Sunday, August 23, 2015

மிளகு சாதம்

ராதே கிருஷ்ணா 23-08-2015




மிளகு சாதம்


மிளகு     - 1 ஸ்பூன் கோபுரமாக

புளி      -   1 சிறிய எலுமிச்சை அளவு

பெருங்காயம், கல் உப்பு 3/4 ஸ்பூன் போட்டு மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் 6 ஸ்பூன் எண்ணையில் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் (அரைப்பதில் போடவில்லைஎன்றால்) தாளிப்பில் சேர்க்கவும். மிளகாய் 1 எடுத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பில் சேர்க்கவும்.

தாளித்ததில் விழுதைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம் வதக்கினால் போதும். பிறகு தேவையான சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும், விழுதை சாதத்திற்கு தேவையான அளவு சேர்க்கவும்.

































கொத்சு 2 வது வகை

ராதே கிருஷ்ணா 23-08-2015



கொத்சு 2 வது வகை


நெல்லிக்காய், கிச்சலிக்காய் , தக்காளி செய்யலாம்.

புளி      -   1 சிறிய எலுமிச்சை அளவு

நீட்டு மிளகாய்     -   6 - 8

வறுப்பதற்கு

கடுகு     3/4 ஸ்பூன்

வெந்தயம்    -   3/4 ஸ்பூன்

பெருங்காயம்     1 துண்டு ( அ ) 1/4 ஸ்பூன் பவுடர்

நீட்டு மிளகாய் 6 - 8 சேர்த்து நன்றாக வறுத்து போடி செய்து கொள்ளவும்.

காய் வெந்ததும் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் , பொடியை கலந்து (அடுப்பை சின்னதாக்கி ஸ்லோவில் வைத்துக் கொண்டு) கொதிக்கவிட்டு பிறகு நல்ல எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு,
1 மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.








































































Thursday, August 20, 2015

Rasam / Saaru / Saara



14. எலுமிச்சை ரசம் 


துவரம் பருப்பு 1/2 டம்ளர் குக்கரில் வேகவைத்து 2 தக்காளி பழத்துடன் நீர்க்க அரைத்துக்கொள்ளவும். 3/4 லிட்டர் இருக்கும்படி கரைத்துகொள்ளவும். உப்பு தேவையான அளவுபோடவும். 
பச்சை மிளகாய் மெல்லியதாக சிறிய அளவில் 2
இஞ்சி  - 1 சிறிய துண்டு போட்டு நன்றாக கொதிக்க விடவும்.  பிறகு ரசப் போடி 3/4 ஸ்பூன் போட்டு  பொங்கி வந்தவுடன் மிளகு சீரகப்பொடி 1 ஸ்பூன்  கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழம் 2 பிழிந்து எடுத்து அந்தச் சாறு சேர்க்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு கடுகு சீரகம் பெருங்கயத்தூள் போட்டு தாளிக்கவும்.

soppu hulipalya / keerai / pala ambatabaji



13. சொப்பு (கீரை) ஹுளிபல்ய செய்வது எப்படி


கீரை 1 கட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து, 2 பச்சை மிளகாயுடன் வதக்கிக் கொள்ளவும். புளி சிறிய எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு.

தாளிப்பதற்கு , கடுகு 1/2 ஸ்பூன் ,  உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன் , வெந்தயம் 1/2 ஸ்பூன்,  பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்.

கீரை வெந்ததும் புளி சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு தாளிக்கவும். பிறகு துவரம் பருப்பு சேர்த்து கொதி வந்தவுடன் 1/2 ஸ்பூன் அரிசிமாவை கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு பின் இறக்கவும்.

vagarna sambhar / thalitha sambhar / mentha uradha huli


12. தாளித்த சாம்பார் 

வெண்டைக்காய், கத்தரிக்காய், சிகப்பு பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்படுத்தலாம்.

துவரம்பருப்பு   - 3/4 டம்ளர் வேகவைக்கவும்.

புளி    சிறிய எலுமிச்சை அளவு 

தாளிப்பதற்கு 4 ஸ்பூன் எண்ணெய் , கடுகு 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், வெந்தயம் 1/2 ஸ்பூன், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

கையுடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்தவுடன் வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு 1/2 ஸ்பூன் அரிசி மாவை கலக்கி ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.

Poricha Koottu

10. பொரிச்ச கூட்டு

பொரிச்ச கூட்டு செய்வதற்கான காய்கறிகள் : கோஸ் , வெள்ளை பூசணி செய்யலாம்.

துவரம் பருப்பு : 1/2 டம்ளர் வேகவைக்கவும் 

உளுத்தம் பருப்பு : 4 ஸ்பூன்

கடலை பருப்பு   : 1 ஸ்பூன்

தனியா  : 3/4 ஸ்பூன்

நீட்டு மிளகாய் : 6

பெருங்காயம்    - சிறிதளவு

மேலே சொன்னவற்றை வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு , காய் வெந்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு பிறகு வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு எண்ணெயில் கடுகு -  1/2 ஸ்பூன், உளுந்து 1/2 ஸ்பூன் , பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ( தாளிக்க தேங்காய் எண்ணையும் பயன்படுத்தலாம்.




 பொரிச்ச கூட்டு இரண்டாம் வகை  (கோஸ் , பெங்களூர் கத்தரிக்காய்)

பாசிப்பருப்பு  1/2 டம்ளர் வேகவைக்கவும்.

சீரகம்  -  1/2 ஸ்பூன் 

பச்சை மிளகாய்  சிறியது 4 , பெரியது  4

தேங்காய்த்துருவல் 8 ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். காய் வெந்ததும் விழுதைபோட்டு கொதிக்கவைத்து பிறகு பருப்பை சேர்த்து கொதி வந்தவுடன், எண்ணெயில் 1/2 ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், பெருங்காயம், 1 மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும். உப்பு தேவையான அளவு போடவும்.

Urundai Kuzhambu

9. உருண்டை குழம்பு

துவரம் பருப்பு    -   1/2 டம்ளர்

கடலை பருப்பு   - 1/2 டம்ளர்

தனியா    -  3/4 ஸ்பூன்

மிளகாய்  -  4 ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் தேங்காய் சேர்க்கவும். பிறகு உருண்டையாக பிடித்து புளி கொதி வந்தவுடன் ஒவ்வொன்றாக போடவும். உருண்டை புளித் தண்ணீரில் போட்டதும், உள்ளே போய் வெந்ததும் மேலே வரும்.  மேலே வரும் உருண்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

குழம்பிற்கு தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு   - 2 ஸ்பூன்
கடலை பருப்பு   - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு , கடலை பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.

சிகப்பு மிளகாய்   -  6

பச்சை மிளகாய்    -  2

இஞ்சி  -  1 துண்டு

தனியா   -   1 ஸ்பூன்

தேங்காய்    -   சிறிதளவு  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (புளியை நீர்க்க கரைக்கவேண்டும். உருண்டை வெந்ததும் வெளியே எடுத்து பிறகு அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். சிறிது தயிர் சேர்க்கலாம். பிறகு மிளகாய் , கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். செய்த பருப்பு உருண்டைகளை தேவையான அளவு சாம்பாரில் போடவும். பருப்பு உருண்டைகளை சாம்பாரில் போடாமலும் சாப்பிடலாம்.