ராதே கிருஷ்ணா 14-10-2019
இறைவனின் எட்டு குணங்கள்.
*********************************
பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை
There are eight aspects in which God can be experienced: as Light, Sound, Peace, Calmness, Love, Joy, Wisdom, and Power.
To experience Him as Light during meditation brings calmness to the mind, purifying it and giving it clarity. The more deeply one contemplates the inner light, the more one perceives all things as made of that light.
To experience God as Sound is to commune with the Holy Ghost, or Aum, the Cosmic Vibration. When you are immersed in Aum, nothing can touch you. Aum raises the mind above the delusions of human existence, into the pure skies of divine consciousness.
Peace is an early meditative experience. Peace, like a weightless waterfall, cleanses the mind of all anxiety and care, bestowing heavenly relief.
Calmness is another divine experience. This aspect of God is more dynamic and more powerful than that of Peace. Calmness gives the devotee power to overcome all the obstacles in his life. Even in human affairs, the person who can remain calm under all circumstances is invincible.
Love is another aspect of God — not personal love, but Love infinite. Those who live in ego-consciousness think of impersonal love as cold and abstract. But divine love is all-absorbing, and infinitely comforting. It is impersonal only in the sense that it is utterly untainted by selfish desire. The unity one finds in divine love is possible only to the soul. It cannot be experienced by the ego.
Joy is another aspect of God. Divine joy is like millions of earthly joys crushed into one. The quest for human happiness is like looking around for a candle while sitting out of doors in the sun. Divine joy surrounds us eternally, yet people look to mere things for their happiness. Mostly, all they find is relief from emotional or physical pain. But divine joy is the blazing Reality. Before it, earthly joys are but shadows.
Wisdom is intuitive insight, not intellectual understanding. The difference between human and divine wisdom is that the human mind comes at things indirectly, from without. The scientist, for example, investigates the atom objectively. But the yogi becomes the atom. Divine perception is always from within. From within alone can a thing be understood in its true essence.
Power, finally, is that aspect of God which creates and runs the universe. Imagine what power it took to bring the galaxies into existence! Masters manifest some of that power in their lives. The expression, “Gentle Jesus, meek and mild,” describes only one side of Jesus’s nature. The other side was revealed in the power with which he drove the moneychangers from the temple. Just think what magnetism it took to combat single-handedly all those men, entrenched as they were in habits and desires that had been sanctioned by ancient custom!
People are often appalled by the power they see expressed in the lives of saints. But remember, you will never find God until you are very strong in yourself. Power may exercise less appeal on your mind than other aspects of God, but it is important to realize that divine power, too, is a part of your divine nature.
Whatever aspect of God you experience in meditation, never keep it contained in the little chalice of your consciousness, but try always to expand that experience to infinity.
இறைவனின் எட்டு குணங்கள்.
*********************************
எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு.
அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு.
அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு.
அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும்.
அவையாவன.
****************
1. தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.
****************
1. தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.
இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.
-1-
தன்வயத்தனாதல்.
தன்வயத்தனாதல்.
ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
-2-
வரம்பில்லாத ஆற்றல் உடைமை
வரம்பில்லாத ஆற்றல் உடைமை
ஒரு கடவுள் என்றால் அவன் எல்லையில்லாத ஆற்றல் உடையவனாய் இருத்தல் வேண்டும். காரணம், பரந்து விரிந்துள்ள பிரபஞ்சம் எல்லையில்லாதது; எல்லையில்லாத பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கும் கடவுளின் ஆற்றலும் எல்லையில்லாத ஆற்றலாக இருக்க வேண்டும். எனவே வரம்பில்லாதா ஆற்றலுடைமையைக் கடவுளின் குணங்களில் ஒன்றாகக் கூறினர்.
பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை
அடுத்து பரந்து விரிந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவும் பரந்து விரிந்ததாக இருத்தல் வேண்டும். எனவே அதைப் படைக்கும் ஆண்டவனது அறிவு பிரபஞ்சம் முற்றும் அறிகிற முற்றறிவாக இருத்தல் வேண்டும். எனவே முற்றறிவும் கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.
-4-
இயற்கை உணர்வினன் ஆதல்.
இயற்கை உணர்வினன் ஆதல்.
அதோடு இறைவன் அறிகின்ற அறிவெல்லாம் அவனே உணர்ந்த அறிவாக இருக்க வேண்டும். இன்னொருவர் கற்றுக் கொடுத்து இறைவன் அறிவை உணர்கிறான் என்றால் அவன் இறைவனாக இருக்க இயலாது. எனவே தானே அறியும் அறிவை இறைவன் பெற்றிருத்தல் வேண்டும். இது இயற்கை உணர்வினன் ஆதல் என்று கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.
-5-
வரம்பில்லாத அருள் உடைமை.
வரம்பில்லாத அருள் உடைமை.
இறைவன் எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் பெற்று இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அவன் நம்மையெல்லாம் உயர்வு பெற கருணை பாலிக்க வேண்டும்; அருள் புரிதல் வேண்டும். அந்த அருளும் சில காலங்களில் சில பேர் மீது மட்டும் செலுத்துவதாக இருத்தல் கூடாது. அப்படி ஒருதலைப் பட்சமான இறைவனை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே எல்லாக் காலங்களிலும் வற்றாத எல்லோருக்கும் செய்கின்ற அருளை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆகவே பேரருள் உடைமை என்பதை இறைவனது எண்குணங்களில் ஒன்றாக வைத்தனர்.
-6-
வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.
வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.
அடுத்து ஆண்டவனின் அருளைப்பெற எல்லோருக்கும் ஒரு விருப்பம் ஏற்பட ஒரு காரணம் வேண்டும். ஓராயிரம் வேறுபாடுகளை உடைய உயிர்கள் அனைத்தும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக எண்ணுகின்றன. அதாவது ஈ, எறும்பு முதல் யானை வரை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இன்பமே வேன்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளன.
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்”
என்பது தொல்காப்பியம்.
ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்”
என்பது தொல்காப்பியம்.
ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.
-7-
தூய உடம்பினனாதல்.
தூய உடம்பினனாதல்.
இனி, நம்முடைய உடம்போ துன்பம் மிகுந்தது. கண்ணில் ஊளை, காதில் குறுமி, மூக்கில் சளி, வாயில் ஊத்தை, உடம்பில் வேர்வை நாற்றம் என வரும் இந்த உடம்பின் நிலைமையை எண்ணிப்பார்த்து,
ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்துவிட் டேன்இறைவா கச்சி ஏகம்பனே என்று பாடினார் பட்டினத்தார்.
பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்துவிட் டேன்இறைவா கச்சி ஏகம்பனே என்று பாடினார் பட்டினத்தார்.
இந்த உடம்பு போல ஒரு துன்பப் பொட்டலம் இறைவனுக்கு இருக்குமானால் அதில் கட்டுண்டு இறைவனும் நம்மைப் போல அவதியுறுபவனாக இருப்பான். அப்படி இருந்தால் அவன் வரம்பில்லாத இன்பம் உடையவன் ஆவது எப்படி?. எனவே அடியார்க்கு அருள் செய்ய உருவம் எடுக்க வேண்டி இருக்குமானால் அவன் சுதந்திரன் ஆதலினாலே அவனே உருவம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்தால் அந்த உடம்பு எவ்வித துன்பத்தின் சம்பந்தமும் இல்லாதிருக்க வேண்டும். இதனைத் தூய உடம்பினன் ஆதல் என்ற எண்குணங்களில் ஒன்றாகச் சான்றோர் காட்டினர்.
-8-
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்.
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்.
அடுத்து ஆன்மாக்கள் ஆகிய உயிர்கள் பேரா இயற்கை பேரின்பத்தை வேண்டி இறைவனைச் சென்றடையும் செம்மை நெறி பற்றிச் சென்றடைகின்றன என்று கூறுவர் ஆன்றோர். ஆகவே ஆண்டவன் இருக்கும் இடத்திலே துன்பங்கள் எள்ளளவும் இருக்கக் கூடாது. நமது உடம்பு போன்றவை பாசங்கள், தளைகள் எனப்படும். ஆண்டவனது உடம்பு தூய உடம்பாதாலினாலே, துன்பம் மிக்க பாசங்கள் எனப்படும் நம் உடம்பு போன்றவை ஆண்டவனை நெருங்கவே கூடாது. அவற்றிலிருந்து அவன் நீங்கி நிற்பதை இயல்பாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
இங்கே ஒன்றை ஒன்றாகக் கவனித்தல் வேண்டும். இறைவன் துன்பமே மிக்க பாசங்களை நீக்கிக் கொள்பவன் என்று கூறவில்லை; நீங்கி நிற்பவன் என்று கூறினர். அதாவது நீக்குதல் பிறவினை; நீங்குதல் தன்வினை. இறைவன் ஏற்கனவே துன்பமிக்கப் பாசங்களை உடையவனாய் இருந்து பின்னர் அரிய முயற்சிகள் பல ஆற்றி அவற்றிலிருந்து நீங்கியவன் அல்லன். அப்படியானால் ஒரு கேள்வி வரும். அதாவது ஒரு முறை பாசங்களை நீக்கிக் கொண்டான் என்பது சரி; மறுமுறை பாசங்கள் அவனைக் கட்டிவிடாது என்பது என்ன நிச்சயம்? எனவேதான் மிகவும் எச்சரிக்கையாக இயற்கையாகவே – இயல்பாகவே இறைவன் பாசங்களினின்றும் நீங்கி நிற்பதை ஒரு குணமாக உடையவன் என்று அவனது எண்குணங்களில் ஒன்றாக இதையும் வைத்தனர்.
இங்கே ஒன்றை ஒன்றாகக் கவனித்தல் வேண்டும். இறைவன் துன்பமே மிக்க பாசங்களை நீக்கிக் கொள்பவன் என்று கூறவில்லை; நீங்கி நிற்பவன் என்று கூறினர். அதாவது நீக்குதல் பிறவினை; நீங்குதல் தன்வினை. இறைவன் ஏற்கனவே துன்பமிக்கப் பாசங்களை உடையவனாய் இருந்து பின்னர் அரிய முயற்சிகள் பல ஆற்றி அவற்றிலிருந்து நீங்கியவன் அல்லன். அப்படியானால் ஒரு கேள்வி வரும். அதாவது ஒரு முறை பாசங்களை நீக்கிக் கொண்டான் என்பது சரி; மறுமுறை பாசங்கள் அவனைக் கட்டிவிடாது என்பது என்ன நிச்சயம்? எனவேதான் மிகவும் எச்சரிக்கையாக இயற்கையாகவே – இயல்பாகவே இறைவன் பாசங்களினின்றும் நீங்கி நிற்பதை ஒரு குணமாக உடையவன் என்று அவனது எண்குணங்களில் ஒன்றாக இதையும் வைத்தனர்.
அஷ்ட குணங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)
இப்படி எட்டு குணங்கள். தயை, க்ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயாஸம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா என்பவை அஷ்ட குணங்கள்.
‘தயை’ என்பது ஸர்வபூதங்களிடமும் அன்பு, அருளுடைமை. மநுஷ்ய வாழ்க்கையின் நிறைந்த பலன், பெரிய ஆனந்தம் அன்பு செய்வதுதான். அதுதான் அஸ்திவாரம், back-bone [முதுகெலும்பு] .
‘க்ஷாந்தி’ என்றால் பொறுத்துக் கொள்வது. நமக்கு வியாதி, விபத்து, தாரித்ரியம் முதலானவற்றால் உண்டாகிற கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வது ஒன்று. நமக்கு ஒருத்தர் கஷ்டத்தைக் கொடுக்கிறபோது அவரையும் மன்னித்து அன்பைக் காட்டுவது இன்னொரு விதப் பொறுமை.
‘அநஸூயை’ என்பது அத்ரி மஹரிஷியின் பத்னியான மஹா பதிவிரதையின் பேர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அஸுயை இல்லாதவள் அநஸூயை. (அநுஸூயை என்று ‘நு’ போட்டுச் சொல்வது தப்பு.) நம்மைவிட ஒருத்தன் நல்ல நிலையில் இருந்தால் வயிற்றெரிச்சல் படக்கூடாது. பொறாமையின்மைதான் அநஸூயை.
முதலில் சொன்ன அன்பு எல்லாரிடமும்; இரண்டாவதாகச் சொன்ன பொறுமை தப்புப் பண்கிறவனிடம்; பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்திலிருக்கிறவனிடம். அவன் நம்மைக் காட்டிலும் யோக்யதையில் குறைந்தவனாக இருந்தாலும்கூட, நமக்குமேல் ஸ்தானத்துக்குப் போய்விட்டான் என்றால் அஸூயைப்படக் கூடாது. ‘பூர்வ ஜன்மாவில் நம்மைவிடப் புண்ணியம் பண்ணியிருப்பான். அதனால்தான் பகவான் அவனை உயர்த்தி வைத்திருக்கிறான்’ என்று மனஸைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சௌசம் என்பது ‘சுசி’ என்பதை வைத்து ஏற்பட்டது. ‘சுசி’ என்றால் சுத்தம். ஸ்நானம், மடி வஸ்திரம், ஆஹார நிர்ணயம் முதலான ஆசாரங்கள் எல்லாம் ‘சௌசம்’ என்பதில் வரும். ‘சுத்தம் சுகம் தரும். சுத்தம் சோறு போடும்’ என்று பாமர ஜனங்களும் சொல்வார்கள். வெளியிலே நன்றாக சுத்தமாக இருக்கிறவனைப் பார்த்தாலே நம் மனஸுக்கும் சுத்தமாயிருக்கிறது.
ஸகல ஜனங்களுக்குமான ஐந்து தர்மங்களை மநு சொல்கிறபோதும் முதலில் அஹிம்ஸை, அப்புறம் ஸத்யம், அப்புறம் பிறர் பொருளில் ஆசையின்மை (அஸ்தேயம் – திருடாமலிருப்பது என்பது நேர் அர்த்தம்) என்ற மூன்றைச் சொல்லி, நாலாவதாக இந்த ‘சௌசம்’ என்பதையே சொல்கிறார். கடைசியாக இந்திரிய நிக்ரஹம் (புலனடக்கம்) என்பதைச் சொல்கிறார்*.
‘அநாயாஸம்’ என்பது ஆத்ம குணங்களில் அடுத்தது. ஆயாஸத்துக்கு எதிர்ப்பதம் அநாயாஸம். ‘லைட்’டாக இருப்பது என்கிறார்களே அதுதான் அநாயாஸம். ஆயாஸம் இல்லாமல், அதாவது எதையுமே ஒரு சுமையாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படாமல், ‘லைட்’டாக, லேசாக இருப்பது அநாயாஸம். எப்போது பார்த்தாலும் ‘உர்’ரென்று இருந்துகொண்டு, வாழ்க்கையில் தனக்கு எல்லாம் கஷ்டம் என்று புலம்பிக் கொண்டு, நொந்து கொண்டு இல்லாமல், எதிலும் கடுமையாகச் செய்யாமல், நிம்மதியோடு லேசாகச் செய்யவேண்டும். இப்படிச் செய்வதாலேயே ஆயாஸப் பட்டுக்கொண்டு செய்வதைவிடப் பலமடங்கு வேலை செய்து விடலாம். பதட்டமில்லாமல் பண்ணுவது அநாயாஸம். பட பட என்று செய்தால் நம்மையும் நெரித்துக் கொண்டு மற்றவர்களையும் நெரிப்பதுதான் மிஞ்சுமே தவிரக் காரியம் ஸரியாக ஆகாது. அநாயாஸம் ஒரு பெரிய Virtue (குணசீலம்). அலட்டிக் கொள்ளாமல் இருக்கிற குணம் அநாயாஸம். தானும் சிரமப்படாமல், மற்றவர்களையும் சிரமப்படுத்திக்கொண்டிராமல் இருப்பது அநாயாஸம். அநேக கர்மாநுஷ்டானங்களில் உடம்பால் சிரமப்படத்தான் வேண்டியிருக்கும். சிராத்தம் செய்வதென்றால் மத்யான்னம் இரண்டு மணி, மூன்று மணி வரை பட்டினி கிடக்கத்தான் வேண்டும். ஒரு யாகம் என்றால் அதில் இருக்கிற சரீர சிரமம் கொஞ்ச நஞ்சமில்லை; ஆகையால், இங்கே சிரமப்படக்கூடாது என்பது மனஸினால் சிரமப் படாமலிருப்பதைத்தான் குறிக்கும். எந்தக் காரியமானாலும் விக்கினங்கள் ஏதாவது வரத்தான் செய்யும். இதைப் பார்த்து மனஸை strain பண்ணிக்கொள்ளக்கூடாது. எல்லாம் பகவான் திட்டப்படி நடக்கிறது என்று, மனஸிலே பாரமில்லாமல் இருக்கவேண்டும். ஸங்கீத வித்வான் அநாயாஸாமாக தாரஸ்தாயி பிடித்தார் என்றால் என்ன அர்த்தம்? சிரம ஸாத்யமானதையே ஸுலபமாக்கிக் கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்? சிரமமான வாழ்க்கையை அப்படிப் பண்ணிக்கொள்வதுதான் ‘அநாயாஸம்’.
‘மங்களம்’ என்றால் மங்களந்தான்! ஆனந்தமாக – அதிலேயே ஒரு கம்பீரத்தோடு தூய்மையோடு ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதுதான் மங்களம். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டோ, மூக்கைச் சிந்திப் போட்டுக்கொண்டே இல்லாமல், ‘ஆஹா’ என்று எப்போதும் ஸந்தோஷமாக இருக்கவேண்டும். இதுதான் லோகத்துக்கு நாம் செய்கிற பெரிய ஒத்தாசை, பெரிய தொண்டு. பணத்தை வாரிக் கொடுப்பதை விட, வேறு ஸர்வீஸ்கள் பண்ணுவதை விட, நாம் போகிற இடமெல்லாம் நம் மங்களத்தாலேயே ஆனந்தத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதுதான் மற்ற ஜீவர்களுக்குப் பெரிய தொண்டு. ‘லைட்’டாக, லேசாக எதையும் ஸாதிப்பது அநாயாஸம். போகிற இடமெல்லாம் நாமே ஒரு ‘லைட்’ (தீபம்) மாதிரி ஒளியை, ஆனந்தத்தைக் கொடுப்பது ‘மங்களம்’. நாம் ஒரு இடத்துக்குப் போனால் அங்கேயிருப்பவர்கள் ‘குற்றம் கண்டு பிடிக்க வந்துவிட்டான்’ என்று முகத்தைச் சுளிக்கும்படியாக இருக்கக் கூடாது. எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான ஸந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும். நாமும் மங்களமாக இருந்து கொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.
‘அகார்ப்பண்யம்’ என்று அடுத்தது சொன்னேன். கிருபணனின் குணம் கார்ப்பண்யம். அப்படி இல்லாமலிருப்பது அகார்ப்பண்யம். கிருபணன் என்றால் லோபி. லோபித்தனம், கருமித்தனம் இல்லாமல் தான தர்ம சிந்தையோடு இருப்பது அகார்ப்பண்யம். மனஸார வாரிக் கொடுக்கிற குணம் வேண்டும்.
அர்ஜுனன் ரொம்பவும் dejected -ஆக, depressed -ஆக மனம் தளர்ந்து தேர்த்தட்டிலே உட்கார்ந்து, ‘யுத்தம் பண்ண மாட்டேன்’ என்று அழுதபோது அவனுக்கு ‘கார்ப்பண்ய தோஷம்’ ஏற்பட்டதாக கீதையில் சொல்லியிருக்கிறது. அந்த இடத்தில் ‘தன்னையே ரொம்பவும் தாழ்த்திக் கொண்டு தீனமாகப் போய் விட்டவன்’ என்று அர்த்தம். தன் விஷயத்திலேயே தான் லோபியாகி விட்டான் என்று அர்த்தம். அகார்ப்பண்யம் என்றால் இப்படி தீனனாக, நோஞ்சானாக, கையாலாகாதவனாக இல்லாமல் தீரனாக, நல்ல உத்ஸாஹ புருஷனாக, மனஸ்வியாக இருப்பது என்றாகும்.
‘அஸ்ப்ருஹா’ என்பது அஷ்டகுணத்தில் கடைசி. ‘ஸ்ப்ருஹா’ என்றால் பற்று. ‘அஸ்ப்ருஹா’ என்றால் பற்றின்மை, ஆசையின்மை. அத்தனை அனர்த்த பரம்பரைக்கும் ஆணி வேராக இருப்பது ஆசைதான். ஆனால் அதை அடியோடு வெட்டுவதுதான் ரொம்பவும் அஸாத்தியமாயிருக்கிறது. ஸம்ஸ்காரங்களைப் பண்ணி பண்ணி, அவற்றோடு அஷ்ட குணங்களையும் சேர்த்துச் சேர்த்து அப்பியாஸம் பண்ணிக் கொண்டு போகும்போது கடைசியில் இந்த ஆசையின்மை, பற்றின்மை, ‘அஸ்ப்ருஹா’ என்பது பூர்த்தியாக அநுபவத்தில் வருகிறது.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்று வள்ளுவர் சொன்னார்.
‘இப்படி ஈச்வரன் என்ற பற்றற்றானைப் பற்றிக் கொண்டு மற்றப் பற்றுகளை விட்டுவிட்டால் மட்டும் போதாது. அப்புறம் அந்த ஈச்வரனுடனும் பற்றைக் கத்தரித்து விடவேண்டும்’ என்று இன்னும் ஒருபடி மேலே போய்விட்டார் திருமூலர்:
ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசையைத்தான் தாகம் [வேட்கை] என்று புத்தர் சொன்னார். “ஜலம் வேணும் வேணும்” என்று தாகத்தில் பறக்கிற மாதிரி ஆசை வாய்ப்பட்டுப் பறப்பதை ‘திருஷ்ணா’ என்பார்கள். பிராகிருதத்தில் இதையே ‘தன்ஹா’ என்று புத்தர் சொன்னார். ஆசையைப் போக்கடித்துக் கொள்வதுதான் புத்தருடைய முக்கியமான உபதேசம். இது அஷ்ட குணங்களில் கடைசி. முதலில் சொன்ன தயை (love) தான் கிறிஸ்து மதத்துக்கு ஜீவநாடி.
இப்படி ஒவ்வொன்றை ஒவ்வொரு மதத்தில் ரொம்பவும் அழுத்தம் கொடுத்துச் சொன்னாலும் இந்த அஷ்ட குணங்களையுமேதான் கிறிஸ்து, புத்தர், நபி, நானக், ஜொராஸ்த்ரர், கன்ஃபூஷியஸ், இன்னும் என்னென்ன மதங்கள் இருக்குமோ அவை எல்லாவற்றின் ஸ்தாபகர்களும் சொல்லியிருக்கறார்கள். நேராக அவர்கள் இந்த எட்டைச் சொல்லாமலிருந்தாலுங்கூட மநுஷ்யனானவன் இந்த குணங்கள் இல்லாமலிருப்பதை எந்த மதஸ்தாபகரும் ஆதரித்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.
* தெய்வத்தின் குரல்–முதற் பகுதி “பொதுவான தர்மங்கள்” என்ற பிரிவில் முதல் மூன்று கட்டுரைகள் பார்க்க.
7. சத்யலோகம் 6. தபோலோகம் 5. ஜனோலோகம் 4. மஹர்லோகம் 3. சுவர்லோகம் 2. புவர்லோகம்↑ மேல் உலகங்கள் ஏழு______________________________________ 1. பூலோகம் - நாம் வாழும் மண்ணுலகு______________________________________↓கீழ் உலகங்கள் ஏழு
- அதலலோகம்
- விதலலோகம்
- சுதலலோகம்
- தலாதலலோகம்
- மகாதலலோகம்
- ரஸாதலலோகம்
- பாதாளலோகம்
No comments:
Post a Comment