2. பருப்பு சாம்பார் செய்வது எப்படி ?
முதலில் புளி (ஒரு எலுமிச்சை அளவு) எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முக்கால் ( 3/4) டம்ளர் அளவு ப்துவரம் பருப்பு எடுத்துக் கொள்ளவும் குக்கரில் சாதத்துடன் மேல் தட்டில் பருப்பு வேகவைக்கவும்.
சாம்பாருக்கு வெண்டைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், சின்ன வெங்காயம், சிகப்பு பூசணிக்காய் , சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடை மிளகாய் போடலாம்.
நீட்டு மிளகாய் - 6 (அ) 8
தனியா - 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய துண்டு
எல்லாவற்றையும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சற்று நேரம் கழித்து மிக்ஸ்சியில் போட்டு பொடி செய்யவும். சிறிது தேங்காய் துருவல் சேர்க்கவும்.
புளித்தண்ணீரை சாம்பார் பாத்திரத்தில் தனியாக வதக்கிய காயுடன நன்றாகக் கொதிக்கச்செய்யவும். பிறகு வறுத்து அரைத்த விழுதை புளியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். வேண்டிய அளவு உப்பு போடவும். வெந்த பருப்பை நீருடன் பாத்திரத்தில் ஊற்றவும். நன்றாக வாசனை வந்தவுடன் கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது சிறிதாக நறுக்கி போடவும்.
சூடான சாம்பார் ரெடி

No comments:
Post a Comment