Thursday, August 20, 2015

Urundai Kuzhambu

9. உருண்டை குழம்பு

துவரம் பருப்பு    -   1/2 டம்ளர்

கடலை பருப்பு   - 1/2 டம்ளர்

தனியா    -  3/4 ஸ்பூன்

மிளகாய்  -  4 ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் தேங்காய் சேர்க்கவும். பிறகு உருண்டையாக பிடித்து புளி கொதி வந்தவுடன் ஒவ்வொன்றாக போடவும். உருண்டை புளித் தண்ணீரில் போட்டதும், உள்ளே போய் வெந்ததும் மேலே வரும்.  மேலே வரும் உருண்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

குழம்பிற்கு தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு   - 2 ஸ்பூன்
கடலை பருப்பு   - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு , கடலை பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.

சிகப்பு மிளகாய்   -  6

பச்சை மிளகாய்    -  2

இஞ்சி  -  1 துண்டு

தனியா   -   1 ஸ்பூன்

தேங்காய்    -   சிறிதளவு  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (புளியை நீர்க்க கரைக்கவேண்டும். உருண்டை வெந்ததும் வெளியே எடுத்து பிறகு அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். சிறிது தயிர் சேர்க்கலாம். பிறகு மிளகாய் , கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். செய்த பருப்பு உருண்டைகளை தேவையான அளவு சாம்பாரில் போடவும். பருப்பு உருண்டைகளை சாம்பாரில் போடாமலும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment