14. எலுமிச்சை ரசம்
துவரம் பருப்பு 1/2 டம்ளர் குக்கரில் வேகவைத்து 2 தக்காளி பழத்துடன் நீர்க்க அரைத்துக்கொள்ளவும். 3/4 லிட்டர் இருக்கும்படி கரைத்துகொள்ளவும். உப்பு தேவையான அளவுபோடவும்.
பச்சை மிளகாய் மெல்லியதாக சிறிய அளவில் 2
இஞ்சி - 1 சிறிய துண்டு போட்டு நன்றாக கொதிக்க விடவும். பிறகு ரசப் போடி 3/4 ஸ்பூன் போட்டு பொங்கி வந்தவுடன் மிளகு சீரகப்பொடி 1 ஸ்பூன் கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழம் 2 பிழிந்து எடுத்து அந்தச் சாறு சேர்க்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு கடுகு சீரகம் பெருங்கயத்தூள் போட்டு தாளிக்கவும்.
No comments:
Post a Comment