ராதே கிருஷ்ணா 18-03-2016
இராமானுஜரின் அருளுரைகள்
1. ஸ்ரீ வைஷ்ணவனையும் வணங்குதல் வேண்டும்
2. அவர்களுடைய உபதேசங்களில் நம்பிக்கை வைக்கவேண்டும்
3. புலனுணர்வுக்கு அடிமையாகக்கூடாது
4. லௌகீக அறிவுக்கு எல்லையுண்டு
5. ஆச்சார்யர்களுடைய போதனைப்படி நடத்தல் வேண்டும்
6. குருவின் கடாக்ஷம் விழுந்தால், புலனுணர்வுகள் உனக்கு தொந்தரவு தராது
7. குருவின் தயவு கொண்டு உயர்ந்த ஒருவன் ஆசைக்கு அடிமையாக மாட்டான்
8. பக்தர்களின் திருநாமங்களையும் இறைவனின் திருநாமங்களையும் ஒன்றுசேர நினைத்தல் வேண்டும்
9. பாகவதர்களை வணங்குகின்றவர் இறைவன் அருளுக்குச் சீக்கிரம் பாத்திரமாவார்
10.உண்மையானவைஷ்ணவனுக்கு சுயநலம் கிடையாது
11. இறைவனையும் ஆழ்வார் பாசுரங்களையும் ஆச்சாரியார் உபதேசங்களையும் சேவிக்க தினந்தோறும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கல் வேண்டும்
12. இறைவனிடம் சரணடைந்தவர்களை நாடிச் செல்ல வேண்டும்
13. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களோடு சேரக்கூடாது
14. புலனுணர்வே சொர்க்கம் என்று நினைக்கின்றவர்களைப் பார்க்கவே கூடாது
15. அர்ச்சாவதாரத்தை அலட்சியமாக நினைப்பவன் நரகத்துக்குப் போவான்
16. குருவை சாதரண மனிதனாக நினைப்பவனுக்கு உயர்வே கிடையாது
17. புண்ணிய தீர்த்தத்தை வெறும் நீராக நினைப்பவனுக்கு மோட்சம் இல்லை.
18. தெய்வ மந்திரங்களை வேறு ஓசைகளின் அடுக்காகக் கருதுபவனுக்கு முக்தி என்றுமே கிட்டாது
19. இறைவனை சில்லறை தெய்வங்களில் ஒருவனாக நினைப்பவனுக்கு நல்ல கதி என்னாளுமே இல்லை
20. கடவுளிடம் சரணடைந்துவிட்டால் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவே வேண்டாம்
21. கடமையைக் கடவுள் பணியாகக் கொண்டு செயலாற்றவேண்டும்
22. ஸ்ரீ பாஷ்யத்தைப் படிக்கவேண்டும். படிப்பதோடு மட்டுமில்லாமல், மட்ட்ரவர்களுக்குச் சொல்லித் தருதல் வேண்டும்
23. ஆழ்வார் பாசுரங்களையும் குறிப்பாக திருவாய்மொழியைப் படிக்க வேண்டும்
24. இதைச் செய்யாமுடியாவிட்டால், இறைவனுக்கும் அவனுடைய தொண்டர்களுக்கும் சேவை செய்தல் வேண்டும்
25. இதுவும் முடியாவிட்டால், யாத்வகிரிக்குச் சென்று குடிலை அமைத்துக்கொண்டு வாழவேண்டும்
26. இதுவும் இல்லாவிட்டால் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு த்வய மந்திரத்தைத் திணித்துக்கொண்டு இருக்கவேண்டும்
27. இதுவும் முடியாவிட்டால், ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை நாடி, அவன் உபதேசத்தின்படி வாழவேண்டும்
28. இவ்வுலகில் ஸ்ரீ வைஷ்ணவர்கல்தாம் உங்களுக்கு நண்பர்கள்
29. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் உங்களுக்கு எதிரிகள்
30. பக்தர்களை நாடி வாழவேண்டும்
31. நல்ல எண்ணம் நல்ல செயலுக்கு வழி வகுக்கும்
32. பிறரிடம் தவறு கண்டுபிடிக்கக்கூடாது
33. உலகிலேவரும் குற்றமற்றவராக இருக்கமுடியாது
இவ்வாறு சொல்லிக்கொண்டே இறைவனடி எழுந்தருளினார் ராமானுஜர். சிஷ்யர்கள், குரு அவர்களை அழக்கூடாது என்று கட்டளைடிட்டிருந்தாலும், துயரத்தை அடக்கமுடியாமல் அழுதார்கள்
திருவரங்கத்திலும் அதைச் சுற்றிலுமிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்கு கூடினர். வேத மந்திரங்களும், ஆழ்வார் பாசுரங்களும் ஒலித்தன. ராமானுஜர் பூதவுடல் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, ஈமக் கிரியங்கள் நடந்தேறின. கோயிலுக்குள் அடக்கம் செய்யப்பட்ட ஒரே சநாதன மதத்தலைவர் ராமனுஜர்தாம்.
ராமானுஜர் விக்கிரகம், திருப்பதி, காஞ்சி, ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது
ராமானுஜருடைய தத்துவம் அவருக்குப் பிறகு வந்தவர்களுடைய கருத்துக்களுக்கு அஸ்திவாரமிட்டது. ராமானந்தர், சைதன்யர், ராமதாஸ் ஆகியோர் பிற மதத் தாக்குதல்களை ராமானுஜர் கண்ட பக்திநெறி மூலம் சமர்ப்பித்தனர்.
ராமானுஜர் புத்தகம் : எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்
நன்றி நன்றி

No comments:
Post a Comment