• ஸ்கந்த புராணம் - பகுதி 16 

    முருகனின் லீலைகள்
    ================

    பாலமுருகன் செய்த சேஷ்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல, தன் அரைஞாணில் கட்டப்பட்ட தங்க மணிகள் கலகலவென ஒலிக்க அவன் அங்குமிங்குமாய் ஓடுவான். ஆறுதலைகளிலும் குட்டி குட்டியாய் அணிந்திருந்த கிரீடங்களின் ஒளி, எங்கும் பிரகாசிக்க அந்த ஒளியை தேவர்களின் கண்கள் கூசும்படி அங்குமிங்கும் திருப்பி விளையாட்டுக் காட்டுவான். தன் தந்தையின் வாகனமான நந்திதேவரின் மீது விழுந்து உருண்டு புரள்வான். பூலோகம் வந்து கடல்களில் குதித்து திமிங்கலங்களை பிடித்து விளையாடி மகிழ்வான். ஏழு கடல்களை கலக்கி அவற்றை ஒரே கடலாக மாற்றினான். மிகப்பெரிய ஆடு, சிங்கம், புலி முதலானவற்றின் மீது அமர்ந்து உலா வருவான். (முருகனுக்கு மயில் வாகனம் கிடைத்தது பிற்காலத்தில் தான்) 

    இந்திரனின் வில்லான (இந்திர தனுசு) வானவில்லை எடுத்து வந்து அதன் நாண் மீது அமர்ந்து அந்தரத்தில் பறப்பான். மலைகளைப்பிடுங்கி எறிந்தான். இப்படியாக விளையாடும் அவனை யாராலும் தட்டிக் கேட்க முடியவில்லை. சிவமைந்தனின் இந்த சேஷ்டைகள் தேவர்களுக்கு பொறமையை ஏற்படுத்தியது. அந்த பொறாமையை ஏற்படுத்தியதும் சாட்சாத் முருகன் தான். தங்களை விட உயர்வான சக்தி பெற்று வளரும் இச்சிறு குழந்தையின் வீரத்தைப் பார்த்து எமன், வருணன், சூரியன், அக்னி, குபேரன், வாயு ஆகியோர் பொறாமைப்பட்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, இந்திரனிடம் முருகன் செய்யும் சேஷ்டைகள் பற்றி கூறினர். இந்திரனே! சூரனை அழிக்கப் பிறந்ததாக சொல்லப்படும் முருகன். அதற்குரிய பயிற்சியை எடுக்காமல், நம்மால் படைக்கப்பட்ட பொருட்களை அழித்துக் கொண்டிருக்கிறான். நான் ஏழு கடல்களுடன் விசாலமாக விளங்கினேன். என் பொருட்களை ஒன்றாக்கி விட்டான்.

    கடலுக்குள் கிடக்கும் முதலைகளைப் பிடித்து பூஜை செய்கிறான். இப்படி வந்த வேலையை விட்டுவிட்டு, இருப்பவற்றை நாசமாக்கத்தான் இவன் பிறந்தானா ? என்றான் வருணன். எமன் ஓடி வந்தான். இந்திராதி தேவரே ! தங்கள் அடிமையான என்னிடம் உயிர்களை அழிக்கும் சக்தி கொடுத்துள்ளீர்கள். இவனோ, உலக உயிர்களை தானே அழிக்கிறான். அப்படியானால் எனக்கென்ன மரியாதை இருக்கிறது? என் பெருமையைக் காப்பாற்றி கொள்ள வேண்டுமானால், நீங்கள் தான் அதற்குரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும், என்றான். குபேரன் தன் பங்கிற்கு, இந்திரரே! அவன் தலைகளிலுள்ள கிரீடங்களில் ஜொலிக்கும் வைரங்கள், குபேரனான என்னிடம் கூட இல்லை. அவன் என்னை விட செல்வந்தனாக இருக்கிறான். அப்படியானால், எனக்கெதற்கு குபேர பட்டம் ? என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, இந்திரனின் மனதிலும் ஊறிக்கிடந்த பொறாமை உணர்வு வெளிப்பட்டது. எனது பலம் மிக்க தனுசை விளையாட்டு பொருளாக அவன் வைத்திருக்கிறானே! அப்படியானால் தேவர்களின் தலைவனாய் இருந்து என்ன பயன் ? இந்த முருகனைத் தட்டி வைத்தால் தான், என் பதவி நிலைக்கும், என மனதிற்குள் கருதியவனாய், தனது ஆதரவாளர்களுடன் முருகனை அடக்கி வைக்க தன் ஐராவதம் யானை மீதேறி புறப்பட்டான். சூரியன் முதலான தேவர்கள் தங்களுடையே தேரேறி வந்தனர். அவர்கள் மேருமலையை அடைந்த போது, அதன் சிகரங்களை பாலமுருகன் லாவகமாக கிள்ளி எறிந்து பந்தாடிக் கொண்டிருந்தான்.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!

    சூரலை வாய்இடைத் தொலைத்து மார்புகீண்டு 
    ஈரலை வாயிடும் எஃகம் ஏந்தியே
    வேரலை வாய்தரு வெள்ளி வெற்புஓரீஇச் 
    சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம்!

    சூரபன்மனைக் கடலினிடத்தே கண்டு அழித்து, அவன் மார்பைக் கிழித்து, அவன் ஈரலை உட்கொள்ளும் கூர்மையான வேலை ஏந்திய, மூங்கில் நிறைந்த வெள்ளி மலையாகிய கயிலை மலையை விட்டுத் திருச்செந்தூரில் வந்து தங்கிய முருகப்பெருமானை போற்றுவோம்.

     இருப்புஅரம் குறைத்திடும் எஃகவேலுடைப் 
    பொருப்பர் அங்கு உணர்வுறப் புதல்வி தன்மிசை 
    விருப்புஅரங்கு அமரிடை விளங்கக் காட்டிய
    திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம் !

    இரும்பினாலான அரத்தினால் அராவப்பட்ட கூர்மையான வேலையுடைய குறிஞ்சி நில மக்கள் அறியும்படி, அவர்தம் மகளாகிய வள்ளியின் மீது தான் கொண்ட காதலைப் போரிலே எவரும் தெரிந்து கொள்ளும்படி காட்டிய திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானைப் போற்றுவோம் !

    இந்திரர் ஆகிப் பார்மேல் இன்பமுற்று இனிது மேவிச்
    சிந்தையின் நினைந்த முற்றிச் சிவகதி அதனில் சேர்வர்
    அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்வேல்
    கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்து ஓதுவோரே !

    அளவில்லாத அசுரர்களின் ஆற்றல் அழியுமாறு கோபம் கொண்ட, சிறப்பு வாய்ந்த வேலை ஏந்திய கந்தவேளின் புகழைக்கூறும் இந்தப் புராணத்தை விரும்பிப் படிப்பவர்கள், விண்ணுலக வேந்தனான இந்திரன் போல் விளங்கி, உலகின் மீது இன்பங்களை அடைந்து, இனிதாய்ப் பொருந்தி வாழ்ந்து, உள்ளத்தில் நினைத்தவை எல்லாம் அடையப் பெற்று, முடிவில் சிவபெருமானின் திருவடியை அடையும் பேற்றைப் பெறுவார்கள் !

    ஸ்கந்த புராணம் - பகுதி 17 

    தேவர்களின் ஆணவத்தை அடக்கிய வேலன்
    ==================

    மேருமலையையே கிள்ளி எறியும் பாலமுருகனின்  செயல்கண்டு இந்திராதி தேவர்கள் ஆச்சரியமும் ஆத்திரமும் கொண்டனர். உலகில் தாங்கள் தான் பெரியவர்கள் என்ற மாயை கண்களை மறைத்தது. எனவே, சிறுவன் என்றும் பாராமல், முருகனைத் தட்டிக் கேட்டனர்.ஏ சிறுவனே ! உன் விளையாட்டை நிறுத்தப் போகிறாயா, இல்லையா ? என இந்திரன் ஆவேசமாகக் கேட்டான். 

    தேவர் தலைவனே! நானோ சிறுவன். நீயோ பெரும்படையுடன் வந்துள்ளாய். சிறுவர்கள் விளையாடுவது என்பது இயற்கை தானே ! என் விளையாட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே, என்றான். வருணன் இந்த பேச்சின் குறுக்கே புகுந்தான். கடலுக்குள் புகுந்து ஆமைகளையும், திமிங்கலங்களையும் கசக்கி பிழிந்து விளையாடுகிறாய். இது தவறில்லையோ ? என்றான். வருணனே ! பிதற்றாதே. பூலோகத்தில் குழந்தைகள் ஏரிகளில் இறங்கி மீன்பிடித்து விளையாடுகிறார்கள். நானும் ஒரு சிறுவன் தான். என் வீரத்தை சுயசோதனை செய்து கொள்ளும் பொருட்டு அவற்றை பிடித்து விளையாடுகிறேன். ஒரு வேளை என் கையால் அவை உயிர்விட்டால் கூட, அவற்றுக்கு முக்தியே கிடைக்கிறது. பிறப்பற்ற நிலையால் ஆனந்தம் கொண்டு, அவை சிவலோகப் பதவியை அடைந்துள்ளன. கணங்களாகவும், என் தாயின் கண்களுக்கு அழகு சேர்ப்பனவாகவும் அவை உருவெடுத்துள்ளன. அதனால் என் அன்னை மீனாட்சி என்ற திருநாமம் பெற்றிருக்கிறாள். தேவர்களே! என் பிறப்பின் ரகசியம் உங்களுக்கு மறந்து விட்டதோ? நான் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்றார்.

    தேவர்களும் முருகனை எதிர்த்துப் பேசினர். குழந்தாய் ! அந்த சிவனும், பார்வதியுமே ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும் தன்மை படைத்தவர்கள். உனக்கு ஏது அந்த சக்தி ? இதோடு நிறுத்திக் கொண்டால் பிழைப்பாய் இல்லாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவோம், என்று மிரட்டினர்.வேலன் அந்த வாய்ச்சொல் வீரர்களின் மீது சிகரத்தின் ஒரு பகுதியைப் பிடுங்கி வீசி எறிந்தான். தேவர்கள் சிதறியடித்து ஓடினர். தேவேந்திரன் அம்புமாரி பொழிந்தான். அவையெல்லாம் மலர்மாலைகளாகி கந்தனின் கழுத்தில் விழுந்தன. முருகன் தன் கையிலிருந்த சின்னஞ்சிறு அம்புகளை தேவர்கள் மீது அடித்தான். ஒரு அம்பு தேவவேந்திரன் வீற்றிருந்த ஐராவதம்  யானையின் மத்தகத்தை குத்திக் கிழித்தது. அது அலறியபடியே விழுந்து இறந்தது. யானை மீதிருந்த இந்திரன் தரையில் உருண்டான். இதைப் பார்த்து கந்தன் கைகொட்டி சிரித்தான். இந்திரனுக்கு ஆத்திரம் அதிமாகி தன் வஜ்ராயுதத்தை வடிவேலன் மீது எறிந்தான். அதை அவன் சுக்கு நூறாக்கினான். அனைத்து ஆயுதங்களும் தீர்ந்து போகவே நிர்க்கதியான தேவர்கள் உயிர்பிழைக்க ஓடினர். அவர்களின் பலரைக் கொன்றான் வடிவேலன்.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!

    திருப்புகழ்
    〰️〰️〰️〰️〰️〰️〰️
    அடியார்மனஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
         அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி

    அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
         அனலோட ழன்று செத்து ...... விடுமாபோற்

    கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
         கலியோடி றந்து சுத்த ...... வெளியாகிக்

    களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
         கதியேற அன்பு வைத்து ...... னருள்தாராய்

    சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
         தழல்மேனி யன்சி ரித்தொர் ...... புரமூணும்

    தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
         தழல்பார்வை யன்ற ளித்த ...... குருநாதா

    மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
         வெளியாக வந்து நிர்த்த ...... மருள்வோனே

    மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
         மிகுமாலொ டன்பு வைத்த ...... பெருமாளே.

    ......... சொல் விளக்கம் .........

    அடியார்மனஞ்சலிக்க எவராகிலும் பழிக்க ... உன் அடியார்கள்
    மனம் துன்பப்படும்படி அவர்களை யாராலும் பழித்தால்,

    அபராதம் வந்து கெட்ட பிணிமூடி ... அதனால் பிழை ஏற்பட்டு,
    கெட்ட நோய்கள் வந்து பழித்தவர்களைப் பீடித்து,

    அனைவோரும் வந்து சிச்சி யென ... எல்லோரும் வந்து சீ சீ என்று
    அருவருப்புடன் இகழ,

    நால்வருஞ்சிரிக்க ... நாலு பேர் பரிகசித்துச் சிரிக்க,

    அனலோடு அழன்று செத்து விடுமாபோல் ... கடைசியில் இறந்து
    நெருப்பிடை வீழ்ந்து வெந்துவிடுவது போல,

    கடையேன்மலங்கள் முற்றும் இருநோயுடன் ... இழிந்தவனாகிய
    என்னுடைய ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் யாவும்,
    நல்வினை, தீவினை என்ற இரு நோய்களுடனும்,

    பிடித்தகலியோடு இறந்து ... என்னைப் பிடித்துள்ள தரித்திரத்தோடும்
    யாவுமாக அழிபட்டு,

    சுத்த வெளியாகி ... ஞான பரிசுத்த பரவெளி எனக்குப் புலப்பட்டதாகி,

    களிகூர என்றனுக்கு மயிலேறி வந்து ... மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட,
    நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து,

    முத்தி கதியேற அன்பு வைத்து உன் அருள்தாராய் ... முக்தி
    வீட்டை யான் அடையுமாறு என்மீது அன்பு வைத்து, உனது
    திருவருளைத் தந்தருள்க.

    சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை ... சடையின் மீது
    கங்கை நதியைச் சூடி, நந்தி வாகனத்தின் மீதேறும் எங்கள் தந்தை,

    சுத்த தழல்மேனியன்சிரித்து ஒர் புரமூணும் தவிடாக ...
    பரிசுத்தமான நெருப்பு மேனியன் ஆகிய சிவபிரான் சிரித்தே ஒப்பற்ற
    திரிபுரம் மூன்றையும் எரித்துத் தவிடு பொடியாகும்படியும்,

    வந்தெதிர்த்த மதன் ஆகமுஞ் சிதைத்த ... வந்து தன்னை எதிர்த்த
    மன்மதனின் உடலைச் சிதைத்து அழியுமாறு செய்த

    தழல்பார்வை அன்றளித்த குருநாதா ... (நெற்றியிலுள்ள)
    நெருப்புக்கண்ணின் சுடரில் ஒருநாள் வெளிப்பட்ட குருநாதனே,

    மிடிதீர அண்டருக்கு மயிலேறி ... தேவர்களுக்கு எற்பட்ட துன்பம்
    தீர, மயில் மீதேறி,

    வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே ...
    வஞ்சக அரக்கர்களின் இறுமாப்பும், செயல்களும் ஒடுங்கும்படிச் செய்து
    வெளிவந்து வெற்றி நடனம் புரிந்தவனே,

    மினநூல் மருங்குல் பொற்பு முலைமாது இளங்குறத்தி ...
    மின்னல் போன்றும், நூல் போன்றும் நுண்ணிய இடையையும், அழகிய
    மார்பையும் உடைய பெண்ணாம் இளங் குறத்தி வள்ளியின் மீது

    மிகுமாலொடு அன்பு வைத்த பெருமாளே. ... மிக்க ஆசையுடன்
    அன்பு வைத்த பெருமாளே.

    திருமுருகன் 
    ஸ்ரீமத் அருணகிரிநாதர் திருவடி போற்றி !

    தானே தோன்றி சுயம்பு மூர்த்தியாக நிற்க வல்ல பெருமாளே !

                 "தான்தோன்றி திருப்புகழ்"

    பிறவி வினைகளின் பயனால் வரும் துன்பம் மற்றும் துயரங்களை பெறுவதற்கு இடமாக  நீரால் வளருவதுமான இந்த உடல்.... 

    நோய்கள் சூழ்ந்து கொண்டு, இந்த உலகில் தளர்ச்சி உற்று, குட்டு குலைந்து கடைசியில் நெருப்பில் எரிந்து சாம்பல் பொடி ஆகிவிடும் தன்மையை உணராமல்... 

    விரும்பி விரைவுடன் சென்று நல்ல கல்வி நூல்களில் ஆழ்ந்து ஆய்ந்து அறிந்து நிரம்பப் பொருள் தேடவேண்டி,பொற் கலப்பையைக்
    கொண்டு வயலை உழுபவர்கள் போல...

    மனம் வேகும் தன்மையும் ஒழிந்து, வினை பெருகும் நிலைமையும் நீங்கி, நற்கதி விளையும்படியான தகைமையில், தாமரை போன்ற உனது திருவடிகளை தொழுவதற்கு கருணை புரிந்து அருள்வாய் !

    பொன் வளையல்களை அணிந்த மாதர்கள்  வள்ளி, தேவயானை தாம் இருவரும் அணைந்துள்ள நல்ல புயமும் தோன்ற,
    ஆகாயத்தை அளாவும்படி மயிலின் மீது ஏறி...

    கீழே மிக ஆழ்ந்துள்ள கடலில் விழுந்து நெருங்கியிருந்த (எழு) கிரியில் வாழ்ந்த
    அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படி போர் செய்த கூரிய வேலனே !

    வாழ்வுற்று மேலான செந்நெறி வாய்க்கப் பெற்று, ஆய்ந்த ஒழுக்கத்தில் உள்ள நல்ல தவசிகளும், விண்ணுலகத்தில் வாழும்
    பிறரும் உன் திருவடியைப் போற்றி புகழும்...

    ஆதி பரம்பொருளே ! தானே தோன்றி சுயம்பு மூர்த்தியாய் (சுயம்பு லிங்கமாக ) நிற்க வல்ல தேவர்களின் துயர் போக்கி அவர்களுக்கு நல் வாழ்வளித்த பெருமாளே 
                              பாடல் :

    சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர் தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே

    சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே

    வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள் வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல்

    வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய்

    வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள் வான்தோன்று மற்றவரு ...... மடிபேண

    மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும் வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித்

    தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர் சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா

    தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.

    ஓம் சரவண பவ !

    ஓம் சரவண பவ குக சண்முகா சரணம் சரணம்

    ஸ்கந்த புராணம் - பகுதி 18 

    முருகனின் விஸ்வரூப தரிசனம்
    ====================

    தேவர்கள் பிரகஸ்பதியிடம் ஓடினர். அவர்தான் தேவர்களுக்கு குரு. தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். நடந்த விபரத்தை தன் ஞானத்தால் அறிந்த குரு, சிவமைந்தனிடம் மோதியது உங்கள் தவறல்லவா? உங்கள் ஆணவத்தால் அறிவிழந்தீர்களே! என்னிடம் பாடம் படித்தும் முட்டாள்களாக இருக்கிறீர்களே ! என் பெயரைக் கெடுத்து விட்டீர்களே! சரி... நானே போய் அவரிடம் சரணடைகிறேன். என்று கூறி புறப்பட்டார். 

    பாலமுருகனைச் சந்தித்து, அவனை வாழ்த்தி வணங்கி நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சிவபெருமானே பிரகஸ்பதி என்று சொல்வாரும் உண்டு. அப்படியிருக்கும் போது, தந்தை மகனிடம் மன்னிப்பு கேட்கலாமா என்றால், குருவுக்கு குருவான முருகனிடம் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். பிரகஸ்பதியின் வேண்டுகோளை ஏற்ற பாலமுருகன் சினம் தணிந்தான். இறந்த தேவர்களை உயிர்பெறச் செய்தான். அவர்களின் ஆணவத்தை அழித்து, பக்தி ஞானத்தைக் கொடுத்தான். தானே பரம்பொருள் என்பதை உலகறியச் செய்யும் விதத்தில் ஆறுமுகங்களும், 12 கைகளும் விண்ணுயரம் உயர விஸ்வரூப காட்சி தந்தான். விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம். எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான். தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றான். இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன்  மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான்.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!
    போர்க்களத்தில், முருகனின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்ட"சூரபத்மனின் " மனதில் தோன்றும் எண்ண ஓட்டங்களைக் கந்தபுராணம் எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறது !

    கோலமா மஞ்ஞை தன்னில்
     குலவிய குமரன் தன்னைப்
     பாலன் என்றிருந்தேன் அந்நாள்
     பரிசிவை உணர்ந்தி லேனால்
     மாலயன் தனக்கும் ஏனை
     வானவர் தமக்கும் யார்க்கும்
     மூலகா ரணமாய் நின்ற
     மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ?

    அடுத்து, குமரனின் கருணை வெள்ளம் எப்படிப்பட்டது என்பதை, சூரபத்மனின் எண்ணங்களாகவே இந்தப்பாடல் விளக்குகிறது !

    தீயவை புரிந்தா ரேனும்
     குமரவேள் திருமுன் உற்றால்
     தூயவ ராகி மேலைத்
     தொல்கதி யடைவர் என்கை
     ஆயவும் வேண்டுங் கொல்லோ
     அடுசமர் இந்நாள் செய்த
     மாயையின் மகனும் அன்றோ
     வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான்

    வான்காணா மறைகாணா மலரோன் காணான்
     மால்காணான் உருத்திரனும் மறித்துக் காணான்
     தான்காணா இடத்தனைக் காண்போம் என்று
     நல்லோர்கள் நவில்கின்ற நலமே

    முருகப்பெருமானின் விசுவரூப தரிசனம் பெற்ற சூரன் முருகனை வணங்கத் தவிக்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை.

    சூழுதல் வேண்டும் தாள்கள்
     தொழுதிடல் வேண்டும் அங்கைத்
     தாழுதல் வேண்டும் சென்னி
     துதித்திடல் வேண்டும் தாலு
     ஆழுதல் வேண்டும் தீமை
     அகன்று நான் இவற்கு ஆ ளாகி
     வாழுதல் வேண்டும் நெஞ்சம்
     தடுத்தது மானம் ஒன்றே

    சூரபத்மனின் மனநிலையை வர்ணிக்கும் என்ன ஒரு அருமையான பாடல்! விஷயம் என்னவென்றால் இந்த தவிப்பில் சூர பத்மன் வாழ்கிறான். அவனுக்கு ஞானக்கண் கிடைத்து விஸ்வரூப தரிசனமும் கிடைத்து இந்த தவிப்பும் ஏற்பட்ட போதே அவன் மயிலும் சேவலுமாக என்றென்றும் முருகனுடன் இருக்கும் நிலையை அடைந்துவிட்டான். அதன் பிறகு அவன் வணங்கினால்தான் என்ன வணங்காவிடில் என்ன! ஒரு வேளை வணங்கியிருந்தால் அவன் மயிலாகியிருக்க மாட்டானோ! நாம் வெளி காட்டும் மாய தோற்றங்கள் தோற்றழிந்த பின்னர் குகையில் வளரும் கனல் விஸ்வரூபம் காட்டும் தருணங்கள் அனைவருக்கும் உண்டு. சூர பத்மனின் தவிப்பே அவனுக்கு கந்தனின் அருள் விளைவானது; அவனுக்கு அமரத்துவம் அளித்தது.

    ஸ்கந்த புராணம் - பகுதி 19 

    அறுமுகனுக்கு ஓர் ஆட்டு வாகனம்
    =====================

    தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா ! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒரு கலாட்டா செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். 

    பார்த்தாயா? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். எல்லாரையும் கலாட்ட செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல்  தவித்தனர்.

    இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது. இந்த தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு அதற்கு அசைபவனா என்ன ! அந்த வீரச்சிங்கம், ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். 

    முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாகும் பாக்கியம் பெற்றது. தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க! எனக்கூறி வாழ்த்தினர். 

    யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர், முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, சிவமைந்தனே இதென்ன அதிசயம். பசு ஆடானதும், அது உன்னைத் தேடி வந்ததும், எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார். முருகன் சிரித்தான்.

    நாரதரே! தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையில் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி, ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும், என்றார். நாரதர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். இதன்பிறகு கைலாயம் திரும்பினார் முருகன்.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!

    திருமுருகன் 
    ஸ்ரீமத் அருணகிரிநாதர் திருவடி போற்றி !

    தானே தோன்றி சுயம்பு மூர்த்தியாக நிற்க வல்ல பெருமாளே !

                 "தான்தோன்றி திருப்புகழ்"

    பிறவி வினைகளின் பயனால் வரும் துன்பம் மற்றும் துயரங்களை பெறுவதற்கு இடமாக  நீரால் வளருவதுமான இந்த உடல்.... 

    நோய்கள் சூழ்ந்து கொண்டு, இந்த உலகில் தளர்ச்சி உற்று, குட்டு குலைந்து கடைசியில் நெருப்பில் எரிந்து சாம்பல் பொடி ஆகிவிடும் தன்மையை உணராமல்... 

    விரும்பி விரைவுடன் சென்று நல்ல கல்வி நூல்களில் ஆழ்ந்து ஆய்ந்து அறிந்து நிரம்பப் பொருள் தேடவேண்டி,பொற் கலப்பையைக்
    கொண்டு வயலை உழுபவர்கள் போல...

    மனம் வேகும் தன்மையும் ஒழிந்து, வினை பெருகும் நிலைமையும் நீங்கி, நற்கதி விளையும்படியான தகைமையில், தாமரை போன்ற உனது திருவடிகளை தொழுவதற்கு கருணை புரிந்து அருள்வாய் !

    பொன் வளையல்களை அணிந்த மாதர்கள்  வள்ளி, தேவயானை தாம் இருவரும் அணைந்துள்ள நல்ல புயமும் தோன்ற,
    ஆகாயத்தை அளாவும்படி மயிலின் மீது ஏறி...

    கீழே மிக ஆழ்ந்துள்ள கடலில் விழுந்து நெருங்கியிருந்த (எழு) கிரியில் வாழ்ந்த
    அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படி போர் செய்த கூரிய வேலனே !

    வாழ்வுற்று மேலான செந்நெறி வாய்க்கப் பெற்று, ஆய்ந்த ஒழுக்கத்தில் உள்ள நல்ல தவசிகளும், விண்ணுலகத்தில் வாழும்
    பிறரும் உன் திருவடியைப் போற்றி புகழும்...

    ஆதி பரம்பொருளே ! தானே தோன்றி சுயம்பு மூர்த்தியாய் (சுயம்பு லிங்கமாக ) நிற்க வல்ல தேவர்களின் துயர் போக்கி அவர்களுக்கு நல் வாழ்வளித்த பெருமாளே 
                              பாடல் :

    சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர் தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே

    சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே

    வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள் வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல்

    வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய்

    வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள் வான்தோன்று மற்றவரு ...... மடிபேண

    மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும் வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித்

    தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர் சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா

    தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.
    ஓம் சரவண பவ !

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
       வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
          காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
             சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
    ....... பதவுரை .........
    சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை,
    திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த
    வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை,
    விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த
    கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப்
    பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக
    உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு
    குறையும் உண்டாகாது.

    ஸ்கந்த புராணம் - பகுதி 20 

    முருகன், பிரம்மா சந்திப்பு
    ==================

    ஒருநாள் நான்முகனான பிரம்மா சிவதரிசனத்துக்கு வந்தார். இறைவனை வணங்கிவிட்டு புறப்பட்டார். அப்போது வழியில் முருகன் தன் தளபதிகளோடு உரையாடிக் கொண்டிருந்தான். பிரம்மன் அவனைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் சென்றார். பிரம்மா! இங்கே வாரும், என்றான் முருகன். பிரம்மன் முருகனைப் பற்றி ஏற்கனவே அறிவார். அவன் தன்னால் உருவாக்கப்பட்டவன் அல்ல; சாட்சாத் பரமசிவனின் நேரடி வடிவம் என்பதை உணர்ந்தவராதலால், மிகவும் பவ்வியமாக முருகன் முன் கை கட்டி நின்றார். 

    வணக்கம் சிவமைந்தரே ! தாங்கள் அழைத்த காரணம் என்னவோ ? முருகன் பவ்வியமாக பேச ஆரம்பித்தான். பிரம்மனே, நீர் எங்கிருந்து வருகிறீர்? எதற்காக இங்கு வந்தீர் ? 

    முருகா ! நான் பரமனைத் தரிசிக்க வந்தேன். என்னுலகம் சத்தியலோகம். அங்கிருந்து தான் என்படைப்புத்தொழிலை நடத்துகிறேன். இவ்வுலகத்தில் இயக்கத்துக்கு காரணமானவனே நான் தான் ! என்று பெருமையடித்துக் கொண்டார் பிரம்மன். ஓ! அப்படியானால் நீர் பெருமைக்குரியவர் தான். சரி... எந்த அடிப்படையில் நீர் உயிர்களைப் படைக்கிறீர் என நான் தெரிந்து கொள்ளலாமா ? என்று ஒன்றுமறியாதவன் போல் அப்பாவியாய்க் கேட்டான் முருகன். சிறுபிள்ளையான உனக்கு அதெல்லாம் புரியாது முருகா ! நான் வரட்டுமா ? என்றார் பிரம்மா. முருகனுக்கு கோபம் வந்து விட்டது. சற்றே அவரை அதட்டி நிறுத்திய முருகன், நான் கேட்டதற்கு பதில் சொல்லி விட்டு புறப்படும். உம் இஷ்டத்துக்கு என் வீட்டுக்குள் வந்தீர். உம் இஷ்டத்துக்குப் போவதாகச் சொல்கிறீர் ! மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர். உம்.... என்றதும் நடுங்கிவிட்டார் பிரம்மா.

    உலகத்தையே கலக்கிய ஆட்டை அடக்கியவன் முருகன். நாமெல்லாம் அவன் முன் எம்மாத்திரம் ? என்பதை நினைவுபடுத்திக் கொண்டு திரும்பவும் கை கட்டி நின்று, முருகப்பெருமானே ! எனையாளும் சிவ மைந்தனே ! படைப்பின் இலக்கணத்தைச் சொல்கிறேன் கேள். படைப்புகள் ஓம் என்ற பிரணவத்தின் அடிப்படையில் அமைகின்றன, என்றார். ஓஹோ ! ஓம் என்று சொன்னீரே ! அந்த மந்திரத்தின் பொருள் தெரிந்தால் தானே நான் படைப்பின் ரகசியத்தை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும், என்றான் முருகன். 

    முருகா ! இது புரியவில்லையா உனக்கு ! ஓம் என்றால் பிரம்மன். அதாவது அந்த மந்திரத்துக்குரிய பொருளே நான் தான். நான் தான் எல்லாம், என்றார். பிரம்மா ! என்ன உளறுகிறாய். ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியாத நீ, படைக்கும் தகுதியை இழந்தாய். நான்கு தலைகள் இருந்தும் உமக்கு அறிவு மட்டும் இல்லவே இல்லை, என்றவன் அவரை இழுத்துப் போய், சிறையிலடைக்க வீரபாகுவை உத்தரவிட்டான்.
    பிரம்மனுடன் வந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பிரம்மாவை விடுவிக்க அவர்கள் நேராக சிவனிடம் ஓடினர்.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

    ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாதாச சுவாமிகள் அருளிய
    ஆறெழுத்துண்மை
    """""""""""""""""""""""""""""""""""""
    பண் - காந்தாரபஞ்சமம்
    (1)
    அற்புத மாகிய வருமறை மொழிபோல்
    வெற்புயர் புவனம்பல் விளங்கிடு மாறு
    பற்பல தேவர்கள் படர்ந்தவிண் ணிறினும்
    தற்பர மாவது சரவண பவவே.

    (2)
    பதிவு ஞானமும் பரவிடு மார்க்கம்
    எத்தனை யோவகை யிருக்கினு முகத்தில்
    முத்திதந் தனுதின முழுப்பல னல்கச்
    சத்திய மாவது சரவண பவவே.

    (3)
    பூசிக்கும் வானவர் புரவல னாவி
    வாசிக்கு மாவடி வழிபடி னென்றும்
    பாசத்தை நசித்திவண் பரப்பிரம வாழ்வைத்
    தாசர்பங் காக்கிடுஞ் சரவண பவவே.

    (4)
    அருணல முள்ளவ னாதிமுன் னுள்ளான்
    பொருணல முள்ளவன் பூசித வடியார்க்
    கிருணில மெய்தினு மிதமுட னேயத்
    தருணத்திற் காப்பது சரவண பவவே.

    (5)
    பொடிபொலி மேனியன் புரண வியோம
    வடிவுடை யயிலுடை மனனடி கைகூப்
    படியவர்க் கிடுக்கணிவ் வவனியிற் குறுகின்
    சடிதியிற் றடுப்பது சரவண பவவே.

    (6)
    மஞ்சிகைக் செவியோன் மயிற்பரி யூர்வோன்
    தஞ்சமென் றவர்க்கரு டருசம ரூரான்
    செஞ்சரண் வாழ்த்துநர் திருவடி சேர்வார்
    சஞ்சலந் தவிர்ப்பது சரவண பவவே.

    (7)
    பொங்கிடு புனலிலம் பூவில்வெங் கனலில்
    எங்கணு முளவெளி யில்வளி பகலிற்
    கங்குலி லடியவர் கருத்துநன் காகச்
    சங்கடந் தீர்ப்பது சரவண பவவே.

    (8)
    தென்றிசைக் கோன்விடு திரிவிதத் தூதர்
    குன்றெனும் புயமலை குலுங்கமுக் குடுமி
    வென்றிகொள் கடந்தடி வீசிவெம் பிடினும்
    தன்றுணை யாவது சரவண பவவே.

    (9)
    தேவியுந் தேவனுந் திருவுரு வருவம்
    மேவி யனாதியாய் மிளிர்தல்சண் முகமென்
    றாவலுற் றுணர்பவ ரழிவுறா வண்ணன்
    சாவினைத் தடுப்பது சரவண பவவே.

    (10)
    இந்திரன் முனிவர்க ளேத்துபொற் சரணான்
    செந்திரு நகரிடஞ் சேர்ந்ததில் வாழ
    அந்திருப் புகழ்பா டினவருக் கபயம்
    தந்தை தருவது சரவண பவவே.

    ஸ்கந்த புராணம் - பகுதி 21 

    பிரம்மனை விடுவித்த ஈசன்
    =================

    பிரம்ம லோகத்தினர் சொன்னதை சிவபெருமான் புன்னகையுடன் கேட்டார். நடந்ததை எல்லாம் நன்றாய் அறிந்த அந்த பரம்பொருள், இந்த உலகத்தை முருகனே படைத்துக் கொண்டிருப்பதை கண்டார். மகனின் அளப்பரிய அறிவாற்றலை நேரில் காணப் புறப்பட்டார். குழந்தை வேலன் படைக்கும் தொழிலைச் செய்து கொண்டிருப்பதை மூன்று கண்களாலும் மகிழ்வோடு பார்த்தார். வேலனை மார்போடு அணைத்து முத்த மழை பொழிந்தார். முருகா ! நீ செய்தது என்னவோ நியாயம் தான் ! அதற்காக உன்னிலும் வயதில் பெரியவருக்கு மரியாதை தந்திருக்க வேண்டாமா ? பிரம்மனை விட்டு விடு, என்றார். தந்தையே ! இதென்ன நீதி ! எனக்காக என் தம்பிகள் இணைந்து இந்த ஸ்கந்தகிரியை உருவாக்கியுள்ளனர். இதன் தலைவன் நான். உங்கள் லோகத்துக்கு வருபவர்கள். என்னையும் வணங்க வேண்டும் என்பது நீங்கள் வகுத்த நியதி. இதை மீறினார் பிரம்மா. அது மட்டுமல்ல, ஒரு தொழிலைச் செய்பவன், அது பற்றி தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். படைப்புக்கு ஆதாரம் ஓம் என்ற பிரணவம். அதற்குரிய பொருளே அவருக்கு தெரியவில்லை. அப்படியிருக்க, அந்த அஞ்ஞானி படைப்புத்தொழில் செய்ய அதிகாரமே இல்லையே. அதனால், அவரை சிறையில் அடைத்திருக்கிறேன். இது என் உள்நாட்டு விஷயம். இதில் தலையிடாதீர்கள், என்றான். சிவன் இது கேட்டு மகிழ்ந்தாலும், கோபமடைந்தார் போல்காட்டிக் கொண்டு, முருகா ! பிரம்மனை விடுதலை செய் என்று சொல்வது உன் தந்தை. தகப்பனின் சொல்லை மீறுவது மகனுக்கு அழகல்ல, என்றார். தந்தையின் கட்டளைக்கு அடிபணிந்த முருகன். அவரை விடுவித்து விட்டான். பிரம்மன் தலைகுனிந்து நின்றார்.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!

    உயிரோடு  இருக்கும்போதே  பத்தியை  பெருக்கி   முத்தியை  நல்க  வல்லது  எது ?

    பாவம்  பொடிக்குமே  பத்தியை  யீட்டுமே

    சாவுந்   தொலைக்குமே  தா, ரக - மாவருள்

    கூட்டுமே  முத்தியைக்  கூட்டுடன்  காணெனக்

    காட்டுமே  சண்முகன்  கால் ..

    அறுமுக சிவனது  திருவடி யானது பாவங்களை  பொடியாக்கி ,  பத்தியை பெருக்கி ,  பிறப்பறுத்து  உயிரோடு இருக்கும்போதே  உடனே  முத்தியை  காட்டும் வல்லமை  படைத்தது....

    அருட்குருநாதர்  பாம்பன் சுவாமிகள்  அருளிய  திருவலங்கற்றிரட்டு  5 ம்  பாடல்

    பிணிகள் தீர்க்கும் திருத்தணிகை

    ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நம் முன்னோர் கண்ட அனுபவ உண்மை. ‘‘மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும்” என்று கதிர்காமக் கந்தனிடம் வேண்டுவார் அருணகிரியார். நோயின்றி வாழ்தல் ஒரு கலை. உடம்பு ஓர் ஒப்பற்ற கருவி. ‘‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்” என்பார் திருமூலர். நோய் என்ற சொல்லுக்கு வியாதி என்று பொதுப் பொருள் இருந்தாலும் துன்பம், வருத்தம், குற்றம், அச்சம், துக்கம் எனப், பல பொருள்கள் உண்டு. இதனைப் பிணி என்றும் கூறுவர்.

    பன்னிரு வரங்கள்... பன்னிருகை வேலவனின் பன்னிரு தலங்கள்!
    இறைவன் மந்திரமும், தந்திரமும், மருந்துமாகி தீரா நோய் தீர்த்தருள் புரிகின்றான்.  வாழ்க்கையில் உடல் நலம் பேணும் வகையிலும், மருத்துவ வகையிலும் அவன் குடியிருக்கும் ஆலயங்களே முன்னிற்கின்றன. திருக்கோயில் திருக்குளங்களில் நீராடி இறைவனை பூசித்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றவர்களைப் பற்றித் தல புராணங்கள் விரிவாகப் பேசுகின்றன.

    அருணகிரிநாதர், மனிதனுக்குத் தொல்லைகள் பல தந்து உயிரையே போக்கும் நோய்களைப் பட்டியலிட்டு, இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவை என்னை வருத்தக் கூடாது என்று தணிகைக் கந்தனிடம் வேண்டுகிறார். மலைத் தலங்களில் முதன்மையான தணிகாசலத்தை உடலால் சென்று வழிபட வேண்டும் என்றும், திருப்புகழை ஓதிக்கொண்டு திருத்தணிகை மலை ஏறிச் சென்று வழிபடுவோர்க்குப் பிறவி என்னும் நோயே ஒழியும் என்றும் அறிவுறுத்துகிறார்.

    ‘‘இருமல், உரோகம்... என்று தொடங்கும் திருத்தணிகைத் திருப்புகழ் நோயற்ற வாழ்வு வாழ சிறந்த மந்திரம் போன்றது. இதனைத் தினமும் ஆறு முறையாவது ஓத வேண்டும். ஆண்டுக்கு ஒரு நாளாவது தணிகை வேலன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். நோய் வந்தால் இத்திருப்புகழை ஆறுமுறை அன்புடன் ஓதி திருநீறு பூசிக்கொண்டால் நோய் நீங்கிவிடும்’ என்பது வள்ளிமலை சுவாமிகளின் வாக்கு. நாமும் தணிகை வேலவனைத் தரிசித்து, அவனருளால் நோயில்லாப் பெருவாழ்வை பெற்று மகிழ்வோம்.

    இருமல் உரோகம் முயலகன் வாதம்
    எரிகுண நாசி விடமே நீர்
    இழிவு விடாத தலைவலி சோகை
    எழுகள மாலை இவையோடே
    பெருவயி றீளை எரிகுலை சூலை
    பெருவலி வேறும் உள நோய்கள்
    பிறவிகள் தோறும் எனை நலியாத
    படிஉன தாள்கள் அருள்வாயே

    ஸ்கந்த புராணம் - பகுதி 22 

    தந்தைக்கே உபதேசம் செய்த பாலகன்
    ====================

    பிரம்மா ! கவலைப்படாதே. ஓம் என்ற மந்திரத்தின் பொருளை இனியாவது அறிந்து கொள். தெரியாமல் ஒரு பணியைச் செய்யக் கூடாது என்ற முருகனின் வாதம் சரியே, என்றார் சிவன். தேவர்கள் எல்லாம் பொருளைத் தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது முருகன் சொன்னான். தந்தையே ! இது சாதாரண விஷயமல்ல. மிகப்பெரிய ரகசியம். இதை உலகத்தினர் யாரும் அறியக் கூடாது. அதற்கு சில தகுதிகள் வேண்டும் என்பதை தாங்கள் தானே அறிவுறுத்தியிருக்கிறீர்கள். அந்தத் தகுதிகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், என்றான். அன்பு மகனே ! நீ கூறுவது வாஸ்தவம் தான். தனக்கு மந்திரம் கற்றுக்கொடுத்த குருவை ஒருவன் பலர் முன்னிலையில் புகழ்ந்து பேசலாம். ஆனால், அவர் கற்றுத்தந்த மந்திரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். முக்கிய மந்திரங்களை பிறரறிய வெளிப்படுத்துபவன், நரகத்தையே அடைவான். 

    ஓம் என்பது சாதாரணமான மந்திரமல்ல. உலகம் உருவாவதற்குரிய ரகசியங்களை உள்ளடக்கிய மந்திரம். சரி... மகனே! அதன் பொருள் எனக்கும் கூட தெரியாது. அதற்காக பிரம்மனைச் சிறையில் அடைத்தது போல் என்னையும் அடைத்து விட மாட்டாயே ! என்று சொல்லிச் சிரித்தார் சிவன்.
    சிவனால் உருவாக்கப்பட்டதும் அவருக்கே மட்டுமே பொருள் தெரிந்த ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தனக்குத் தெரியாதென்று அவர் ஏன் மறைத்தார் தெரியுமா ? தனக்கு அதன் பொருள் தெரிந்தாலும், தன் மகனின் வாயால் கேட்டால் மகிழ்ச்சி ஏற்படும் என்பதால் தான். அது மட்டுமல்ல, தன்னை விட தன் மகன் உயர்ந்தவன் என்பதை பக்தர்களுக்கு எடுத்துக்காட்ட, வயதில் பெரியவராயினும், தன்னிலும் சிறியவர்களுக்கு சில விஷயங்கள் தெரியுமானால், அதைக் கேட்டறிவதில் தவறு இல்லை என்பதை உலகத்துக்குச் சொல்வதற்காக ! இதற்காக கைகட்டி, வாய் பொத்தி, முட்டுக்காலிட்டு, முருகன் ஆசனத்தில் இருக்க, மிகவும் பணிவாக அவரருகில் கீழே அமர்ந்து காதைக் கொடுத்தார். 

    தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்தனர், எங்கும் நிசப்தம். இளைஞனாயிருந்த முருகன் பால முருகனாக மீண்டும் மாறினான். தந்தையின் காதில் மந்திரத்தின் பொருளைச் சொன்னான். ஆன்மிக உலகம் ஓம் என்ற பதத்திற்கு பல விளக்கங்களைச் சொல்கிறது. இதற்குரிய பொருளாக கணிக்கப்படுவது என்னவென்றால், இந்த உலகமே நான் தான் என்பதாகும். ஆம்...சிவன் தன் ஆத்மாவின் வடிவமாக முருகனைப் பிறப்பித்தார். அவரது ஒட்டுமொத்த சக்தியும் அவருக்குள் அடக்கம் என்று பொருள் சொல்வதுண்டு. பின்னர் கயிலை திரும்பிய சிவன், மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொன்னார். அவள் மனம் மகிழ்ந்தாள்.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!

    ஓம் சரவணபவ

                   தந்தை வழி முன்னோர்கள் 
      செய்த பாவ புண்ணியங்களே ஒவ்வொரு 
              மனிதனின் வாழ்க்கையில் இன்ப
                    துன்பங்களாக மாறுகிறது  
             இதைத்தான்,பிதுர்தோசம் என்பது

            தன்னுடைய தந்தை உலகை ஆளும் 
                ஈசன் என்பது தெரிந்தும் கூட
               தந்தைக்கே உபதேசம் செய்தவர் 
                           முருகப்பெருமான்.. 

    ***************************************
     *அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி  தன்னுடைய       "திருப்புகழில் * 38 *  பாடல்கள்" பாடியுள்ளார். (201 --238) . ****************************************************
    ஓம் சிவாயநம.
    திருச்சிற்றம்பலம்

    எங்கும் சிவனே எதிலும் சிவனே எல்லாம் சிவனே சிவன் ஒருவனே ஆதி அந்தம் எல்லாம் என் அப்பன் ஈசன் ஒருவனே. 

    சுவாமிமலை - நான்காவதுபடை வீடு
    ************************************

    அருணகிரிநாதர்:-.  திருப்புகழ்:-
    **********************************
    அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

    தந்தைக்கே குருவான கதை :
    *******************************
    படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.

    ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

    அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

    முருகப்பெருமான் காட்சி :
    **************************
    இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

    மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

    தலவிருட்சம் நெல்லி :
    ***********************

    நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

    சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.
    ஆடும்வரை ஆடிடுவாய் 
         அழிவைத்தரும் நுண்ணுயிரே 
    ஆடுவது எங்கேயென 
          அறிந்துநீயும் ஆடிடுவாய் 

    காடுமலை கண்டறிந்து  
         காயகல்பம் தந்தபூமி
    கூடுவிட்டு கூடுபாய்ந்து 
         குண்டலினி கண்டபூமி

    "ஓடுகாலா" என்றோட்டி 
         உயர்நிலை  அடைந்தபூமி
    வேடுவனாம் வேலனிடம் 
         வேண்டுமுன்னே தாரும்பூமி

    நீடுதுயில் கொள்ளுமுன்னே  
          நீர்மூலமாக்கும்    எங்கள்சாமி                                                                       
    ஒடுங்கடங்கி ஒழிந்திடுவாய் 
           ஓடிவிடு கொரானாகிருமி!!!

    இந்திரர் ஆகிப் பார்மேல் இன்பமுற்று இனிது மேவிச்
    சிந்தையின் நினைந்த முற்றிச் சிவகதி அதனில் சேர்வர்
    அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்வேல்
    கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்து ஓதுவோரே !

    அளவில்லாத அசுரர்களின் ஆற்றல் அழியுமாறு கோபம் கொண்ட, சிறப்பு வாய்ந்த வேலை ஏந்திய கந்தவேளின் புகழைக்கூறும் இந்தப் புராணத்தை விரும்பிப் படிப்பவர்கள், விண்ணுலக வேந்தனான இந்திரன் போல் விளங்கி, உலகின் மீது இன்பங்களை அடைந்து, இனிதாய்ப் பொருந்தி வாழ்ந்து, உள்ளத்தில் நினைத்தவை எல்லாம் அடையப் பெற்று, முடிவில் சிவபெருமானின் திருவடியை அடையும் பேற்றைப் பெறுவார்கள் !

    .வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா"
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    ஸ்கந்த புராணம் - பகுதி 23 

    திருமாலின் புத்திரிகள்
    ===============

    முருகப்பெருமானின் புகழ் வைகுண்டத்திலும் பரவியது. அவனது ஆணையால் தான், திருமால் உலகத்திலுள்ள அரக்கர்களை அழித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் முருகனுக்கு மேலும் பெருமை தந்தது. இதற்காக அவர் தசாவதாரம் எடுத்து வருவதாக சிவனே பார்வதியிடம் சொன்னார். சூரபத்மனை அழிக்க வந்த தன் மருமகனுக்கு தன் சக்தியை வழங்கவேண்டும் என்று விரும்பினார் உபேந்திரன் என அழைக்கப்படும் திருமால் பாற்கடலில் பையத்துயின்ற அந்த பரந்தாமன், ஒருமுறை விழித்துப் பார்த்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கொடிகளை ஒத்த இடையை உடைய அழகிய பெண்கள் வெளிப்பட்டனர். தந்தையே வணக்கம் ! என்ற அப்பெண்களில் முதலாவதாக வந்தவள் அமுதவல்லி, அடுத்து வந்தவள் சவுந்தர்யவல்லி. இருவரையும் உச்சிமோந்த திருமால், என் அன்பு புத்திரிகளே ! நீங்கள் இருவரும், என் மருமகன் முருகனுக்காக பிறந்தவர்கள். அவனின் புகழ் எல்லையற்றது, என்று கூறி முருகனின் அருமை பெருமையை எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட அந்த பெண்களின் உள்ளத்தில், முருகனைப் பார்க்காமலேயே காதல் பிறந்து விட்டது.

    தங்கள் அன்புக்காதலனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவர்களுக்குள் இருந்தது. ஒருநாள் அமுதவல்லி, தன் தங்கையிடம் சவுந்தர்யா ! நாம் முருகப்பெருமானுக்காகவே பிறந்திருக்கிறோம். உலகில் வல்லவன் யாரோ, அவனை அடைவதில் பெண்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். வீரம்மிக்க ஆண்கள் உலகில் ஆங்காங்கே தான் இருப்பார்கள். தன் பக்கத்தில் இருப்பவனுக்கும், நண்பனுக்கும், சக மனிதனுக்கும் துன்பமிழைப்பவன் வீரன் அல்ல. பிறரது நன்மைக்காக தன் உயிரைக் கொடுக்கத் துணிபவன் எவனோ, அவனே சுத்த வீரன். முருகப்பெருமான் தனக்காக அல்லாமல், உலக நன்மை கருதி, சூரபத்மனை அழிக்கப் பிறந்திருக்கிறார். அவர் நம் கணவரானால், நம்மைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யாருமிருக்க முடியாது. அமிர்த சவுந்தர்ய முருகன் என்று அவர் பெயர் பெறுவார். அமுதமாகிய நான் அவருடன் இணைந்தால், அழிவில்லாத புகழ் பெறுவேன். சவுந்தர்யமாகிய நீ அவருடன் இணைந்தால், அவர் இளமைப் பொலிவுடன் திகழ்வார், என்றான். இருவரும் என்றேனும் ஒருநாள், முருகன் தங்களைத் தேடி வருவான் என எதிர்பார்த்தனர். காலம் சென்றதே தவிர முருகன் வரவில்லை. எனவே, இருவரும் தங்கள் அலங்காரங்களைக் களைந்து விட்டு, வெள்ளை பட்டு உடுத்தி, நாணல் காட்டுக்குச் சென்றனர். இடுப்பில் ஒட்டியாணத்துக்கு பதிலாக, நாணல்புல்லை கயிறாகத் திரித்து கட்டிக் கொண்டனர். முருகனின் புகழ்பாடி தவத்தில் ஆழ்ந்தனர். நீண்ட நாட்களாக தவம் தொடர்ந்தது.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!
    ஸ்கந்த குருநாதா !
    ஸ்கந்தாஸ்ரம
    ஜோதியே!
    பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய் முருகா .....
     எல்லா பிணியும் 
    எங்களைக் கண்டால்
    நில்லாது ஓட 
    நீ எமக்கு அருள்வாய்

    வினைகளை வேரறுக்கும் (வடி)வேலனின் வேல்!!!
    வேலுண்டு வினையில்லை!!!
    வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகளின்   “வேல் மாறல் பதிகம்”

    முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேல் தத்துவம் பற்றி விவரிக்கும் ஆன்றோர்கள், பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவாய் உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும். பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.

    வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம். 

    வேல் வினைகளை வேரறுக்க வல்லது. ‘வேலுண்டு வினையில்லை” என்பது அருளாளர் வாக்கு. ‘அச்சம் அகற்றும் அயில் வேல்’ எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். ‘வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்’ என்று கந்தரநுபூதியும், ‘வினை எறியும் வேல்’ என்று திருப்புகழும் போற்றுகின்றன. 

    உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது ‘வேல் வகுப்பு’ என்று வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார்.

    வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக (16X4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்யும் முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

    வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

    வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம்.

    நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை. 

    வேல்மாறல் மகா மந்திரம்

    1. வேலும் மயிலும் சேவலும் துணை என (6)ஆறு முறை கூறவும்.
    2. இந்த அடியை முதலில் 12 முறை பிராத்திக்கவும்.
    “திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே”

    1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.  
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.
     
    4.  தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கஜக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.
     
    9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரக்குஹையை இடித்துவழி காணும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.
     
    10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.
     
    12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    13.  பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    15. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    17. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    20.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரக்குஹையை இடித்துவழி காணும் 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    26.  தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும்
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
    பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    41.  தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    42.  சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    45.  சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    46. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    49.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    52. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும்.
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

     56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.

    64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். 
    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.
       
    முடிவிலும் 12 முறை பிராத்திக்கவும் 
    “திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்  என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே”

    வேலும் மயிலும் சேவலும் துணை என (6)ஆறு முறை கூறவும்.

    ஸ்கந்த புராணம் - பகுதி 24 

    திருமுருகனின் திருக்காட்சி
    ==================

    அமுதவல்லி, சவுந்தர்யவல்லியின் தவத்தை மெச்சிய முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றினார். அப்பெண்கள் பேருவகை அடைந்தனர். என்ன செய்ய வேண்டுமென்பது புரியவில்லை. கைகூப்பி வணங்கினர். ஓடிவந்து, ஆளுக்கொரு பக்கமாக நின்றனர். அனைத்தும் அறிந்த முருகன், அப்பெண்களைப் பற்றி ஏதுமறியாதவர் போல, பெண்களே ! நீங்கள் யார் ? எதற்காக என்னை குறித்து தவமிருந்தீர்கள் ? என்றார். ஐயனே ! இந்த அண்டம் முழுவதும் தேடிப்பார்த்தாலும், தங்களைப் போல் கருணையுள்ளவரும், அழகானவருமாக யாருமில்லை. கருணைக்கடலே ! நாங்கள் கேட்கும் வரத்தை எங்களுக்கு மறுக்காமல் தர வேண்டும், என்றனர். அதற்கென்ன தருகிறேன் என்ற முருகனிடம், அவர்கள் ஏதும் கேட்கத் தோன்றாமல் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றனர். பெண்ணே மாப்பிள்ளையிடம் தன் காதலைத் தெரிவிப்பது என்பது இந்தக்காலத்தில் ஏற்பட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். முருகப்பெருமானே காதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான் ! 

    அப்பெண்களின் விருப்பத்தை அறிந்த முருகன், அவர்களை அணைத்துக் கொண்டார்.
    கன்னியரே ! என் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை நானறிவேன். ஆனால், திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். என் பிறப்பின் நோக்கம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக அல்ல ! சூரபத்மனை அழிப்பதற்காக என் தந்தை என்னைப் படைத்தார். மேலும், காதலுக்கு பெற்றவர்கள் அங்கீகாரம் தர வேண்டும். முதலில், பெற்றவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும். பெற்றவரைப் பகைத்து ஏற்படும் காதல் நிலைப்பதில்லை. எனவே, நம் காதல் கனிந்து திருமணம் ஆகும் வரை. நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், என்றார். அந்தக் கன்னியர் அவரது திருவடிகளில் விழுந்து, அவரது கட்டளைக்கு அடிபணிவதாகவும், அவரது பணி முடியும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    முருகன் அமிர்தவல்லியிடம், அமிர்தா ! நீ தேவலோகம் செல். தேவலோகத் தலைவன் இந்திரனின் மகளாக வளர்ந்து வா. உன் சகோதரி சவுந்தர்யா, பூலோகம் சென்று, அங்கே ஆஸ்ரமம் அமைந்திருக்கும் சிவமுனிவரின் மகளாக வளர்ந்து வரட்டும். சூரபத்மவதம் முடிந்த பிறகு, உங்களை நான் மணந்து கொள்கிறேன், என்றதும், அப்பெண்கள் மகிழ்வுடன் தலையசைத்தனர். பின்னர் முருகன் தன்வடிவத்தை மாற்றிக் கொண்டு, பாலமுருகனாகி கைலாயம் சென்றார். அவரை அள்ளியெடுத்த பார்வதி, பரமேஸ்வரர் அவரைத் தங்கள் நடுவில் இருத்திக் கொண்டனர். இக்காட்சியைக் காண தேவர்களும், முனிவர்களும் ஓடோடி வந்தனர். காணக்கிடைக்காத சோமாஸ்கந்த வடிவத்தை கண்ணாரக்கண்டு மகிழ்ந்தனர். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், சிவபெருமானிடம், ஐயனே ! முருகப்பெருமான் தங்களுக்கு பாலனாகவும், வெளியே வந்தால் சுப்பிரமணியராய் விஸ்வரூபம் எடுக்கும் அபார சக்தி கொண்டவராகவும் திகழ்கிறார். அவரைக் கொண்டு சூராதிசூரர்களை வேரறுக்க வேண்டும். தேவருலகம் பாதுகாக்கப்படவேண்டும், என்றனர்.

    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!

    வள்ளலார் பாடிய வைத்தியநாத பதிகம்
    ..
    வாடிய பயிரைக் கண்டபோதே 
    ...
    வாடிய வள்ளலார் ராமலிங்க அடிகள்
    ...
     நோயுற்ற மனிதர்தம் பிணிபோக்கிட
    ...
     வைத்தீஸ்வரன் கோயில்
    ..
     வைத்யநாத சுவாமியை 
    ..
    வேண்டிப் பாடிய வைத்யநாத பதிகம் இது. 
    ..
    இதனைச் சொல்வதால் நோய்கள் யாவும் நீங்கும்.
    ..
     நலம் பெருகும்.
    ..
    உண்டதே உணவுதான் கண்டதே காட்சி
    இதை உற்றறிய மாட்டார்களாய்
    ..
    உயிருண்டு பாவபுண்ணிய முண்டு
    வினைகளுண்டுறு பிறவி உண்டு
    துன்பத்
    ..
    தொண்டதே செயுநரகவாதை உண்டு
    இன்பமுறு சொர்க்க முண்டிவையும்
    அன்றித்
    ..
    தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று
    சிலர்சொலும் துர்ப்புத்தியால் உலகிலே
    கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்தம்
    கொங்கையும் வெறுத்துக்கையில்
    ..
    கொண்டதீங் கனியை விட்டந்தரத்
    தொருபழம் கொள்ளுவீர் என்பர் அந்த
    ..
    வண்டர்வாயற ஒரு மருந்தருள்க
    தவசிகாமணி உலக நாதவள்ளல்
    ..
    மகிழவரு வேளூரில் அன்பர் பவ ரோகமற
    வளர் வைத்தியநாதனே.
    ..
    படி அளவு சாம்பலைப் பூசியே சைவம்
    பழுத்தபழமோ பூசுணைப்
    ...
    பழமோ எனக்கருங்கல் போலும்
    அசையாது பாழாகுகின்றார் களோர்
    ..
    பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள்
    அல்லதொரு பெண்ணை எனினுங்
    கொள்கிலார்
    ..
    பேய்கொண்டதோ அன்றி
    நோய்கொண்டதோ பெரும் பித்தேற்றதோ
    அறிகிலேன்
    ..
    செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக்
    கெல்லாம் தெரித்திடக் காட்டிநகைதான்
    ..
    செய்து வளையாப்பெரும் செம்மரத்
    துண்டுபோல் செம் மாப்பர்
    அவர்வாய்மதம்
    ..
    மடிஅளவதா ஒரு மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    ..
    மகிழுவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
    ..
    பெண்கொண்ட சுகமதே கண்கண்ட
    பலன்இது பிடிக்க அறியாது சிலர்தாம்
    ..
    பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலேசுகம்
    பெறவே விரும்பி வீணில்
    ..
    பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே
    நரம்பெலாம் பசைஅற்று மேல்எழும்பப்
    ..
    பட்டினி கிடந்துசாகின்றார்கள் ஈதென்ன
    பாவம் இவர் உண்மை அறியார்
    ..
    கண்கொண்ட குருடரே என்று வாய்ப்
    பல்எலாங் காட்டிச் சிரித்துநீண்ட
    ..
    கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
    கயவர்வாய் மத முழுதுமே
    ..
    மண்கொண்டு போக ஓர் மருந்தருள்க
    தவசிகா மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
    ..
    பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
    பேச்சிவை எலாம்வேதனாம்
    ..
    பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
    பெரும்புரட் டாகும் அல்லால்
    ..
    ஓதை உறும் உலகா யதத்தினுள உண்மை
    போல் ஒருசிறிதும் இல்லைஇல்லை
    ..
    உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
    உலர்ந்தீர்கள் இனியாகினும்
    ..
    மேதை உணவாதி வேண்டுவ எலாம்
    உண்டுநீர் விரைமலர்த் தொடை ஆதியா
    ..
    வேண்டுவ எலாங்கொண்டு மேடை
    மேல் பெண்களொடு விளையாடு
    வீர்கள்என்பர்.
    ..
    வாதை அவர் சார்பற மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    ...
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத்தியநாதனே.
    ..
    ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
    எண்ணி நல்லோர்கள் ஒருபால்
    ...
    இறைவ நின்தோத்திரம் இயம்பிஇரு
    கண்நீர் இறைப்பஅது கண்டுநின்று
    ..
    ஞானம் பழுத்துவிழியால் ஒழுகுகின்ற நீர்
    நம் உலகில் ஒருவர் அலவே
    ...
    ஞானிஇவர் யோனிவழி தோன்றியவரோ
    என நகைப்பர் சும்மா அழுகிலோ
    ...
    ஊனம் குழுத்த கண்ணாம் என்பர்
    உலகத்தில் உயர்பெண்டு சாக்கொடுத்த
    ஒருவன்
    ..
    முகம் என்ன இவர் முகம்வாடுகின்றதென
    உளறுவார் வாய்அடங்க
    ...
    மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    ..
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
    ..
    மெய்யோர் - தினைத்தனையும்
    அறிகிலார் பொய்க்கதை விளம்பஎனில்
    இவ்வுலகிலோ
    ..
    மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்
    தெரு மேஷமண்ணெ னினும் உதவக்
    ..
    கையோ மனத்தையும் விடுக்க இசை
    யார்கள் கொலைகளவு கட் காமம்
    முதலாக்
    ..
    கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை
    ஒரு கனவிலும் கண்டறிகிலார்
    ..
    ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
    அங்கைதாங் கங்கை என்னும்
    ..
    ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்
    அவ்வசுத்த நீங்காது கண்டாய்
    மையோர் அணுத்துணையும் மேவுறாத்
    தவசிகாமணி உலகநாத வள்ளல்
    ..
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர் வைத்தியநாதனே.
    ..
    பசிப்பிணிக்கு மருந்தாகா வாழ்ந்த மகான் வள்ளலாரின் என்றுமே வாழ்வார் மனிதர்களின் மனதில்
     ஓரெழுத்தானாய் 
    ஈரெழுத்தானாய்
    மூவெழுத்தானாய்
    கடம்பாவென நான்கெழுத்தானாய்
    ஐவெழுத்தானாய்
    சரவணபவா என
    ஆறெழுத்தாய் ஆகி
    நாமம் ஆயிரமாயினும்
    முருகா குமரா குஹா வென்
    மூன்றெழுத்து மந்திரம்
    முருகா சரணம்
     தீயாய் காற்றாய் மண்ணாய் திரைகடல்நீராய் விண்ணாய் திசையெங்கும்தெரிவதெல்லாம் திருச்செந்தூர் முருகா நீயே!
    தாயாக தந்தை குருவாய் தலைவனாய் உனையே எண்ணி தஞ்சமென வந்தோம் எம்மைத் தாங்கிட வேண்டுமையா!

    ஸ்கந்த புராணம் - பகுதி 25 

    முருகன் தேவ சேனாதிபதி ஆதல்
    ===================

    சிவபெருமான் தன் மைந்தனிடம், முருகா ! உன் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் காலம் வந்து விட்டது. சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகியோரை அழிப்பது மட்டுமல்ல. அவனது வம்சத்தில் ஒருவர் கூட இந்த பூமியில் வாழக்கூடாது. பலலட்சம் அசுரர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிழைத்திருந்தால் கூட உலகிற்கு ஆபத்து. அவர்களை வேரறுத்து விட வேண்டும், என்றதுடன், அவரது 12 கைகளுக்கும் பொருந்தும் வகையில் 12 ஆயுதங்களையும் லட்சம் குதிரைகள் இணைந்து இழுக்கக்கூடிய தேரையும் கொடுத்தார். பார்வதிதேவி தன் மகனைத் தழுவி, பாலகனே ! நீ பகைவர்களை அழித்து, வெற்றி வேலனாக திரும்பி வா, என ஆசி அளித்தாள். முருகனின் மாமா விஷ்ணு, சிவனால் வழங்கப்பட்ட தேர்களின் குதிரைகளை ஓட்ட சாரதியாக வாயுதேவனை நியமித்தார். 

    காற்றினும் கடுகிச் செல் என்று சொல்வதை இசைத்தான். காற்றை விட வேகமான ஊடகம் உலகில் வேறு ஏதுமில்லை. எனவே முருகனுக்கு வாயுவே சாரதியாக அமர்த்தப்பட்டான். பிரம்மரிஷி வசிஷ்டரும், தேவரிஷி நாரதரும் முருகனை மந்திரங்கள் சொல்லி ஆசிர்வதித்தனர். தேவதச்சனான துவஷ்டா, முருகனின் படைத்தளபதி வீரபாகு உள்ளிட்ட மற்ற சேனாதிபதிகளுக்கு தேர்களை வழங்கினார். அவற்றை சிங்கங்கள், யானைகள் இழுத்துச் சென்றன. வெற்றிவேல், வீரவேல் என்ற கோஷம் எங்கும் முழங்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு படைகள் கிளம்பின.
    எல்லா பிணியும் 
    எங்களைக் கண்டால்
    நில்லாது ஓட 
    நீ எமக்கு அருள்வாய்🙏🙏
    தொடரும்...

    ஓம் சரவண பவாய நமஹ!

    வினைகள் தீர்க்கும் வேல் மாறல் பதிகம் 
    வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

    ... வேலும் மயிலும் துணை ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

    விருத்தன்என(து) உளத்தில்உறை 

    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை

    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
     ஒளிப்பிரபை வீசும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்

    இடுக்கண்வினை சாடும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

    16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ...

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.