Saturday, February 27, 2021

அர்த்த பஞ்சகம்

 ராதே கிருஷ்ணா 28-02-2021




திருமந்திரம்           - ஓம் நமோ நாராயணாய 

த்வய மந்திரம்       -  ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே 

சரமஸ்லோகம்   -   ஓம் நமோ நாராயணய 

கடல்     - ஸ்ரீ மந் நாராயணன்  - உப்பு - கருணை  

காள மேகம்  -   நம்மாழ்வார் 

மலை    -   குணங்கள் - நாதமுனிகள் 

உய்யக்கொண்டான் , மணக்கால் நம்பி 

காட்டாறு - ஆளவந்தார்  (யாமுனாச்சாரியார்)  5 கிளை நதிகள் -  ஏரி 

ராமானுஜர் ஆச்சார்யர்கள் 

ஆளவந்தார் 

5 கிளை நதிகள்

1   நம்பி  ஜெய மகா மந்திரம் (ஓம் நமோ நாராயணாய)

2.  பெரிய திருமலை நம்பி 

3.  நம்பி 

4.  திருமாலை ஆண்டான் 

5.  திரு அரங்கப்பெருமாள் அரையர் 

கருணை வெள்ளம் 

ராமானுஜர்  - ஏரி 

74 கணவாய்கள் - 74 சிம்ஹாசனதிபதிகள் 







அர்த்த பஞ்சகம் 

1.  ஈஸ்வரன்  இயல்பு  (அவதாரங்கள்)

பரதத்வம், விபவம், வியூகம், அந்தர்யாமிதவம், 

2. ஆன்மாவின் இயல்பு 

நித்தியர், முக்தர், பக்தர்(தனைப்பட்டிருப்பவர்), கேவலர், முமுக்ஷுக்கள் 

3. ஆணின் அடையும் பயன் புருஷார்த்தம், புருஷனால் (ஆன்மாவினால்), அடையப்படுவது, அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்), ஆன்ம அனுபவம், பகவதனுபவம், 

4, வழிகள் கர்மம், ஞானபக்தி , பிரபத்தி, ஆச்சார்ய அபிமானம்,

5. விரோதிஸ்வரூப விரோதி, பரதத்வ விரோதி, புருஷார்த்த விரோதி, உபாய விரோதி, ப்ராப்த்தி  விரோதி 


வைஷ்ணவர்களுக்கு ராமானுஜரின் 72 கட்டளைகள்!

 ஏப்ரல் 24,2017



  12  2 Google +2 
 

1. ஆச்சார்யர் திருவடி பணிந்து போவது போல் அனைத்து வைஷ்ணவர்களிடமும் நடக்க வேண்டும்.
2. ஸம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில் நம்பிக்கை வேணும்.
3. புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும்.
4. மதச்சார்பற்ற ஞானம், அறிவுடன், போதும் என்று இராமல் இருக்க வேண்டும்.
5 . பகவத் சரித்ரங்கள் சேஷிடிதங்கள் வாக்யங்களில் உகந்த ஈடுபாடுடன் இருக்க வேண்டும்.
6. ஆச்சார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு . மீண்டும் புலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும்.
7. அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி இருக்க வேண்டும்.
8. சந்தனம்,மலர்,நறுமணம் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு இருக்க கூடாது.
9. கைங்கர்யபரர் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது,எம்பெருமானின் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது அடையும் இன்பம் அடைய வேண்டும்.
10. அடியார் அடியானே, அவனை அவன் அடியானை விட சீக்கிரம் அடைகிறான், என்பதில் உறுதி கொள்ள வேண்டும்.
11. ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ இன்றி அழிவான்.
12. வைஷ்ணவர் வாழ்வுமுறை அவனை அடையும் உபாயம் என்று கருத கூடாது.
13. அவன் ஒருவனே அடையும் குறிக்கோள்.
14. கைங்கர்ய பரர்களை மரியாதை இன்றி நடத்த கூடாது.
15. ஸ்ரீ வைஷ்ணவரை பார்த்ததும் முதலில் அடி பணியாமல் இருக்க கூடாது.
16. பகவத் சன்னதியிலோ அவன் அடியார்கள் இருந்தாலும் ஆன்மிகர் கூட்டத்திலோ காலை நீட்டி இருக்க கூடாது.
17. திரு கோவிலை நோக்கியோ . ஆசார்யர் திரு மாளிகை நோக்கியோ கைங்கர்ய பரர் திரு மாளிகை நோக்கியோ காலை நீட்ட கூடாது.
18. காலையில் எழுந்ததும் குரு பரம்பரை அனுசந்திகவும்.
19. பெருமாள் எழுந்து அருளும் பொழுது முன் வரும் திவ்ய பிரபந்த கோஷ்டி பார்த்ததும் த்வயம் மகா மந்த்ரம் அனுசந்தித்து கொண்டு சேவிக்கவும்.
20. திருநாம சங்கீர்த்தனத்தின் நடுவிலோ,கைங்கர்யபரர் களை பாராட்டும் பொழுதோ நன்றாக அடிபணிந்து வணங்க வேண்டும்.நடுவில் கூட்டத்தில் இருந்து போவது மிக பெரிய பாவமாகும்.

21. உன்னை தேடி  வைஷ்ணவர் வருகிறார் என்று அறிந்தால் முன்னமே சென்று வர வேற்க வேண்டும் . அவர் விடை கொள்ளும் பொழுது நடுவழி வரை கூட செல்ல வேண்டும் . இதை செய்யாவிடில் மிக பெரிய பாவமாகும்.
22. அடியார் அடியானாக இருக்க ஆசை கொள்ள வேண்டும்.அவர்கள் திருமாளிகை சென்று கைங்கர்யம் செய்து,அவர்களை உனக்கு முன், மரியாதையாக நடத்தவேண்டும்.
23. திருகோவிலையோ, திரு கோபுரத்தையோ, திரு விமானத்தையோ கண்டால் கைகூப்பி வணங்கவேண்டும்.
24. மறந்தும் புறம் தொழாமல்,அப்படி பட்ட கோவில்கள் கலை நயங்களுடன் இருந்தாலும் காணாமல் இருக்கவேண்டும்.
25. மற்றை தெய்வ சேஷிடிதங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும் ஈர்க்க கூடாதவை.
26. அவனை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுதோ அவன் அடியார் கைங்கர்ய பரர்களை புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கும் பொழுதோ, நடுவில் குருக்கேபேசி தடங்கல் செய்ய கூடாது.
27. ஸ்ரீ வைஷ்ணவர் நிழலை கூட தாண்ட கூடாது.
28. நம் நிழலும் அவர்கள் மேல் படாமல் இருக்கும் படி கவனம் வேண்டும்.
29. நன்றாக நீராடிய பின்பே ஸ்ரீ வைஷ்ணவரை தொட்டு பரிமாற்ற வேண்டும்.
30. ஏழை ஸ்ரீவைஷ்ணவன் உன்னை முதலில் வணங்கினால்,அவரை அவமரியாதை உடன் நடத்த கூடாது.அப்படி நடத்தினால் மிக பெரிய பாபம் வரும்.
31. ஸ்ரீவைஷ்ணவர் உன்னை முதலில் வணங்கி அடியேன் என்றால்,அவருக்கு அவமரியாதை காட்டக் கூடாது . அப்படி செய்தால் மிக பெரிய பாபம் ஆகும்.
32. ஸ்ரீ வைஷ்ணவர் பற்றிய குற்றம் குறைகள். சோம்பல்தனம் . தூங்கி வழிவது . தாழ்ந்த பிறவி . போன்றவை . அறிந்தால் அது பற்றி மற்றவர் இடம் பேசாமல் நமக்கு உள்ளேயே வைத்துகொள்ள வேண்டும் . அவர்களின் நல்ல பண்பை மட்டுமே பேச வேண்டும்.
33.  பெருமாள் தீர்த்தமும் ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தமும் சமாச்ரண்யம் ஆகாதவர் முன்னிலையில் சுவீகரித்து கொள்ள கூடாது.
34. தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறியாத ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம் சுவீகரித்து கொள்ள கூடாது.
35. ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம் நித்யம் எப்பாடு பட்டாலும் சுவீகரிக்க வேண்டும்.
36. கைங்கர்ய பரர்கள் உடன் நம்மை தாழவே பண்ணி கொள்ள வேண்டும்.
37. அறியாமல் நாஸ்திகர் மேல் தீண்ட பெற்றால் நீராடி ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சுவீகரித்து சுத்தி படுத்தி கொள்ள வேண்டும்.
38. பற்றற்ற ஞானவான்கள் பகவான் ஒக்க எண்ணி அவர்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.
39. அப்படி பட்டவர்களின் பிறப்பு போன்றவற்றை மதியாமல்,நம்மை உய்ய கொள்ள வந்தவர்கள் என்று எண்ணி போக வேண்டும்.
40. நாஸ்திகன் வீட்டில் பெருமாள் தீர்த்தம் சுவீகரிக்க கூடாது.

41. அப்படிபட்டவர்கள் வீட்டில் பெருமாளை சேவிக்க கூடாது.
42. ஆனால் திரு கோவில்களில் அப்படி பட்டவர்கள் இருந்தாலும் பெருமாள் பிரசாதம் ஸ்வீகரிக்காமல் இருக்கக் கூடாது.
43. விரதம் அனுஷ்டிக்கும் பொழுதும் திரு கோவில் பிரசாதம் கொடுத்தால் மறுக்க கூடாது.
44. பெருமாள் பிரசாதம் மிகவும் புனிதம். பாபங்களை போக்கும். வேண்டாதவர் கொடுக்கும் பிரசாதம் என்றாலும் மறுக்க கூடாது.
45. ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டத்தில் தற் புகழ்ச்சி கூடாது.
46. மற்றவரை வெட்க படுத்தும் படி செய்ய கூடாது.
47. அவன் அடியாரை புகழவும் கைங்கர்யம் செயவும் எல்லா பொழுதும் போக வேண்டும்.
48. நித்யம் ஒருமணி நேரமாவது ஆசார்யர் புகழை பாட வேண்டும்.
49. திவ்ய பிரபந்தங்களிலும் குருபரம்பரையிலும் நித்யம் பல மணி நேரம் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டும்.
50. தன்னை பற்றியே எண்ணி இருப்பாருடன் சேர வேண்டாம்.
51. வெளியில் மட்டும் ஸ்ரீ வைஷ்ணவ சின்னம் கொண்டு உள்ளே ஸ்ரீ வைஷ்ணவ சிந்தனை இல்லார் உடன் நட்பு கூடாது.
52. பழி சொல்வார் வதந்தி பரப்புவார் உடன் நட்பு கூடாது.
53. மற்ற சமயத்தார் உடன் கலந்த பாபம் போக்க, நல்ல ஸ்ரீ வைஷ்ணவர் சேர்க்கை வேண்டும் .
54. அவன் அடியாரை களங்க படுத்தும் ,ஆச்சர்யர்களை இகழும், புலி தோல் போத்திய மானிடரை மதிக்க கூடாது.
55. த்வயம் அனுஷ்டான நிஷ்டர்கள் கூட்டம் நாடி போக ஆசை பட வேண்டும்.
56. உபாயாந்தரன்களை நாடுவாரி விட்டு பிரபத்தி நிஷ்டர் சகவாசம் கொள்ள வேண்டும்.
57. தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறிந்தார் உடன் சேர ஆசை கொள்ள வேண்டும்.
58. ஐச்வர்யார்திகள் சேர்க்கை தவிர்த்து பகவல் லாபார்திகள் சேர்க்கைக்கு ஆசை பட வேண்டும்.
59. ஸ்ரீ வைஷ்ணர் நம் பக்கல் செய்த குற்றம் கணிசியாமல் அவர்களை பழி வாங்க எண்ணாமல் கட்டு பட்டு இருக்க வேண்டும்.
60. பரம பத கைங்கர்யம் ஆசை பட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் நலத்துக்கு பாடு பட வேண்டும்.

61. சரணாகதன். கைங்கர்ய பரர் வித்திக்கு கட்டளை படிக்கு மாறாக தனக்கு நன்மையே பயத்தாலும் நடக்க கூடாது.
62. பெருமாள் கண்டு அருளாத பிரசாதமோ . பெருமாளுக்கு சாத்தாத சந்தனமோ வெத்தலையோ புஷ்பமோ பானகமோ சுவீகரித்து கொள்ள கூடாது.
63. ஐஸ்வர்யார்திகள் தானாகவே கொடுப்பவற்றை சுவீகரித்து கொள்ளக் கூடாது.
64. நல்ல அனுஷ்டானம் குல பிறப்பு கொண்டவர் பிரசாதம் மட்டுமே ச்வீகரிகலாம்.
65. சாஸ்திரம் விதித்த ஒன்றையே, பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கண்ணுக்கு அழகாக இருப்பவை விதிக்க படாவிடில் சமர்ப்பிக்க கூடாது.
66. சாஸ்திரம் விதித்த படியே கண்டு அருள பண்ண வேண்டும்.
67. பெருமாள் பிரசாதம், புஷ்பம், புனிதம் என்ற உணர்வுடன் சுவீகரிக்க வேண்டும். போக பொருளாக கொள்ள கூடாது.
68. சாஸ்திரம் விதித்த படி நடப்பதே அவனுக்கு நாம் செய்யும் கடமை என்று உணர வேண்டும்.
69. ரகஸ்ய த்ரய நிஷ்டர்களை அவமதித்தால்,பேரு இழப்பு நிச்சயம். அவர்கள் அனுக்ரஹத்தால் பேரு சீக்கிரம் நிச்சயம் பெறுவோம்.
70. அடியார் அடியார் கைங்கர்யமே நமது குறிக்கோள் ஆக கொள்ள வேண்டும் அவர்கள் மனம் கோனும் படி நடந்தால் நாம் இழப்போம்.
71. திவ்ய திருமேனியை வெறும் கல் என்றோ,ஆசார்யரை வெறும் மனிதர் என்றோ, பாகவதர்கள் பிறப்பை இழிவாக எண்ணுபவனோ, புனித நீரை வெறும் தண்ணீர் என்று நினைப்பவனோ, திருமந்த்ரங்களை சொல் கூட்டம் என்று மட்டும் நினைபவனோ, பரமாத்மாவை தேவர்களில் ஒருவன் என்று எண்ணுபவனோ, அகல பாதாள இருட்டு நரகம் புகுவான்.
72. ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம். பெருமாள் திரு வடிகளை விட ஆச்சார்யர் அடி பணிபவனே நிச்சயம் பேரு பெறுவான். ஆச்சர்யர்களை மதிக்காதவன் பெருமாளை மதிக்காதவனை விட அதிக பாபம் செய்தவன் ஆகிறான்.ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் அவன் திருவடி தீர்த்தம் விட புனிதம் ஆனது. இதை நன்றாக நெஞ்சில் பதித்து கொண்டு ஆச்சார்யர் அடி பணிந்து வாழ வேண்டும்.