகத்தை உவப்புடன் தாங்கி நிற்கும் வராஹர் 

ஸ்ரீநிவாஸ: -- திருமகள் அகலகில்லேன் என்றுறை மார்பினர் 

ஸதாம் கதி: -- வேண்டியதனைத்தும் வழங்கும் நல்கதி அவரே 

அநிருத்த: -- மனிதர்க்கு நன்மையே ஆற்றும் அநிருத்தர் 

ஸுராநந்த: -- தேவர்க்கு இடர் போக்கி மகிழ்ச்சி நல்கும் பெம்மான் 

கோவிந்த: -- ஆயர்தேவு, உலகு புரக்கும் கோலவராகன், வேதவாக்கின் நாயகன் 

கோவிதாம்பதி: -- வேதமுணர் ஞானியர்தம் தலைவன்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


மரீசிர் தமனோ ஹம்ஸ:

மரீசிர் தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: | 
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || 


மரீசி: -- எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாலும் மங்காத வளரொளி மிக்கோன் 

தமன: -- ஸம்ஸார வெப்பத்தைத் தணிக்கும் தண்ணழகு வடிவினர் 

ஹம்ஸ: -- இயக்கம் எல்லாவற்றுக்கும் மூலமாய் இலகும் அருளுருவினர் 

ஸுபர்ண: -- பவக்கடலில் உயிர்களைக்கரையேற்றும் அழகிய சிறகுகள் உடையோன் 

புஜகோத்தம: -- ஆதிசேஷனின் நாதனாய் இருப்பவர் 

ஹிரண்யநாப: -- பொற்க்கொப்பூழில் பூணழகர் 

ஸுதபா: -- ஞானமாம் நல்தவ வடிவினர் 

பத்மநாப: -- கொப்பூழில் எழுகமலப் பூவழகர் 

ப்ரஜாபதி: -- உலகெலாம் படைத்துக் காத்துப் புரக்கும் எந்தை 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ:

அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர: | 
அஜோதுர்மர்ஷணச்சாஸ்தா விச்ருதாத்மா ஸுராரிஹா || 


அம்ருத்யு: -- அழிவோ மறைவோ எக்காலமும் இல்லாதவர்

ஸர்வத்ருக் -- அனைத்தையும் ஒவ்வொன்றையும் பார்ப்பவர்

ஸிம்ஹ: -- அடியார்க்கு வரும் அழிவையும் தீமையையும் நீக்கும் நரசிம்ஹர்

ஸந்தாதா -- பக்தர்களுக்குக் கோரிய பலன்களை அருள்பவர்

ஸந்திமாந் -- தம்மை வந்தடைந்த பக்தர்களை விட்டு என்றும் நீங்காதவர்

ஸ்திர: -- தம்பால் சரணடைந்த பக்தர்களிடம் குறைகள் இருப்பினும் அதனால் சிறிதும் மாறாத அருளுள்ளம் கொண்டவர்

அஜ: -- அவதாரங்கள் பல எடுப்பினும் அவர் என்றும் பிறவிக்கு உட்படாதவர்

துர்மர்ஷண: -- அடியாரைப் பகைப்போர்க்கு ஆற்றொணா கடுமை உடையவர்

சாஸ்தா -- தர்மத்தினின்று பிறழ்வோரைத் தண்டித்துத் திருத்துபவர்

விச்ருதாத்மா - சுருதிகளால் என்றும் புகழப்படுபவர்

ஸுராரிஹா -- தேவர்களின் எதிரிகளை அழிப்பவர் 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

குருர்குருதமோ தாம

குருர்குருதமோ தாம ஸத்யஸ்ஸத்ய பராக்ரம: | 
நிமிஷோSநிமிஷஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:|| 


குரு: குருதம: - உபதேசிக்கும் குரு தத்துவமாய் நான்முகர்க்கே உபதேசித்த உத்தம ஆதிகுருவும் ஆனவர் 

தாம: - உபதேசிக்கும் குரு மட்டுமன்றி உற்றடையும் உன்னத நிலையாகவும் இருப்பவர் 

ஸத்ய: - ஸாதுக்களின் நன்மையாய்த் திகழ்பவர் 

ஸத்ய பராக்ரம: -- ஸாதுக்களோடு என்றும் மெய்யாய்த் திகழ்பவர் 

நிமிஷ: -- யோகநித்ரையில் அரைக்கண் மூடியும், சாதுக்களுக்குத் தீமை செய்வோரிடம் அருள்நோக்கு அற்றவராயும் இருப்பவர் 

அநிமிஷ: -- சாதுக்களைக் காப்பதில் இமைக்காமல் விழிப்புடன் இருப்பவர் 

ஸ்ரக்வீ -- படைப்பில் பூதங்கள், தன்மாத்ரைகள் என்னும் தத்துவத்தை வனமாலையாய்ப் பூண்டவர் 

வாசஸ்பதி: உதாரதீ: -- அனைத்து வித்யைகளின் உறைவிடமும் தலைவரும் அவரே. அனைத்தையும் அறியும் நன்மதியும் அவரே. 

அக்ரணீர் க்ராமணீ:

அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: | 
ஸஹஸ்ரமூர்தா விச்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் || 


அக்ரணீ: -- மயர்வற மதிநலம் தந்து உயர்வற உயர்ந்த நிலைக்கு உயர்த்துபவர் 

க்ராமணீ: -- பரம நிலைக்குத் தாமே சாதுக்களை அழைத்துச் செல்பவர் 

ஸ்ரீமான் -- அகலகில்லேன் என்று திருமகள் குலவும் தாமரைக்கண்ணர் 

ந்யாய: -- பக்தர்களிடம் என்றும் தவறாத நியாயம் உள்ளவர் 

நேதா -- பக்தர்களை ஸம்ஸார வட்டத்தில் சிக்காவண்ணம் வழிநடத்திச் செல்பவர் 

ஸமீரண: -- பக்தர்கள் விழையும் பலன்களை நடத்திக் கொடுப்பவர் 

ஸஹஸ்ரமூர்தா -- ஆயிரம் தலையுடன் திகழ்பவர் 

விச்வாத்மா -- அனைத்தினுள்ளும் உறையும் உயிர் அவரே 

ஸஹஸ்ராக்ஷ: -- ஆயிரம் அருட்கண்களால் திருநோக்கு கொள்பவர் 

ஸஹஸ்ரபாத் -- ஆயிரம் அடிகளால் அகிலம் நிறைந்தவர் 

ஆவர்தனோ நிவ்ருத்தாத்மா

ஆவர்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்தன: |
அஹ: ஸம்வர்தக்ோ வஹ்நி: அநிலோ தரணீதர: ||

*

ஆவர்தன: - ஸம்ஸாரச் சக்கிரம் நில்லாமல் உயர்வதும் தாழ்வதுமாய் வெளிப்படுவதும் மறைவதுமாய் இருக்கும்படிச் சுழற்றும் தத்துவமாக இருப்பவர் ஆகையாலே ஆவர்தன:

நிவ்ருத்தாத்மா - சுழலும் பிரபஞ்சம் தம் முழுமையில் ஏதோ ஒரு மீச்சிறு பிரதேசம் என்னலாம்படி மாறாமல் நிலைத்த ஸ்வரூபர் ஆகையாலே நிவ்ருத்தாத்மா

ஸம்வ்ருத: - தமஸினால் தம் அறிவைக் கைக்கொள்ளாதவருக்குத் தம்மைப் பிரகாசிக்காமல் மூடிக்கொள்பவர் ஆகையாலே ஸம்வ்ருத:

ஸம்ப்ரமர்தன: - அந்த தமஸ் நீங்க வேண்டும் என்று தம்மையே ப்ரார்த்திப்பவருக்கு அந்த இருளை முழுவதும் அழித்துத் தம்மைக் காட்டுபவர் ஆகையாலே ஸம்ப்ரமர்தன:

அஹஸ்ஸம்வர்த்தக: - உலகியலில் தோய்ந்தவர்களுக்கு உரிய பகல் இரவுகளையும், தம்முடைய பக்தியில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பகல் இரவுகளையும் நன்கு சுழட்டுபவர் ஆகையாலே அஹஸ்ஸம்வர்த்தக:

வஹ்நி: - அனைத்து பொருட்களும் இருப்பதற்கேற்ற வகையில் அனைத்தையும் தாங்குபவர் ஆகையாலே வஹ்நி:

அநில: - யாவரும் உஜ்ஜீவிக்கும்படிச் செய்யும் ஆதார சக்தியாய் இருப்பவர் ஆகையாலே அநில:

தரணீதர: - அனைத்தையும் தாங்கி நிற்பது பூமி என்றால் பூமியையும் தாங்கி நிற்கும் பரம் தத்துவம் ஆகையாலே தரணீதர:



ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா
ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விச்வத்ருக் விச்வபுக் விபு: |
ஸத்கர்தா ஸத்க்ருத: ஸாதுர்ஜஹ்நுர் நாராயணோ நர: ||

*

ஸுப்ரஸாத: - தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அநந்தமான பலன்களைத் தந்து மிக்க அருளைச் செய்கிறவர் ஆகையாலே ஸுப்ரஸாத:

ப்ரஸந்நாத்மா - வேண்டுதல் வேண்டாமை இலாததால் கலக்கம் அற்ற தன்மை கொண்டவர் ஆகையாலெ ப்ரஸந்நாத்மா

விச்வத்ருக் - (விச்வச்ருக்) - ஜீவர்கள் உய்வதற்காகவே சிருஷ்டியை உண்டாக்குபவர்; உலகத்தை அநாயாசமாகத் தாங்குபவர்;

விச்வபுக்விபு: - படைத்த உலகனைத்தையும் பிரளய காலத்தில் தம் திருவயிற்றில் வைத்து போஷிப்பவர். உலகங்களையெல்லாம் வியாபிப்பதன் மூலம் அவற்றைக் காப்பாற்றுபவர்.

ஸத்கர்த்தா - ஸாதுக்களை என்றும் பூஜிப்பவர்

ஸத்க்ருத: - சாதுக்கள் தம்மைப் பூஜிக்கும் இடத்து மிகச் சிறிய பொருளாயினும் பெரும் கௌரதையோடு அபிமானிப்பவர்.

ஸாது; - பக்தர்களின் ஏவல்களையெல்லாம் மிக்க ஆனந்தத்துடன் செய்பவர்.

ஜஹ்நு: - பக்தர்கள் அல்லாதார்க்குத் தம்மை முற்றிலும் மறைத்து விடுபவர்.


நாராயண: -

ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் -
1) நரன் என்னப்படும் ஆத்மாவினிடம் உண்டான நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய காரிய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்

2) நரர்கள் என்னும் ஜீவர்களுக்குப் பிரளயகாலத்தில் ஆதாரமாய் இருப்பவர்

3) நாரம் என்னப்படும் பிரளயஜலத்தில் சயனிப்பவர்

4) 'விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற சந்யாஸிகள் சம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய 'நாராயணாய நம;' என்னும் இந்த சத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் சபதமிட்டுச் சொல்கிறேன்' என்று நரஸிம்ம புராணம் கூறுவதால் முக்கியத்துவம் நன்கு விளங்குவது நாராயண நாமம்.

ஸ்ரீபராசர பட்டர் -
அழியாத நித்ய வஸ்துக்களாகிய ஆத்மாக்களின் கூட்டத்திற்கு சேருமிடமாக, அந்தர்யாமியாக இருப்பவர் ஆகையாலே நாராயண;
*


நர: - சேதனம் அசேதனம் ஆகிய நித்ய வச்துக்களின் திரளை நடத்துபவர்.

அஸங்க்யேயோSப்ரமேயாத்மா

அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விசிஷ்ட: சிஷ்டக்ருச்சுசி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதந: ||



அஸங்க்யேய: - எண்ணிக்கையால் அளவிடப்படும் தன்மை இல்லாதவர் என்பதால் அஸங்க்யேய:

அப்ரமேயாத்மா - இன்னதென்று பிரித்தறியும் அறிவால் அறிந்து புரிந்து கொள்ள முடியாத ஆத்ம ஸ்வரூபர் ஆகியாலே அப்ரமேயாத்மா

விசிஷ்ட: - அறியப்படு பொருள் அனைத்திலும் தனிப்பட்டுத் தனிச்சிறப்போடு இருப்பவர் ஆகையாலே விசிஷ்ட:

சிஷ்டக்ருத் - தம்மைப் புகலாக அடைந்தவர்களைத் தம்மை அடையத்தக்க ஆன்மிக குணங்கள் நிறைந்தவராக ஆக்கும் தன்மையார் ஆகையாலே சிஷ்டக்ருத்

சுசி:- பிறிதொன்றால் பிரகாசப்படுத்தத் தேவையின்றி அனைத்திற்கும் பிரகாசம் நல்கும்படி சுயம் ஒளியாக இருப்பவர் ஆகையாலே சுசி:

ஸித்தார்த்த: - அடைய வேண்டியதெல்லாம் முன்னரே தம்மிடம் பூரணமாக அமையப் பெற்றவர் ஆகையாலே ஸித்தார்த்த:

ஸித்தஸங்கல்ப: - தமது சங்கலபங்களுக்கும் அடைய வேண்டியதற்கும் கால வித்யாசம் அற்றவர் ஆகையாலே ஸித்தஸங்கல்ப:

ஸித்தித: - அனைத்து விதமான மிகை ஆற்றல்களையும் தருபவர் ஆகையாலே ஸித்தித:

ஸித்திஸாதந: - அவரை அடைய வேண்டும் என்ற இலட்சியமும், அந்த இலட்சியத்தை அடைவிக்கும் வழியான சாதநமும் வேறு வேறாக இல்லாமல் அடையப்பட வேண்டியவரான அவரே, அதாவது ஸித்தியே, அடைவிக்கும் ஸாதநமாக இருப்பவர் ஆகையாலே ஸித்திஸாதந:

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர்

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்தனோ வர்தமானச்ச விவிக்த: ச்ருதிஸாகர: ||



வ்ருஷாஹீ - அவரை அடையும் தினமே அனைத்து மங்களங்களுக்கும் வித்தாக விளங்க தர்மமே பகலாக ஒளிர்பவர் ஆகையாலே வ்ருஷாஹீ

வ்ருஷப: - ஸம்ஸாரமென்னும் தீயினால் வெந்த ஜீவர்களுக்கு புத்துயிரூட்டும் அமுதமாய் அருள் பொழிபவர் ஆகையாலே வ்ருஷப:

விஷ்ணு: - பல விதமாக அருள் செய்தும் தாம் பக்தர்களை என்றும் பிரியாமல் கூடவே இருப்பவர் ஆகையால் விஷ்ணு:

வ்ருஷபர்வா - தர்மத்தையே தம்மை அடையும் படிக்கட்டாக உடையவர் ஆகையாலே வ்ருஷபர்வா

வ்ருஷோதர: - அனைத்து உலகங்களையும் தர்மம் என்னும் தம் வயிற்றினுள் வைத்துக் காப்பவர் ஆகையாலே வ்ருஷோதர:

வர்தந: - தம்மைச் சரணடைந்தோரைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் ஆகையாலே வர்தந:

வர்த்தமாந: - உயிர்களைக் கருணையினால் வளர்ப்பதில் தாம் பெரும் மகிழ்வு கொண்டு வளர்பவர் ஆகையாலே வர்த்தமாந:

விவிக்த: - அனைத்திலும் விலக்ஷணமான சிறந்த சரித்திரங்களை உடையவர் ஆகையாலே விவிக்த:

ச்ருதிஸாகர: - தம்முடைய குணங்களையும் அற்புத சரித்திரங்களையும் கூறும் வேதங்கள் கணக்கற்றவை கொண்டவர் ஆகையாலே ச்ருதிஸாகர:

ஸுபு4ஜோ து3ர்த4ரோ வாக்3மீ

ஸுபு4ஜோ து3ர்த4ரோ வாக்3மீ மஹேந்த்3ரோ வஸுதோ3 வஸு: | 
நைகரூபோ ப்3ருஹத்3ரூப; சிபிவிஷ்ட: ப்ரகாசந: || 



ஸுபுஜ: - சரணாகதி அடைந்தவர்களைக் கரையேற்றுவதிலும், காத்து ரக்ஷிப்பதிலும் மும்முரமாகவும், தவறாமலும் இருக்கும் கைகளை உடையவர் ஆதலாலே ஸுபுஜ: 

துர்தர: - அவ்வாறு கரையேற்றும் போதும், காக்கும் போதும் எதனாலும், சரணாகதி அடைந்தவர்களாலுமே மீற முடியாத திருக்கரங்கள் ஆகையாலே துர்தர: 

வாக்மீ - அவ்வாறு தம்மைச் சரணடைந்தவர்களைத் தவறாமல் காப்பாற்றுவேன் என்று அவதாரங்கள் தோறும் ஜீவர்களுக்கு நிச்சயமான வாக்கு தந்திருப்பவர் ஆகையாலே வாக்மீ 

மஹேந்த்ர: - சர்வ உலகங்களும் சேர்ந்தாலும் ஒரு சிறு பிடி என்னும் அளவிற்கு அளவிலா ஐஸ்வரியம் உடையவர் ஆகையாலே மஹேந்த்ர: 

வஸுத: - அல்பம், அஸ்திரமான செல்வங்களைக் கேட்பவர்களுக்கு அவற்றைத் தருபவர் ஆயினும், அருஞ்செல்வம் ஆகிய தம் தாளிணைகளையே வேண்டுபவர்க்கு அந்த மிக்க பெரும் செல்வத்தை மிக உவந்து தருபவர் ஆகையாலே வஸுத: 

வஸு: - உவந்து தரும் அரும் பெரும் செல்வமும் தாமேவாக இருப்பதால் அவரே வஸு: 

இனி விச்வரூபம் சொல்லப் படுகிறது - 

நைகரூப: - அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர்க்கு அருள்பாலிக்க வேண்டி பல ரூபங்களை எடுப்பவர் ஆகையாலே நைகரூப: 

ப்ருஹத்ரூப: - தாம் எவ்வுருவம் எடுப்பினும் அதுவே அனைத்துமாக ஆகும் வண்ணம் விரிந்த ரூபம் ஆகையாலே ப்ருஹத்ரூப: 

சிபிவிஷ்ட: - யக்ஞ மயமாகவே தாம் இருப்பதாலும், ஒளியின் கிரணங்களாகிய தம்மிடமிருந்து கிரணங்களாக வெளிப்போந்த ஜீவர்கள், பொருட்கள் அனைத்திலும் உள் புகுந்து நிலவும் மூர்த்தி ஆகையாலே சிபிவிஷ்ட: 

ப்ரகாசந: - இவ்வாறு ஒளியுருவாய் உலவும் மூர்த்தி ஆயினும் அவரே காட்டினாலன்றி காண இயலா பேரொளி உருவர் ஆகையாலே, பக்தர்கள் விரும்பிக் கேட்கில் தம் உண்மை உருவைக் காட்டுபவர் ஆகையாலே ப்ரகாசந: 

ஓஜஸ்தேஜோ த்3யுதித4ர:

ஓஜஸ்தேஜோ த்3யுதித4ர: ப்ரகாசாத்மா ப்ரதாபந: | 
ருத்3த4: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரச்சந்த்3ராம்சுர் பா4ஸ்கரத்3யுதி: || 



ஸ்ரீமஹாவிஷ்ணுவின் விச்வரூபத்தைப் பற்றிய திருநாமங்கள் தொடர்கின்றன. பொருட்களை விளங்கச் செய்வது ஒளி என்று சாத்திரங்கள் கூறும். புறப்பொருட்களையும், மனத்தில் இருக்கும் பொருட்களையும் அவ்வவ்வொளிகள் விளக்கும். அனைத்து ஒளிகளாகவும் திகழ்வதோ நாராயண: பரோ ஜ்யோதி: என்னும் ஸ்ரீமந்நாராயணனே என்று காட்ட வேண்டி பீஷ்மாசாரியார் ஒளியின் திகழ்ச்சிகளைக் கூறுகிறார். 

ஓஜஸ்தேஜோத்யுதிதர: - ஒளியின் திகழ்ச்சிக்கு அடிப்படை ஒன்று தன் சொந்த இயல்பில் பொருந்தி நிற்பது. அவ்வாறு சுயநிலை நிற்கும் ஆற்றல் ஓஜஸ்; சுயநிலையினின்றும் பிறழச் செய்யும் வேகங்களைத் தடுத்து விலக்கல் தேஜ: தன்னிலையில் நின்று தன்னியல்பில் ஒளிர்தல் த்யுதி. த்யுதியை தரித்து நிற்பவர் த்யுதிதர: இத்தகைய முத்திறன்கள் விளங்கும் இடமெல்லாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சாந்நித்யம் ஆகும். எனவே அவருக்கு ஓஜஸ்தேஜோத்யுதிதர: என்றே திருநாமம். 

ப்ரகாசாத்மா - அனைவருக்கும் பொதுவாக விளக்கம் தரும் பேரொளியாவது ஆத்ம ஒளி. எனவே ப்ரகாசாத்மா. 

ப்ரதாபந: - பிரகாசத்தை விரும்பாமல் வெறுக்கும் அவற்றைத் தபித்து வற்றச் செய்யும் காரணத்தால் ப்ரதாபந: 

ருத்த: - அனைத்து கல்யாண குணங்களும் கடல் போன்று நிரம்பி நிறைவாக இருப்பவர் ஆதலால் ருத்த: 

ஸ்பஷ்டாக்ஷர: - எழுத்தும் சொல்லும் பத சக்தியினால் விளக்கம் தரும் ஒளிகளாம். சொற்களில் மிக்குயர்ந்த சொல்லான வேதங்கள் பரம்பொருளை விளக்கும் ஆகையாலே ஸ்பஷ்டாக்ஷர: 

மந்த்ர: - தம்மை விளக்கும் மந்த்ரங்களை தியானிப்போருக்கு காப்பாக இருப்பவர் ஆகையாலே மந்த்ர: 

சந்த்ராம்சு: - தியானத்தில் ஜீவனுக்குக் குளிர்த்தியைத் தரும் நிலவொளியாய் இருப்பவர் ஆகையாலே சந்த்ராம்சு: 

பாஸ்கரத்யுதி: - பக்தியால் துய்ப்போருக்கு நிலவொளியாய் மகிழ்விக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஞானத்தால் உணருங்கால் பகலொளியாய், ஞாயிறாக நின்று அறிவுப் பகல் செய்பவர் ஆகையாலே பாஸ்கரத்யுதி: 

அம்ருதாம்சூத்3ப4வோ

அம்ருதாம்சூத்3ப4வோ பா4நு: சசபி3ந்து: ஸுரேச்வர: | 
ஔஷத4ம் ஜகத: ஸேது: ஸத்யத4ர்மபராக்ரம: || 


அம்ருதாம்சூத்பவ: - இறப்பை நீக்கி அமரத் தன்மையைத் தரும் உன்னத நிலவொளியாக இருப்பவர் ஆகையாலே அம்ருதாம்சூத்பவ: 

பாநு: - எதற்கும் விலகாத உள்ளிருளைப் போக்கும் ஞான ஒளியாக இருப்பவர் ஆகையாலே பாநு: 

சசபிந்து: - அஞ்ஞானத்தால் தீய வழியில் போவோரைக் கடிந்து நல்வழிக்கு உய்க்கும் தண்ணொளியாக இருப்பவர் ஆகையாலே சசபிந்து: 

ஸுரேச்வர: - நல்வழியில் செல்பவர்களே தேவர்கள் என்னும்படி, அவர்களை மிக உயர்ந்த பேறான தம்முடைய உலகை அடையும் படிச் செய்பவர் ஆகையாலே ஸுரேச்வர: 

ஔஷதம் - ஸம்ஸாரம் என்னும் கொடிய பிணிக்கு மருந்தாய் இருப்பவர் ஆகையாலே ஔஷதம் 

ஜகதஸ்ஸேது: - கடக்கலாகா கொடிய ஸம்ஸாரக் கடலில் கடந்து நற்கதிக்கு உய்க்கும் அணையாக இருப்பவர் ஆகையாலே ஜகதஸ்ஸேது: 

ஸத்யதர்மபராக்ரம: - ஜீவர்கள் தம் அஞ்ஞானத்தால் நன்மையினின்றும் விலகி ஓடுபவர்கள் ஆகையாலே அவர்களாலும் கடத்தற்கரிய குணங்களும், தவறாமல் அவர்களைக் கரையேற்றும் அவதார பராக்ரமங்களும் உடையவர் ஆகையாலே ஸத்யதர்மபராக்ரம: 

பூ4தப4வ்ய ப4வந்நாத2:

பூ4தப4வ்ய ப4வந்நாத2: பவன: பாவனோSநல: | 
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத3: ப்ரபு4: || 



பூதபவ்யபவந்நாத: - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தும் உள்ள அனைத்துக்கும் நாதர் ஆகையாலே பூதபவ்யபவந்நாத:

பவந: - எங்கும் சென்று தூய்மையை உண்டாக்குபவர் ஆகையாலே பவந:

பாவந: - தம்மால் தூய்மை அடைந்தோர் தாம் பிறரைத் தூய்மைப் படுத்தும் அளவிற்குச் செய்பவர் ஆகையாலே பாவந:

அநல: - தம் பக்தர்களுக்கு எத்தனை அருள் செய்த போதும் போதாமையால் பரபரப்பு கொண்டவர் ஆகையாலே அநல:

காமஹா - தம்மிலும், தம் குணங்களிலும் ஈடுபட்டவர்களை மற்றை காமங்கள் அனைத்தையும் அறவே மாற்றும் இயல்பினர் ஆகையாலே காமஹா

காந்த: - ரசிக்கத் தெரிந்தவர்களுக்குத் தம் வடிவழகைக் காட்டியே உய்யக் கொள்கிறவர் ஆகையாலே காந்த:

காம: - விரும்பப் படும் அனைத்தினும் சிறந்த காமமாக, குணங்கள் நிறைந்தவர் ஆகையாலே காம:

காமப்ரத: - தம்மை அண்டினோர் வேண்டுவன தந்தருளும், தம்மை வேண்டுவோருக்குத் தம்மையே தந்தருளும் இயல்பினர் ஆகையாலெ காமப்ரத:

ப்ரபு: - அவ்வாறு தம்மையே தந்து அவர்களைத் தமக்கே எழுதி வாங்கிக் கொள்பவர் ஆகையாலே ப்ரபு:

யுகா3தி3க்ருத்

யுகா3தி3க்ருத் யுகா3வர்தோ நைகமாயோ மஹாசந: | 
அத்3ருச்யோSவ்யக்தரூபச்ச ஸஹஸ்ரஜித் அநந்தஜித் || 


ஆலிலைமேல் மாயனின் ஆச்சரியமான ரூபம் தியானிக்கப் படுகிறது.

யுகாதிக்ருத் - பிரளயத்தில் அனைத்தும் முடிந்து அதனால் ஒரு நஷ்டமும் நேராதபடி மீண்டும் யுகங்களைத் தொடங்கி நடத்துகிறவர் ஆகையால் யுகாதிக்ருத்

யுகாவர்த்த: - யுகங்கள் அவற்றின் கால க்ரமங்கள், தன்மைகள் எதுவும் முறையாகத் தொடரும்படி சுழற்றுகிறவர் ஆகையால் யுகாவர்த்த:

நைகமாய: - ஆலிலைமேல் வளரும் குழந்தையாய் அநேகமான மாயைகளையும், அற்புதங்களையும் உடையவர்

மஹாசந: - பெருந்தீனிக்காரர். இவரை விட பெருந்தீனி உண்பவர்கள் இருக்க முடியாது என்னும் படி பிரளயத்தில் உலகனைத்தையும் தம் வயிற்றில் ஒடுக்குபவர்.

அத்ருச்ய: - உலகெலாம் அழிந்த பிறகு பிரளய ஜலத்தில் ஓர் ஆலிலையும், அதன் மேல் ஒரு குழந்தையும் மட்டும் எப்படி இருக்க முடியும் என்று மார்க்கண்டேயர் போன்ற மகரிஷிகளுக்கும் உண்மை புலப்படாதவர்.

வ்யக்தரூப: - 'காயம்பூ நிறமும் திருமார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் அடையாளமும் கொண்டு திருமகள் உறையும் திருமார்பனாக எப்பொழுதும் காட்சி தருகிறார்' என்று மார்கண்டேயரே சொல்லும் அளவிற்கு திவ்ய மங்கள திருமேனி கொண்டவர். யோகிகளுக்குப் புலப்படும் இதயவெளி உருவர்.

ஸஹஸ்ரஜித் - அளவற்ற விதங்களில் வெற்றி திகழ்பவர்

அநந்தஜித் - எல்லையற்ற வெற்றி உருவராய்த் திகழ்பவர்

இஷ்டோSவிசிஷ்ட:

இஷ்டோSவிசிஷ்ட: சிஷ்டேஷ்ட: சிக2ண்டீ நஹுஷோ வ்ருஷ: | 
க்ரோத4ஹா க்ரோத4க்ருத் கர்த்தா விச்வபா3ஹுர் மஹீத4ர: || 

*

இஷ்டோSவிசிஷ்ட: - பிரளயகாலத்தில் ஏதொன்றும் பிதிர்கதிர்படாமல் தம் வயிற்றில் வைத்துக் காக்கும் அளவிற்கு அனைத்திலும் தாய் போல் ஒத்த அன்புடையவர் ஆகையாலே இஷ்டோSவிசிஷ்ட:

சிஷ்டேஷ்ட: - மார்கண்டேயர் முதலிய மஹரிஷிகளாலும் மிகவும் விருப்பமுடன் போற்றப்படுபவர் ஆகையாலே சிஷ்டேஷ்ட:

சிகண்டீ - அளவிலாத அனைத்தினும் உயர்ந்த ஐஸ்வர்யமாகிற மகிமையைத் தமது தலையில் மயிலிறகாய் அணிபவர் ஆகையாலே சிகண்டீ

நஹுஷ: - தமது மாயையால் ஜீவர்களைக் கட்டுகிறவர் ஆகையாலே நஹுஷ: (ணஹ் பந்தனே - இலக்கணக் குறிப்பு)

வ்ருஷ: - தர்மத்தின் உருவமாகி மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்பவர் ஆகையாலும், ஸம்ஸாரக் கடலில் அலைந்து வருந்தும் சாதுக்களின் வருத்தத்தை நீக்கி பரமானந்தத்தை ஏற்படுத்தும் மழையாக இருப்பவர் ஆதலாலும் வ்ருஷ:

க்ரோதஹா - சாதுக்களுக்கு நேரும் தீமையை அழித்த பின்பே தம் குரோதம் நீங்குபவர்

க்ரோதக்ருத் - தீமையை எதிர்த்து எழும் நியாயமான குரோதத்தைச் செய்பவர்

கர்த்தா - தீமைக்குத் தக்க தண்டனைகளை வழங்குபவர்

விச்வபாஹு: - தீமைக்கு எதிராக உயர்த்தும் தர்மத்தின் கைகள் உலகமெங்கும் முளைத்தது போன்று எழும் அளவற்ற தோள்கள் உடையவர். (தோள்கள் ஆயிரத்தாய் - ஆழ்வார்)

மஹீதர: - உலகத்தைத் தாங்கும் உன்னத ஆதாரமாய் இருப்பவர்.

அச்யுத: ப்ரதி2த: ப்ராண:

அச்யுத: ப்ரதி2த: ப்ராண: ப்ராணதோ3 வாஸவாநுஜ: | 
அபாம் நிதி4ரதி4ஷ்டாநம் அப்ரமத்த; ப்ரதிஷ்டித: || 



அச்யுத: - எவ்வித விகாரங்களும் இன்றி என்றும் ஒருபடித்தாய் இருக்கும் பெற்றியர் 

ப்ரதித: - எதனிலும் மிக்க புகழ் கொண்டவர் ஆகையாலே ப்ரதித: 

ப்ராண: - ஜீவகோடிகளுக்கு உயிரூட்டும் காரணமாய் இருப்பவர் 

ப்ராணத: - உயிர்கொண்டுலவும் ஜீவர்கள் முக்திக்கு முயல்வதற்காக அவர்களுக்குத் தொடர்ந்து வாழ்வு தருபவர் 

வாஸவாநுஜ: - அழியாமையாகிய அமுதத்தில் பெருவிருப்புள்ள இந்திரர்க்கு அதனை அளிக்க வேண்டி பின் பிறந்தவர் 

அபாம்நிதி: - உயிர்க்கு இன்றியமையாத நீரின் நிறை செல்வமாக இருப்பவர் 

அதிஷ்டாநம் - உலகம் நிலை நிற்றலுக்கான ஆதாரமாய் நின்று அருள்பவர் 

அப்ரமத்த: - உயிர்களுக்கான கர்ம கதியில் சிறிதும் தவறுதலின்றி அவற்றைப் பயிற்றி முன்னேற்றிச் செல்பவர் 

ப்ரதிஷ்டித: - ஏதொன்றையும் சார்ந்திராமல் தம் மகிமையிலேயே என்றும் நிலைத்திருப்பவர் 

ஸ்கந்த3: ஸ்கந்த3த4ரோ து4ர்யோ

ஸ்கந்த3: ஸ்கந்த3த4ரோ து4ர்யோ வரதோ3 வாயுவாஹன: | 
வாஸுதே3வோ ப்3ருஹத்3பா4னு: ஆதி3தே3வ: புரந்த3ர: || 


ஸ்கந்த: - நற்பேற்றிற்கு எதிரான அசுர சக்திகளை வலிமை வற்றச் செய்பவர் 

ஸ்கந்ததர: - அவ்வாறு தீய சக்திகளை வலியிழக்கச் செய்யும் ஆற்றல்கள் அத்தனையையும் தாங்குபவர் 

துர்ய: - உலகனைத்தையும் தாங்குபவர் 

வரத: - ஆற்றல் மிகுந்த தேவர்க்கும் அவர்களுக்கு உரிய சக்தியை வரமாக அளிப்பவர் 

வாயுவாஹன: - வாழ்வின் அடிப்படையான உயிர்க்காற்றையும் நடத்துபவர் 

வாஸுதேவ: - உயிர்கள் அனைத்தையும் மூடிக் காத்து, தம்முள் அடக்கி ரக்ஷித்து அவற்றுள் அந்தர்யாமியாக நின்று நடத்தும் பெரும் தாய்மை உடையவர் ஆதலால் வாஸுதேவ: 

ப்ருஹத்பானு: - உலகினும் பலமடங்கு பெரியதான நித்ய விபூதியில் பேரொளியாய்த் திகழும் சூரியனாக இருப்பவர் 

ஆதிதேவ: - ஒளிதிகழும் அனைத்துக்கும் ஒளி தரும் தம் முதன்மைப் பேரொளியாய்த் திகழ்பவர்; இவ்வுலகைப் படைத்து லீலாவிபூதியை நடத்துபவர் 

புரந்தர: - ஒளியை மறைக்கும் மாயையின் கூடுகள் ஆகிய புரங்களை என்றும் அழிக்கும் வண்ணம் இருப்பவர் 

அசோகஸ்தாரணஸ்தார:

அசோகஸ்தாரணஸ்தார: சூர: சௌரி: ஜநேச்வர: |
அநுகூல: சதாவர்த்த: பத்3மீ பத்3மநிபே4க்ஷண: || 



அசோக: - சோகம், மோஹம், ஜரை, ம்ருத்யு, க்ஷுத், பிபாஸை என்னும் சோகம், மோகம், மூப்பு, சாவு, பசி, தாகம், என்ற ஆறு ஊர்மிகள் (அலைகள்) ஸம்ஸார சாகரத்தின் வேகங்களாய் ஜீவர்களை நலியும் குற்றங்கள் ஆகின்றன. இந்த ஆறுக்கும் உபலக்ஷணமாகச் சொல்வது சோகம். இந்த ஆறும் இல்லாதவன் மட்டுமன்று, தம்மை அண்டியவர்களுக்கு இவை இல்லாமல் ஆக்குபவர் என்பதால் அசோக: 

தாரண: - ஸம்ஸார சாகரத்தைத் தாண்டுவதற்கு உதவும் பெருநல் உதவியாக இருப்பவர் 

தார: - பவக்கடலினின்றும் சரணடைந்தவர்களை பயமில்லாமல் அக்கரையாகிய மோக்ஷத்திற்குக் கடத்துபவர். 

சூர: - எத்தகைய இடர்ப்பாட்டிலும் தாமே மீட்பவர் ஆகையாலே சூர: 

சௌரி: - பக்தர்களை இடர்ப்பாட்டினின்றும் மீட்பதற்காகத் தாமே அவர்களை நாடிச் செல்பவர். 

ஜநேச்வர: - உயிர்கள் அனைத்தையும் வியாபிக்கும் சீலத்தால் ஜநேச்வரர் 

அனுகூல: - அனைத்துப் பொருட்களிலும் தாமே உள்ளே ஆத்மாவாக இருப்பதால் அனுகூலமாக இருப்பவர். 

சதாவர்த்த: - வீழ்ச்சிக்குப் பல சுழல்கள் உடைய பவக்கடல் போல் அன்றிக்கே தம்மிடம் பக்தியால் அகப்பட்டவர்கள் தாமே கருதினாலும் மீள முடியாத அளவிற்கு வாழ்ச்சிக்கு ஆன சுழல்கள் அளவிறந்து உடையவர். 

பத்மீ - கையில் லீலையாகிய காலப்பதுமத்தை உடையவர் 

பத்ம நிபேக்ஷண: - அன்றலர்ந்த தாமரை மலரைப் போன்ற மலர்ச்சியும், குளிர்ச்சியும் கொண்ட கடாக்ஷம் கொண்டவர். 


பத்மநாபோSரவிந்தாக்ஷ:

பத்மநாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: சரீரப்ருத் | 
மஹர்த்திர்ரித்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || 


பத்மநாப: -- படைப்பின் கேந்த்ரமான நாபிக்கமலம் அழகியவர் 

அரவிந்தாக்ஷ: -- தாமரைக் கண்ணழகர் 

பத்மகர்ப: -- இதயகமலத்தின் உள்ளே தஹராகாசத்தில் விளங்குபவர் 

சரீரப்ருத் -- உடல்மிசை உயிரென உயிர்களைத் தம் உடலாய்த் தாங்குபவர் 

மஹர்த்தி: -- அனைத்துவித ஐஸ்வர்யங்களையும் உலக க்ஷேமத்திற்காகப் பாதுகாப்பவர் 

ருத்த: -- தம் ஐஸ்வர்யங்களைத் தம் குழந்தைகள் குதூகலிப்பதைக் கண்டு மகிழ்பவர் 

வ்ருத்தாத்மா -- பிரபஞ்சம் அனைத்தும் அடங்கியும் அடங்காது பொலியும் தன் தன்மை மிக்கவர் 

மஹாக்ஷ: -- அழகிய பெரிய திருக்கண்கள் உடையவர்; வேதவடிவாம் கருடனை வாகனமாய்க் கொண்டவர் 

கருடத்வஜ: -- வேதவடிவாம் கருடனைத் தம் கொடியிலும் கொண்டவர் 


அதுல: சரபோ பீம:

அதுல: சரபோ பீம: ஸமயக்ஞோ ஹவிர்ஹரி: | 
ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: || 


அதுல: -- ஸமம் என்று யாரும் எவையும் இல்லாதவர் 

சரப: -- எல்லா சரீரங்களிலும் அந்தராத்மாவாய் இருப்பவர் (ஸ்ரீஆதிசங்கரர்) 
நெறி தவறுவோரைத் தண்டித்து நல்வழிக்குக் கொணர்பவர் (ஸ்ரீபட்டர்) 

பீம: -- தம்மீதுள்ள பயத்தால் தேவர்கள் அனைவரும் முறைதிறம்பாமல் இருக்கும்படித் திகழ்பவர் 

ஸமஜக்ஞ: -- அனைவரையும் ஸமமாகக் கருதுதலாகிய உயர்ந்த பூஜையை விரும்புபவர் 

ஹவிர்ஹரி: -- யக்ஞத்தில் படைக்கப்படும் ஹவிஸ் ரூபமானவர்; பக்தர்களின் பாபங்களைப் போக்கும் ஹரி ஆனவர். 

ஸர்வலக்ஷணலக்ஷண்ய: -- அறியப்படுகின்ற, அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தின் தன்மைகளும் அவரையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அனைத்து அறிவும் அனுபவமும் சென்று முடியும் நிலை அவரே 

லக்ஷ்மீவாந் -- அகலகில்லேன் என்று திருமகள் உறையும் மார்பர்; நித்யயோகமாக அவருடன் அன்னையாகிய ஸ்ரீ திகழ்கிறாள் 

ஸமிதிஞ்ஜய: -- ஜீவனுக்கும் அவருக்கும் உண்டாகும் வழக்கில் ஸ்ரீ இருவருக்கும் இடையில் திகழ்ந்து தயாரூபமாய் பகவானுக்கே வெற்றியைத் தருகிறாள் 


விக்ஷரோ ரோஹிதோ மார்க:

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ்ஸஹ: | 
மஹீதரோ மஹாபாகோ வேகவாநமிதாசந: ||


விக்ஷர: -- தம் பக்தர்களிடத்தில் எத்துணையும் குறையாத அன்புடையவர் 

ரோஹித: -- தம் பக்தர்களை ஸம்ஸாரத்திலிருந்து காப்பாற்றியதும் மகிழ்ச்சியில் சிவக்கும் திருமுகம் கொண்டவர் 

மார்க: -- அடியார்களால் உயர்வுக்கான மார்க்கமாய் விரும்பப்படும் பாதையானவர் 

ஹேது: -- அத்தகைய பக்தி மார்க்கத்திற்கான அடிப்படை ஹேதுவாகவும் அமைந்திருப்பவர் 

தாமோதர: -- கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய திருவயிறு உடையவர் 

ஸஹ: -- ஆய்ச்சிக் கைத்தாம்பிற்கும், கோபியரின் ஏச்சுக்கும் மகிழ்ச்சியுடன் சகிக்கும் பண்பினர் 

மஹீதர: -- உலகத்தைத் தாங்கும் உத்தமர் 

மஹாபாக: -- ஆயர் குவித்த பேரன்னத்தை விரும்பி உண்டவர்; நாயகிபாவத்தில் பக்தர்களைத் துய்க்கும் நாயகர் 

வேகவாந் -- அதிவேகத்தில் சாகசங்களை இயற்றும் அவதார மஹிமை கொண்டவர் 

அமிதாசந: -- உலகையுண்டும் அமையாது ஆயர் குவித்த அன்னமலையையும் உண்ட ஆச்சரியர் 


உத்பவ: க்ஷோபணோ தேவ:

உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப: பரமேச்வர: | 
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: || 


உத்பவ: -- பவக்கடலில் இருந்து பக்தர்களை விடுவிப்பவர்; அவருடைய அவதார லீலைகளை நினைப்பதால் ஸம்ஸாரபந்தம் விடுபடுகிறது. 

க்ஷோபண: -- நல்வழியில் செல்லாதோரை நடுங்கச் செய்பவர்; படைப்பிற்கு முன்னர் இருந்த ப்ரக்ருதியைக் கலக்கிச் சிருஷ்டியை வெளிப்படச் செய்பவர் 

தேவ: -- அனைத்தின் உள்ளுயிராய் ஒளிர்பவர்; மாயையில் ஜீவர்களைக் கட்டி விளையாடுபவர் 

ஸ்ரீகர்ப: -- படைப்பின் எந்நேரத்திலும் தம்மோடு பிரியாமல் திருமகள் திகழ நிற்பவர் 

பரமேச்வர: -- உயர்வற உயர்நலம் உடையவராய்த் திகழும் திருமால் அவரே 

கரணம் -- தம்மை அடையத் தாமே தகுந்த துணையாக இருப்பவர் 

காரணம் -- அனைத்துவித காரணமாகவும் அவரே திகழ்பவர் 

கர்த்தா -- காரணம் கொண்டு இயற்றும் ஆக்குவோனாகவும் அவரே திகழ்கிறார் 

விகர்த்தா -- விசித்திரமான படைப்பை இயற்றுபவர்; பக்தர்களின் ஆனந்தம், துயரங்களைத் தம்முடையதாகக் கருதுபவர் 

கஹந: -- நம் புலனுக்கும் கருத்திற்கும் புலப்படா மஹிமை உடையவர்; பக்தர்களிடம் அவர் கொள்ளும் அன்பை நம்மால் புரிந்துகொள்ள இயலாது இருப்பவர் 

குஹ: -- ஜீவர்களிடத்தில் அவர்களே அறியாமல் அவர்தம் இதய குகையில் வீற்றுக் காப்பவர் 

வ்யவஸாயோ வ்யவஸ்தாந:

வ்யவஸாயோ வ்யவஸ்தாந: ஸம்ஸ்தாந: ஸ்தாநதோ த்ருவ: | 
பரர்த்தி: பரமஸ்பஷ்ட: துஷ்ட: புஷ்ட: சுபேக்ஷண: || 


வ்யவஸாய: -- முக்தியை நோக்கி ஜீவர்களைப் பரிணமிக்கச் செய்வதில் அயராது முனைபவர்; துருவன் என்ற குழந்தையிடம் பக்தியை ஊட்டிப் பெருநிலைக்கு உய்த்தவர் 

வ்யவஸ்தாந: -- தம் அருளில் அனைத்தும் இயல்பாகவே ஒழுங்கில் இயங்கும்படி அமைப்பவர். துருவனை நக்ஷத்திர நிலையாக்கி அண்டத்தையே அதனைச் சுற்றி முறையாகச் சுழலச் செய்பவர் 

ஸம்ஸ்தாந: -- உயிர்க்குலம் அனைத்தும் அடைய வேண்டிய முக்திப் பெருநிலையாய்த் திகழ்பவர் 

ஸ்தாநத: -- துருவன் போன்ற பக்தர்களுக்கு மிகச் சிறந்த ஸ்தாநம் தருபவர் 

த்ருவ: -- தாம் மாறாமல் என்றும் நிலைத்தவர்; உயர்ந்த ஸ்தானமாகிய த்ருவ ஸ்தானமாய்த் தாமே இருப்பவர் 

பரர்த்தி: -- உயர்வற உயர்நலம் கொண்டவர்; சகல கல்யாண குணங்களும் உடையவர் 

பரமஸ்பஷ்ட: -- மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர் 

துஷ்ட: - சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர் 

புஷ்ட: -- குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர் 

சுபேக்ஷண: -- முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும், பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும், முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும், அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர் 


ராமோ விராமோ விரதோ

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய: | 
வீரச்சக்திமதாம் ச்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: || 


ராம: -- நித்திய ஆனந்தமாய், யோகிகள் எல்லையற்று ஈடுபடும் பரம்பொருள்; உத்தமமான கல்யாண குணங்களால் பக்தர்களின் மனத்தை மகிழ்விக்கும் ராமர் 

விராம: -- யாரிடம் ஈடுபடுவதால், யாருடைய சரிதத்தைக் கேட்பதால் நம் உலகக் கவலைகள் முடிவுக்கு வருகிறதோ அந்தப் பரமபுருஷர் 

விரத: -- வைராக்கியம், தியாகமே உருவாய் இருப்பவர் 

மார்க: -- முக்திக்கான உன்னத வழியாக இருப்பவர் 

நேய: -- வேதாந்த ஞானத்தால் முக்திக்கு வழிநடத்துபவர் 

நய: -- வழிநடத்துபவரெனினும், பக்தியால் கட்டுண்டு பின் தொடர்பவர் 

(திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் திருவீதி எழுந்தருளும் போது வேதங்கள் பின்தொடர்வதையும், பெருமாள் திவ்யப் பிரபந்தத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் நினைவு கொள்ளலாம்) 

அநய: -- தம்மை வழிநடத்தத் தக்க தலைமை ஒரு போதும் இல்லாதவர் 

வீர: -- அசுரர்கள் அஞ்சி நடுங்கும் பெருவீரர் 

சக்திமதாம்ச்ரேஷ்ட: -- ஆற்றலும், வீரமும் கொண்டோரில் சிறந்து ஒப்பாரில்லாதவர் 

தர்ம: -- சநாதன தர்மமாய்த் தாமே இருப்பவர் 

தர்மவிதுத்தம: -- தர்மம் சூக்ஷ்மமானது ஆகையாலே எது தர்மம் என்பதை அறிவதில் அவரே பிரமாணம் ஆனவர் 

வைகுண்ட: புருஷ: ப்ராண:

வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: | 
ஹிரண்யகர்பச் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: || 


வைகுண்ட: -- குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர் 

புருஷ: -- அந்தர்யாமியாய் நின்று ஜீவர்களின் பாபங்களைப் பொசுக்கித் தூய்மை நல்குபவர் 

ப்ராண: -- மோக்ஷத்திற்காக அனைவருக்கும் வாழ்வு நல்குபவர் 

ப்ராணத: -- சோர்ந்து போகும் ஜீவர்களுக்குப் புத்துயிரூட்டி முத்திவழியில் தூண்டுபவர் 

ப்ரணவ: -- வேதங்களிலேயே பரம்பொருளுக்கான மிகச்சிறந்த ஸ்துதியாக இருக்கும் ப்ரணவமாக இருப்பவர் 

ப்ருது: -- எல்லையற்று விரியும் மஹிமையுடையவர் 

ஹிரண்யகர்ப: -- திவ்யமான சௌந்தர்யத்துடன் இதய கர்ப்பத்தில் குடிகொண்டிருப்பவர் 

சத்ருக்ந: -- இதயத்தில் எழுந்தருளியிருந்து காமம், குரோதம், லோபம் முதலிய ஆறு சத்ருக்களையும் அழிப்பவர் 

வ்யாப்த: -- அத்தனை உயிர்களின் இதயத்திலும் இருந்து தந்தை தம் மக்களைக் காப்பது போல் காப்பவர் 

வாயு; -- காற்று போல் தாமே அனைவர்பாலும் சென்று வாழ்விப்பவர் 

அதோக்ஷஜ: -- ஆரா அமுதாய்ப் பெருகும் ஆனந்தர் 


ருதுஸ்ஸுதர்சந: கால:

ருதுஸ்ஸுதர்சந: கால: பரமேஷ்டீ பரிக்ரஹ: | 
உக்ரஸ்ஸம்வத்ஸரோ தக்ஷோ விச்ராமோ விச்வதக்ஷிண: || 


ருது: -- பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவர்; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவர் 

ஸுதர்சந: -- தம்மைக் காண்பதாலேயே உயர்ந்த நன்மைகள் பெருகும்படி இருப்பவர் 

கால: -- காலம் என்ற வடிவில் அனைத்தையும் அளந்து அடக்குபவர் 

பரமேஷ்டீ -- பரமபதத்தைத் தம் உயர்ந்த ஸ்தானமாகக் கொண்டவர் 

பரிக்ரஹ: -- தம்மோடு தொடர்பு கொண்ட அனைத்திற்கும் மோக்ஷம் தரும் இயல்பினர் 

உக்ர: -- ஜீவர்களின் நலனுக்கு வேண்டி பிரளயத்தைக் கடுமையுடன் நடத்துபவர் 

ஸம்வத்ஸர: -- ஸ்ருஷ்டியின் சுழற்சியை மாறாத கடும் நியமத்துடன் நடத்துபவர் 

தக்ஷ: -- செயல் திறமையே வடிவானவர் 

விச்ராம: -- பவநோயால் நலிந்தோர்க்கு உய்வும் ஓய்வும் நல்குபவர் 

விச்வதக்ஷிண: -- அனைத்திற்கும், அனைவருக்கும் உரிய திருப்தியை அளிப்பவர் 

விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு:

விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு; ப்ரமாணம் பீஜமவ்யயம் | 
அர்தோSநர்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதந: || 


விஸ்தார: -- பிரபஞ்ச விரிவனைத்தும் தம்முள் அடங்க இருப்பவர்; வையம் உய்ய வேதப் பொருள் விரிப்பவர் 

ஸ்தாவரஸ்தாணு: -- அசையாமல் நிலைத்து நிற்கும் பெரும் தத்துவம்; வேத வழியை நன்கு ஸ்தாபித்துத் திடப்படுத்துபவர் 

ப்ரமாணம் -- அனைத்தையும் உணரும் சைதன்யத்திற்கும் அடிப்படைத் தத்துவமாய் இருப்பவர்; நல்லது தீயது ஜீவர்களுக்காகத் தாமே நன்கு பிரித்துக் காப்பவர் 

பீஜமவ்யயம் -- அனைத்திற்கும் ஆதிகாரணமாய் இருந்தும் எந்தவித மாற்றமும் அற்றவர் 

அர்த்த: -- அனைவராலும் விரும்பப்படும் உறுதிப்பொருள் அவர் 

அநர்த்த: -- உலகியலில் முழுகியவர்களால் பொருட்படுத்தப் படாமல் இருப்பவர் 

மஹாகோச: -- தீராத பல செல்வங்களையும், ஐஸ்வர்யங்களையும் உடையவர்; ஐந்து கோசங்களுக்கும் தாண்டி நிற்பவர் 

மஹாபோக: -- அத்தனை விதமான ஜீவர்களும் விரும்பும் போகங்களைத் தம்முள் கொண்டவர் 

மஹாதந: -- ஞானம், தர்மம் முதலிய அத்தனை விதமான தனங்களையும் உடையவர் 


அநிர்விண்ண: ஸ்தவிஷ்டோ பூ:

அநிர்விண்ண: ஸ்தவிஷ்டோ பூர்தர்மயூபோ மஹாமக: | 
நக்ஷத்ரநேமிர்நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாமஸ்ஸமீஹந: || 


அநிர்விண்ண: -- ஜீவர்கள், தம் முயற்சியை எத்தனை தோற்பித்தாலும் அதனால் சிறிதும் அயர்வின்றி, அவர்களைக் கடைத்தேற்ற முனைந்திருக்கும் தன்மையர் 

ஸ்தவிஷ்ட: -- சிம்சுமாராக்ருதியில் விவரிப்பது போல் பிரபஞ்சமே தம் சரீரமாகக் காட்சியளிப்பவர் 

அபூ: (பூ: ) -- பிரபஞ்ச உருவாகக் காட்சியளிக்கும் அவரே பூமியாக நின்று உயிர்களைத் தாங்குகிறார் 

தர்மயூப: -- அனைத்தும் நெறி பிறழாதபடி அவரிடம் கட்டி வைக்கப் பட்டிருப்பதால் அவர் தர்ம யூபர் 

மஹாமக: -- யக்ஞங்களைத் தம் அங்கங்களாகக் கொண்டு திகழும் யக்ஞமூர்த்தி 

நக்ஷத்ரநேமி: -- நக்ஷத்ரவடிவான பிரபஞ்ச சரீரத்திற்கு இதயம் போன்றவர் 

நக்ஷத்ரீ -- சிம்சுமார வடிவான பிரபஞ்ச வடிவினுள் திகழும் நாராயணர் 

க்ஷம: -- சிறிதும் வருத்தமே இன்றி அனைத்து உலகங்களையும் தாங்கிப் பொறுப்பவர் 

க்ஷாம: -- அவாந்தரப் பிரளயத்தின் போது அனைத்து நக்ஷத்திரங்களும் அழிந்துபடத் தாம் மட்டுமே இருப்பவர் 

ஸமீஹந: -- பிரபஞ்சத் தோற்றத்தில் அனைத்து சக்திகளையும் உந்திச் செயலாற்ற வைப்பவர் 


யக்ஞ இஜ்யோ மஹேஜ்யச்ச

யக்ஞ இஜ்யோ மஹேஜ்யச்ச க்ரதுஸ்ஸத்ரம் ஸதாங்கதி: | 
ஸர்வதர்சீ நிவ்ருத்தாத்மா ஸர்வக்ஞோ ஜ்நானமுத்தமம் || 


யக்ஞ: -- வேள்வி ரூபமாய் இருப்பவர் 

இஜ்ய: -- யாரைக் குறித்து வேள்வி செய்யினும் தாமே அஃது சென்று அடையும் இலட்சியமாய் இருப்பவர் 

மஹேஜ்ய: -- யாதொரு பலத்தையும் கருதாது தமக்கே அர்ப்பணமாக வேள்வி புரிவோர்க்கு மோக்ஷபலத்தை அருள்பவர் 

க்ரது: -- க்ரதுவே தம் ஸ்வரூபமாய் இருப்பவர்; அக்னிஷ்டோமங்களுக்கு இலட்சியமாய் இருப்பவர் 

ஸத்ரம் -- வேள்விகள் அனைத்தும் நிலைபெறும் இடமாய் இருப்பவர் 

ஸதாங்கதி: -- ஸத்துக்களின் ஒரே புகலாய் இருப்பவர் 

ஸர்வதர்சீ -- அனைத்திற்கும் சாக்ஷியாய்ப் பார்த்துக் கொண்டிருப்பவர் 

நிவ்ருத்தாத்மா -- நிவ்ருத்தி மார்க்கத்தின் பரம இலட்சியமாய் இருப்பவர்; பதரியில் நிவ்ருத்தி மார்க்கத்தை உபதேசித்தவர் 

ஸர்வக்ஞ: -- அனைத்தையும் பூர்ணமாக அறிவதே இயல்பாகக் கொண்டவர் 

ஜ்நானமுத்தமம் -- உத்தம ஞானங்கள் அத்தனையாகவும், உத்தம ஞானங்கள அனைத்தையும் வழங்குபவராகவும் இருப்பவர். 


ஸுவ்ரத: ஸுமுகஸ்ஸூக்ஷ்ம:

ஸுவ்ரத: ஸுமுகஸ்ஸூக்ஷ்ம: ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் | 
மநோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹு: விதாரண: || 


ஸுவ்ரத: -- உறவுகளுக்காக, ஒரு சமயம் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஆனால் அனைத்து ஜீவர்களையும், தம்மைச் சரணடைந்தாரைக் காப்பதையே நித்யமான விரதமாகக் கொண்டவர் 

ஸுமுக: -- விரதத்தினால் முகம் மேலும் மேலும் மகிழ்ச்சியும், இனிமையும் கூடியிருப்பவர் 

ஸூக்ஷ்ம: -- உபாதிகள் ஏதுமற்ற சமாதி நிலையில் உணரப்படும் சூக்ஷ்ம ரூபம் உடையவர் 

ஸுகோஷ: -- உபநிஷதங்களால் கோஷிக்கப்படுபவர் 

ஸுகத: -- தவறாமல் நன்னெறியில் நிற்போருக்கு உயர்ந்த ஆனந்தம் தருபவர் 

ஸுஹ்ருத் -- அனைவருக்கும் உபகாரம் செய்ய விழையும் நல்லிதயம் ஆனவர் 

மநோஹர: -- தம் கனிவால் அனைவருடைய மனத்தையும் கவர்பவர் 

ஜிதக்ரோத: -- குரோதமே அற்ற இயல்பானவர் 

வீரபாஹு: -- அழகிய பல தடந்தோள் வீரர் 

விதாரண: -- அதர்மத்தில் ஈடுபட்டோரை அறுத்துவிடுபவர் 


ஸ்வாபநஸ்ஸ்வவசோ வ்யாபீ

ஸ்வாபநஸ்ஸ்வவசோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் | 
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்போ தநேச்வர: || 


ஸ்வாபந: -- தம் சௌந்தர்யத்தால் ஜீவர்களைக் கவர்ந்து நல்வழியில் நடத்துபவர்; அறிதுயில் அழகர் 

ஸ்வவச: -- என்றும் தம் நிலையில் பெயராதவர் 

வ்யாபீ -- அனைத்திலும் அந்தர்யாமியாய் நீக்கமற வியாபித்தவர் 

நைகாத்மா -- அனைத்து ஆத்மாக்களிலும் அந்தராத்மாவாய் விளங்கும் பரமாத்மா அவரே 

நைககர்மக்ருத் -- பிரபஞ்சத்தின் பல செயல்களையும் தாம் செய்தவண்ணம் இருப்பவர் 

வத்ஸர: -- ஜீவர்களின் இதயத்தில் மேவியுறைந்து அவர்களை உயர்ந்த இலட்சியத்தின்பால் உய்ப்பவர் 

வத்ஸல: -- சரணடைந்தோரைக் கன்றைத் தாய்ப்பசு காப்பதைப் போலக் கனிந்து காப்பவர் 

வத்ஸீ -- அத்தனை உயிர்களையும் தம் கன்றுகள் போல் கருதுபவர் 

ரத்நகர்ப: -- அனைத்து உயிர்களுக்கும் அனைத்து வளங்களையும் இடையறாது கொடுக்கும் பெருவளம் மிக்கவர் 

தநேச்வர: -- தம் குழந்தைகளுக்கு ஐஸ்வர்யங்களை விரைந்து அருளும் தந்தை அவரே 


தர்மகுப்தர்மக்ருத் தர்மீ

தர்மகுப்தர்மக்ருத் தர்மீ ஸதக்ஷரமஸத்க்ஷரம் | 
அவிக்ஞாதா ஸஹஸ்ராம்சு: விதாதா க்ருதலக்ஷண: || 


தர்மகுப் -- தர்மவழியில் நிற்பவரைப் போற்றிக் காப்பவர் 

தர்மக்ருத் -- தமது அருளால் நல்லவர்களை தர்மவழியில் நிலைக்கச் செய்பவர் 

தர்மீ -- தர்மத்தையே தம் படையாகக் கொண்டவர் 

ஸத் -- எப்பொழுதும் தர்மமே வடிவாக நிற்பவர் 

அக்ஷரம் -- எப்பொழுதும் கல்யாண குணங்களே நிறைந்தவர் 

அஸத் -- நல்லோர் அல்லாதார்க்கு அவர் புகலாக இருப்பதில்லை 

க்ஷரம் -- தீயவர்களுக்கு அழிவாக இருக்கின்றவர் 

அவிக்ஞாதா -- பக்தர்களிடம் ஏற்படும் அறியாத் தவறுகளைக் கவனத்தில் கொள்ளாதவர் 

ஸஹஸ்ராம்சு: -- எல்லையற்ற ஞானக்கதிர்கள் அவரிடம் வீசும்படி இருப்பவர் 

விதாதா -- பக்தர்களின் விதியைத் தாமே நிர்வஹிப்பவர், எமனும் தலையிட முடியாதவாறு. 

க்ருதலக்ஷண: -- அனைத்து சாத்திரங்களும் ஜநார்த்தனனிடமிருந்தே வருகின்றன என்றவாறு இருப்பவர் 

கபஸ்திநேமி: ஸத்வஸ்த:

கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோபூத மஹேச்வர: | 
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத்குரு: || 


கபஸ்திநேமி: -- ஒளிகளில் பேரொளியானவர்; சுதர்சன சக்கரத்தை உடையவர் 

ஸத்வஸ்த: -- பக்தர்களின் இதயத்தில் எப்பொழுதும் வீற்றிருந்து தீமை அண்டாதவாறு காப்பவர் 

ஸிம்ஹ: -- பக்தர்களுக்கு வரும் அல்லல்களை நீக்குவதில் சிம்மம் போன்றவர் 

பூதமஹேச்வர: -- அனைத்து தேவர்களுக்கும் தலைவர் அவரே 

ஆதிதேவ: -- தேவர்கள் அனைவருக்கும் மூலம் அவரே 

மஹாதேவ: -- தேவர்கள் உள்ளடக்கிய படைப்பனைத்தையும் லீலையாகக் கொண்டவர் 

தேவேச: -- தேவர்களின் உள்நின்று நியமிப்பவர் 

தேவப்ருத்குரு: -- தேவர்களைத் தாங்கி நின்று அவர்களுக்குக் குருவாகவும் இருப்பவர் 


உத்தரோ கோபதிர் கோப்தா

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்நாநகம்ய: புராதந: | 
சரீரபூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || 


உத்தர: -- இழந்ததை மீட்டுக் கொடுப்பவர்; பிரம்மாவிற்கு வேதத்தையும், ஜீவர்களுக்கு முக்தியையும் கொடுப்பவர் 

கோபதி: -- கோ என்னும் வேதவாக்குகளைக் காப்பவர் 

கோப்தா -- அனைத்து வித்யைகளையும் போற்றிக் காப்பவர் 

ஜ்நாநகம்ய: -- வேதஞானத்தால் அடையப்படுபவர் 

புராதந: -- கல்பம்தோறும் அவரே ஞானத்தை அனைவருக்கும் அளிக்கின்றார் 

சரீரபூதப்ருத் -- சித் அசித் அனைத்தும் தம் சரீரமாய்க் கொண்டிருப்பவர் எப்பொழுதும் 

போக்தா: -- அவரே அத்தனை யக்ஞ பலன்களின் பயன்களையும் துய்ப்பவராய் இருந்து அதில் ஜீவர்களுக்குப் பங்களிப்பவர், ஜீவர்களின் நலனுக்காக. 

கபீந்த்ர: -- உலகம் உய்ய வேண்டி வானரர்களாக வந்த தேவர்களின் தலைவர் 

பூரிதக்ஷிண: -- யக்ஞங்களில் அளவற்ற நலன்கள் பெருகுமாறுச் செய்பவர் 


ஸோமபோSம்ருதப: ஸோம:

ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: | 
விநயோ ஜய: ஸத்யஸந்தோ தாசார்ஹ ஸாத்வதாம் பதி: || 


ஸோமப: -- அனைத்து வழிபாடுகளின் ரஸமான பகுதி அவரால் அருந்தப்படுகிறது 

அம்ருதப: -- வேள்விகளில் மந்திரங்களால் அளிக்கப்படும் ஹவிஸ் அனைத்தும் அம்ருதம் ஆகி அவருக்கே சேருகிறது 

ஸோம: -- நிலவுபோல் காண்பதற்கு இனியராய் உயிர்களைப் போஷிக்கின்றவர் 

புருஜித் -- அனைத்தையும் பலவழிகளாலும் வெற்றி கொள்பவர் 

புருஸத்தம: -- ஹனுமான் போன்ற உத்தம சாதுக்களிடம் எப்பொழுதும் நீங்காமல் உறைபவர் 

விநய: -- தீமை செய்வோரைத் தண்டிப்பவர் 

ஜய: -- தம்மிடம் தூய பக்தி கொண்டவர்களிடம் என்றும் தோற்று இருப்பவர் 

ஸத்யஸந்த: -- பொய்யாகாத சங்கல்பங்களைக் கொண்டவர் 

தாசார்ஹ: -- பக்தர்கள் தம்மை அர்ப்பணிக்கும் புகலாகவும், பக்தர்களுக்குத் தம்மையே தந்துவிடும் அருள்மிக்கவராகவும் இருப்பவர் 

ஸாத்வதாம்பதி: -- ஸாத்வத ஸம்ஹிதையைத் தந்து பக்தர்களைக் காப்பவர் 

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம: | 
அம்போநிதிரநந்தாத்மா மஹோததிசயோSந்தக: || 


ஜீவ: -- ஜீவர்களை ரக்ஷித்துத் தம்முடைய சேஷத்வத்தை உணர்ந்து தம்மிடம் கைங்கரியத்திலே ஊக்கம் கொள்ளச் செய்பவர் 

விநயிதாஸாக்ஷீ -- ஜீவர்களை ரக்ஷிக்கும் போதும் அவர்களை ராஜகுமாரர்கள் போல் நயத்துடன் நடத்தி நல்வழியில் கண்ணும் கருத்துமாய் நடத்துபவர் 

முகுந்த: -- மோக்ஷம் தரவேண்டி ஜீவர்களின் இதயத்திலேயே எப்பொழுதும் உறைபவர் 

அமிதவிக்ரம: -- தமது அளவற்ற ஆற்றலால் பக்தர்கள் உய்ய வேண்டி பல வடிவங்களைக் கொள்பவர் 

அம்போநிதி: -- ஆழத்தில் நீர்வளமாக நின்று தாங்கும் கூர்மம் அவர் 

அநந்தாத்மா -- காலம், தேசம், வஸ்து ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து ஆதிசேஷ உருவினர் 

மஹோததிசய: -- பெருங்கடல் வடிவில் பள்ளிகொள்ளும் பரமர் 

அந்தக: -- உலகனைத்தையும் தம்முள் ஒடுக்கும் முடிவே வடிவானவர் 


அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ

அஜோமஹார்ஹ: ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர; ப்ரமோதந: | 
ஆநந்தோ நந்தநோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || 


அஜ: -- உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து அனைத்துக்கும் அடிப்படையாய், முதன்முன்னம் தானே தோன்றும் அகாரம் போன்று, வடமொழி எழுத்துக்களை வரிசையாக எழுதினால் முதல் 24 எழுத்துக்களால் குறிக்கப்படும் பிரகிருதி தத்துவங்களுக்குள்ளும், பின்னர் 25 ஆவது எழுத்தான மகாரத்தால் குறிப்பிடப்படும் ஜீவதத்துவத்திற்குள்ளும் உள்ளுயிராய் நின்று காப்பதால், அகாரத்தின் பொருளாக நமக்குக் காட்சியளிப்பதால் அவர் அஜ: 

மஹார்ஹ: -- ஜீவர்கள் தம்மை அர்ப்பணிக்கத் தகுந்த புகல் அவரே 

ஸ்வாபாவ்ய: -- ஜீவர்களால் தமக்கு மிகவும் இயல்பாக உரிமை பூண்ட பிரபுவாகப் பக்தி செலுத்தத் தகுந்தவர் 

ஜிதாமித்ர: -- தம்மைச் சரணடைந்தோரைக் காமம் முதலிய அகப்பகையை வெல்லுபடிச் செய்பவர் 

ப்ரமோதந: -- தம்மிடம் பக்தி செலுத்தும் அடியார்களின் ஆத்ம சாதனத்தில் பெரும் ஆநந்தத்தைப் பெருகச் செய்பவர் 

ஆநந்த: -- கபிலாவதாரம் போன்று ஆநந்தமே வடிவானவர் 

நந்தந: -- பிரம்மானந்தத்தைத் தருபவர் 

நந்த: -- நித்யவிபூதியில் வந்தடைந்த ஜீவர்களுக்கு அளவிலா ஆனந்தம் அளிப்பதால் பெருகும் ஆநந்தம் மிகுபவர் 

ஸத்யதர்ம: -- மாறாத நிலைத்த ஞானம், ஆனந்தமே நிலையான ஸ்வரூபமாகக் கொண்டு பக்தர்களின் உண்மையான பக்திக்கு என்றும் உறுதுணையாய் நிற்பவர் 

த்ரிவிக்ரம: -- த்ரி என்பதே மூன்று வேதங்களையும் குறிக்கும் ஒரே பெயராகவும் ரிஷிகள் கூறுவதின்படி வேதத்தின் ஊடு எங்கும் தாத்பர்யமாகப் பரவி நிற்பவர் 

மஹர்ஷி: கபிலாசார்ய:

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதக்ஞோ மேதிநீபதி: | 
த்ரிபதஸ்த்ரிதசாத்யக்ஷோ மஹாச்ருங்க: க்ருதாந்தக்ருத் || 


மஹர்ஷி: கபிலாசார்ய: -- வேதங்கள் அனைத்தையும் முழுவதும் உணர்ந்து தூய ஆத்ம ஞானத்தையே உபதேசித்த கபில மஹர்ஷி என்னும் ஆசார்யர் 

க்ருதக்ஞ: -- தம் ஆத்மாவைப் போல் பிறரையும் உணர்வதால் சினம் போன்று தோன்றினும் அருளே நிறைந்தவர் 

மேதிநீபதி: -- கபிலரின் உருவில் பூமியைக் காப்பாற்றும் அருள்வடிவம் அவர் 

த்ரிபத: - சித் அசித் ஈச்வரன் என்று தத்வத்ரயமாகத் தாம் ஆனவர்; பிரணவத்தின் மூன்று எழுத்துக்கள் ஆனவர் 

த்ரிதசாத்யக்ஷ: -- முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பவர்; மூன்று அவஸ்தைகளிலும் நிலைத்தவர் 

மஹாச்ருங்க: -- உலகத்தைத் தன் ஒரு கோட்டிடைக் கொண்டு காத்த கோலவராகர் 

க்ருதாந்தக்ருத் -- அழிவையும் அழித்த அழகு வராகர் 


மஹாவராஹோ கோவிந்த:

மஹாவராஹோ கோவிந்த: ஸுஷேண: கனகாங்கதீ | 
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தச்சக்ர கததர: || 


மஹாவராஹ: -- அமிழ்ந்துபோன பூமியைக் கோட்டிடைக் கொண்டெழுந்த பெரும்வராகர் 

கோவிந்த: -- கோ என்னும் பூமியை மீட்டதால் கோவிந்தர்; கோ என்னும் வாக்கிற்குத் தலைவர் ஆகையால் கோவிந்தர்; கோ என்னும் வேதாந்த சூத்ரங்களின் ஸாரதமமான பொருளாக இருப்பவர் ஆகையாலே கோவிந்தர். 

ஸுஷேண: -- தேவகணங்களையும், பக்தகோடிகளையும் என்றும் தம்மைப் புடைசூழ இருப்பவர் ஆகையாலே ஸுஷேணர் 

கனகாங்கதீ -- பொன்னாரணிகள் கணக்கில பூண்டவர் 

குஹ்ய: -- இரகசியங்கள் எனப்படும் உபநிஷதங்களால் விளக்கப்படுபவர்; இதய குகையில் என்றும் இருப்பவர் 

கபீர: -- உலக அறிவால் என்றும் அறியவியலாத, எல்லையற்ற, என்றும் உபநிஷதங்கள் மூலமாகவே அறியக் கூடிய கல்யாண குணங்களை உடையவர் 

கஹந: -- ஆழம் காண இயலாத் தன்மையர்; மூன்று அவஸ்தைகளிலும் அளவுபடாமல் இருப்பவர் 

குப்த: -- மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத இயல்பை உடையவர் 

சக்ரகதாதர: -- மனம், புத்தி ஆகியவற்றிற்கு எட்டாதவர் ஆயினும் மனம், புத்தி ஆகிய தத்துவங்களையே சக்ரம், கதை என்னும் ஆயுதங்களாகத் தரிப்பவர் 


வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஷ்ணோ

வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஷ்ணோ த்ருட: ஸங்கர்ஷணோSச்யுத: | 
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || 


வேதா: -- பிரபஞ்சம் அனைத்தையும் அளிக்கும் பிரான் 

ஸ்வாங்க: -- படைத்தளிப்பதில் பிற உதவி எதுவும் இன்றி அளிப்பவன் 

அஜித: -- ஸ்ரீவைகுண்டமென்னும் மாற்றத்திற்கு அப்பாற்பட்ட நித்யவிபூதியில் உறைபவன் 

க்ருஷ்ண: -- கண்ணன் என்னும் கருந்தெய்வம் 

த்ருட: -- பக்தர்கள் கண்டு பழகித் தொட்டுணரும்படி அவதார வடிவுகள் எடுப்பவன் 

ஸங்கர்ஷண: அச்யுத: -- சித் அசித் என்னும் அனைத்தையும் தன்னுள் அடக்குபவன்; எந்தப் பிரளயத்தும் மாறாமல் நிலைத்து இருப்பவன் 

வருண: -- பிரபஞ்சத்தை முழுவதும் தன்னுள் அடங்க மூடியிருக்கும் பெரும் தத்துவம் அவனே 

வாருண: -- வருணன் என்னும் ஜலதத்துவத்தின் மீது கருணை கொண்டு சயனித்திருப்பவன் 

வ்ருக்ஷ: -- பக்தர்களுக்கு ஞானமும், பக்தியும், முத்தியும் ஆகிய பழங்களையும், ஸம்ஸார தாபத்தைப் போக்கிப் பகவானிடம் ஈடுபாடு ஆகிய நிழலையும் தரும் வாசுதேவன் என்னும் பெரும் மரம் அவன் 

புஷ்கராக்ஷ: -- திருக்கண் நோக்கால் தெய்விக நன்மைகளைப் பொழிபவன் 

மஹாமநா: -- பக்தர்களுக்கு எத்தனை தான் அருளினும் போதாது என்று மேலும் மேலும் அருளும் பெரும் மனம் கொண்டவன் 

பகவாந் பகஹா நந்தீ

பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத: | 
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஷ்ணுர்கதிஸத்தம: || 


பகவாந் -- அனைத்து கல்யாண குணங்களும் முழுமையாக உடையவர் 

பகஹா -- ஐஸ்வர்யம், வீர்யம், ஸ்ரீ, ஞானம், வைராக்கியம், யசஸ் என்னும் ஆறு நன்மைகளும் பூர்ணமாக அடைந்திருப்பவர் 

நந்தீ -- ஆனந்தவடிவானவர்; சங்கர்ஷணனாக வடிவெடுத்தவர் 

வநமாலீ -- ஸூக்ஷ்ம பூததத்துவங்களை வனமாலை என்னும் மாலையாகத் தரித்தவர் 

ஹலாயுத: -- உழவின் தொடக்கத்தில் தொழப்படும் தெய்வமாகக் கலப்பையை உடையவர் 

ஆதித்ய: -- அதிதியின் மகனான வாமனர்; ஆ என்னும் அக்ஷரத்தால் நினைக்கத் தகுந்த பொருளாய் இருப்பவர் 

ஜ்யோதிராதித்ய: -- ஒளிகளிலெல்லாம் வேறுபட்ட சிறந்த பேரொளியாக இருக்கும் நாராயணர் 

ஸஹிஷ்ணு: -- யாஎ செய்த பிழையையும் பொறுப்பவர் 

கதிஸத்தம: -- முக்திக்கான உயர்ந்த கதியான ஆசைகளைத் துறத்தலைப் போதித்தவர் 


ஸுதந்வா கண்டபரசு:

ஸுதந்வா கண்டபரசுர் தாருணோ த்ரவிணப்ரத: | 
திவிஸ்ப்ருக்ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: || 


ஸுதந்வா -- அஹங்கார தத்வத்தை ஸுதந்வா என்னும் வில்லாகக் கொண்டவர் 

கண்டபரசு: -- எதிரிகளால் ஒரு நாளும் வெல்ல முடியாத பரசு (கோடரி) என்னும் ஆயுதம் தரித்தவர் 

தாருண: -- பக்தர்களுக்குத் தீங்கிழைக்கும் புறப்பகையையும், அகப்பகையையும் கடிபவர் 

த்ரவிணப்ரத: -- உயர்ந்த செல்வமான சாத்திரங்களையும், அதன் ஆழ்பொருட்களையும் ஒரு சேரத் தரும் வியாசராக அவதரித்தவர் 

திவிஸ்ப்ருக் -- மிகச்சிறந்த பிரம்ம வித்யையின் மூலமாகப் பரமபதத்தின் சிறந்த பொருளைத் தொட்டுக் காட்டுபவர் 

ஸர்வத்ருக்வ்யாஸ: -- பரம்பொருளின் ரூபம், குணம், விபவம், விபூதி ஆகிய அனைத்து தத்வார்த்தங்களையும் உள்ளபடிக் கண்டு, சாத்திரங்களை நன்கு விளக்கமுறப் பகுத்துத் தந்தவர் 

வாசஸ்பதி: அயோநிஜ: -- வாக் என்னும் வித்யைகளுக்குத் தலைவர்; தம் இயல்பினால் என்றும் பிறவாதவர். 

த்ரிஸாமா ஸாமக: ஸாம

த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக் | 
ஸந்யாஸக்ருச்சம: சாந்தோ நிஷ்டா சாந்தி: பராயணம் || 


த்ரிஸாமா -- மூன்றுவித ஸாமவேத மந்திரங்களால் துதிக்கப்படுபவர் 

ஸாமக: -- ஸாமகானத்தைப் பாடுபவர் 

ஸாம: -- ஸாமவேதமே வடிவாய் இருப்பவர்; தம்மைக் குறித்துப் பாடுவோரின் பாபங்களைப் போக்குபவர் 

நிர்வாணம் -- பாபங்களைப் போக்கி மயர்வற மதிநலம் தந்து உயர்ந்த ஆனந்தத்தைத் தருபவர் 

பேஷஜம் -- ஸம்ஸாரம் ஆகிய கொடிய நோய்க்கு உற்ற மருந்து அவர் 

பிஷக் -- ஸம்ஸாரம் என்னும் நோயை அகற்றும் பிரம்ம வித்யையை அளித்த மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் 

ஸந்யாஸக்ருத் -- பிரபுவிடம் அனைத்து பாரங்களையும் அர்ப்பணித்துவிடுதலாகிய பரந்யாஸம் என்னும் பிரபத்திக்குப் பெயரே ஸந்யாஸம் என்பது. அந்த ஸந்யாஸம் ஆகிய சரணாகதியைத் தந்தருள்பவர் 

சம: -- காம கோப தாபங்களை அடக்கி அமைதி எய்தும் வழியை போதிப்பவர் 

சாந்த: -- சாந்தமே வடிவாக இருப்பவர் 

நிஷ்டா -- சிறந்த யோகிகளின் ஆழ்ந்த நிஷ்டைக்குரிய வடிவம் கொண்டவர் 

சாந்தி: -- அவரிடமே மனத்தைச் செலுத்தி பக்தி புரிபவர்கள் அவரிடமே தாமும், தம்முடைய அனைத்தும் லயித்துவிடுவதான சாந்தியை அடைகிறார்கள் 

பராயணம் -- மிகச்சிறந்த இலட்சியமாகவும், அதை அடைவிக்கும் மிகச்சிறந்த வழியாகவும் தாமே இருப்பவர் 

சுபாங்க: சாந்தித: ஸ்ரஷ்டா

சுபாங்க: சாந்தித: ஸ்ரஷ்டா குமுத: குவலேசய: | 
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: || 


சுபாங்க: -- பக்தர்களும், யோகிகளும் தம்மிடம் ஈடுபட்டு மனம் லயிக்க வேண்டி உயர்ந்த மங்களமான வடிவங்களைத் தரிப்பவர் 

சாந்தித: -- பக்தி யோகத்தால் ஸாயுஜ்யமாகிய உயர்நிலை தந்து சாந்தி அருள்பவர் 

ஸ்ரஷ்டா -- பக்குவமாகிய ஜீவர்களுக்கு மோக்ஷம் தந்துவிட்டு மீண்டும் பக்குவமடையாத ஜீவர்கள் மோக்ஷத்திற்கான பக்குவம் பெறவேண்டி ஸ்ருஷ்டியைச் செய்பவர் 

குமுத: -- புவியைப் படைத்து அதில் உயிர்கள் பக்குவத்தால் பரிணமிப்பது கண்டு மகிழ்பவர் 

குவலேசய: -- தமக்குத் தாமே யஜமானர்கள் என்று நினைத்துப் பொல்லாவழிகளில் போகும் ஜீவர்களையும் அடக்கியாண்டு அவர்களை மோக்ஷவழியில் செலுத்துபவர் 

கோஹித: -- ஜீவர்கள் முத்திக்கு முனையவேண்டிய இடமாகிய பூமி என்னும் கோ என்பதற்கு என்றும் நன்மையே செய்பவர் 

கோபதி: -- புண்ணியங்களை அனுபவிக்கும் இடமாகிய சுவர்க்கம் என்னும் கோ என்பதற்கும் அவரே தலைவர் 

கோப்தா -- ஜீவர்கள் பக்குவம் அடைந்து முக்தி அடையவேண்டி ஸம்ஸாரச் சக்கரத்தை நன்கு காப்பவர் 

வ்ருஷபாக்க்ஷ: -- வ்ருஷப: என்னும் தர்மத்தின் நாபியாக (அக்ஷ: ) இருப்பவர் 

வ்ருஷப்ரிய: -- ஜீவர்கள் பின்பற்றும் அனைத்து தர்மங்களையும் கண்டு மகிழ்ந்து அதற்கான பலன்களைத் தருபவர் 


அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: | 
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 


அநிவர்த்தீ -- உலகப் பலன்களை விரும்பி அதற்காக முயற்சி செய்பவர்களை அந்தப் பலன்களை அடைந்து அவர்களே அது அல்பம், நிலையில்லாதது என்று உணரும்வரை அவர்களை அந்த வழியிலிருந்து திருப்புவதில்லை 

நிவ்ருத்தாத்மா -- உலகப் பலன்களை விரும்பாது பகவானுக்கே அர்ப்பணமாகக் கர்மங்கள் புரிவோரைத் தம் பக்தர்களாகக் கொண்டவர் 

ஸங்க்ஷேப்தா -- உலகியல் வழியான பிரவிருத்தி மார்க்கத்தில் போவோரின் ஞானம் சுருங்கிவிடும் வகையில் அமைத்திருப்பவர் 

க்ஷேமக்ருத் -- நிவ்ருத்தி மார்க்கமான மோக்ஷவழியில் போவோர்க்கு ஞானம் விரிவடையுமாறு அமைத்திருக்கின்றவர் 

சிவ: -- பிரவிருத்தியோ, நிவிருத்தியோ எந்த மார்க்கத்தில் போவோருக்கும் அவரவர்க்கு வேண்டிய வளத்தை அருள்பவர் 

ஸ்ரீவத்ஸவக்ஷா: -- சிவம் என்றால் மங்களம் என்பதற்கேற்பத் தமது மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மங்களமான மறுவுடையவர் 

ஸ்ரீவாஸ; -- அகல்கில்லேன் என்று திருமகள் விரும்பியுறையும் மார்பினர் 

ஸ்ரீபதி: -- திருமகள் கேள்வர் 

ஸ்ரீமதாம்வர: -- திரு நிறைந்த பெற்றியரில் தலை சிறந்தவர் 


ஸ்ரீத: ஸ்ரீச: ஸ்ரீநிவாஸ:

ஸ்ரீத: ஸ்ரீச: ஸ்ரீநிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவந: | 
ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்ரேய: ஸ்ரீமாந் லோகத்ரயாச்ரய: || 


ஸ்ரீத: - திருவனைத்தும் அருளும் திருமால் 

ஸ்ரீச: -- திருவுக்கும் திருவாகிய செல்வர் 

ஸ்ரீநிவாஸ: - அகல்கில்லேன் என்று திருமகள் மருவும் திருமால் 

ஸ்ரீநிதி: -- திரு பொருந்தி உறைகின்ற பிரான் 

ஸ்ரீவிபாவந: -- ஜீவர்களின் கர்மங்கள் பலவாய் இருப்பினும் அனைவரும் பகவானை அடையச் செய்யும் அன்னையின் தயையை ஏற்பவர் 

ஸ்ரீதர: -- அனைத்து ஜீவர்களுக்கும் உற்ற தாயான ஸ்ரீயை என்றும் தமது மார்பில் தரித்தவர் 

ஸ்ரீகர: -- துதித்தல், நினைத்தல், அர்ச்சனை செய்தல், பூஜித்தல் முதலிய பல வழிகளிலும் ஜீவர்களுக்கு மங்களம் பெருகும்படிச் செய்பவளான ஸ்ரீ என்றும் அனைத்து அவதாரங்களிலும் தம்மைத் தொடர்ந்து இருக்கும்படிச் செய்து கொள்பவர் 

ச்ரேய: ஸ்ரீமாந் -- அனைவருக்கும் உய்யவேண்டிப் புகலாக இருக்கும் அன்னையை என்றும் தன்னை விட்டுப் பிரியாத நித்ய யோகத்தை உடையவர் 

லோகத்ரயாச்ரய: -- விட்டுப் பிரியாத திருமகள் கேள்வனாகிய திருமாலை மூவுலகத்து உயிர்களும் சரணடைந்து உய்வு பெறும். 


ஸ்வக்ஷ: ஸ்வங்க: சதாநந்தோ

ஸ்வக்ஷ: ஸ்வங்க: சதாநந்தோ நந்திர்ஜ்யோதிர்கணேச்வர: | 
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திர்சிந்நஸம்சய: || 


ஸ்வக்ஷ: -- அருள்நோக்கில் அன்னையின் கண்களையே தம் கண்களாம் எனும்படிக் கொண்டவர் 

ஸ்வங்க: -- அகலகில்லேன் என்று அலர்மகள் விரும்பியுறைகின்ற திருமேனி திகழ்பவர் 

சதாநந்த: -- எப்பொழுதும் ஆனந்தம் பெருகும் திருமால் 

நந்தி: -- திருமகள் கேள்வனாய் என்றும் இணையிலா ஆநந்தம் கொண்டவர் 

ஜ்யோதி: கணேச்வர: -- சுடரும் அயர்வறும் அமரர் கணங்களின் அதிபதி 

விஜிதாத்மா -- பத்துடை அடியவர்க்கு எளியவர் 

விதேயாத்மா -- தூதுபோதல் போன்று பக்தர்கள் தம்மைக் கட்டளையிட்டு அதற்குப் பணிந்து நடத்தலைத் தம் மகிழ்வாய்க் கருதுபவர் 

ஸத்கீர்த்தி: -- அவருடைய எளிமைக் குணத்தால் தலைமைக் குணம் மிக்க புகழ் பெற இருப்பவர் 

சிந்நஸம்சய: -- அவர் அணுகுவதற்கு அரியரோ என்று பக்தர்கள் கொள்ளும் ஐயங்கள் எல்லாம் தம்முடைய எளிமைக் குணத்தால் நீங்கும்படி இருப்பவர். 

உதீர்ண: ஸர்வதச்சக்ஷு:

உதீர்ண: ஸர்வதச்சக்ஷுரநீச: சாச்வதஸ்ஸ்திர: | 
பூசயோ பூஷணோ பூதி: அசோக: சோகநாசந: || 


உதீர்ண: -- தம் எளிவரும் இயல்பினாலும், எல்லையில்லாக் கருணையினாலும் பக்தர்களுக்குக் கட்கண்ணால் காணவும் தம்மை வெளிப்படுத்துகிறார் 

ஸர்வதச்சக்ஷு: -- அவருடைய அளவிலாக் கருணையால் அனைவரும் காணலாம்படி கோவில்களில் அர்ச்சா மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். 

(மிக உயர்ந்த பரம்பொருளை எப்படி நாம் அணுகுவது என்ற பக்தர்களின் சந்தேகத்தை முற்றிலும் நீக்குகிறார் என்ற திருநாமமான சின்னஸம்சய: என்பதற்கு விளக்கம் இந்த நாமம். கண்ணுக்கு விஷயமாகும் ஒன்றில் ஐயங்களே ஏற்பட முடியாதன்றோ!) 

அநீச: -- அவ்வாறு கோவில்களில் காட்சி தரும்பொழுது தம்முடைய ஈச்வரத் தன்மையை முற்றிலும் அடக்கிக்கொண்டு பக்தர்களின் இஷ்டத்திற்கு முற்றிலும் சார்ந்தவராய்த் தம்மை வைத்துக் கொள்கிறார் 

சாச்வதஸ்ஸ்திர: -- கோவில்களிலும் அர்ச்சா மூர்த்திகளில் பக்தர்களைச் சார்ந்தவண்ணம் தம்மை அவர் நிறுத்திக் கொண்டாலும், நித்யவிபூதியில் என்ன ஸ்வரூபத்தோடு எழுந்தருளியுள்ளாரோ அந்த ஸ்வரூபத்தில் சிறிதும் மாற்றமின்றியே நிலையாக எழுந்தருளியுள்ளார் 

பூசய: -- தரிசனம் தந்து மறைந்துவிடும் சமாதிநிலை போலன்றி, கண்காணச் சிலகாலம் இருந்து பின் மறைந்துவிடும் அவதாரம் போலன்றி, இருப்பதையே காணமுடியாத பரத்துவ நிலை போலன்றி, இருந்தாலும் ஒளிந்துகொண்டிருக்கும் அந்தர்யாமி நிலை போலன்றி என்றென்றும் மாறாது, மறையாது காட்சிதரும் அர்ச்சாமூர்த்தியாக இருப்பவர். அதுவும் என்றும் உங்களை விட்டுப் பிரியேன் என்று சொல்வது போல் கோவில்களில் படுத்த திருக்கோலத்தில் காட்சி தருபவர் 

பூஷண: -- தம் அவதாரங்களால் புவிக்கு அணிகலனாய் இருப்பவர்; அர்ச்சா மூர்த்தியாய் எழுந்தருளிப் பக்தர்கள் தரும் அணிகளையும் ஏற்றுக் காட்சி தருபவர். 

பூதி: -- நிதியினைப் பவளத் தூணை என்றபடிப் பக்தர்களுக்கு அனைத்துவிதச் செல்வமாகவும் இருப்பவர் 

அசோக: -- கதியற்றவர்களைக் காப்பவர் ஆகையால் சோகமே அண்டாதவராய் இருக்கிறார் 

சோகநாசந: -- தம்மைக் காணாது துயருறுவோர் யாராயினும் அவர்தம் சோகத்தைத் தவறாமல் போக்கியருள்பவர் 

அர்சிஷ்மாநர்சித: கும்போ

அர்சிஷ்மாநர்சித: கும்போ விசுத்தாத்மா விசோதந: | 
அநிருத்தோSப்ரதிரத: ப்ரத்யும்நோSமிதவிக்ரம: || 


அர்சிஷ்மாந் -- பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் போது அவர்களால் கண்டு மகிழ அழகிய வடிவில் தோன்றுகிறார் 

அர்சித: -- பின்னானார் வணங்கும் சோதியாகக் கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார் 

கும்ப: -- காதல் உள்ளத்தோடு பக்தர்களால் பக்தி செய்யப்படுகிறார் 

விசுத்தாத்மா -- தூயதிலும் தூய ஆத்மாவாக இருப்பவர் 

விசோதந: -- கோயில்களில் எழுந்தருளி பக்தர்களின் பாபங்களைப் போக்கி அருள் செய்கிறார் 

அநிருத்த: -- அநிருத்தர் என்னும் வியூஹ மூர்த்தியாய்க் காட்சியளிக்கிறார் 

அப்ரதிரத: -- எதிர்த்து நிற்க எவரும் இல்லாதவர் 

ப்ரத்யும்ந: -- மயர்வற மதிநலம் அருள்பவர்; சதுர்வ்யூஹ மூர்த்திகளாக இருப்பவர் 

அமிதவிக்ரம: -- மூவடி கேட்டு ஈரடியால் உலகளந்த திருவிக்கிரமர் 


காலநேமிநிஹா சௌரி:

காலநேமிநிஹா சௌரி: சூர: சூரஜநேச்வர: | 
த்ரிலோகாத்மா த்ரிலோகேச: கேசவ: கேசிஹா ஹரி: || 


காலநேமிநிஹா -- அர்ச்சாவதாரமாகக் கோயிலில் எழுந்தருளிப் பக்தர்களின் காலதோஷத்தாலும், அறியாமையினாலும் ஏற்படும் தோஷங்களைப் போக்குகிறார் 

சூர: சௌரி: -- ராமரும் கிருஷ்ணருமாக வந்தவர் 

சூரஜநேச்வர: -- சூரர்களின் கூட்டங்களுக்குத் தலைவர் 

த்ரிலோகாத்மா -- பக்தர்களுக்கு அருள்பாலிக்க மூவுலகிலும் உள்ளுயிராய்ச் சஞ்சரிப்பவர் 

த்ரிலோகேச: -- மூவுலகங்களையும் நியமித்தபடி இருக்கும் ஈச்வரர் 

கேசவ: -- க என்னும் பிரம்மனையும், ஈச: என்னும் சிவனையும் தம் சரீரமாகவே கொண்டு காட்சி தருபவர் 

கேசிஹா -- கேசி என்னும் அசுரனைக் கொன்றவர் 

ஹரி: -- கோவர்த்தன மலையில் அழகிய வண்ணத்துடன் அமர்ந்து பக்தர்களின் பாபங்களைப் போக்கி அவர்களின் பூஜையை ஏற்று அருள்பவர் 

காமதேவ: காமபால:

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: | 
அநிர்தேச்யவபுர்விஷ்ணு: வீரோSநந்தோ தநஞ்ஜய: || 


காமதேவ: -- ஜீவர்களின் அனைத்துப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கும் தேவர் அவரே 

காமபால: -- ஜீவர்களை அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த நல்வழிகளில் காப்பாற்றிச் செலுத்துபவரும் அவரே 

காமீ -- நல்லதை விழைபவருக்கு அவர்கள் கேட்டதினும் மிக அதிகமாகத்ஹ் தருவதில் ஆசை மிக்கவர் 

காந்த: -- பூர்ண பக்தியுடன் தீவிரமாக விரும்பத் தக்கவர் அவரே 

க்ருதாகம: -- சக்திக்கெல்லாம் நாதர் ஆகையாலே அனைத்து ஆகமங்களுக்கும் அவரிடமிருந்தே ஆகும் 

அநிர்தேச்யவபு: -- குணைங்களைக் கடந்தவர் ஆகையாலே இவ்வாறு என்று அறியவொண்ணாதவர் 

விஷ்ணு: -- தமது சக்தியால் பிரபஞ்சம் அனைத்தையும் வியாபித்திருப்பவர் 

வீர: -- எல்லையற்ற சக்தியால் நினைத்துப் பார்க்கவும் ஒண்ணாத வேகத்தில் செய்லகளைச் செய்பவர் 

அநந்த: -- எல்லையற்ற ஆற்றலும் பெருமையும் மிக்கவர் 

தநஞ்ஜய: -- வாழ்க்கையில் அனைத்து ஜீவர்களும் ஈட்ட வேண்டிய ஒரே பெரும் நிதி அவரே 

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தந: | 
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மக்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || 


ப்ரஹ்மண்ய: -- ப்ரஹ்மா என்னும் சொல்லின் பொருளாக வருவன வேதம், தவம், ஞானம், ஜீவாத்மா, பிரகிருதி போன்று பலபொருள் உடைய சொல் ப்ரஹ்மா என்பது. இவை அத்தனைக்கும் உள்ளிருந்து நன்மை செய்பவர் ஆகையாலே அவர் ப்ரஹ்மண்யர் எனப்படுகிறார். 

ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா -- நான்முகனுக்குள் அந்தர்யாமியாக இருந்து இவையனைத்தையும் படைத்தான். 

ப்ரஹ்ம: -- உயர்வற உயர்நலம் உடையவர்; மயர்வற மதிநலம் தருபவர் 

ப்ரஹ்மவிவர்த்தந: -- ப்ரஹ்மா என்னும் பதத்தால் குறிக்கப்படும் வேதம், தவம், ஞானம் ஆகியவற்றை மேலும் மேலும் வளர்ப்பவர் 

ப்ரஹ்மவித் -- வேதங்கள் அநந்தம் ஆகையால் அவை அனைத்தையும் அறிந்தவர் அவர் ஒருவரே 

ப்ராஹ்மண: -- வேதப் பொருள் விரிக்க வேண்டித் தத்தாத்ரேயராக அவதாரம் செய்தவர் 

ப்ரஹ்மீ -- அறியப்பட வேண்டியதும், அறிவதற்கான வழியும் அவரே 

ப்ரஹ்மக்ஞ: -- வேதத்தின் அர்த்தம் தாமாகவே இருப்பதால் அவரே உள்ளபடி ப்ரம்மஞானம் ஆனவர் 

ப்ராஹ்மணப்ரிய: -- ப்ரம்மஞானம் அடைந்த ஞானிகளுக்குப் பிரியமானவர்; அத்தகைய ஞானிகளிடத்துத் தாமும் எல்லையற்ற பிரியம் கொண்டவர். 


மஹாக்ரமோ மஹாகர்மா

மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: | 
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயக்ஞோ மஹாஹவி: || 


மஹாக்ரம: -- உலகியலில் மூழ்கி இருக்கும் ஜீவர்களைப் படிப்படியாக ஆத்ம குணங்களை உண்டாக்கிப் பகவத் பக்தியில் ஈடுபாட்டை ஏற்படுத்தி உயர்ந்த முக்திக்கு அழைத்துச் செல்லும் பெரிய கிரமத்தில் அருள் செய்பவர் 

மஹாகர்ம: -- உலகியலில் மூழ்கிக் கடவுள் என்ற விருப்பமே இல்லாமல் இருக்கும் ஜீவனை மிக உயர்ந்த ஞான நிலையான முக்திக்கு அழைத்துச் செல்லும் மகத்தான செயலைச் செய்பவர் 

மஹாதேஜ: -- தாமே மிக உன்னதமான பூர்ண ஞானத்தின் ஒளியாக இருப்பதால் ஜீவனின் அஞ்ஞான இருளைப் போக்கி அருள்பவர் 

மஹோரக: -- இந்த மகத்தான கர்மத்தை அவர் ஜீவனின் இதயத்தில் ஆதிமுதலே வீற்றிருந்து பரிபாகம் வரச்செய்கிறார் 

மஹாக்ரது: -- கிரது என்னும் யக்ஞத்திற்கெல்லாம் யக்ஞம் என்று கொண்டாடப்படும் ஜபம் ஆகிய யக்ஞத்தால் திருப்தியடைபவர் 

மஹாயஜ்வா -- ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகிய பெரும் வேள்வியைத் தாமே விடாது இயற்றிக்கொண்டிருப்பவர் 

மஹாயக்ஞ: -- சரணாகத உள்ளத்தோடு கைகூப்பும் செய்கையைக் கூடப் பெரும் யக்ஞமாகக் கருதுபவர் 

மஹாஹவி: -- சரணாகதி என்பதில் ஜீவன் தன்னையே பரமாத்மாவிற்கு ஹவிஸாக அர்ப்பணித்து விடுவதால் அந்த மஹா ஹவிஸை ஏற்பவர் அவரே 

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துத: ஸ்தோதா ரணப்ரிய: | 
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்திரநாமய: || 


ஸ்தவ்ய: -- வாக்கினால் செய்யப்படும் கைங்கரியமான துதி என்பதற்கு முற்றிலும், எக்காலத்தும், மாறாத நல்ல இலக்கு அவரே 

ஸ்தவப்ரிய: -- பக்தர்களின் உண்மையான உள்ளத்தைப் பார்க்கின்ற காரணத்தால் எவ்வளவு எளியோர் துதித்தாலும் அதில் உவப்பு கொள்கின்றவர் 

ஸ்தோத்ரம் -- உலகில் கருத்திழந்து உலழும் ஜீவர்களுக்குத் தம்மைத் துதிக்கும் எண்ணத்தையும் தந்து அந்தத் துதியாகவும் தாமே இருக்கிறார் 

ஸ்துத: -- என்றென்றும் அவரே துதிகப்படுகின்றவராக இருக்கின்றார் 

ஸ்தோதா -- தம்மைத் துதிப்பவரை உலகில் துதிகப்படுகின்றவராகவும், மெய்ப்புகழ் வாய்ந்தவராகவும் ஆக்குகின்றார் 

ரணப்ரிய: -- உலகில் நன்மைக்கு எதிரான தீமையையும், பக்தர்களுக்குத் தீமை புரிபவரையும் எதிர்க்கும் போரைத் துதியைப் போலவே என்றும் விரும்புகின்றார் 

பூர்ண: -- தாம் என்றும் நிறைந்தவரும், எதையும் வேண்டாதவருமாக இருந்தாலும் பக்தர்கள் உள்ளம் உருகிச் செய்யும் துதியை விரும்புகிறார் 

பூரயிதா -- அவ்வாறு பூர்ணராக இருந்தாலும் பக்தர்களின் துதிகளை விரும்பும் காரணம் அவர்களுடைய பிரார்த்தனைகளை பூர்த்தி ஆக்குவதற்கேயாம் 

புண்ய: -- பாபிகளும் அவரைத் துதிப்பதால் பாபம் நீங்கிப் புண்யம் வாய்ந்தவராய் ஆகின்றனர் 

புண்யகீர்த்தி: -- பாபத்தை நீக்கிப் புண்யத்தைத் தரும் கீர்த்தியுடையவை அவருடைய நாமங்கள் 

அநாமய: -- மிகக் கொடிய வியாதியானதும், ஞானத்தையே போக்கிவிடுவதுமான உலகியல் என்பதையே நீக்குவது நாவால் அவருடைய திருநாமத்தைத் தீண்டலே ஆகும் 

மநோஜவஸ் தீர்த்தகரோ

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: | 
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்வஸுமநா ஹவி: || 


மநோஜவ: -- மனத்தினும் வேகம் மிக்குப் பக்தர்களுக்கு அருள்செய்பவர் 

தீர்த்தகர: -- உயர்ந்த தீர்த்தங்கள் என்று சொல்லப்படும் சாத்திரங்கள், வித்யைகள் என்று அனைத்தையும் ஜீவர்கள் தூய்மை பெறவேண்டி அருள்செய்திருப்பவர் 

வஸுரேத: -- ஒளிதிகழ் பிறப்பாய் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர் 

வஸுப்ரத: -- வஸுதேவர்க்கும், தேவகிக்கும் வரமாய் வந்து அவதரித்தவர்; இவ்வுலகத்திற்கான நன்மையைத் தருபவர் 

வஸுப்ரத: -- அழியாத கீர்த்தியைப் பெற்றோர்க்குத் தந்து பிறந்தவர்; மோக்ஷம் என்னும் அவ்வுலகச் சிறப்பையும் தருபவர் அவரே 

வாஸுதேவ: -- பாற்கடல் விட்டு வசுதேவர்க்கு நன்மகவாய் அவதரித்தவர் 

வஸு: -- ஜீவர்களின் அழைப்புக் குரல் கேட்க என்றும் பாற்கடலில் பள்ளிகொள்பவர்; ஜீவர்களின் இதயத்தில் என்றும் இருப்பவர் 

வஸுமநா: -- திருவுக்கும் திருவாகிய செல்வராகப் பாற்கடலில் இருப்பினும் என்றும் வஸுதேவரை மனத்தில் நினைப்பவர் ஆகையால் வஸுமநா: 

ஹவி: -- ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம ஹவி: என்று சுருதி வசனத்திற்கேற்ப வஸுதேவரும், தேவகியும் தாம் பெற்றும் பேணி வளர்க்கும் பேற்றைத் துறந்து நந்தகோபர்க்கும், யசோதைக்கும் உரியவராய் ஹவிஸாக அளிக்க வளர்ந்தவர் 


ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா

ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: | 
சூரஸேநோ யதுச்ரேஷ்ட: ஸந்நிவாஸ: ஸுயாமுன: || 


ஸத்கதி: -- மயர்வற மதிநலம் அளித்து அடியார்களை உயர்ந்த பேற்றை அடையச் செய்பவர் 

ஸத்க்ருதி: -- பக்தர்கள் நினைத்து மகிழ்ந்து உய்வடைய வேண்டி அவதாரங்கள் எடுத்துப் பல தெய்விகச் செயல்களைச் செய்பவர் 

ஸத்தா -- அனைத்து உயிர்களுக்கும் உயிர்நிலையாயும், சாதுக்களுக்குத் தாங்கி நிற்கும் உயிராகவும் இருப்பவர் 

ஸத்பூதி: -- பக்தர்களுக்குத் தாயாய்த் தந்தையாய் உறவாய்ச் சுற்றமாய் நட்பாய் எல்லாமும் ஆனவர் 

ஸத்பராயண: -- தெளிந்த ஞானிகளுக்கு உற்ற பெரும் புகலாய் இருப்பவர் 

சூரஸேந: -- தீமையை அகற்றி நன்மையை நிலைநாட்ட தீரர்களைத் தம்மைச் சூழ உடையவர் 

யதுச்ரேஷ்ட: -- யதுகுலத்தில் உலகுய்யப் பிறந்த ஸ்ரீகிருஷ்ணர் 

ஸந்நிவாஸ: -- ஞானியர்க்கு என்றும் உற்ற நிலையாய் இருப்பவர் 

ஸுயாமுன: -- யமுனை நதிக்கரையில் விண்ணகத்தை மண்ணகத்தில் நட்டது போல் திகழச் செய்தவர் 


பூதாவாஸோ வாஸுதேவ:

பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸுநிலயோSநல: | 
தர்பஹா தர்பதோSத்ருப்தோ துர்தரோSதாபராஜித: || 


பூதாவாஸ: -- தம்மிடத்திலேயே அனைத்து உயிர்களும் இருந்து வாழ்ந்து இலயிக்கும்படியாக இருப்பவர் 

வாஸுதேவ: -- அனைத்து உலகையும் தம் மாயையால் மூடியிருப்பவர்; விசித்ரமான மாயையால் வஸுதேவர்க்கு நன்மகவாய்த் தோன்றியவர் 

ஸார்வாஸுநிலய: -- அனைத்துப் பிராணன்களுக்கும் உயிராய் இருப்பவர்; கோகுலத்தில் ஆயர்களால் தங்கள் உயிராகக் கொண்டு அன்பு செலுத்தப்பட்டவர் 

அநல: -- பக்தர்களுக்கு அருள்வதில் போதும் என்ற மனம் ஏற்படாதவர் 

தர்பஹா -- தேவர்களும் தங்களைத் தாங்களே தருக்கிக் கொண்டு வரும்பொழுது அதை அடக்குபவர் 

தர்பத: -- பக்தர்களுக்கு அன்பின் உரிமையால் ஏற்படும் கர்வத்தைக் கண்டு இரசிப்பவர் 

த்ருப்த: -- உலகியலில் மூழ்கிப் போகும் ஒரு ஜீவன் அதனின்றும் விலகித் தன்னை வந்து சரணடையும் போது அதில் மிகவும் மகிழ்ந்து பெருமிதமும், கர்வமும் கொள்பவர் 

துர்தர: -- மனம் வாக்குக்கு எட்டா மறைபொருளாய் இருந்தாலும் பக்தியுடன் தியானிக்கும் யோகியர்க்குத் தம்மைத் தியானத்தில் உணரும்படி வைப்பவர்; ஆயர்பாடியில் யார் கையிலும் சிக்காத குழந்தையாக லீலைகள் புரிந்தாலும் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயர் 

அபராஜித: - தம்மைப் பக்தியுடன் போற்றும் அடியார்க்கு உட்பகையாலோ வெளிப்பகையாலோ வெல்லமுடியாத நிலையைத் தருபவர் 


விச்வமூர்த்திர் மஹாமூர்த்தி:

விச்வமூர்த்திர் மஹாமூர்த்தி: தீப்தமூர்த்திரமூர்த்திமாந் | 
அநேகமூர்த்திரவ்யக்த: சதமூர்த்தி: சதாநந: || 


விச்வமூர்த்தி: -- அவர் ஏன் அபராஜிதர் என்றால், எதனாலும் எவராலும் வெல்லப்பட முடியாதவர் என்றால், அவர் விச்வம் அனைத்தையும் தம் சரீரமாகக் கொண்டிருக்கிறார். 

மஹாமூர்த்தி: -- விச்வம் அனைத்தையும் தம் சரீரத்தில் காணுமாறு அர்ஜுனனுக்குக் காட்சியளித்த விச்வரூபர் 

தீப்தமூர்த்தி: -- ஒளிகொண்டு திகழும் அத்தனை வடிவும் சிறப்பும் அவரிடமிருந்தே தம் ஒளியைப் பெறுகின்றன என்னும் அளவிற்கு ஒளியாம் வடிவினர் 

அமூர்த்திமாந் -- அவரன்றித் தம் அளவில் வடிவின்றி, அசித் சித் என்னும் வேறுபாடு அறியவொண்ணாது கலசிக் கிடக்கும் உயிர்களையும், பிரகிருதியையும் தம் சரீரமாக உடையவர் 

அநேகமூர்த்தி: -- உலகின் நன்மைக்காகப் பல அவதாரங்களிலும் பலவித வடிவங்களைத் தரிக்கின்றார் 

அவ்யக்த: -- எத்தனை வடிவம் தரிப்பினும், விச்வ ரூபம் காட்டினும் அத்தனையும் மனித வடிவில் மறைந்திருக்கக் காட்சி தருபவர் 

சதமூர்த்தி: -- நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்கள் உடையவர். (திவ்ய தேசங்கள் நூற்றியெட்டிலும் திகழும் வடிவினர் என்றும் பொருள் கொள்ளலாம் அன்றோ!) 

சதாநந: -- நூற்றுக்கணக்கான முகங்கள் கொண்டவர் 


ஏகோ நைக: ஸவ: க:

ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத் பதமநுத்தமம் | 
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 


ஏக: -- ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஒருவன் 

நைக: -- அவன் ஒருவனே எனினும் பல்கிய உயிர்களிலும் பொருட்களிலும் உள்ளே உள்ளுயிராய்ப் பரந்து நிற்பவனும் அவனே 

ஸவ: -- மானிடமாய் வந்து ஸ்ரீகிருஷ்ணனாய்க் குழந்தைகளும் உரிமை கொண்டாடத் திரிந்தவன் அவனே; உடல்மிசை உயிரென உயிர்கள் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் என்றும் இருப்பவனும் அவனே (ஸ;, வ: ) 

க: -- ஒளிவளர் ஆனந்தமாய் எங்கும் நிறைந்தவன் (அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி) 

கிம் -- எவனைத் தேட வேண்டும், எவனையே அறிய வேண்டும் என்று மறை புகலுமோ அவன் 

யத் -- ஜீவர்கள் அஞ்ஞான இருளில் முழுகிக் கிடந்த காலத்தே தொடங்கி அவர்கள் முக்திக்காக எவன் முனைந்தவண்னம் இருக்கின்றானோ அவன் 

தத் -- மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன் 

பதம் அநுத்தமம் -- உயர்வற உயர்நலம் என்றும், பரமம் பதம் என்றும் மறைகள் புகலும் மிக்குயர் பேறு அவன் 

லோகபந்து: -- உயிர்களுக்கு உறவுகள் அனைத்துமாய் ஆனவன் 

லோகநாத: -- உயிர்களை உடையோனும், உயிர்களை வழிநடத்துவோனும் அவனே 

மாதவ: -- தண்ணளி பூண்டு உயிர்களுக்கு இரங்கும் திருவின் மணாளன் 

பக்தவத்ஸல: -- தானீன்ற கன்றின் அழுக்குகக்கும் பசு போன்று ஜீவர்கள் பால் தாய்மை மிக்கவன் 


ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கச் சந்தநாங்கதீ | 
வீரஹா விஷம: சூன்யோ க்ருதாசீரசலச்சல: || 


ஸுவர்ணவர்ண: -- பொன்னெழில் பூக்கும் நிறத்தன் 

ஹேமாங்க: -- பொன்னொளிரும் திருமேனியன் 

வராங்க: -- திவ்விய மங்கள வடிவுடையவன் 

சந்தநாங்கதீ -- பொன்னெழில் அணிகள் பூண்டவன் 

வீரஹா -- நன்மைக்கு எதிரான அசுரர்கள் எத்தனை வலிமையரேனும் அவர்களை அழிப்பவன் 

விஷம: -- உற்றார்க்குத் தண்ணளி காட்டிச் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் 

சூன்ய: -- நிர்விசேஷன் ஆகையாலே சூன்யன் (சங்கரர்); தோஷம் சிறிதுமற்ற குணபூர்ணனாகிய ஸ்ரீகிருஷ்ணன் 

க்ருதாசீ -- ஆயர்பாடியில் வெண்ணையை விரும்பியுண்பவன் 

அசல: -- சிறிதும் மாறாத பெருங்குணத்தன் 

சல: -- பக்தர்களுக்கு ஒரு கெடுதல் என்றால் எதுவும் பொருட்டில்லை என்று வேகப்படுபவன் 


அமாநீ மாநதோ மாந்யோ

அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்ருத் | 
ஸுமேதா மேதஜோ தந்ய: ஸத்யமேதா தராதர: || 


அமாநீ -- உயிர்களுக்கு உள்ளுயிராய் அவரே இருப்பதால் தம் சரீரமாக இருக்கும் ஜீவர்களின் துயர் துடைக்க மானாபிமானம் பார்க்காமல் தம் அக்கறையாகக் கொண்டு அருள்பவர் 

மாநத: -- தம் பக்தர்களை, தம்மை நாடி வந்த ஜீவர்களை மிகவும் கௌரவிப்பவர் 

மாந்ய: -- பக்தர்கள் தம்மிடம் உரிமை எடுத்துக்கொண்டு தம்மிடம் சொல்வதையும், அவர்களுக்காகத் தாம் இறங்கி வந்து செய்யும் எளிமையான இயல்பையும் தம்முடைய பெருமையாகக் கருதுபவர் 

லோகஸ்வாமீ -- அவ்வாறு எளிவரும் இயல்பினராகப் பக்தர்களின் வேண்டுக்கோளை நிறைவேற்றச் சுலபராய் வருபவர் யார் எனில் அனைத்து உலகங்களுக்கும் உடைமையாளரும், படைத்தவரும், தலைவரும் ஆவார். 

த்ரிலோகத்ருத் -- அவர் ஏன் இவ்வாறு இவ்வளவு எளிமையாக இறங்கி வரவேண்டும் என்றால் அவர் வெறுமனே புறத்தே அனைத்துக்கும் சொந்தக்காரராக இல்லாமல் மூவுலகத்தையும் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் நின்று தாங்குவதால் அன்றோ! 

ஸுமேதா -- அவர் எப்பொழுதும் தம் பக்தர்களிடம் கனிந்த உள்ளம் கொண்டவராக இருக்கிறார் 

மேதஜ: -- தயையின் காரணமாகவே அவர் பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, அவர்களின் தீவிர வேண்டுதல் என்னும் வேள்வியின் பயனாகப் புவியில் அவதாரம் எடுக்கிறார். 

தந்ய: -- அவ்வாறு அவதாரம் எடுக்கும் பொழுது இன்னாரின் குழந்தை என்று சொல்லப்படுவதை பெரும் பேறு போன்று கருதுகிறார் 

ஸத்யமேத: -- அவ்வாறு உறவினால் உரிமை கொண்டாடுவதை ஓர் அலங்காரமாகக் கருதாமல் ஆர்வத்துடன் சத்யமாகவே அவ்வாறு கருதுபவர் ஆகிறார் 

தராதர: -- உலகைத் தாங்குவது மட்டுமின்றி அவதாரம் எடுக்கும் காலங்களில் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பல்லுயிர்களைக் காப்பது போன்ற அதிசயச் செயல்களைச் செய்கிறார் 


தேஜோ வ்ருஷோ த்யுதிதர:

தேஜோவ்ருஷோ த்யுதிதர: ஸர்வசஸ்த்ரப்ருதாம் வர: | 
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகச்ருங்கோ கதாக்ரஜ: || 


தேஜோவ்ருஷ: -- காரணமற்றுப் பெருகும் அவருடைய அருளால் அடியார்களைக் காத்துப் பல நன்மைகளைப் பொழிகின்றார் 

த்யுதிதர: -- மானுட அதீதமான பொலிவும் கீர்த்தியும் தம்மிடத்தில் திகழ இருப்பவர் 

ஸர்வசஸ்த்ரப்ருதாம் வர: -- பல்வித ஆயுதங்களைக் கையாளும் சூரர்களில் மிகச் சிறந்தவர் 

ப்ரக்ரஹ: -- புறத்தில் பார்த்தால் அர்ஜுனனின் தேருக்குச் சாரதி போன்று இருந்தாலும் அர்ஜுனன் உள்ளிட்ட உயிர்களின் உள்ளே அந்தர்யாமியாக நின்று நியமிப்பவர் அவரே 

நிக்ரஹ: -- தமது சங்கல்பத்தாலேயே எதிரிகளை அழிக்கவல்லவராய் இருக்கிறார் 

வ்யக்ர: -- அடியார்களின் குறை முடிக்கத் தாமே முனைந்து பொருபவராகவும் இருக்கிறார் 

நைகச்ருங்க: -- பல வழிகளிலும் பாண்டவர்க்குத் துணையாக இருப்பவர்; நான்கு கொம்புகள் உள்ள வேதமாகிய விருஷபத்தின் வடிவாய் இருப்பவர் 

கதாக்ரஜ: -- நிகதம் என்னும் மந்திரங்களின் முன்னால் தோன்றுபவர்; கதனுக்கு முன் பிறந்தவர் 

சதுர்மூர்த்திர் சதுர்பாஹு:

சதுர்மூர்த்திர்சதுர்பாஹுச் சதுர்வ்யூஹச் சதுர்கதி: | 
சதுராத்மா சதுர்பாவச்சதுர்வேத விதேகபாத் || 


சதுர்மூர்த்தி: -- விராட், ஸூத்ராத்மா, அவ்யாக்ருதர், துரீயர் என்னும் நான்கு வடிவினர்; வாஸுதேவனாகிய தாம், பலராமர், ருக்மிணியின் புதல்வராகிய ப்ரத்யும்னர், ப்ரத்யும்னரின் குமாரனாகிய அரவிந்தன் என்ற நான்கு பேர்களால் நான்கு வியூஹங்களை உணர்த்தி நிற்பவர்; வெள்ளை, சிகப்பு, மஞ்சள், கருநீலம் என்னும் வண்ணங்களால் சுட்டப்படுபவர் 

சதுர்பாஹு: -- நான்கு தோளும் திகழ அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர் 

சதுர்வ்யூஹ: -- நான்கு வ்யூஹ அவதாரங்களாகத் திகழ்பவர் 

சதுர்கதி: -- நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பதற்கான நான்கு வழிகளாகவும், இந்த்ரபதம், ப்ரம்மாபதம், கைவல்யம், மோக்ஷம் என்னும் நான்கு விதப் பலன்களை உத்தேசித்து அமையும் வழிகள் நான்காகவும் தாமே அமைந்தவர் 

சதுராத்மா -- விழிப்பு, கனவு, துயில், துரியம் என்னும் நான்கு நிலைகளிலும் ஸ்தூலமாகவும், சூக்ஷ்மமாகவும் உள்ளுயிராய் இருப்பவர் 

சதுர்பாவ: -- நான்கு வியூஹங்களில் நான்கு வித பாவங்களோடு உலகைக் காப்பவர் 

சதுர்வேதவித் -- நான்கு வேதங்களின் தாத்பர்யமாகவும் இருப்பவர் 

ஏகபாத் -- ஜீவர்களால் சரணடையத் தக்க ஒரே புகலாக இருப்பவர் 

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: | 
துர்லபோ துர்கமோ துர்க்கோ துராவாஸோ துராரிஹா || 


ஸமாவர்த்த: -- மீண்டும் மீண்டும் நன்மையை நிலைநாட்ட வேண்டியும், பக்தர்களின் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யவும் அவதாரங்களை நிகழ்த்துபவர் 

நிவ்ருத்தாத்மா -- அவதாரம் செய்யும் பொழுது அவருடைய மனம் முழுவதும் நிவ்ருத்தியிலேயே நிலைநிற்கிறது என்பதால் நிவ்ருத்தாத்மா 

துர்ஜய: -- தம் முயற்சியால் யாவருக்கும் காண ஒண்ணா இயல்பினர் 

துரதிக்ரம: -- ஆயினும் அவருடைய பாதங்களைச் சரணடைந்து பற்றிக்கொண்டால் அந்தப் பக்தியைக் கடக்க அவராலும் இயலாத தன்மையர் 

துர்லப: -- தூய பக்தியாலன்றி வேறு எதனாலும் அடைய ஒண்ணாதவர் 

துர்கம: -- மேதையாலோ, பலவித அறிவுகளாலோ, தவத்தாலோ ஒரு நாளும் அடைய முடியாதவர் 

துர்க்க: -- அறியாமையால் மூடுண்ட மதியினரால் ஒரு நாளும் அண்ட முடியாதவர் 

துராவாஸ: -- யோகிகளின் இதயத்தில் திகழ்பவர்; யாராலும் எட்டவொண்ணாத பரமபதத்தைத் தம் இடமாகக் கொண்டவர் 

துராரிஹா -- மிகக் கொடிய பகை அசுரசக்திகளையும் அழிப்பவர் (அதனால் அவரால்தான் அந்தப் பரமபதத்தை அருளமுடியும்) 


ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: | 
துர்லபோ துர்கமோ துர்க்கோ துராவாஸோ துராரிஹா || 


ஸமாவர்த்த: -- மீண்டும் மீண்டும் நன்மையை நிலைநாட்ட வேண்டியும், பக்தர்களின் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யவும் அவதாரங்களை நிகழ்த்துபவர் 

நிவ்ருத்தாத்மா -- அவதாரம் செய்யும் பொழுது அவருடைய மனம் முழுவதும் நிவ்ருத்தியிலேயே நிலைநிற்கிறது என்பதால் நிவ்ருத்தாத்மா 

துர்ஜய: -- தம் முயற்சியால் யாவருக்கும் காண ஒண்ணா இயல்பினர் 

துரதிக்ரம: -- ஆயினும் அவருடைய பாதங்களைச் சரணடைந்து பற்றிக்கொண்டால் அந்தப் பக்தியைக் கடக்க அவராலும் இயலாத தன்மையர் 

துர்லப: -- தூய பக்தியாலன்றி வேறு எதனாலும் அடைய ஒண்ணாதவர் 

துர்கம: -- மேதையாலோ, பலவித அறிவுகளாலோ, தவத்தாலோ ஒரு நாளும் அடைய முடியாதவர் 

துர்க்க: -- அறியாமையால் மூடுண்ட மதியினரால் ஒரு நாளும் அண்ட முடியாதவர் 

துராவாஸ: -- யோகிகளின் இதயத்தில் திகழ்பவர்; யாராலும் எட்டவொண்ணாத பரமபதத்தைத் தம் இடமாகக் கொண்டவர் 

துராரிஹா -- மிகக் கொடிய பகை அசுரசக்திகளையும் அழிப்பவர் (அதனால் அவரால்தான் அந்தப் பரமபதத்தை அருளமுடியும்) 

சுபாங்கோ லோகஸாரங்க:

சுபாங்கோ லோகஸாரங்கஸ் ஸுதந்துஸ்தந்துவர்த்தந :|
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம :|| 


சுபாங்க: -- தியானத்தில் மனம் தானாகக் குவிந்து லயிக்கும் படியான மிகவும் சுபமயமான அங்கங்களை உடையவர் என்பதால் சுபாங்கர் 

லோகஸாரங்க: - லோகஸார: என்று பிரணவத்திற்குப் பெயர். பிரணவத்தினால் அடையப்படுபவராக இருப்பதால் ஸ்ரீவிஷ்ணுவானவர் லோகஸாரங்க: என்று சொல்லப்படுகிறார். 

ஸுதந்து: - சிலந்தி எப்படித் தன் உடம்பிலிருந்தே நூலை உண்டாக்கி வலை பின்னுமோ அப்படி அழகிய நூல் வலையாகிய பிரபஞ்சத்தைத் தம்மிலிருந்து உண்டாக்கிப் பின்னுபவர் ஆகையாலே ஸுதந்து: என்று அழைக்கப்படுகிறார் 

தந்து வர்த்தன: - சிலந்தி நூலை மேலும் மேலும் உண்டாக்கும், தன்னுள் இழுத்தும் கொள்ளும். அது போல் இந்தப் பிரபஞ்ச வலையை வளர்க்கவும், பின்னர் தன்னுள் ஒடுக்கவும் வல்லவர் ஆகையால் அவர் தந்து வர்த்தனர் ஆகிறார் 

இந்த்ர கர்மா - இவ்வாறு ஒவ்வொன்றும் பரஸ்பரம் தொடர்பில் இருக்கும் வண்ணம், வலை போல் பின்னுவதால் அவர் இந்த்ர ஜாலம் ஆகிய (ஜாலம் - வலை) கர்மாவைச் செய்பவர் என்பதால் இந்த்ர கர்மா என்று சொல்லப்படுகிறார் 

மஹாகர்மா - உலகக் கர்மங்கள் அனைத்தும் பஞ்ச மஹா பூதங்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்தப் பஞ்ச மஹா பூதங்களையே சிருட்டி செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீவிஷ்ணுவானவர் மஹாகர்மா என்று அழைக்கப்படுகிறார் 

க்ருதகர்மா - இவ்வாறு கர்மங்கள் செய்வதால் அவருக்கு ஏதோ புதிதாகப் பயன் உண்டு என்று இல்லை. ஏனெனில் அனைத்து கர்மங்களாலும் ஆக வேண்டிய பயன் அவரிடத்தில் பூரணமாக எப்பொழுதும் இருக்கிறது. எனவே அவர் க்ருதகர்மா எனப்படுகிறார். 

க்ருதாகம: - மனிதர்கள் பலவித கர்ம வினைப் பயன்களில் இழுப்புண்டு பின்னர் தம் விடுதலைக்கு ஏங்குங்கால், அவரை அடைதலாகிய வீடு பேறு என்பதை அடைவிக்கும் வழிகளைக் கூறுவது ஆகமம். அனைத்து ஆகமங்களையும் அவரவர் பரிபக்குவத்திற்குத் தக்க வண்ணம் செய்தவர் ஸ்ரீவிஷ்ணு ஆகையாலே அ

உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ

உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: | 
அர்கோ வாஜஸநிச் ச்ருங்கீ ஜயந்த: ஸர்வ விஜ்ஜயீ || 


உத்பவ: - அவருடைய பிறப்புகள் கர்மத்தின் காரணமாக இன்றி, கருணையின் காரணமாக இருப்பதால் மிகச் சிறந்தவை. அவ்வாறு சிறந்த அவதாரங்களைச் செய்பவர் ஆகையாலே அவர் உத்பவர் ஆகிறார் 

ஸுந்தர: - மன்னுயிர்க்காக, மன்னுயிர் காக்க அவதரிக்கும் கருணை மிகுந்த ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர், பேரழகு மயமாகவும் திகழ்கிறார் என்பதால் அவருடைய திருநாமம் ஸுந்தர: என்று சொல்லப்படுகிறது 

ஸுந்த: - பேரழகு என்பதனோடு சேர்த்து பெருந் தயையே வடிவானவர் ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதால் அவர் ஸுந்த: என்று சொல்லப் படுகிறார் 

ரத்ந நாப: - தயையே உருவானவர் ஆகையால் உலகத்தைப் படைத்து, உயிர்கள் வீடு பேற்றிற்கு முன்னேறுவதற்காக, முதன்முன்னம் உலகைப் படைக்க என்று பிரமனைப் படைத்து, அதற்கு முன்னர் பிரமனுக்கு இருப்பிடமான நாபி கமலத்தை வெளியிட்ட அருஞ்செல்வம் அன்ன ரத்நம் போன்ற நாபியை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ரத்ந நாப: என்று சொல்லப் படுகிறார். 

ஸுலோசந: - லோசநம் என்பது காண்பது என்னும் பொருளில் கண்ணையும், ஞானத்தையும் குறிப்பதால் நன்கு அழகிய திருக்கண்களையும், செம்மையான அக அழகு பொலியும் ஞானத்தையும் உடையவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுலோசந: என்று அழைக்கப் படுகிறார் 

அர்க: - மிகப்பெரும் தெய்வங்களாலும் துதிக்கப்படுபவர் ஆகையாலே துதி என்பதற்கு இலக்காக இருப்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அர்க: என்று அழைக்கப் படுகிறார். 

வாஜஸநி: - உணவை உண்மையில் பிரம்மம் என்று அறிய வேண்டும் என்னும் மறைமொழிக்கு இணங்க, அனைத்து உயிர்க்கும் வாழ்க்கைக்கு ஆதாரமான உணவாகவும், அதற்கு உரிய பசியினால் வேண்டித் தவிப்பவர்க்கு அவ்வுணவை அளிப்பவராகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வாஜஸநி என்று சொல்லப்படுகிறார் 

ச்ருங்கீ - பிரளயகாலத்தில் ஒற்றைக் கொம்புள்ள மீனுரு எடுத்து உயிர்களை அடுத்த படைப்பு வரையில் பாதுகாத்தான் ஆகையாலே ச்ருங்கீ. கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்து உயிர்களைக் காத்தான் ஆகையாலே ச்ருங்கீ. 

(நம்மாழ்வார் - 

மீனென்னும் கம்பில்
வெறியென்னும் வெள்ளிவேய்
வான் என்னும் கேடில்லா
வான் குடைக்கு
தான் ஓர்
மணிக்காம்பு போல்
நிமிர்ந்து மண்ணளந்தான்
நங்கள் பிணிக்காம்
பெரு மருந்து பின்.) 

ஜயந்த: - நமக்கான பகைவர்களை ஜயிப்பதில் தவறாதவர், முக்கியமாக நமக்காக நம் அகங்காரத்தை ஜயித்து நம்மை ஆட்கொள்ள வல்லவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஜயந்தர் என்று சொல்லப் படுகிறார் 

( திருமழிசையாழ்வார்;

அன்பாவாய்
ஆரமுதம் ஆவாய்
அடியேனுக்கு இன்பு ஆவாய்
எல்லாமும் நீ ஆவாய்
பொன்பாவை கேள்வா!
கிளரொளி என் கேசவனே!
கேடின்றி ஆள்வாய்க்கு
அடியேன் நான்
ஆளே.) 

ஸர்வவித் ஜயீ - எல்லாம் தெரிந்தவர்களையும் ஜயிப்பவர், அனைத்து அறிவின் வழிகளிலும் ஜயிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸர்வவித்ஜயீ என்னப்படுகிறார். 

( நம்மாழ்வார்:

வாசகம் செய்வது நம் பரமே?
தொல்லை வானவர் தம் நாயகன்
நாயகர் எல்லாம் தொழுமவன்
ஞாலமுற்றும் வேயகம் ஆயினும்
சோராவகை
இரண்டே அடியால் தாயவன்
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
நம் இறையே.) 

ஸுவர்ணபிந்து: அக்ஷோப்ய:

ஸுவர்ணபிந்து: அக்ஷோப்ய: ஸர்வவாகீச்வர: ஈச்வர: | 
மஹாஹ்ரதோ மஹாகர்தோ மஹாபூதோ மஹாநிதி: || 


ஸுவர்ணபிந்து: - பொன்னினும் துலங்கும் பூர்ண அழகுடைய அவயவங்கள் உடையவர்; நன்மையாகிய எழுத்தும் பிந்துவெனும் அநுஸ்வரமும் கூடிய பிரணவமாய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸுவர்ணபிந்து: எனப்படுகிறார் 

( பூதத்தாழ்வார் -

கதையின் பெரும்பொருளும் கண்ணா!
நின்பேரே.
இதயம் இருந்து அவையே ஏத்தில்
கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே!
உன்னைப்
பருமொழியால் காணப் பணி. ) 

அக்ஷோப்ய: - யாவராலும் எதனாலும் கலக்கக் கூடாதவர்; காம குரோதாதிகளாலும், சப்தாதி விஷயங்களாலும், அசுரர்களாலும் கலக்க முடியாதவர்; ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு அக்ஷோப்ய: என்று சொல்லப் படுகிறார். 

( நம்மாழ்வார் -

கண்ணும் செந்தாமரை
கையும் அவை
அடியோ அவையே
வண்ணங்கரியதோர் மால்
வரை போன்று
மதி விகற்பால்
விண்ணும் கடந்து
உம்பரப்பால் மிக்கு
மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ?
எம்பிரானது எழில் திறமே. ) 

ஸர்வவாகீச்வரேச்வர: - சொல் என்னும் சக்திக்குத் தலைவர்களாய் உள்ள பிரம்மாதி தேவர்களுக்கும் ஈசுவரராய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸர்வவாகீச்வரேச்வர: என்னப்படுகிறார். 

( திருமங்கையாழ்வார் - 

....அறுவகைச் சமயமும் 
அறிவரு நிலையினை; 
ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை; 
அறம்முதல் நான்கவையாய் 
மூர்த்தி மூன்றாய் 
இருவகைப் பயனாய் 
ஒன்றாய் விரிந்து நின்றனை..) 

மஹாஹ்ரத: - யோகிகளாகிய ஆழ்வார்கள் எந்த மடுவில் முழுகி அளவற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறார்களோ அந்தப் பெரும் மடுவாக, தரைதட்டாத குழியாக இருப்பவன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு மஹாஹ்ரத: என்று போற்றப் படுகிறார் 

( நம்மாழ்வார் -

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
பர நன் மலர்ச் சோதீயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
சுடர்ஞான இன்பமேயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
என் அவா அறச் சூழ்ந்தாயே! ) 

மஹாகர்த: - அடியார்களை ஆனந்திப்பிக்கும் மடுவாக, குழியாக மட்டும் இல்லாமல், உலக மக்களை மயக்கி உள்ளே அமிழ்த்தும் கடுங்குழியாகவும் அவன் அமைந்திருக்கிறான். உலக மயக்கம் கொண்ட மக்கள் விஷயத்தில் எது அமிழ்த்தும் சுழல் குழியாக ஆகிறதோ அதுவே அவனுடைய உலக ரீதியான வடிவமாக மஹாகர்த: என்று அவன் சொல்லப்பட காரணமாக ஆகிறது. 

மஹாபூத: - காலத்தால் மாறாத ஸ்வரூபத்தை உடையவர், முக்காலமும் ஒரேபடித்தான ஸ்வரூபத்தைக் கொண்டவர், எக்காலமும் தன்னியல்பிலேயே நிலைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாபூதர் என்று அழைக்கப்படுகிறார். 

மஹாநிதி: - அனைத்துப் பொருள்களும், அனைத்து உயிர்களும் சேமக் காப்பு அடைந்து வெளிப்பட்டு வளர்ந்து தம் இலக்காகிய அவரையே அடையத் தகுந்த ஒன்றாகத் தொடக்கம் முதல் நிறைவுவரை அவரே திகழ்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாநிதி என்று அழைக்கப்படுகிறார் 

( பெரியாழ்வார் -

துப்பு உடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவர் என்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு
என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும் உன்னை
நான் நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு
இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! ) 

குமுத: குந்தர: குந்த:

குமுத: குந்தர: குந்த: பர்ஜன்ய: பவந: அநில:| 
அம்ருதாச: அம்ருதவபு: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக:|| 


குமுத: - எழுத்துக்குப் பொருள் என்று பார்க்கையில் கு என்னும் பூமி, மு என்னும் முத்தியைப் பற்றி வருவதால், முத்தி என்னும் பூமியைத் தருபவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகையால் அவர் குமுதர் எனப்படுகிறார் 

குந்தர: - கும் எனப்படும் பாவத்தைப் போக்கி, குந்தம் என்னும் பரதத்வ ஞானத்தை அருள்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குந்தர: என்று அழைக்கப்படுகிறார். 

குந்த: - அழிக்கப்பட்ட பாவம் மீளாவகை செய்பவரும், ஞானம், வைராக்கியம் ஆகிய முதற்படிகளில் ஏறினார்க்கு அடுத்தடுத்து பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகிய உயர்நிலைகளைத் தந்தருள்பவர் ஆகையாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குந்தர் என்று அழைக்கப்படுகிறார். 

பர்ஜன்ய: - மழையால் உலகத்தின் புறத்துன்பம், சமுதாயத் துன்பம், உள்ளத்துத் துன்பம் என்னும் முத்துன்பங்களான ஆதிதைவிக, ஆதிபௌதிக, ஆத்யாத்மிக துன்பங்கள் அனித்தும் நீங்குவது போன்று, தம் ஸ்வரூபத்தைப்பற்றிய ஞானத்தால் நமக்கு ஏற்படும் மூவித துன்பங்கள் அகற்றி ஆனந்தம் தருபவர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்ஜன்யர் எனப்படுகிறார். 

பவந: - தூய்மைப் படுத்துபவர், அதுவும் பக்தர்கள் பால் தாமே வலியச் சென்று, அதுவும் விரைவில் சென்று தூய்மை நல்கும் தாய்மை குணத்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பவநர் என்று சொல்லப் படுகிறார். 

அநில: - அருள் செய்வதற்கு ஒரு ஹேது வேண்டும் என்ற இயல்பு இல்லாதவன், அடியார்களின் க்ஷேமத்தில் என்றும் விழித்திருப்பவன், பக்தியால் காதல் மீக்கூற வேண்டும் அடியார்க்கு, கண்ணுக்குப் புலனாகி அருள் செய்பவன் என்ற இயல்புகள் பிரத்தியேகமாகத் தம் ஒருவரிடமே நிறைந்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநிலர் என்று அழைக்கப்படுகிறார். 

அம்ருதாச: - அழிவற்ற ஆத்மானந்தமாகிய இயல்பில் சுகித்திருப்பவன், அமுதம் பிறர்க்கீந்து அவருண்ணத் தானுண்பவன், அடியார்க்குத் தன் குணங்களாகிற அமுதை அருந்தத் தருபவன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அம்ருதாசர் எனப்படுகிறார். 

அம்ருதவபு: - அழியாத வடிவுடையவர் ஆகையாலே அம்ருதவபு; என்று அழைக்கப் படுகிறார் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர். 

ஸர்வக்ஞ: - தாம் அனைத்தும் அறிந்தவர் என்பதோடன்றி அடியார்களின் திறமை திறமையின்மை, போதாமை, தாங்கும் சக்தி என அனைத்தும் அவர்கள் அறியாததையும் தாம் அறிந்தவராய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வக்ஞர் எனப்படுகிறார். 

ஸர்வதோமுக: - தம்மை அடியார்கள் வந்து அடைவதற்கும், தாம் அடியார்களைச் சென்று அடைவதற்கும் இதுதான் வழி என்று எந்த நியதியும் இன்றி எவ்வழியும் எவ்விதத்திலும் தம்மையே வந்து சேரும்படியான பரமசத்யம் அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வதோமுகர் எனப்படுகிறார்.

( Truth is a pathless land - J K ) 

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த:

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த: சத்ருஜித் சத்ருதாபந: | 
ந்யக்ரோத: உதும்பர: அச்வத்த: சாணூராந்த்ர நிஷூதந: || 


ஸுலப: - உலகத்தில் மிகச்சுலபமாகக் கிடைக்கும் பொருட்கள் என்ன என்ன உண்டோ அவற்றையெல்லாம் விட அதி சுலபம் ஆனவர் ஆக அவர் என்றும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சுலபர் எனப்படுகிறார். 

(அய்யே அதிசுலபம் - ஆன்ம வித்தை
அய்யே அதிசுலபம் ! -- ஸ்ரீரமண மஹரிஷி ) 

ஸுவ்ரத: - அடைவதற்குச் சுலபனாய் இருப்பவர் அடைந்தவரைக் காப்பதில் சிறிதும் கூடத் தளர்ச்சி இன்றி, அலட்சியம் இன்றிச் சரணடைந்தாரைக் காப்பதுவே தம் உறுதியான விரதமாகக் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவ்ரதர் எனப்படுகிறார். 

ஸித்த: - உயிருக்கு அவர் ரக்ஷகராய் இருப்பது என்பது ஜீவன் ஏதோ சாதனத்தை அனுஷ்டித்து அதன் விளைவாக ஏற்படும் காப்பு என்று இராமல் ஜீவனுக்கும் தமக்கும் உள்ள ஒழிக்கவியலா இயற்கையான சம்பந்தத்தால் அவர் ஏற்கனவே ஸித்தமாக இந்த ஜீவனுக்கு ரக்ஷகராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸித்தர் என்று அழைக்கப் படுகிறார். 

’ நெறிகாட்டி நீக்குதியோ? ‘ 

சத்ருஜித் - பகைவர்களை வென்றவர்; சத்ருதாபந: - பகைவர்களை வாட்டுகின்றவர்

உயிரோடு பகையான உடல் வாடி நாசம் உறுகிறது என்பதைப் போல உயிருக்கு உயிரான ஸ்ரீமஹாவிஷ்ணுவோடு பகைத்தவர்கள் தீராத தாபத்தால் பீடிக்கப் பட்டு, பின்னர் அவருடைய காரணமற்ற கருணையால் ஜயிக்கப்படுகிறார்கள். அவரைத் தம்முடைய அந்தராத்மா என்று அறியாமையால் பகைப்போருக்கு அவன் அருளும் வாழ்ச்சியே அவர்களை ஜயிப்பது ஆகையாலே இந்த இரட்டை நாமத்தாலும் சத்ருஜித்-சத்ருதாபநர் என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவே அழைக்கப்படுகிறார். 

ந்யக்ரோத; உதும்பர: - மண்ணுள்ளார் உய்ய, வன்பெரு வானகம் உய்ய எளிமையும் பெருமையும் உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ந்யக்ரோத: உதும்பர: என்று அழைக்கப் படுகிறார். 

அச்வத்த: - நித்யப் பொருள்களாக மட்டும் தாம் இராமல் அநித்யப் பொருள்களாகவும், ஒரு காலத்தில் முடிவு பெறும் அநித்யப் பதங்களாகவும், அந்தப் பதங்களுக்குரிய தேவர்களாகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அச்வத்தர் எனப்படுகிறார். 

(அச்வத்தம் - மேலே வேரும் கீழே கிளைகளும் பரப்பி வளரும் உலகப் பெருமரம்.) 

சாணூராந்த்ரநிஷூதந: - சாணூரன் ஆகிய அந்த்ரனை, அவன் தேவர்களுக்கும், உலகத்தினருக்கும் துன்பம் இழைத்ததால் அந்த மல்லனை ஸம்ஹாரம் செய்தவர். 

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஜிஹ்வ:

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்த ஜிஹ்வ: ஸப்தைதா: ஸப்தவாஹன:| 
அமூர்த்தி: அநக: அசிந்த்ய: பயக்ருத் பயநாசன: || 


ஸஹஸ்ரார்ச்சி: - ஒளியும், வெப்பமும் கொண்டு உலகில் பரிணாமங்களைச் செய்வதான ஆயிரம்விதமான ஒளிகள் தம்மிடமிருந்து வெளிப்போந்து திகழ இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸஹஸ்ரார்ச்சி; என்று அழைக்கப்படுகிறார். 

[ பேய்க்கும் ஒரு பேய் போன்று
பித்து ஆய்த் திரிவோர்க்கும்,
வேய்க்கும்,
அணிமுத்திவரும் வேங்கடமே
வாய்க்கு அமுது ஊர்
வண்மைப்பேர் ஆயிரம் தான் மன்னினான்,
மாவலிபால்
தண்மைப் பேராய் இரந்தான்
சார்பு.

(திருவேங்கடமாலை, ஸ்ரீபிள்ளைப் பெருமாள் ஐயங்கார்) ] 

ஸப்த ஜிஹ்வ: - ஏழு நாக்குகள் கொண்டதாகச் சொல்லப்படும் அக்னி தம் உருவமாக, அந்த அக்னியைத் தம் வாயாகக் கொண்டு அனைத்து மக்களின் ஆஹுதிகளையும் புசிப்பவராகவும், எங்கெங்கு அக்னி உண்டோ அவையெல்லாம் தம் உருவம் என்றும் உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தஜிஹ்வர் எனப்படுகிறார். 

ஸப்தைதா: - ஏழு விதச் சிறப்புகள், ஏழுவித வேள்விகள் என்று பிரபஞ்சத்தையே ஏழுவித உருவமாகத்தாம் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தைதா: என்று அழைக்கப்படுகிறார். 

ஸப்தவாஹந: - ஏழு சந்தஸ்ஸுகளுக்கும் தேவதைகளாக ஏழு குதிரைகளால் பூட்டிய தேரில் வலம் வருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தவாஹநர் என்னப்படுகிறார். 

அமூர்த்தி: - உலகில் காண்கின்ற வகையில் இல்லாத தெய்விகமான மேனி உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அமூர்த்தி என்று அழைக்கப் படுகிறார். 

அநக: - உலகில் கர்மங்கள் காரணமாகப் பிறந்து தன்னுடைய ஞானம் சுருக்கமும், பின்னர் அருளால் இயல்பான விரிவும் அடைய நேரும் ஜீவனைப் போல் இன்றி, அந்த ஜீவர்களைக் கரையேற்றத் தாம் கருணையினால் எத்தனை பிறவிகள் எடுப்பினும் சிறிதும் மாற்றமோ, மழுங்கலோ தன்பால் அண்டாத பூரண நல்ஞானம் என்றுமே உடையவரும், அதனால் ஜீவர்களின் ஞானக் கேடுகளைக் களைந்து உய்வு தரவும் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநகர் என்று அழைக்கப்படுகிறார். 

அசிந்த்ய: - உலகில் காணும் இயல்புகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டு இருப்பவர் ஆகையாலே இத்தகையவர் என்று சிந்தனையின் மூலம் அறுதியிட்டு அறிய முடியாதவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அசிந்த்யர் என்று சொல்லப் படுகிறார். 

பயக்ருத் - தீவழிச் செல்வோருக்குப் பயத்தை உண்டாக்குகிறவராக நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயக்ருத் என்று அழைக்கப் படுகிறார். 

பயநாசன: - நல்வழியில் நடப்போர்க்குப் பயங்கள் ஏற்பட்டாலும் அவற்றை அழிக்கும் காப்பாக நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயநாசநர் என்று அழைக்கப் படுகிறார். 

அணுர்ப்ருஹத் க்ருச:

அணுர் ப்ருஹத் க்ருச: ஸ்தூல: குணப்ருந் நிர்குணோ மஹாந் | 
அத்ருத: ஸ்வத்ருத: ஸ்வாஸ்ய: ப்ராக்வம்சோ வம்சவர்தந: || 


அணு: - இருக்கின்ற ஆகாசங்களிலெல்லாம் மிகச்சிறிய ஆகாசமான ஹ்ருதய ஆகாசத்தினுள்ளும் புகுந்து, அதில் அணுஸ்வரூபன் என்று சொல்லப்பட்ட ஜீவனின் உள்ளும் அந்தர்யாமியாய் நின்று காக்கும், அணிமா என்னும் திறல்வல்லோன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அணு என்றே அழைக்கப் படுகிறார். 

ப்ருஹத் - பெரிதினும் பெரிதான பரமபதத்தையும் தம் திருமேனியில் ஒரு பகுதியாக அடங்கும்படியாக மிகப் பெரியவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ருஹத் என்ரு அழைக்கப்படுகிறார். 

க்ருச: - காற்றினும் லேசானவர் ஆகையாலே எங்கும் பரவி நிற்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ருசர் என்று சொல்லப் படுகிறார். 

ஸ்தூல: - இருக்கும் ஒவ்வொரு பொருளையும் நேரடியாகத் தொட்டுக் கொண்டிருக்கும் அளவிற்கு பருத்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்தூலர் எனப்படுகிறார். 

குணப்ருத் - அனைத்துப் பொருட்களையும், அவற்றின் தன்மைகள் அனைத்தையும் தாம் தம் குணம் போலத் தாங்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குணப்ருத் என்று சொல்லப் படுகிறார். 

நிர்குண: - நற்குணங்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவர், தாம் எவ்வித குணதோஷங்களும் அற்றவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நிர்குணர் எனப்படுகிறார். 

மஹாந் - தோஷம் கலவாத குணங்களே நிறைந்தவர் ஆகையாலே என்றும், யாவருக்கும், எவ்விதத்திலும், ஒவ்வொரு கணத்திலும் மஹத்தானவராக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாந் என்று அழைக்கப்படுகிறார். 

அத்ருத: - அனைத்தையும் உள் நின்றும், தம்முள் நிலைபெறுத்தியும் தாங்குபவர் ஆகையாலே தம்மைத் தாங்கும் எதுவும் இல்லாததால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அத்ருதர் என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வத்ருத: - எதனாலும் தாங்கப்படாமல், தாம் அனைத்தையும் தாங்குபவராய் இருப்பதோடு மட்டுமன்றித் தம்மைத் தாமே தாங்கி நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வத்ருதர் என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வாஸ்ய: - அன்றலர்ந்த செவ்வி மாறாது எக்கணமும் இயல்புற மிளிரும் ஆனந்தத்தில் நிலைத்த இருப்பை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வாஸ்யர் எனப்படுகிறார். 

ப்ராக்வம்ச: - என்றும் பிற்பட்டதாக ஆகிவிடாமல் புதியதாகவே இருக்கின்ற நித்யமான தன்மையாலும், நித்யசூரிகள் என்னும் வம்சத்திற்கும் முந்தையரும் பெரியவரும் ஆனவர் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ராக்வம்சர் எனப்படுகிறார். 

வம்சவர்த்தந: - தம் வம்சமாகிய பிரபஞ்சத்தையும் நித்ய சூரிகளின் திரள் வதியும் திருநாட்டையும் பெருகி வளரச் செய்து கொண்டேயிருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வம்சவர்த்தநர் என்று சொல்லப்படுகிறார். 

பாரப்ருத் கதிதோ யோகீ

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீச: ஸர்வகாமத: | 
ஆச்ரம: ச்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: || 


பாரப்ருத் - ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் கட்டுண்ட நிலையில் அவர்கள் அறியாமையால் விளைந்த தம் கர்மத் தளைகளினின்றும் விடுபட்டுத் தாங்கள் அடைய வேண்டிய பெரும் பேறான பரமாத்மாவாகிய தம்மை அடைவதாகிற மகத்தான பொறுப்பை யார் கையிலும் ஒப்படைத்துவிடாமல் தாம் ஒருவரே முழுவதும் சுமப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பாரப்ருத் என்று போற்றப்படுகிறார். 

கதித: - போற்றப்பட்டிருப்பவர் 

( வேதங்கள் அனைத்தாலும் ஒரே பரம்பொருள் தத்வம் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறவர், வேதப் பொருளை விளக்கும் அனைத்து இதிகாச புராண, துணை நூல்கள் அனைத்தாலும் உயர்வற உயர்ந்த பரம்பொருள் என்று மூதலித்துக் காட்டிக் கொண்டாடப்படுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கதிதர் என்று சொல்லப்படுகிறார்.

குறிப்பு: - இந்த நாமத்திற்கு வெறுமனே ’புகழப்பட்டவர்’ என்று அர்த்தம் சொல்லிவிட்டுப் போய்விடலாம். குறிப்பாக உயர்வற உயர்ந்த ஒரே பரம்பொருள் என்றெல்லாம் ஆதாரங்கள் காட்டிப் பரக்க எழுத வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் பராசர பட்டர் எழுதினாலாவது சொல்லலாம் அவர் ஸ்ரீவைஷ்ணவர் ஆகையாலே எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்குத் தம் விருப்பக் கடவுளைப் புகழ்கிறார் என்று. ஆனால் பராசர பட்டர் எழுதியதை விட இரண்டு மடங்கு நீளமாக இந்தத் திருநாமத்திற்கு எழுதியிருப்பவர் பகவத்பாதரான ஸ்ரீஆதிசங்கரர்.

அவர் தமது அத்வைத ரீதியாக ஏதாவது அர்த்தம் எழுதினால் யாரும் கேட்பாரில்லை. அது இயல்பாகவும் இருக்கும். அல்லது பிற்காலத்தில் அவரைப் பற்றிப் பரப்புரைகள் எழுந்தது போல் அவர் ஆறு மதங்களை நாட்டியவர் என்றால் இந்தத் திருநாமத்திற்கு அர்த்தமாக ஆறு மதங்களிலும் அவரவர் கடவுளாகக் கொண்டாடப் படுபவர் என்று சொல்லியிருந்தாலும் யாரும் கேட்க முடியாது.

ஆனால் அவ்வாறெல்லாம் ஸ்ரீஆதிசங்கரர் எழுதாமல் வேத வேதாந்தங்களாலும், இதிகாச புராணாதிகளாலும் புகல் என்று முடிவு கட்டப்பட்ட உயர்வற உயர்ந்த ஒரே பரம்பொருள், பரதெய்வம் என்பது ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்று இந்த நாமத்தில் திட்டவட்டமாக எழுதுகிறார். காரணம் அவர் மட்டுமன்று, அவர் நாளில் வேத வேதாந்தங்களையும், இதிகாச புராணங்களையும் சான்று நூல்களாகக் கொண்ட வைதிகர்கள் யாவருமே உயர்ந்த ஈசுவர தத்வம் என்றால் அது ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்னும் கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்பதையே இஃது காட்டுகிறது.

இந்த நாமத்தில் மட்டுமன்று. பல நாமங்களிலும் பராசர பட்டரே சாதாரணமாகப் பொதுப் பொருள் எழுதும் இடத்தில் எல்லாம் கூட ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்கள் மிக விரிவாக ஆணித்தரமாக ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஒப்புயர்வற்ற உயர்வை எழுத்தில் பதிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் வந்தோரால் ஓரொரு கால அவசியத்தை முன்னிட்டு நிலைப்பாடுகள் மாற்றம் கண்டிருக்கலாம். அவற்றைத் தவறு என்று சொல்வதற்கில்லை. பல வேறு மக்களின் ஈடுபாடுகளை உள்வாங்கச் செய்த ஏற்பாடாகவும் இருக்கலாம். எல்லாம் நன்மைக்கே. ஆயினும் உண்மை நிலை ஆதிசங்கரரின் காலத்திய அவருடைய கொள்கையின் நிலைப்பாடு என்ன என்பதையும் நாம் ஒருபக்கத்தில் தெரிந்து வைத்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்தத் திருநாமத்திற்கான ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் வரிகள்:

வேதாதிபி: அயம் ஏவ பரத்வேந கதித:, ஸர்வை: வேதை: கதித இதி வா கதித:, ’ஸர்வே வேதா; யத் பதம் ஆமநந்தி’, ‘வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய’, ’வேதே ராமாயணே புண்யே பாரதே பரதர்ஷப | ஆதௌ மத்யே ததா சாந்தே விஷ்ணு: ஸர்வத்ர கீயதே’ இதி ச்ருதி ஸ்ம்ருத்யாதி வசநேப்ய:, ’ஸோSத்வந: பாரமாப்நோதி தத்விஷ்ணோ: பரமம் பதம்’ இத்யாத்யுக்தம், கிம் ததத்வநோ விஷ்ணோர்வ்யாபநசீலஸ்ய பரமம் பதம் ஸ தத்வமித்யாகாங்க்ஷ்யாம் இந்த்ரியாதிப்ய: ஸர்வேப்ய: பரத்வேந ப்ரதிபாத்யதே ‘இந்த்ரியேப்ய; பராஹ்யர்த்தா:’ இத்யாரப்ய, ’புருஷாந் ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பராகதி:’ இத்யந்தேந ய: கதித: ஸ: கதித: ) 

யோகீ - எப்பொழுதும் தத்வ ஞானத்தால் பார்க்கப்படுபவராய்க் கூடாதவற்றைக் கூட்டும் பரமகாரணராய் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் யோகி என்று அழைக்கப்படுகிறார் 

யோகீச: - யோகிகளுக்கும் யோகத்தைக் கைக்கூடச் செய்பவராய், நித்திய இயல்பான யோகம் வாய்த்தவர்களுக்கும் அவர்களது யோகம் நிலைக்கும் காரணமாய் அமைந்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் யோகீசர் என்று அழைக்கப்படுகிறார். 

ஸர்வகாமத: - அனைத்து விருப்பங்களும் நிறைவேறுவது என்பது தம்முடைய அருளின் வசமாக நடக்கும் வண்ணம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வகாமதர் என்று சொல்லப்படுகிறார். 

ஆச்ரம: - ஸம்ஸாரத்தில் ஒரு கணமும் ஓய்வில்லாமல் அலைவுறும் உயிர்கள் கடைசியாக அடைந்து பட்ட சிரமம் எல்லாம் தீர்ந்து இளைப்பாறும் நிரந்தர ஓய்விடமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆச்ரமர் என்று அழைக்கப் படுகிறார். 

ச்ரமண: - அனைத்துயிருக்கும் புகலாகத் தாமே இருப்பினும், தம்மை அவ்வண்ணம் உணரும்வரை அதற்கேற்ற பக்குவம் பெறுவதற்காகத் தன்முனைப்புடன் கூடிய தேட்டத்தில் மூட்டிப் பயிற்றுபவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ச்ரமணர் என்று சொல்லப்படுகிறார். 

க்ஷாம: - அவர்கள் அறிந்தோ அறியாமலோ தம்மை நோக்கிய தேட்டத்தில் தம்மால் முடிக்கிவிடப்பட்டு முனைந்தோர்தம் கர்ம பலன்கள் அவர்களைத் தகையும்போதும், அவர்களுடைய கடுமையான தவ வாழ்க்கையிலும் அவர்களுக்குப் போதிய பொறையும், விடாமுனைப்பும் தந்தருளுபவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகையாலே அவர் க்ஷாமர் என்று போற்றப்படுகிறார். 

ஸுபர்ண: - பக்குவம் அடைந்து வருவோரை அடுத்த அடுத்த நிலைக்கும், தன்னையே புகலும், வழியும் என்று உணரும் பக்குவம் அடைந்தோரைப் பரமப் பிராப்யமான நிலைக்கும் சம்ஸார மண்டலத்தின் எவ்வித நலிவும் வாட்டாமல் கடத்திச் செல்லும் ஒரு நல் துணையாக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுபர்ணர் என்று சொல்லப்படுகிறார். 

வாயுவாஹந: - தாம் எவ்வளவு கருணையோடு அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக அணைத்து எடுத்துச் சென்றாலும், ஜீவர்கள் தம் சுதந்திர இச்சையால் அவருடைய காப்புகள் அனைத்தையும் முறித்துக் கொண்டு, கீழே விழுவதற்கே வாய்ப்பு பார்த்து விழும் போதும், அவற்றின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, விழ விட்டு, அவை விழுந்த வேகமாகிய வாயுவே வாஹனமாக அவற்றைத் தம் பால் கொண்டு வந்து சேர்க்கும்படி அமைத்து வைத்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வாயுவாஹநர் என்று போற்றப்படுகிறார். 


தனுர்தரோ தனுர்வேதோ

தனுர்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதா தம: | 
அபராஜித: ஸர்வஸஹோ நியந்தா நியமோ யம: || 


தனுர்தர: - புகல் நாடும் உயிர்களுக்குப் பகையானவற்றின் மீது தாமே சினந்து பொருகின்ற வில்லைத் தரிப்பவராக என்றும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தனுர்தரர் என்று போற்றப்படுகிறார். 

தனுர்வேத: - உயிர்களை நலியும் பகை கடிந்து காக்க ஏந்திய வில்லே அந்த வில்லின் வித்தை வடிவாக இருக்கும்படியானவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தநுர்வேதர் என்று போற்றப் படுகிறார். 

தண்ட: - உயிர்கள் நல்வழியில் உய்வு அடைய ஏற்றவகையில் நெறிப்படுத்தி ஆளும் அரசனது செங்கோல், ஆட்சியின் நல்லாணையையும், நன்னெறியில் செலுத்தும் ஆற்றலையும் உருவகப்படுத்தி நிற்பதால் அந்தச் செங்கோல் ஆகிய தண்டமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவாகையாலே அவர் தண்டர் என்று அறியப் படுகிறார். 

தமயிதா - நன்னெறியில் உய்க்கும் அரச தத்துவமாக மட்டுமின்றி, தீநெறியில் செல்வதைத் தடுக்கும் அடக்கும் திறல் வடிவாகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தமயிதா என்று சொல்லப்படுகிறார். 

(அ)தம: - உய்த்தும் உறுத்தும் செய்த அடங்கிய தகைமையாகவும் அவரே இருப்பதாலும், தாம் எதனாலும் அடக்க இயலாத சுதந்திரம் கொண்டவர் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தமர் என்றும் அதமர் என்றும் சொல்லப்படுகிறார்.

[கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்/ ஏரார்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்} 

அபராஜித: - எந்த ஒன்றும் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையானும், உள்ளிலும், புறத்திலும் எதை மீற முடியாதோ, அது ஆக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அபராஜிதர் என்று அழைக்கப்படுகிறார். 

ஸர்வஸஹ: - மிக்குயர்ந்தவர் முதல் மிகவும் கீழ்நிலையுற்றவர்வரை அனைவரும் தம்மை ஏற்றித் தொழுது நற்கதி அடையும்வண்ணம் அனைவரையும், அனைத்து தெய்வங்களையும் தாங்கி நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வஸஹர் என்று சொல்லப்படுகிறார். 

நியந்தா - அனைவரையும் அவரவர் நிலை, பக்குவம், நிச்சயம் என்ற அடிப்படையில் இயக்கி, முடிவில் தம்மை அடைவதாகிய பெருநிலையை நோக்கி முன்னேறுமாறு நடத்துபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நியந்தா என்று அழைக்கப்படுகிறார். 

நியம: - ஒவ்வொரு உயிரும் வேண்டும் பலன்களை அவரவர் தெய்வங்களின் மூலமாக அவர்களுக்கு முறையாகத் தருபவரும், தம்மையே புகலடைந்தவருக்கு எவ்வித நியமமுமின்றி மிக்குயர்ந்த பலனைத் தருபவருமாக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நியம: (அநியம:) என்று சொல்லப்படுகிறார். 

யம: - வாழ்க்கை, மரணம், தோற்றம், கேடு, படைப்பு, ஒடுக்கம் என்று அனைத்து காரியங்களுக்குமான அதிகாரி தேவதைகளை உண்டாக்கி, வழிநடத்துபவர் ஆகையாலே மரணமற்றவர் என்று அயம: என்றும், மரணத்தையும் நடத்துபவர் அவர் ஆகையால் யம: என்றும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அழைக்கப்படுகிறார். 

ஸத்த்வவாந் ஸாத்த்விக:

ஸத்த்வவான் ஸாத்த்விக: ஸத்ய: ஸத்யதர்மபராயண: | 
அபிப்ராய: ப்ரியார்ஹோSர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்தன: || 


ஸத்த்வவான் - ஜீவர்கள் முக்தி பெறுவதற்கு முதலில் முக்கியமானது அவற்றினுள்ளே ஸத்வ குணம் தலை தூக்க வேண்டும் ஆகையால், அந்த ஸத்வ குணத்தை உயிர்களுக்குத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்த்வவான் என்று கொண்டாடப்படுகிறார். 

ஸாத்த்விக: - ஸத்வ குணத்தால் ஞானம், ஆத்மகுணங்கள், தேஜஸ், வீர்யம் ஆகிய தகுதிகள் ஏற்பட்டு அதனால் மோக்ஷ சிந்தையானது ஏற்படுவதை ஸாத்த்விகம் என்ற வார்த்தை குறிப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸாத்த்விகர் என்று சொல்லப் படுகிறார். ( மோக்ஷம் இச்சேத் ஜநார்தனாத் ) 

ஸத்ய: - ஸாத்விக சாத்திரங்களால் சொல்லப்படும் மகிமை உடையவர் என்பதாலும், ஸத்யம் என்பதற்கு ஆதாரம் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்யர் எனப்படுகிறார். 

ஸத்யதர்மபராயண: - ஸத்யத்தையே தர்மமாக உடைய நிவ்ருத்தி தர்மத்தைப் பெரிதும் உகந்து போற்றுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்யதர்மபராயணர் என்று கொண்டாடப் படுகிறார். 

அபிப்ராய: - ஸத்வ குணம் ஓங்குவதால் ஸாத்விக தர்மத்தைக் கைக்கொண்டவர்கள் அனைவரும் மாற்றுக் கருத்தே இன்றி மோக்ஷத்திற்கான ஒரே புகலாகக் கொள்ளும் அபிப்ராய வடிவாகத் திகழ்பவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஆனதினால் அவர் அபிப்ராயர் எனப்படுகிறார். 

( ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்யச புனப்புன: |
இதம் ஏகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா || 

அனைத்து சாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் நன்கு ஆலோசித்து விசாரித்துப் பார்த்ததில் இந்த ஒன்றே மிக நிச்சயமாகவும் தெளிவாகவும் தெரிய வருகின்றது. - நாராயணனையே எப்பொழுதும் தியானிக்க வேண்டும். 
(வியாசர்) 

நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்!
(பரிபாடல்) ) 

ப்ரியார்ஹ: - பிரேமையுடன் வந்தடையும் ஞானிக்கு வந்தடையத்தக்க ஒரே புகலிடமாக இருப்பவர் ஆகையாலே ப்ரியார்ஹ: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கொண்டாடப்படுகிறார். 

அர்ஹ: - தமக்கான காப்பு, தாம் மோக்ஷம் அடைவதற்கான நெறி, தாம் அடையும் உயர்ந்த பேறு என்று அனைத்து விதத்திலும் பிறிதொன்றின்பால் செல்லாத சிந்தையால் பக்தியுடன் விரும்பப்படத்தக்க ஒரே தத்துவமாக இருப்பவர் ஆகையாலே அர்ஹ:. 

ப்ரியக்ருத் - ஞானிக்குத் தாம் பிரியமானவர் என்றும், ஞானி தமக்குப் பிரியமானவன் என்றும் தாமே சொல்லியிருப்பதற்கேற்பத் தம்மை நாடிப் பக்தி செய்வோர்களைப் பிறிதொரு பலன் கருதாது தம்மையே வேண்டும்படியான தமக்குப் பிரியமானவர்களாய் ஆக்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ரியக்ருத் எனப்படுகிறார். 

ப்ரீதிவர்தன: - உலக விஷயங்களில் விரக்தி முழுமையாகவும், ஜீவனின் இயல்பான ஞானம் நன்கு மலர்வதால் தனக்கு, தான் உணராத காலம் தொட்டே, நன்மையைச் செய்து வருபவர் தன்னுடைய உயிரான ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதை உணர உணர மேன்மேலும் ப்ரீதி அளவிறந்து வளர்ந்து கொண்டே போகும்படி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ரீதிவர்தன: என்று போற்றப் படுகிறார்.

விஹாயஸகதிர் ஜ்யோதி:

விஹாயஸகதிர் ஜ்யோதி: ஸுருசி: ஹுதபுக் விபு: | 
ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன:|| 


விஹாயஸகதி: - ஆன்மிக வழியில் நின்று முக்தி அடையும் வேட்கையில் நிலை நின்றார்கட்கு பக்தி யோகம் கைகூடுங்கால் இதய ஆகாசம்தன்னில் நூறு நாடிகளுக்கு மேல் நூற்றியோராவது நாடியாகப் பரமபதம் செல்லும் கதியைத் தெரியவைத்து, அவ்வழியே சுகமே நடத்திச் செல்லும் சக்தியாகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விஹாயஸகதி: என்று தொழப்படுகிறார். 

ஜ்யோதி: - பக்தர்கள் பரமபதம் போகும் அர்ச்சிராதி மார்கத்தில் முதல் நிலையான ஒளியாக இருப்பவர் என்று ஸ்ரீபராசர பட்டர் இந்தத் திருநாமத்திற்கு அர்த்தம் தருகிறார்.

( அதேபோல் ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரரும் ஒளி என்று பொருள்படும்படியாகச் சொன்னால் ஒன்றும் குறையில்லை. ஆனால் அவ்வாறு செய்யாமல் இந்தத் திருநாமத்திற்கு ஸ்ரீமந் நாராயணன் என்றே வியக்தமாக அர்த்தம் செய்கிறார் ஸ்ரீபகவத்பாதர். அதற்கு அவர் சான்று காட்டும் வேத வாக்கியம் ‘நாராயண: பரோ ஜ்யோதி:’ என்னும் உபநிஷத் வாக்கியம். அதாவது பகவந் நாமங்களிலேயே வேறு எந்த தெய்வத்திற்கும் அர்த்தம் வரும்படியாக வியாக்கியானம் செய்ய முடியாத திருநாமம் ஸ்ரீமந் நாராயண நாமம். நாராயண என்றால் பொதுப்படையான கடவுள் என்ற பொருள் தராமல் குறிப்பாக ’அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கை உறைமார்பனான’ திருமால் ஒருவரை மட்டுமே சிறப்புப் பெயராகக் குறிப்பது நாராயண நாமம். இங்கு வெறுமனே ஜ்யோதி: என்று பொதுவான நாமம் இருக்க அதற்கே ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் செய்யும் விளக்கம் நாராயண நாமம் எனில், அவருடைய சகுண பிரம்ம நிஷ்டை எவ்வளவு ஏகாக்ரதை உடையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.) 

ஸுருசி: - அர்ச்சிராதிகதியில் இரண்டாவது நிலையாகப் பகலன்ன பேரொளியாக நடத்துபவர் ஆகையாலே ஸுருசி: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கொண்டாடப் படுகிறார். 

ஹுதபுக்விபு: - அனைத்திடத்திலும் நிறைந்து உயிர்கள் அனைத்தும் தொடர் யக்ஞங்களில் பெய்யும் அனைத்து ஹோமத் திரவியங்களையும் உட்கொள்ளும் தெய்வமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஹுதபுக்விபு: என்று சொல்லப்படுகிறார். 

ரவி: - வெப்பமாய் நின்று அனைத்தையும் உட்கொள்ளுவதோடு நில்லாமல் ஓங்கிய வான் கதிராய் நின்று அனைத்தையும் பகலாக்குவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரவி: என்று தொழப்படுகிறார். 

விரோசன: - ஸம்வத்ஸர ரூபமான, ஆண்டின் சுழற்சி உருவாகிய கதிரொளியாய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விரோசன; என்று போற்றப்படுகிறார். 

ஸூர்ய: - எல்லாவற்றையும் உண்டாக்குவதாலும், அருஞ்செல்வத்தை உலகமெல்லாம் தருவதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸூர்ய: என்று போற்றப்படுகிறார். 

ஸவிதா - ஞாயிறால் மழைநலத்தையும் அதனால் உயிர் தழைப்பதையும் செய்யும் அருள் சக்தியாக இருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸவிதா என்று அழைக்கப் படுகிறார். 

ரவிலோசந: - கதிரவனைக் கண்களாக உடையவர் என்ற காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரவிலோசந; என்று கொண்டாடப்படுகிறார்.

(ஸ்ரீபராசர பட்டரின் பாஷ்யத்தில் ஒரு செய்தி - சூரியக் கிரணங்கள் பிரவேசிப்பதால்தான் சந்திரன் முதலியவற்றின் பிரகாசம் ஏற்படுகிறது.) 

அநந்த ஹுதபுக் போக்தா

அநந்த ஹுதபுக் போக்தா ஸுகதோ நைகஜோSக்ரஜ: | 
அநிர்விண்ண: ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாநம் அத்புத: || 


அநந்தஹுதபுக்போக்தா - காலத்தாலும், இடத்தாலும், பொருள் தன்மையாலும் அளவுபடுத்தப்படாதவர், தம்முள் அனைத்துப் பொருள்களும் பிரபஞ்சம் முழுவதும் வேள்வியாக நடைபெறத் தக்க வகையில் அனைத்து முயற்சிகளையும் தாம் ஏற்று, அனைத்துப் பலன்களையும் தாமே தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஹுதபுக்போக்தா என்று போற்றப்படுகிறார். 

ஸுகத: - உண்மையான உயர்ந்த மோக்ஷ சுகத்தைத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சுகத: என்று போற்றப்படுகிறார். 

நைகஜ: - பக்தர்களுக்கு முக்தியை விளைவிக்கப் பல வழிகளிலும் தாம் தோன்றி அருள் பாலிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நைகஜ: என்று கொண்டாடப்படுகிறார். 

அக்ரஜ: - முக்தர்களுக்குப் பரமானந்தத்தை விளைவிப்பவராய் என்றும் முன்னின்று பிரகாசிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரஜ: என்று சொல்லப்படுகிறார். 

அநிர்விண்ண: - தம்மை அண்டிய ஜீவனைத் தாம் அந்த ஜீவன் அண்டுவதற்கு வெகுகாலம் முன்னம் இருந்தே அதைக் கரையேற்றுவதற்காகப் பெரும் பிரயத்தனங்கள் எடுத்து, எப்பொழுது ஜீவன் தாம் செய்யும் ரக்ஷணத்தை விலக்காமலும் வெறுக்காமலும் மனம் ஒப்பி இசையுமோ என்று காலம் பார்த்து இருந்தவர் ஆதலால், ஜீவன் தம்மை அண்டியவுடன் மிக விரைவாக அதைக் கரையேற்றிவிட்டுச் சிறிதும் பின்னர் தாம் கவலையின்றி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநிர்விண்ண: என்று கொண்டாடப் படுகிறார். 

ஸதாமர்ஷீ - தாம் அருள் செய்து உய்யக் கொண்ட பக்தர்கள் தாங்கள் செய்யும் கைங்கரியங்களில் நேரும் தவறுகளை அன்புடன் சகித்துக் கொள்பவர் ஆகையாலே ஸதாமர்ஷீ என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சொல்லப் படுகிறார். 

லோகாதிஷ்டாநம் - உலகின் தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகிய அனைத்திற்கும் தாம் ஆதாரமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லோகாதிஷ்டாநம் என்று போற்றப் படுகிறார். 

அத்புத: - என்றும் இமையா நாட்டத்து நித்ய சூரிகள் கால அவதியின்றி நோக்கிக் களித்தாலும் அவர்களுக்கும் கணம் தொறும் புதுமையாக இருப்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அத்புதர் எனப்படுகிறார். 

ஸநாத்ஸநாதன தம:

ஸநாத்ஸநாதனதம: கபில: கபிரவ்யய: | 
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்திதக்ஷிண: || 


ஸநாத் - எப்பொழுதும் புதுமையாய் இருக்கும் ஒன்று, கணம் தொறும் அத்புதமாய் இருக்கும் ஒன்று அடுத்த கணம் முடிவடைந்து போனது என்றிருப்பது போல் இல்லாமல் தம்மைத் துய்க்கும் ஒவ்வொரு கணமும் முடிவற்ற நெடுங்காலமாய் நீளும் தகைமையர் ஆகையாலே, அநந்த கோடி ஜீவர்களுக்கும் அவரவர் துய்ப்பில் அவ்வண்ணமே தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸநாத் என்று போற்றப்படுகிறார். 

ஸநாதநதம: - எப்பொழுதும் புதுமையாய் இருப்பதோடன்றி அனைத்தினும் பழையதாகவும் இருப்பது மட்டுமல்லாமல், பழமையானவற்றிலெல்லாம் சிறந்ததாகவும் இருப்பதனால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸநாதநதம: என்று தொழப்படுகிறார். 

கபில: - மின்னல் கொடிகளால் சூழப்பட்ட காருண்ட மேகம் போல் நித்ய விபூதியில் நித்ய சூரிகள் சூழத் தாம் இருப்பவர் ஆகையாலும், தம்மை விட்டு அகலகில்லேன் இறையும் என்று பிரிவில்லாத தத்துவமாக விளங்கும் ஸ்ரீயின் ஒளியால் தாம் சூழப்பட்டிருப்பவர் ஆகையாலும் கபில: என்று ஸ்ரீமஹாவிஷ்ணு போற்றப்படுகிறார். 

கபிரவ்யய: (கபிரப்யய:) - மாறுதல் அற்ற ஒளி மிகுந்த நித்ய சுகத்தைத் தம்மிடத்தில் முழுமையாக அடங்கத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபிரவ்யய: என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்தித: - அடியார்களுக்கு அசுபம் என்பதை நீக்கி மங்களத்தைத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்தித: என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வஸ்திக்ருத் - அசுபம் நீங்கி மங்களம் விளைவது என்பதே பகவத் குணங்களில் ஒருவர் ஈடுபடுவதன் காரணமாக ஆகும் என்பதால், ஸர்வமங்களமாகிய தமது குணங்களில் ஈடுபாட்டையும் அவரே அருள்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திக்ருத் என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்தி - தாமே ஜீவனுக்கான சுபமாக இருப்பவர் ஆதலால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்தி என்று அழைக்கப்படுகிறார். 

ஸ்வஸ்திபுக் - ஜீவர்களாகிய நமக்கு என்றும் சுபமானவற்றையும், மங்களமானவற்றையும் அஞ்ஞானத்தின் காரணத்தினால் சுபாவமாக அனுபவிக்கத் தெரியாது ஆகையாலே சுபம், மங்களம், நன்மை என்பதை எப்படி விரும்ப வேண்டும் என்று தம்முடைய பேரருளால் ஜீவனுக்குள் இருந்து கற்பிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திபுக் என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்திதக்ஷிண: - ஜீவர்களுக்கு உயர்ந்த மங்களம் ஆவது தம்மை அடைந்து தம் அடியிணையில் செய்யும் தொண்டு எனவே அதற்கு வேண்டிய அனைத்து நன்மைகளையும் தாமே தம்மைப் புகல் அடைந்தாருக்குத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திதக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார். 

அரௌத்ர: குண்டலீ சக்ரீ

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித சாஸந: | 
சப்தாதிக: சப்தஸஹ: சிசிர: சர்வரீகர: || 


அரௌத்ர: - ஜீவர்களின் பாபங்களை நோக்கில் மிகக் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்பு இருப்பினும் தமது குற்றமற்ற கல்யாண குணங்களின் மிகுதியாலும், திருமகள் என்றும் தம்மை விட்டுப் பிரியாமல் நின்று ஏற்படுத்தும் தயையாலும் கொடும் செய்கையோ, விருப்போ, குரோதமோ இன்றி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அரௌத்ர: என்று போற்றப்படுகிறார். 

குண்டலீ - ஆதிசேஷரூபியானவர் ஆதலாலும், ஸாங்க்யம், யோகம் என்னும் இரண்டையும் தம் காதுகளில் அழகிய குண்டலங்களாகத் தாம் அணிபவர் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குண்டலீ என்று அழைக்கப்படுகிறார். 

சக்ரீ - ‘மிகவும் அசைவதும், மிகுந்த வேகமுடன் நகர்வதுமான அந்தக்கரணமாகிய மனம் என்னும் தத்துவத்தைச் சக்ரமாகக் கையில் கொண்டவர்’ என்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் சொல்வதற்கேற்ப, மனம் என்பதையே தம் கையில் ஆழியாகத் தரித்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சக்ரீ என்று தொழப்படுகிறார். 

விக்ரமீ - தாளால் உலகளந்த தாயோன் என்னும் சிறப்பு தமக்கே வாய்த்த பிரான் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விக்ரமீ என்று கொண்டாடப்படுகிறார். 

ஊர்ஜிதசாஸந: - ஊழிதோறூழி ஒன்றும் பிறழாமல், ஒருவராலும் கடக்கலாகாக் கட்டளைகள் தந்த பிரான் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஊர்ஜிதசாஸந: என்று போற்றப்படுகிறார். 

சப்தாதிக: - சப்தம் என்னும் சாத்திரங்களால் எல்லையிட்டு வரையறை செய்து கூறிவிட முடியாதவர், எவ்வளவு விவரித்தாலும் அதனினும் மிக்குத் திகழும் இயல்பினர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தாதிகர் எனப்படுகிறார். 

சப்தஸஹ: - யானை முதலான தெளிவான பேச்சு இல்லாத உயிரினங்களின் தீனக் குரலையும் பொறுப்புடன் தாம் தாங்கித் துயர் துடைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தஸஹர் எனப்படுகிறார். 

சிசிர: - ஜீவர்களின் தாபக்குரல் எழுந்ததுமே விரைவு மயமாக ஆகிவிடுபவர், யானையின் அழுகுரலுக்கு விரைவாகி வந்து தாபம் போக்கிக் குளிரச் செய்தது போல் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சிசிர: என்று போற்றப்படுகிறார். 

சர்வரீகர: - ஸம்ஸாரமாகிய கொடிய மடுவில் சிக்கி அலறும் ஜீவனைக் காக்க வேண்டி அனைத்துக் காப்புகளையும் அனைத்து விதத்திலும் விரைவில் செய்பவர் என்பதாலும், உலக நாட்டம் கொண்டவர்க்கு இரவாகத் தெரியும் ஆன்மிகப் பாதையைத் தம் அடி அணைந்த பக்தர்களுக்குப் பகலாக ஆக்குகிறார் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சர்வரீகர: என்று தொழப்படுகிறார். 

அக்ரூரோ பேசலோ தக்ஷோ

அக்ரூர: பேசலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம் வர: | 
வித்வத்தமோ வீதபய: புண்யச்ரவண கீர்த்தன: || 


அக்ரூர: - தாம் பக்தர்களைக் காக்கும் போதும், சாதுக்களை நலியும் தீய சக்திகளை அழிக்கும் போதும் ஒரே படித்தாக அன்பே அன்றிக் கொடிய தன்மை சிறிதும் இல்லாதவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரூரர் எனப்படுகிறார். 

பேசல: - எவ்வளவு விரைவாகச் செயல் புரிந்தாலும், என்ன பேசினாலும், எந்நிலையிலும் பூரண அழகு மிளிரும்படி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பேசல: என்று சொல்லப்படுகிறார். 

தக்ஷ: - தம்முடைய பூரண அமைதியும், நிறைந்த அழகும் சிறிதும் நலுங்காமல் இருந்தாலும் அவருடைய செயல்கள் மிக விரைவாகவும், மிகத் துல்லியமாகவும், தவறாமலும் இருக்கும்படியான காரியத் திறன் அவரிடம் நிறைந்து காணப் பெறுவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தக்ஷ: என்று போற்றப்படுகிறார். 

தக்ஷிண: - காரியத் திறமையும், செயல் விரைவும் பூரணமாகத் துலங்குகிறவர் என்றாலும் தாம் தம்மைச் சரணடைந்த ஜீவர்களுக்குத் தமக்குத் திருப்தியாகப் போதிய அளவு செய்யவில்லையே என்ற ஆற்றாமையைக் கொண்டவர் என்பதால் அடியவர்களின் மிக்க உள்ள நெகிழ்வுக்குக் காரணம் ஆகிறார் என்பதால் அவர் தக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார். 

க்ஷமிணாம்வர: - பொறுமையில் சிறந்த பூமியையும் தாம் தாங்குபவர் என்பதால் பொறுமையினும் பொறுமை மிக்கவர் எனவே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ஷமிணாம்வர: என்று சொல்லப்படுகிறார். 

வித்வத்தம: - அறிவில் எல்லாம் மிக்க அறிவாகவும், அறிபவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வித்வத்தம: என்று போற்றப்படுகிறார். 

வீதபய: - அறிவும் அறிவோனும் அவரே ஆக இருப்பதால் அவருக்கு அந்நியமாக ஒன்று இல்லாமையால் பயம் என்ற ஒன்று இல்லாதவர் என்பதாலும் தம்மைப் புகலடைந்தோருக்குத் தம்மைப் பற்றிய நினைவாலேயே பயத்தை இல்லாமல் செய்பவராகவும் இருப்பதால் வீதபய:

புண்யச்ரவணகீர்த்தந: - தம்மைப் பற்றிய சரித்திரங்களையும், புகழ்த்துதிகளையும் கேட்பதனாலேயே ஜீவர்களின் அசுபங்கள் நீங்கவும், அவ்வாறு கேட்பதுவே மிகவும் பெரிய புண்ணியமாக அமைந்தவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்யச்ரவணகீர்த்தந: என்று போற்றப்படுகிறார். 


உத்தாரணோ துஷ்க்ருதிஹா

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ து:ஸ்வப்நநாசந: | 
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: || 


உத்தாரண: - ஸம்ஸாரச் சுழலிலிருந்து காப்பாற்றி மேலெடுத்து மோக்ஷம் தந்து நித்ய நிலையைத் தருகிறார் என்பதால் உத்தாரண: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் போற்றப்படுகிறார். 

துஷ்க்ருதிஹா - நன்மையைக் காப்பது மட்டுமின்றித் தீமையைச் சிறிதும் கருணையின்றித் தவறாமல் அழிக்கவும் செய்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் துஷ்க்ருதிஹா என்று சொலப்படுகிறார். 

புண்ய: - தம்மைச் சரணடைந்தோருக்குத் தாமே மிகச்சிறந்த புண்ணியமாகவும் இருப்பவர் ஆதலால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்ய: என்று போற்றப்படுகிறார். 

(நன்மைசேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி, எண் இல் மூர்த்தியாய், நாக மூர்த்தி சயனமாய் -- திருச்சந்தவிருத்தம்)

து:ஸ்வப்நநாசந: - ஸ்ரீகஜேந்திர மோக்ஷத்தில் கூறியவாறு காப்பாற்றப்பட்ட சாதுக்களையும், காப்பாற்றிய தம்மையும் நினைப்பவர்களை நலியும் கெட்ட கனவுகளை நாசம் செய்து விடுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் து:ஸ்வப்நநாசநர் என்று தொழப்படுகிறார். 

வீரஹா - ஜீவர்களை முக்தி பெற மாட்டாமல் தடுக்கும் பல வழிகளையும் தடுத்து நற்கதி அருள்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வீரஹா என்று போற்றப்படுகிறார். 

ரக்ஷண: - உடலால், உள்ளத்தால், உயிர்க்கு உற்ற நல் துணையால் ஆன்ற காப்புகள் அனைத்தும் சரணடைந்த ஜீவர்களுக்குச் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரக்ஷண: என்று போற்றப்படுகிறார். 

ஸந்த: - காப்பதோடன்றி அவர்களை ஆன்மிக உணர்விலும், அதனடியாகப் பகவானாகிய தம்மிடத்தில் ஊன்றிய பக்தியிலும் எக்கணமும் நன்கு வளரும்படி வளர்ப்பதால் அவர்களை நன்கு இருப்பவர்களாக ஆக்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸந்த: என்று கொண்டாடப்படுகிறார். 

ஜீவந: - தம்மைச் சரணடைந்தாரின் யோக க்ஷேமங்களைத் தாம் வகிப்பதோடன்றித் தம்மால் ஒறுக்கப்பட்ட தீயோரும் நல்வழியில் வாழும்படிச் செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜீவந: என்று சொல்லப்படுகிறார். 

பர்யவஸ்தித: - அன்பினால் ஜீவராசிகளைச் சூழ்ந்தும், உள்நின்றும் காத்துத் திருத்தி நல்வழிப்படுத்தித் தம்மிடம் வந்து சேரும்படிச் செய்யும் தயாமூர்த்தியாக எப்பொழுதும் நிலைநிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்யவஸ்தித: என்று தொழப்படுகிறார். 

அநந்தரூபோSனந்தஸ்ரீ:

அநந்தரூபோSனந்தஸ்ரீர் ஜிதமன்யுர் பயாபஹ: | 
சதுரச்ரோ கபீராத்மா விதிசோ வ்யாதிசோ திச: || 


அநந்தரூப: - தமது பக்தர்கள் எந்த ரூபத்தில் தம்மைக் காண வேட்கிறார்களோ அவ்வித ரூபத்தில் எல்லாம் தாம் தோன்றி அவர்களுக்கு அருள்பாலிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தரூப: என்று கொண்டடப்படுகிறார். 

அநந்தஸ்ரீ: - தமது அடியார்களுக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் அளவில்லாது வழங்கும் தன்மையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஸ்ரீ: என்று போற்றப் படுகிறார். 

ஜிதமன்யு: - தீயவர்களிடத்தும் சினம் காவாமல் அவர்களிடம் உள்ள தீய குணத்தை அகற்றி அவர்களும் நல்வழி அடைந்து உய்யும் வழிவகைகளைச் செய்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜிதமன்யு: என்று அழைக்கப் படுகிறார். 

பயாபஹ: - தாம் எப்பொழுதும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுடன் ஜீவர்களுக்கு ஏற்படுவதான தாங்கள் ஒரு நாதனற்ற அநாதைகளோ என்ற பயத்தையும் நீக்கிக் காப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயாபஹ: என்று போற்றப்படுகிறார். 

சதுரச்ர: - என்றும் எதற்கும் உசிதமானவற்றையே செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சதுரச்ர; என்று சொல்லப்படுகிறார். 

கபீராத்மா - இவ்வளவினர் என்று யாவராலும் அறியக் கூடாத ஸ்வரூபம் உள்ளவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபீராத்மா என்று போற்றப் படுகிறார். 

விதிச: - எவ்வளவு உயர்ந்தோராயினும் தம்மை எத்தனை காலம் எவ்வளவு முயன்று துதித்தாலும் அந்தத் துதிக்கெல்லாம் எட்டாத சிறப்புகளும் மகிமையும் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விதிச: என்று போற்றப்படுகிறார். 

வ்யாதிச: - அவரவர்க்கு உரிய சிறப்புகளை அளித்து, உரிய அதிகாரங்களைத் தந்து, அவரவர்க்கு உரிய பலன்களையும் நியதியாகப் பெற நியமிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வ்யாதிச: என்று சொல்லப்படுகிறார். 

திச: - அவரவர்க்கு உரிய நிலையிலும், தகுதியிலும் நிறுத்தி உயிர்களைப் பூரணமாக மலரச் செய்கிறார் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் திச: என்று சொல்லப்படுகிறார். 

அநாதி: பூர்புவோ லக்ஷ்மீ:

அநாதி: பூர்புவோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்கத: | 
ஜனனோ ஜன ஜன்மாதி: பீமோ பீமபராக்ரம: || 



அநாதி: - படைப்புக்கு அதிகாரி தெய்வங்களாக இருக்கும் பிரம்மா முதலியவர்களாலும் அடையவும், அறியவும் அரியராய் இருப்பவர் பக்தியில் திளைக்கும் எளியவர்களால் கிட்டுவதற்குச் சுலபமானவராய் இருக்கும் காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநாதி: என்று சொல்லப்படுகிறார். 

பூர்புவ: - கடைத்தேறிய ஆத்மாக்களுக்குத் தாங்கும் நிலையமாகத் தாமே இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பூர்ப்புவ: என்று போற்றப்படுகிறார். 

லக்ஷ்மீ: - தம்மை அடைந்தவர்களுக்கு அனைத்து நன்மைகளும், சுபமும், சிறப்பும் தாமேயாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லக்ஷ்மீ: என்று கருதப்படுகிறார். 

ஸுவீர: - தம்மைச் சரணடைந்தோருக்கு உண்டாகும் தடைகளை நீக்கி நன்மையை அடைவிக்கும் திறலாகத் தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவீர; என்று கொண்டாடப்படுகிறார். 

ருசிராங்கத: - தமது திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தமது பக்தர்கள் கண்டு அனுபவித்துத் தொழும்படியாக அருள்செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ருசிராங்கத: என்று போற்றப்படுகிறார். 

ஜனன: - பக்தியே இல்லாதவர்களும் தன்னை உணர்ந்து பக்தி செய்யும்படியாக அவர்களை ஆக்கும் அருள் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனன: என்று கொண்டாடப்படுகிறார். 

ஜனஜன்மாதி: - பக்தியில் பிறக்கும் புதிய பிறவியைத் தருவதோடல்லாமல் அந்தப் பக்திமயமான பிறப்புக்குப் பலனாகவும் தாமே இருந்து அருள்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனஜன்மாதி: என்று போற்றப்படுகிறார். 

பீம: - உயர் நிலையும், உய்வும் அடைய அக்கறை கொள்ளாமல், அவன் அருள் செய்வதையும் விலக்கியபடித் தங்கள் உணர்ச்சிகளின்படிச் செல்வோருக்குப் பயமே உருவாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீம: என்று சொல்லப்படுகிறார். 

பீமபராக்ரம: - தம்முடைய பராக்ரமத்தால் தீயோர்களுக்கு அச்சம் விளைவிக்கும் லீலைகளை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீமபராக்ரம: என்று சொல்லப்படுகிறார். 

ஆதாரநிலயோSதாதா

ஆதாரநிலயோSதாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: | 
ஊர்த்வக: ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || 


ஆதாரநிலய: - சாதுக்கள் இருப்பதால்தான் உலகம் நிலைபெறுகிறது. அந்தச் சாதுக்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆதாரநிலய: என்று போற்றப்படுகிறார். 

(அ)தாதா - ஆதாரமாய் இருக்கும் நெறிகளைத் தாமே உபதேசித்தும், தாமே நடத்திக் காட்டியும் தாங்குபவராயும், தம்மை ஒருவர் தாங்குதல் அற்றவராயும் உள்ளவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தாதா என்னப்படுகிறார். 

புஷ்பஹாஸ: -- பூவிரிவது போல் புவனம் படைப்பவன்; பூவிரிந்து மணம் பரப்புவது போல் பக்தர்களின் உள்ளத்தில் மணப்பவன் 

ப்ரஜாகர: -- வயலை உழவன் விழித்திருந்து நோக்குவது போல் உயிர்களை உறங்காமல் காப்பவன் 

ஊர்த்வக: -- உலகளந்த உத்தமனாய் இருப்பதால் உறங்காது உலகம் காக்கின்றான் 

ஸத்பதாசார: -- பக்தர்களை எப்பொழுதும் முக்திக்கான சாதனங்களில் முனைப்பு கொள்ளச் செய்பவன் 

ப்ராணத: -- உலகத் துயர்களில் உழலும் ஜீவர்களைக் காப்பாற்றி உயிர் தருபவன் 

ப்ரணவ: -- ப்ரணவத்தைப் போதிப்பதன் மூலம் தனக்கும் ஜீவனுக்கும் உள்ள நித்யமான உறவை உணர்த்தித் தனக்கு என்றும் ஜீவன் சேஷமானது என்னும் ஞானத்தைத் தருபவன்; அவனும் ப்ரணவமும் ஒன்றே. 

பண: -- பக்தர்களிடம் சில சமயம் அவர்களைத் தனக்கு மேல் வைத்து அவர்களுக்கு அடங்கி நடப்பது போன்ற லீலைகளைச் செய்பவர். 

ப்ரமாணம் ப்ராணநிலய:

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணத்ருத் ப்ராணஜீவந: | 
தத்வம் தத்வவிதேகாத்மா ஜன்மம்ருத்யு ஜராதிக: || 



ப்ரமாணம் -- அறியாமை, ஒன்றை வேறொன்றாக அறிதல், விபரீதமாக அறிதல் என்பவை அறிவதில் உண்டாகும் மூன்று குறைகள். இந்த மூன்று குறைகளும் அற்ற ஐயம் திரிபு இல்லாத அறிவை எது ஏற்படுத்துமோ அதற்குப் பிரமாணம் என்று பெயர். மயர்வற மதிநலம் தருபவர் அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவே பிரமாணம் எனப்படுகிறார் 

ப்ராணநிலய: -- பறவைகள் தம் கூட்டில் சென்று அடைவது போன்று அவரிடமே உயிர்வர்க்கங்கள், ஜீவர்கள் புகலாக அடைகின்றனர்; அன்றாடம் வாழ்க்கையில் பிராணன்களும் அவரிடமே இலயம் அடைகின்றன என்பதால் ப்ராணநிலய: 

ப்ராணத்ருத் -- பெற்ற தாயாய்த் தந்தையாய் ஜீவர்களைத் தாங்குவதால் அவர் ப்ராணத்ருத் 

ப்ராணஜீவந: -- உடலில் ஜீவர்கள் தங்கி ஜீவிதம் நடைபெறப் பிராணன்களை அவரே நோக்கி நடத்துவதால் ப்ராணஜீவந: 

தத்வம் -- அறியப்படும் பொருளின் உள்ளது உள்ளபடியான மாறா இயல்பிற்குத் தத்வம் என்று பெயர். பிரபஞ்சம் அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பவை ஆகையால் மாறாத தத்வம் பரமாத்மாவே என்பதால் அவருக்குப் பெயரே தத்வம். 

தத்வவித் -- அறியப்படும் பிரபஞ்சத்தின் உள்ளபடியான தத்வமாக அவர் இருப்பதுமட்டுமின்றி அறியும் சித் என்னும் ஜீவனின் உள் தத்வமாகவும் அவரே இருக்கிறார் 

ஏகாத்மா -- சித், அசித் என்னும் இரண்டும் அவருக்குச் சேஷமாகவும், அவருக்குச் சரீரமாகவும் இருப்பவை ஆதலால் அவர் ஒருவரே ஒரே ஆத்மாவாக ஏகாத்மா என்று அழைக்கப்படுகிறார். 

ஜன்மம்ருத்யுஜராதிக: -- அவ்வாறு அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய் அவர் இருப்பினும் ஜீவர்கள், உலகப் பொருட்கள் ஆகியவற்றின் மாற்றங்கள், குறைகள் ஆகியவை தம்மிடம் நிழலாடாத வகையில் அவற்றைக் கடந்தவராக இருக்கிறார் 


பூர்புவ: ஸ்வஸ்தருஸ்தார:

பூர்புவ: ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ: | 
யக்ஞோ யக்ஞபதிர் யஜ்வா யக்ஞாங்கோ யக்ஞவாஹந: || 


பூர்புவ: ஸ்வஸ்தரு: -- பூமி, புவர்லோகம், ஸுவர்லோகம் என்னும் மூவுலகிலும் ஜீவர்கள் தம்தம் கர்மங்களினால் உந்தப்பட்டுப் பிறப்பு இறப்பு என்ற மாற்றங்களுக்கு ஆட்பட்டுத் திரிவது பறவைகள் கிளைக்குக் கிளை பறந்து திரிவதைப் போன்றது ஆகும். ஜீவர்களாகிய பறவைகள் தங்கி இளைப்பாறும் தருவாக, மரமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவே. 

தார: -- ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பவர் ஆகையால் தார: 

ஸவிதா -- அனைத்து உலகங்களையும் படைத்தவர் ஆகையால் ஸவிதா 

ப்ரபிதாமஹ: -- பிதாமஹர் ஆகிய பிரம்மனையும் படைத்தவர் ஆகையால் ப்ரபிதாமஹ: 

யக்ஞ: -- தாமே யக்ஞ ரூபமாக நின்று பக்தர்களுக்குப் பலன்களைத் தருகிறார் 

யக்ஞபதி: -- யக்ஞத்தின் ஸ்வாமி அவரே 

யஜ்வா -- அவரே யக்ஞம் இயற்றுவோரின் உள்ளே அந்தர்யாமியாக இருப்பதால் அவரே யஜமானர் (யக்ஞம் இயற்றுவோர்) என்று அறியப்படுகிறார். 

யக்ஞாங்க: -- யக்ஞத்தையே தம் சரீரமாகக் கொண்ட யக்ஞ வராஹர்; துணையாகச் செய்யப்படும் வேள்விகளும் தாமே ஆனவர். 

யக்ஞவாஹந: -- சரீரம் நல்லபடியாக இருந்தால்தான் எந்த அறமும் இயற்ற முடியும். அதுபோல் யக்ஞங்கள், ஆத்ம சாதனங்கள் எல்லாம் இயற்கை, ஆரோக்கியம், சூழ்நிலை என்று பலவிதமான காரணங்கள் நன்கு அமையப் பெற்றால்தான் நடைபெற்றுப் பலன்களை அடையலாகும். அந்தக் காரணங்கள் உட்பட அனைத்திற்கும் அவர் அருள் இருந்தால்தான் நடக்கும் என்பதால் அவரே யக்ஞத்தைச் சுமந்து செலுத்தி, நடைபெற வைத்து, பூர்த்தியாக ஆக்கிப் பலன்களையும் தருகிறார் என்பதால் அவரே யக்ஞவாஹனம் எனப்படுகிறார். 


யக்ஞப்ருத் யக்ஞக்ருத் யக்ஞீ

யக்ஞப்ருத் யக்ஞக்ருத் யக்ஞீ யக்ஞபுக் யக்ஞஸாதந: | 
யக்ஞாந்தக்ருத் யக்ஞகுஹ்யமந்நமந்நாத ஏவ ச || 


யக்ஞப்ருத் -- யக்ஞத்தின் முழுமையையும் பேணிக் காப்பவரும், குறைகளை நிறைவு செய்து முழுமை அடைய வைப்பவரும் அவரே 

(யக்ஞம் என்பது தேவதைக்காகச் செய்யப்படும் திரவியத் தியாகம் என்று ஒரு பொருள். மேலும் ஆழ்ந்து நோக்கினால் மனிதன் தன்னிடம் இருக்கும் கண்ணிற்குத் தெரிந்த சௌகரியங்களைக் கண்ணிற்குத் தெரியாததும் எதிர்காலத்தில் மிகுந்த முயற்சியால் அடையப்பட வேண்டியதுமான இலட்சியங்களுக்காகத் தியாகம் செய்துதான் பெற வேண்டியிருக்கிறது. அந்த இலட்சியங்கள் ஆரம்பத்தில் விழுமியங்கள் என்னும் வடிவில்தான் கருத்துகளாக இருக்கின்றன. மிகச் சிறந்த இலட்சியம் கடவுளை அடைதல். ஆத்ம ஞானம் என்னும் பெருநிலை. ஆனால் அதுவோ இன்று கண்ணுக்குத் தெரிவதாக இல்லை. இன்று கண்கண்ட சுகங்களான பொருள், இன்பம் ஆகியவற்றில் நாட்டத்தை விட்டுத்தான் அந்தப் பெரும் இலட்சியத்தை நோக்கிப் பெரும் யக்ஞம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த யக்ஞத்தில் தியாகம் செய்யப்படுவதோ மூன்று விஷயங்கள். ஒன்று நான், எனது என்னும் அகங்காரத்தையும், மமகாரத்தையும் தியாகம் செய்தல். இரண்டு, நான் தான் செயல்களைச் செய்கிறேன் என்னும் கர்த்தா என்னும் எண்ணத்தை விடுதல். மூன்று பலன்களில் நாட்டத்தை விடுதல். ஆத்ம ஞானம் என்னும் இலக்கை எட்டத் தடையாய் இருப்பவை இவை. இந்த யக்ஞத்தில் அவன் அருளே ஆரம்பம் முதல் நிறைவு வரையிலும் துணை) 

யக்ஞக்ருத் -- உலகில் மக்களின் நன்மைக்காக வேண்டி இந்த யக்ஞம் என்னும் முறையை அவரே ஏற்படுத்தியுள்ளார் 

யக்ஞீ -- யக்ஞத்தின் தலைவரும் பிரபுவும் அவரே 

யக்ஞபுக் -- யக்ஞத்தின் பலன்களை அனுபவிப்பவரும் அவரே 

யக்ஞஸாதந: -- யக்ஞம் நிறைவேறுவதற்கான துணையாக இருப்பவரும் அவரே 

யக்ஞாந்தக்ருத் -- பிரம்மஞானம் அடைவதே அனைத்து யக்ஞங்களின் இறுதி இலட்சியம். அந்தப் பிரம்ம ஞானத்தை அருள்வதன் மூலம் அவரே யக்ஞாந்தக்ருத் ஆகிறார். 

யக்ஞகுஹ்யம் -- தங்களுக்குப் பிடித்த சில பலன்களுக்காகச் செய்யப்படுவது யக்ஞம் என்னும் சாதாரண கருத்துள்ளவர்களுக்குப் புரியாத கருத்து, ‘ஏன் யக்ஞத்தை மூவிதத் தியாகத்துடன் கடவுளைக் குறித்தே செய்ய வேண்டும்?’ என்பது. யக்ஞத்தின் முழுமையாகக் கடவுள் இருப்பதால் அவரைக் குறித்து, அவருக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் யக்ஞம் அனைத்து நிறைவையும் இயல்பாகவே பெற்று நிற்கும். யக்ஞத்தின் இரகசியம் கடவுளே என்பதால்தான் யக்ஞகுஹ்யம் எனப்படுகிறார். 

அந்நம் -- உயிரையும், உடலையும் வளர்ப்பது அன்னம். உயிர்களையும், உலகங்களையும் போஷிப்பவர் ஆகையால் திருமால் அந்நம் எனப்படுகிறார் 

அந்நாத: -- உணவைத் துய்ப்பவரை அந்நாதர் என்று சொல்லலாம். அனைத்துப் பலன்களையும் உள்ளுயிராய் நின்று திருமாலே துய்ப்பவர் ஆக இருப்பதால் அவரே அந்நாத: எனப்படுகிறார். 

ஏவ ச - திருமாலே உணவும், உண்போனும் இரண்டுமாக இருக்கின்றார் என்று வலியுறுத்துகிறது. 

ஆத்மயோநி: ஸ்வயம்ஜாதோ

ஆத்மயோநி: ஸ்வயம்ஜாதோ வைகாந: ஸாமகாயன: | 
தேவகீநந்தன: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசந: || 


ஆத்மயோநி: -- உலகின் அடிப்படைக் காரணமும் அவரே; பக்தர்களுடன் பாலில் இனிப்பு போல் கலந்து பழகும் பண்பினர் 

ஸ்வயம்ஜாத: -- உலகின் நிமித்த காரணமும் அவரே; பக்தர்களின் பிரார்த்தனைகள் இல்லாமலும் சில சமயம் அவரே அவதாரம் எடுக்கின்றார் 

வைகாந: -- அவர் அருளால் ஜீவன் முக்தி அடையும் பொழுது பவநோய் என்பது இருந்த சுவடே தெரியாமல் அகழ்ந்து அகற்றப்பட்டு விடுகிறது. 

ஸாமகாயந: -- அழுகையில் புதைந்திருந்த ஜீவர்கள் முக்தியில் ஆனந்தத்தில் முழுகிப் பாடி உகக்கும்படி ஆக்குகின்றார் 

தேவகீநந்தன: -- இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்த திவ்ய நாமங்கள் எல்லாம் இதோ இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தத் தேவகீ நந்தனனைக் குறித்துத்தான் என்பதை அறிவாயாக 

ஸ்ரஷ்டா -- உங்கள் உறவினன் போலும், நண்பன் போலும் இருக்கும் இந்தத் தேவகீநந்தனனே உலகைப் படைத்தவன். இதுவே உண்மை. 

க்ஷிதீச: -- புவியின் தலைவன் இவனே. எனவேதான் பூமியின் துயர் தீர்க்க அவதரித்துள்ளான். 

பாபநாசந: -- அவனை நினைத்தாலே போதும். பாபங்கள் பறந்தோடும். 

சங்கப்ருந்நந்தகீ சக்ரீ

சங்கப்ருந்நந்தகீ சக்ரீ சார்ங்கதந்வா கதாதர: | 
ரதாங்கபாணிரக்ஷோப்ய: ஸர்வப்ரஹரணாயுத: || 
ஸர்வப்ரஹரணாயுத: ஓம் நம:


சங்கப்ருத் -- பிரகிருதி தத்வத்தையே சங்கமாகக் கொண்டு தரிக்கிறார் 

நந்தகீ -- வித்யைகளின் முழுத்தொகுதியான நந்தகி என்னும் வாளைத் தரிப்பவர் 

சக்ரீ -- மனம் என்னும் தத்துவத்தையே சக்ரமாகத் தரிக்கிறார் 

சார்ங்கதந்வா -- இந்திரியங்கள் எல்லாம் எழுகின்ற மூலமான அகங்கார தத்துவத்தைச் சார்ங்கம் என்னும் வில்லாகத் தரிக்கிறார் 

கதாதர: -- புத்தி தத்துவம் என்னும் கௌமோதகீ என்னும் கதையைத் தரிக்கிறார் 

ரதாங்கபாணி: -- ரதத்தின் அங்கமான தேர்ச்சக்கிரத்தை அன்றோ கையிலேந்திச் சுழட்டியபடி அன்று என்னை நோக்கி வந்தார் இந்தத் தேவகீநந்தனர்! 

அக்ஷோப்ய: -- சரணாகதி அடைந்தவர்களைக் காத்தே தீருவது என்னும் அவருடைய தீர்மானமான உறுதியை அவர் தம்மாலும் கூட அசைக்க முடியாது என்பதால் அவர் அக்ஷோப்யர் 

ஸர்வப்ரஹரணாயுத: -- இந்த ஆயுதம்தான் என்று இல்லாமல் கணக்கற்ற ஆயுதங்கள் உடையவர். அதுமட்டுமின்றி எதையும் எந்நேரத்தும் எவ்வாறும் ஆயுதமாக ஆக்கிக்கொள்ளும் வல்லபர். 

மீண்டும் ஸர்வப்ரஹரணாயுத: என்னும் நாமத்தைச் சொல்வதால் மிக உயர்ந்த கிரந்தமான ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவு அடைகிறது என்பதைக் காட்டுகிறது. ஓம் என்னும் பிரணவத்தைச் சொல்லுவதால் ஸர்வமங்களமும் உண்டாவதைக் குறிக்கிறது. நம: என்று சொல்லி முடிப்பதால் திருமாலைச் சரணடைந்தோம் என்பதற்கு அடையாளமாக நம்மால் செய்யலாகும் அனுஷ்டானம் நம: என்னும் கைகூப்புச் செய்கையே என்பது உணர்த்தப் படுகிறது. ஸ்ரீவைகுண்டத்திலும் நித்யசூரிகளும் கூட எப்பொழுதும் நம: நம: என்று கைகூப்பியவண்ணம் திகைத்துப் பார்த்தவண்ணம் நிற்கின்றனர் என்று சுருதியே முழங்குகிறது.

வனமாலீ கதீ சார்ங்கீ

வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ | 
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது || 


வனமாலையைத் தரித்தவரும், கௌமோதகீ என்னும் கதையைத் தரித்தவரும், சார்ங்கம் என்னும் வில்லுடையவரும், சங்கம் சக்ரத்தைத் தரித்தவரும், நந்தகீ என்னும் ஒள்வாள் தரித்தவரும் ஆன திருமால் ஆகிய ஸ்ரீமாந் நாராயணர், விஷ்ணு, வாஸுதேவர் நம்மைக் காப்பாற்றட்டும். 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கற்பதால் விளையும் பலன்கள்

கேசவனின் புகழ் பாடும் ஆயிர நாமங்கள் இவை. திவ்யத்தின் திரட்டு இவை. இவற்றைப் பாடினாலோ, கேட்டாலோ இவ்வுலகிலும் மற்று அவ்வுலகிலும் அசுபம் என்பது சிறிதும் நெருங்க இயலாது. வாழ்க்கையில் பல தொழில்களில் உள்ளோரும் இதனால் பலன் பெறுகின்றனர். பல நோக்குகள் உள்ளோரும் தம் தம் நோக்கத்தில் இதனால் வெற்றி பெறுகின்றனர். அறிவு மற்றும் ஞானம் குறித்து முனைபவர்களுக்குத் தெளிந்த தத்துவ ஞானம் ஏற்படுகிறது. உலக வாழ்க்கையில் நியாயமான முறையில் சிறக்க வேண்டும், நல்ல ஆட்சியாளர்களாக வெற்றி பெற வேண்டும்; நல்ல வியாபாரிகளாகச் செழிக்க வேண்டும்; அலுவலகப் பணிகளில் நல்ல வளர்ச்சியும், சந்தோஷமும் அடைய வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஆயிர நாமம் கற்பதால் நல்ல பலன் உண்டாகிறது. நல்ல புகழ், கீர்த்தி, பெருமை முதலியன இதைக் கற்பவர்களுக்கு உண்டாகின்றன. நோயிலிருந்து விடுதலை; பயத்திலிருந்து விடுதலை; ஆபத்திலிருந்து விடுதலை; மனத்துயர்களினின்றும் விடுதலை இவையெல்லாம் இதைக் கற்பதால் விளைகின்றன. தினமும் பக்தியுடன் ஆயிர நாமங்களால் துதிப்பவர் பல இடர்ப்பாடுகளையும் கடக்கின்றனர். வாஸுதேவனைச் சரணடைந்து வழிபடும் மனிதர் அனைத்துப் பாங்களினின்றும் விடுபட்டு என்றும் நிலைத்த பெருநிலையான பிரம்மத்திடமே செல்கின்றனர். 

ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித் | 
ஜன்மம்ருத்யு ஜரா வ்யாதிபயம் வாப்யுபஜாயதே || 

வாஸுதேவனின் பக்தர்கள் அசுபம் என்றால் என்ன என்றே அறியார்கள். அவர்களுக்கு பிறப்பால் பயம், இறப்பால் பயம், முதுமையால் பயம், வியாதியினால் பயம் என்பவை ஒரு நாளும் உண்டாகா. 

புருஷோத்தமனின் பக்தர்கள் எப்படி இருப்பார்கள்? 

அவர்களிடம் குரோதம் இருக்காது; மாச்சரியம் என்பது இருக்காது; லோபத்தனம் இருக்காது; நன்மையற்ற மதி என்பது இருக்காது. மாறாகப் பலவித புண்ணியங்களும் அவர்களிடத்தே ஒருங்கு திகழும். அப்படி இருப்போரே புருஷோத்தமனின் பக்தர்கள் ஆவர். 

என்ன கஷ்டம் இருந்தாலும், என்ன இடைஞ்சல்கள் இருந்தாலும், என்ன வியாதிகள் இருந்தாலும், மனக்கிலேசங்கள் இருந்தாலும் ’நாராயண’ என்னும் நாமத்தை உச்சரிப்பதால் அத்தனை துக்கங்களும் விடுபட்டுச் சுகம் ஏற்படுகிறது. 

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா 
புத்யாSSத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் | 
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி || 

உடலால், வாக்கால், மனத்தால், இந்திரியங்களால், புத்தியால், என்னால் நானாகவோ அல்லது பிரகிருதியின் சுபாவத்தாலோ எதை எதைச் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே பரமாகச் சமர்ப்பித்து விடுகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

--------------------------------------------------------------------------------------------------









Thanking you

Yours faithfully
R.Narasimhan
*****************************
R.NARASIMHAN
No.3, ARIMUTHU ACHARI STREET,
TRIPLICANE
CHENNAI - 600005
TAMILNADU
INDIA
email :
sriharimurali@yahoo.com
r_r_murali@yahoo.com
rnarasimhan@rediffmail.com
****************************