3. பருப்பு கூட்டு செய்வது எப்படி
கூட்டு செய்வதற்கான காய்கறிகள் : சேனை, பீன்ஸ், கொத்தவரங்காய், பாவக்காய் செய்யலாம்.
துவரம் பருப்பு : 3/4 டம்ளர்
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
உளுத்தம் பருப்பு : 4 ஸ்பூன்
கடலை பருப்பு : 1 ஸ்பூன்
மிளகு : 1 ஸ்பூன்
தனியா : 1 ஸ்பூன்
நீட்டு மிளகாய் : 6
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் துருவல் சேர்க்கவும்.
மேலே சொன்னவற்றை வறுத்து அரைக்கவேண்டும்.
புளித்தண்ணீரை கூட்டு பாத்திரத்தில் தனியாக வதக்கிய காயுடன நன்றாகக் கொதிக்கச்செய்யவும். பிறகு வறுத்து அரைத்த விழுதை புளியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். வேண்டிய அளவு உப்பு போடவும். வெந்த பருப்பை நீருடன் பாத்திரத்தில் ஊற்றவும்.
பிறகு தாளிக்கவும்.
No comments:
Post a Comment