ராதே கிருஷ்ணா 07-02-2025
தமிழ்நாடு ரெசிப்பீஸ், புதிய படத்தைச் ஆல்பத்தில் சேர்த்துள்ளார்: பொடி வகைகள்

— Dindigul இல்.
3- வகையான ரசப்பொடி.....
உடுப்பி ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீர் மிளகாய் - இரண்டரை கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - கால் கப்
* வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன்
* கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 ஆர்க்கு
* தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, மிளகாயைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டுச் சூடாக்கி தனியா, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும் (தனியா, கறிவேப்பிலையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்). ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். உடுப்பி ரசப்பொடி தயார். இந்தப் பொடி ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்........


























ஆந்திரா ரசப்பொடி
தேவையானவை:
* காய்ந்த மிளகாய் - 2 கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - அரை கப்
* வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
* மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
* கட்டிப் பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆந்திரா ரசப்பொடி தயார்... ஓம் 































மைசூர் ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீரி மிளகாய் - 15 (அ) 20
* தனியா (மல்லி) - அரை கப்
* மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கொப்பரைத் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். மைசூர் ரசம் செய்யும்போது இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்....