Friday, March 20, 2020

ஸ்ரீ நாராயணீயம்

ராதே கிருஷ்ணா 21-03-2020



Radhe Krishna 28-02-2020

[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ கணேஸாய நமஹ!

ஸ்ரீ நாராயணீயம்...ஒரு
******** அருமருந்து
*****
ஸ்லோகம்..4
*****

நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமானந்த-பீயூஷ ரூபே
நிர்லீநாநேக-முக்தாவலி-ஸுபகதமே நிர்மல ப்ரஹ்ம ஸிந்தெள!
கல்லோல்லோல்லாஸ -துல்யம் கலு விமலதரம் ஸத்வமாஹுஸ் ததாத்மா 
கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமன்!!

பொருள்:-

பரப்ரம்மம் என்பது தெளிவான கடல் போன்றது.நிலையானது.எங்கும் நிறைந்திருப்பது.எப்போதும் நிறைந்திருப்பது.எல்லைகளற்றது.பரமானந்தம் என்ற அமுத ஸாகரம் அது.கடலில் நல் முத்துக்கள் மூழ்கிக்கிடப்பது போல் அந்த அமுத ஸாகரத்தில் முக்தர்கள் மூழ்கி திளைத்திருக்கிறார்கள்.அந்த கடலில் உன் சுத்த ஸத்துவமான அர்ச்சா
 மூர்த்தி தளிர்த்துவிளையாடும் அலையைப்போன்றது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.அனைத்திலும் இருப்பவன் நீ என்று சொல்வது எப்படி பொருத்தமில்லாமல் போகும்?
க்ருஷ்ணார்ப்பணம்.
                       (தொடரும்)
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ கணேஷாய நமஹ!
---------------------------------------
ஸ்ரீ நாராயணீயம்--ஓர்
******** அருமருந்து.
******
ஸ்லோகம்--5
----------------------

நிர்வ்யாபாரோsபி நிஷ்காரணம் அஜ
பஜஸே-யத்க்ரியாம் ஈக்ஷணாக்யாம்
தேனைவோதேதி லீனா ப்ரக்ருதிரஸதி கல்பாsபி கல்பாsதிகாலே!
தஸ்யா:ஸம்சுத்தமம்ச'ம் கமபி தமதிரோதாயகம் ஸத்த்வரூபம்
ஸ த்வம் த்ருத்வா ததாஸி ஸ்வமஹிம விபவாகுண்ட வைகுண்டரூபம்!!

பொருள்:-
----------------
பிறப்பில்லாதவனே!பெருமையிலும் வல்லமையிலும் குறையாதவனே!வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனே! உமக்கு எந்த தொழிலும் இல்லாதிருப்பினும்,காரணம் ஏதுமின்றி நீ பார்க்கும்போது,அந்த பார்வையிலிருந்து ப்ரக்ருதி என்ற தத்வம் தோன்றுகிறது.அது இல்லை என்ற தோற்றத்துடன் உன்னிடம் மறைந்திருந்தது.படைப்பின் தொடக்கத்தில் வெளிப்படும் அது தூய்மையானது;ஒன்றையும் மறைக்காதது;ஸத்துவ வடிவானது;அதன் ஒரு பகுதியைக் …
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ கணேஸாய நமஹ!
*********
ஸ்ரீ நாராயணீயம்.....
********
ஓர் அருமருந்து
*******
ஸ்லோகம்....6
-----------------------

தத்தே ப்ரத்யக்ரதாராதர-லலித
கலா-யாவலீ கேளிகாரம்
லாவண்யஸ்யைக ஸாரம்  ஸூக்ருதி 
ஜந த்ருசாம் பூர்ண புண்யாவதாரம்!
லக்ஷ்மீ-நிஸ்சங்கலீலா-நிலயனமம்ருத -ஸ்யந்த ஸந்தோஹமந்த:
ஸிஞ்சத் ஸஞ்சிந்தகாநாம் வபுரநுகலயே மாருதாகாரநாதா!!.

பொருள்:-
--------------
ஓ குருவாயூரின் தலைவனே!உன் திருமேனி நீருண்ட மேகத்தைப்போல் அழகாக உள்ளது.காயாம்பூ கொத்துகளைப் போல் மகிழ்விக்கிறது.அழகெல்லாம் ஒன்று திரண்டுகூடி விளங்குகிறது.நன்மக்களின் கண்ணெதிரே புண்ணியகளனைத்தும் ஒன்றுதிரண்டு தோன்றினாற்போல் உள்ளது.லட்சுமி ஐயமின்றி விளையாடும் இடமாக விளங்குகிறது.தன்னை த்யானிப்பவர் உள்ளத்தே பேரானந்தப் பெருக்கை பொழிவதாகிய உன் திருமேனியை நான் இடைவிடாது த்யானிக்கிறேன்.
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ விக்னேஸ்வராய
******* 
நமஹ!
***

ஸ்ரீ நாராயணீயம்.....
******
ஓர் அருமருந்து
*******
தசகம்...1.
ஸ்லோகம்...7.

கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா பஹுதர பவ -கேதாவஹா ஜீவபாஜாம் 
இத்யேவம் பூர்வமாலோசித-மஜித
மயா நைவமத்யாபிஜானே!
நோ சேஜ்ஜீவா:கதம்
வா மதுரதரமிதம்
நேத்ரை:ச்'ரோத்ரைச்' ச
பீத்வா
பரம ரஸ -ஸுதாம்
போதிபூரே ரமேரந்!!

பொருள்:-
****
மாயை முதலியவற்றால் வெல்லப்படமுடியாதவனே! உன் படைப்பாகிய செய்கை உயிர்களுக்கு பலவகையான பிறவிகளின் துன்பத்தைக்கொடுக்கிறது.இது மிகவும் கொடியது என முன்பு நினைத்திருந்தேன்.இப்போது அவ்வாறு எண்ணவில்லை.நீ படைக்கவில்லை என்றால் அவ்வுயிர்கள் அறிவாலும் ஆனந்தத்தாலும் நிறைந்ததும், மிக இனியதுமாகிய உன் திருமேனியை கண்களால் கண்டும் காதுகளால் கேட்டும் பேரானந்தமாகிய அமுதக்கடலின் வெள்ளத்தில் எவ்வாறு திளைத்து விளையாடும்.
(தொடரும்)
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஓம் கணேஸாய நமஹ!
*****-***
ஸ்ரீ நாராயணீயம்....
********
ஓர் அருமருந்து
*******
தசகம்..1
ஸ்லோகம்.....8

நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி
புர ஸ்தை-ரநப்யர்தி தாநபி
அர்தான் காமாநஜஸ்ரம் விதரதி பரமானந்த ஸாந்த்ராம் கதிம் ச!
இத்தம் நி:சேஷலப்யோ நிரவதிக ஃபல:
பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்ரம் தம் ச'க்ரவாடீத்ரும மபிலஷதி-வ்யர்தமர்தி வ்ரஜோsயம்!!

பொருள்:-
ஹரியே!எல்லோராலும் அடையத்தக்கதும் அளவற்ற பயனைத் தருவதுமான பாரிஜாதமாக நீ இருக்கின்றாய்.உன்னை வணங்குபவரின் முன்னே எப்போதும் தோன்றுகின்றாய்.வேண்டாவிடினும் யாவரும் விரும்பக்கூடிய நான்குவகையான உறுதிப் பொருள்களையும் பேரானந்தம் தரும் மோட்சத்தையும் எப்போதும் தருகின்றாய்.இப்படியிருந்தும் யாசகர்களின் கூட்டம் இந்திரலோகத்திலுள்ள அற்பமான கற்பகத்தை விரும்புகிறது.
க்ருஷ்ணார்ப்பணம்.
                       (தொடரும்)
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ கணேஸ்வராய
********
நமஹ:-
***
ஸ்ரீ நாராயணீயம்...
*******
ஓர் அருமருந்து.
*******
தசகம்.....1
ஸ்லோகம்...9

காருண்யாத் காமமந்யம் தததி கலுபரே ஸ்வாத்மதஸ்த்வம் விசேஷாத் 
ஐஸ்வர்யாதீச'தேsந்யே
ஜகதி பரஜநே ஸ்வாத்மநோsபீச்வரஸ்த்வம்!
த்வய்யுச்சை-ராரமந்தி ப்ரதிபதமதுரே சேதநா:ஸ்பீதபாக்யா:
த்வம்சாத்மாராம ஏவேத்யதுல-குண கணாதார செளரே நமஸ்தே!!

பொருள்:-
***
உவமையில்லாத குணங்களின் தொகுதிக்கு இருப்பிடமானவனே!மற்ற தெய்வங்கள் கேட்பது மட்டுமே தரும்.நீயோ உன்னையே தந்துவிடுவாய்.அத்தேவர்கள் உலகமக்களுக்கு தலைவர்கள்.நீயோ உனக்கே தலைவன்.உன்னை நாடிவரும் உயிர்கள் அடிதோரும் பெரிதும் ஆனந்தமடைகிறார்கள்.உனக்கு பிறரிடமிருந்து எதுவும் தேவையில்லை.நீயே ஆனந்தஸ்வரூபி! ஆகவே உனக்கு நமஸ்காரம்!!
க்ருஷ்ணார்ப்பணம்.
                   (தொடரும்)
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 3)
---------------

மனிதனின் தேடுதலுக்கும், தேவைகளுக்கும் அவனது மனதின் நிறைவு இல்லாத தன்மையே காரணமாகின்றது. அதாவது, அவனுக்கு திருப்தியும், அமைதியும் இல்லாத காரணத்தினாலேயே அவன் எதையாவது தேடுவதையும், தேவையையும் வைத்துக் கொள்கின்றான். 

எப்பொழுது, அவனது மனம் திருப்தியை அடைகின்றதோ, அப்பொழுது அமைதியையும், ஆனந்தத்தையும் அவன் அனுபவிக்கின்றான். அமைதி எங்கு வருகின்றதோ, அங்கு ஆனந்தம் தன்னால் வந்து விடுகின்றது.

உதாரணமாக, ஒருவனுக்கு பசி உணர்வு உண்டாகின்றது. உடனே மனம் உணவை நாடுகின்றது. உண்ண உணவு கிடைத்தவுடன், அவனது வயிற்றுப் பசியாறி அவனுக்கு போதும் என்ற மனம் வந்து விடுகின்றது. இதனால் மனம் திருப்தி அடைந்து அமைதியையும், ஆனந்தத்தையும் உணர்கின்றது. 

இனி, அவன் முன்பு எத்தனை விதமான அறுசுவை உணவுகளை வைத்தாலும் அவனது மனம் அந்த …
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 4)
---------------

ஒவ்வொரு மனித(ஜீவ)னின் மனமும் மூன்று முக்கிய குணங்களை அடைப்படையாகக் கொண்டு அமைகின்றது. 

அவைகள், சத்வம், ராஜஸம், தாமஸம் என்பனவாகும்.

இதில் சத்வகுணம் மிகுந்த மனிதனிடம் தூய்மை, நேர்மை காணப்படும். மேலும், தனக்கு நேரும் கஷ்டங்கள், மற்றவர்களால் வருகின்ற விரோதங்களை பொருத்துக் கொள்ளுதல், தேசசேவை, பரோபகாரம், பணிவு, கருணை ஆன்ம ஞானத்தில் ஈடுபாடு போன்ற குண நலன்களைக் கொண்டவனாக இருப்பான்.

ராஜஸகுணம் மிகுந்த மனிதனிடம் சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம், வீர்யம், பொறாமை, சந்தோஷம், பொய் பேசுதல், தயவின்மை, கர்வம், காமம், குரோதம், துக்கம், ஹிம்ஸை முதலியவைகள் காணப்படும்.

தாமஸ குணத்தின் சுபாவம் அனாவசியமாக துக்கப்படுதல், நாஸ்திக சுபாவம், அதர்ம காரியங்களில் ஈடுபடுதல், புத்தி சக்தி குறைந்து புரிதல் இல்லாமை, தெளிவி…
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 5)
---------------

கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் போன்ற இந்திரியங்கள் வழியாக உள்வாங்கப்படும் ஒவ்வொரு விசயமும், நமக்குள் பல எண்ணங்களை உண்டாக்குகின்றன. 

அந்த எண்ணங்கள் அவற்றுக்குத் தொடர்புடைய பல்வேறு எண்ணங்களை உண்டாக்குகின்றன. 

விசயங்கள் மட்டுமா எண்ணங்களை உண்டாக்குகின்றன?
 
இன்னதென்று நாம் அறிய முடியாதவாறு, தொடர்ந்து நம்முள் பல எண்ணங்களும், அவற்றுக்குத் தொடர்புடைய வேறு சில எண்ணங்களும் தோன்றியவாறே உள்ளன. 

நாம் விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும், (கனவு காணும் போதும் கூட) நம்முள் எண்ணங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. 

கடலில் தொடர்ந்து அலைகள் எழுவதைப்போல், இடைவெளி இன்றி நம்முள் எண்ணங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. 

ஒரு அலை ஓய்வதற்குள், மற்றோரு அலை உருவாவதைப் போல, ஒரு எண்ணம் மறையும் முன்பே, மற்றொரு எண்ணம் உருவா…
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ கணேஸ்வராய
********
நமஹ:-
***
ஸ்ரீ நாராயணீயம்...
*******
ஓர் அருமருந்து.
*******
தசகம்.....1
ஸ்லோகம்...9

காருண்யாத் காமமந்யம் தததி கலுபரே ஸ்வாத்மதஸ்த்வம் விசேஷாத் 
ஐஸ்வர்யாதீச'தேsந்யே
ஜகதி பரஜநே ஸ்வாத்மநோsபீச்வரஸ்த்வம்!
த்வய்யுச்சை-ராரமந்தி ப்ரதிபதமதுரே சேதநா:ஸ்பீதபாக்யா:
த்வம்சாத்மாராம ஏவேத்யதுல-குண கணாதார செளரே நமஸ்தே!!

பொருள்:-
***
உவமையில்லாத குணங்களின் தொகுதிக்கு இருப்பிடமானவனே!மற்ற தெய்வங்கள் கேட்பது மட்டுமே தரும்.நீயோ உன்னையே தந்துவிடுவாய்.அத்தேவர்கள் உலகமக்களுக்கு தலைவர்கள்.நீயோ உனக்கே தலைவன்.உன்னை நாடிவரும் உயிர்கள் அடிதோரும் பெரிதும் ஆனந்தமடைகிறார்கள்.உனக்கு பிறரிடமிருந்து எதுவும் தேவையில்லை.நீயே ஆனந்தஸ்வரூபி! ஆகவே உனக்கு நமஸ்காரம்!!
க்ருஷ்ணார்ப்பணம்.
                   (தொடரும்)
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ குருப்யோ நமஹ!
********
ஸ்ரீ நாராயணீயம்....
*******-
ஓர் அருமருந்து.
*******
தசகம்...1.
ஸ்லோகம்...10.

ஐஸ்வர்யம் சங்கராதீச் வரவிநியமநம்
விச்வ தேஜோஹராணாம்
தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம்  விமலமபி யசோ
நிஸ்ப்ருஹைச்' சோபகீதம்!
அங்காஸங்கா ஸதா ஸ்ரீரகிலவிதஸி ந க்வாபி தே ஸங்கவார்த்தா
தத்வாதாகாரவாஸிந்
முரஹர! பகவச் சப்த 
முக்யாச்'ரயோsஸி!!
பொருள்:-
****
முரன் என்ற அசுரனைக் கொன்றவனே!குருவாயூரில் எழுந்தருளியிருப்பவனே!உன்னுடைய தேஜஸ் சங்கரன் போன்ற கடவுளரையும் கட்டுப்படுத்துகிறது.உன் வலிமை ஹரன் முதலியவர்களின் வலிமையையும் அடக்கி ஆள்கிறது.உன் புகழ் பற்றற்ற பெரியோர்களால் புகழப்படுகிறது.திருமகள் எப்போதும் உன்னில் வாசம் செய்கிறாள்.நீ ஞானஸ்வரூபி.இருப்பினும் எவ்விடத்திலும் உனக்கு பற்றுள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை.ஆதலால் நீ பகவான் என்ற சொல்லுக்கு இருப்பிடமாக விளங்குகிறாய்.
க்ருஷ்ணார்ப்ப…
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ விக்னேஸ்வராய
******** நமஹ!
***
ஸ்ரீ நாராயணீயம்.....ஓர்
********* அருமருந்து.
*****
தசகம்....2.
-----------------
ரூப மாதுர்யம் பக்தி
******** மஹத்வம் ச
******
ஸ்லோகம்....1
------------------------

ஸூர்யஸ்பர்திகிரீட -மூர்த்வ திலக -ப்ரோத்பாஸி பாலாந்தரம் 
காருண்யாகுல -நேத்ர
மார்த்ர -ஹஸிதோல்லாஸம் 
ஸுநாஸாபுடம்!
கண்டோத்யந்-மகராப-குண்டலயுகம் கண்டோஜ்வலத் கெளஸ்துபம் 
த்வத்ரூபம் வநமால்ய 
ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே!!

பொருள்:-
****
குருவாயூரப்பா உன் க்ரீடம் சூர்ய ஒளியை மிஞ்சுகிறது.மேல் நோக்கிய திலகம் விளங்கும் அகன்ற நெற்றி பிரதேசம், கருணைபொழியும் கண்கள்,எடுப்பான நெடு நாசி அழகான முகவாயில் தவழும் புன்னகை தவழ்கிறது.காதில் அணிந்துள்ள மகர குண்டலங்கள் கன்னங்களில் பிரகாசிக்கின்றன.அழகிய கழுத்தில் கெளஸ்துப மணி ஒளிர்கிறது.வனமாலை,முத்து மாலை,ஸ்ரீ வத்ஸம் ஆகியவை மார்பில் விள…
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ விக்னேஸ்வராய
******** நமஹ!
***
ஸ்ரீ நாராயணீயம்.....ஓர்
********* அருமருந்து.
*****
தசகம்....2.
-----------------
ரூப மாதுர்யம் பக்தி
******** மஹத்வம் ச
******
ஸ்லோகம்....1
------------------------

ஸூர்யஸ்பர்திகிரீட -மூர்த்வ திலக -ப்ரோத்பாஸி பாலாந்தரம் 
காருண்யாகுல -நேத்ர
மார்த்ர -ஹஸிதோல்லாஸம் 
ஸுநாஸாபுடம்!
கண்டோத்யந்-மகராப-குண்டலயுகம் கண்டோஜ்வலத் கெளஸ்துபம் 
த்வத்ரூபம் வநமால்ய 
ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே!!

பொருள்:-
****
குருவாயூரப்பா உன் க்ரீடம் சூர்ய ஒளியை மிஞ்சுகிறது.மேல் நோக்கிய திலகம் விளங்கும் அகன்ற நெற்றி பிரதேசம், கருணைபொழியும் கண்கள்,எடுப்பான நெடு நாசி அழகான முகவாயில் தவழும் புன்னகை தவழ்கிறது.காதில் அணிந்துள்ள மகர குண்டலங்கள் கன்னங்களில் பிரகாசிக்கின்றன.அழகிய கழுத்தில் கெளஸ்துப மணி ஒளிர்கிறது.வனமாலை,முத்து மாலை,ஸ்ரீ வத்ஸம் ஆகியவை மார்பில் விள…
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ விக்னேஸ்வராய
******* நமஹ:
****
ஸ்ரீ நாராயணீயம்....
********
ஓர் அருமருந்து.
******
தசகம்.....2
-----------------
ஸ்லோகம்...2.
------------------------

கேயூராங்கத கங்கணோத்தம மஹாரத்னாங்குலீயாங்கித-ஸ்ரீமத்பாஹு சதுஷ்க ஸங்கத கதா சங்காரி -பங்கேருஹாம்!
காஞ்சித் காஞ்சந-காஞ்சிலாஞ்சித லஸத் -
பீதாம்பராலம்பினீம்
ஆலம்பே விமலாம்புஜ
த்யுதிபதாம் மூர்த்திம்
தவார்த்திச்சிதம்!!

பொருள்:-
*****
தோள்வளைகளையும் காப்புகளையும் இரத்தின மோதிரங்களையும் அணிந்துவிளங்கும் உன் நான்கு கைககள் கதை சங்கு சக்கரம் தாமரைப்பூ ஆகியவற்றையும் ஏந்தியிருக்கின்றன.இடுப்பு பொன் அரைநாணையும் பீதாம்பரத்தையும் தாங்கியுள்ளது.திருவடிகள் தூய தாமரைமலர்போல் விளங்குகிறது.இப்படிப்பட்டது என்று வர்ணிக்க இயலாத உன் திருமேனி துன்பங்களை போக்குகிறது.நான் அதையே திடமாகப் பற்றுகிறேன்.
 
க்ருஷ்ணார்ப்பணம்!
                     (தொடரும்)
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 6)
---------------

“நன்மை, தீமை, மற்றும் சுகம் - துக்கம் என்பன மனதினால் விளைபவை. ‘நாம்’ உண்டாக்குவதல்ல.

விழிப்பு நிலையில் பல்வேறு எண்ணங்களை கொண்டு, அதற்கேற்ற செயலைச் செய்து, அதனால் உண்டாகின்ற சுக, துக்கங்களினால் பாதிக்கப்பட்டு, மன அமைதி இன்றி, இந்த உலகத்தை உண்மை என்று கருதி ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

அதுப்போலவே, கனவு நிலையில் பல்வேறு எண்ணங்களைக் கொண்டு, அதற்கேற்ற செயலைச் செய்து, அங்கும் பயம், துக்கம், சந்தோசம் என பலவாறான பாதிப்புகளை அடைந்து, அந்த உலகத்தையும் உண்மை என்று அபிமானிக்கின்றோம். 

அந்த கனவு உலகில் இருக்கும்வரை இந்த விழிப்பு நிலை உலகத்தையும் உறவுகளையும், விழிப்பு நிலையில் இருக்கும் வரை கனவு நிலை உலகத்தையும், உறவுகளையும் மறந்து விடுகின்றோம்

கனவு கலைந்து விழிப்பு நிலைக்கு வந்தவுடன் இந்த விழிப்பு நில…
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை.

அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல. பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென…
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ॥ பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாய ச

பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ॥

சாலிவஹன சகம் பால்குன மாதம், த்வீதீய திதி நன்னனாளில் (1545 ம் ஆண்டு)

475 ஆண்டுகளுக்கு முன்பு, நமது தஞ்சை நகரில், சோழ அரசன் முன்னிலையில், கலியுக தெய்வம் என்று பக்தர்களால் போற்றப்படும் குரு  ஸ்ரீராகவேந்திரர் பட்டாபிஷேகம் பெற்றநாள் இன்று.
 
ராகவேந்திர விஜயம் என்ற அவரது வாழ்வை விவரிக்கும் நூலில் அவர் சன்யாசம் பெற்றுக்கொண்ட வைபவத்தை விவரிக்கும் ஸ்லோகம்.

லக்னே லக்னகுனே நீலிம்ப குருணா த்ருஷ்டே விம்ரிஷ்டே த்விஜய:|

ஏனம் ஸம்மதபாக் அதீஹி பகவோ பிரஹ்மேத்யுதீர்ய ஸ்திதம்
ஆலோக்யோப திதேச தேசிகவர: தஸ்மை ஸ தாரம் புரா
ஸ்வப்னே ஸ்வப்ன துராப வைபவ நிதி: லப்பதாம் ததௌ சாபிதாம் ||

அதன் பொருளானது: 
 
பஞ்சேஷ்டிகாதி குணங்கள் நிறைந்த, தேவகுரு பிரகஸ்பதி பார்க்கும் நல்ல வேலையில், சாஸ்திரங்கள் நன்கு அறிந்த ப்ராம்மணர்கள் ஆராய்ந்து குடுத்த மங்களகரமான லக்கினத்தில்,  பிராம்மணர், பிரம்மத்தை போதியுங்கள்/உபதேசியுங்கள் என்று கூறி  இருந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் ஸ்ரீசுதீந்த்ர தீர்த்தர், ஸ்ரீ வேங்கட நாதனுக்கு பிரம்மத்தை உபதேசித்தார், தேவதைகளுக்கும் கிடைக்காத மஹாத்மியம் பொருந்திய, தான் ஏற்கனவே கனவில் இறை அருளால் கண்ட/உணர்ந்த பெயரான 
"ராகவேந்திரர்" என்ற திருநாமத்தை சந்யாஸ ஆஸ்ரம பெயராக சூட்டினார்.

ஸ்ரீ ராகவேந்திரர் சன்யாசம் பெற்றுக்கொண்ட இந்த நன்னாளில் நாமும் நல்ல ஞானம் வேண்டி குரு ராகவேந்திரர் தாள் பணிவோம்.
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ விநாயகா நமஹ!
********
ஸ்ரீ நாராயணீயம்
******** என்னும் ஓர்
***** அருமருந்து.......
*******

தசகம்.....2
------------------
ஸ்லோகம்.......3
---------------------------

யத்-த்ரைலோக்ய- மஹீயஸோ sபிமஹிதம்ஸம்
மோஹனம் மோஹனாத் 
காந்தம் காந்திநிதாநதோபி
மதுரம் மாதுர்யதுர்யாதபி!
ஸெளந்தர்யோத்தரதோபி ஸுந்தரதரம்
த்வத்ரூப-மாச்சர்யதோபி
ஆச்சர்யம் புவநேந கஸ்யகுதுகம் புஷ்ணாதி விஷ்ணோவிபோ!!

பொருள்:-
***
விஷ்ணுவே!விபுவே! உன் திருமேனி மூவுலகிலும் போற்றப்படும் பொருள்களிலும் மேலாகப்போற்றப்படுகிறது.மனதைகவரும் பொருள்களைவிட மனதை கவர்வது. ஒளிகளுக்கு இருப்பிடமான பொருள்களைவிட ஒளிமிக்கது.இனிதாக இருக்கும் பொருள்களைவிட மிக்க இனிமையானது.அழகாக உள்ள பொருள்களைவிட மிக அழகானது.வியப்பாக தோன்றும் பொருள்களைவிட மிக்க வியப்பானது.இத்தகைய திவ்யஸ்வரூபம் உலகில் யாருக்குதான் மகிழ்ச்சியளிக்காது?

க்ருஷ்ணார்ப்பணம்!
           (தொடரும்...)
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ விக்னேஸ்வராய
********* நமஹ!
****
ஸ்ரீ நாராயணீயம்
********
என்னும் ஓர்
***** அருமருந்து.
*****

தசகம்....2
-----------------
ஸ்லோகம்......4
---------------------------

தத்தாத்ருங் மதுராத்மகம் தவ வபுஸ்ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ 
ஸா தேவீ பரமோத்ஸுகா சிரதரம் நாஸ்தே ஸ்வபக்தேஷ்வபி!
தேநாஸ்யா பத கஷ்ட மச்யுதவிபோ! த்வத்ரூப மாநோஜ்ஞக ப்ரேமஸ்தைர்யமயாத சாபல-பலாத் சாபல்ய வார்த்தோதபூத்!!

பொருள்:-
****

அண்டினவரை கைவிடாதவனே! தலைவனே! இலக்குமி தேவி உவமையற்றதும் மனதைகவர்வதுமாகிய உன் திருமேனியிலேயே பற்று மிகுதியாக குடிகொண்டிருப்பதால் தன் பக்தர்களிடம்கூட நீண்டகாலம் இருப்பதில்லை.அதனால் 'நிலையில்லாதவள்' என்ற பழிச்சொல் உண்டாகியுள்ளது.இதுமிகவும் வருந்தத்தக்கதாகும்.
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: ஸ்ரீ கணேஸாய நமஹ!
********
ஸ்ரீ நாராயணீயம்.....ஓர்
********* அருமருந்து.
******

தசகம்.....2
------------------
ஸ்லோகம்......5
--------------------------

லக்ஷ்மீஸ்தாவக-ராமணீயக - ஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்திரேதி அஸ்மிந்நந்யதபி ப்ரமாணமதுநா வக்ஷ்யாமி லக்ஷ்மீபதே!
யே த்வத் த்யாந -குணாநுகீர்த்தன -ரஸா ஸக்தா ஹி பக்தா ஜநா:
தேஷ்வேஷா வஸதி ஸ்திரைவ தயித ப்ரஸ்தாவ -தத்தாதரா!!

பொருள்:-
****
திருமகளின் தலைவனே! இந்த இலக்குமி உன் அழகினால் கவரப்பட்டிருக்கிறாள்.ஆதலால் பகவத்பக்தி இல்லாத மற்றவர்களிடத்தில் நிலையாக இருப்பதில்லை.இதற்கு வேறு ஒன்றையும் சான்றாகக் கூறுகிறேன்.உன்னைத் தியானிப்பவர்களிடமும், உன் குணங்களைப் பாடி ஆனந்தத்தில் மூழ்கிகிடக்கும் பக்தர்களிடமும் இவள் நிலையாகவே அன்புகொண்டு வாழ்கிறாள். இது உறுதி.

க்ருஷ்ணார்ப்பணம்.
       (தொடரும்.....)
[6:42 PM, 2/28/2020] Narasimhan R: தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 7)
---------------

“என்னுடைய அனுபவங்களை மாயை என்று கூறுகிறீர்களே, இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி மாயை என்று கூறலாம்?” 

மாயை என்றால் அடியோடு இல்லாத வஸ்து என்று நினைத்துக் கொள்வதினால் இந்த கேள்வி எழுகின்றது. 

மாயை அப்படி இல்லை. 

அது இருப்பதாக நினைக்கின்ற வரை இருப்பதாகவே தோன்றும். அது, ‘முயல் கொம்பு’ போன்று இல்லை. ‘கானல் நீர்’ போன்று இருக்கின்றது.

கானல் நீர் கண்ணுக்குத் தெரிகின்றது. ஆனால் அதில் நீர் இல்லை. அதைக் குடித்து நாம் தாகம் தணித்துக் கொள்ள முடியாது. 

கானல் நீர் உண்மையான நீர் இல்லை என்று அறிந்தவர்களுக்கும்கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்யும். 

அதுப்போலவே, உலகை மாயம் என உணர்த்த வந்த ஞானிகளுக்குக் கூட இந்த உலகம் தெரியத்தான் செய்யும். 

ஆனால், அது சத்தியமல்ல என்று அவர்கள் அறிவார்கள்.

இந்த உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே, அதற்கு ஆதாரமான பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அறிகின்ற பொழுது, காரியங்கள் அனைத்தும் நின்று போகின்றன.

அடியோடு இல்லாத வஸ்துவல்ல இந்த உலகம். ஞானம் வருகின்ற வரையில் இருக்கின்ற தோற்றம் அது. 

கனவு காண்கிற வரையில் கனவு உணமையாக இருந்து, நாம் விழித்துக் கொண்ட பிறகு கனவு உண்மையல்ல என்பதுப் போல, நாம் அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற வரையில் உலகம் உண்மையாகத் தெரிந்து, நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டவுடன் மறைந்து போகின்றது. 

இந்த மாயை அறிய விரும்புகின்ற ஜீவர்களுக்கு அவன் அருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் விளங்கும்.

அந்த அகண்ட பரிபூரண வஸ்துவே அனைத்து ஜீவர்களிலும் அந்தர்யாமியாக இருந்துக் கொண்டு, அவைகளை வழி நடத்துகின்றது.

அதாவது, பொம்மலாட்டம் நிகழ்ச்சியில் கவனித்தோமானால், அங்கு ஒவ்வொரு பொம்மையும் பலவிதமான செயல்களை மிகவும் நுட்மாக செய்வதை நாம் காண்கின்றோம். 

இவைகளைக் காண்கின்ற குழந்தைகளுக்கு அந்த பொம்மை ஆடுவதும், ஓடுவதும் என பார்பதற்கு உண்மைப் போன்றே தெரியும். ஆனால், அந்த பொம்மைகளை அந்த திரைக்கு பின்னால் இருந்துக்கொண்டு ஒருவன் ஆட்டுவிப்பதையும், அவன் நிறுத்தினால் அந்த பொம்மைகள் செயல் இழப்பதையும் அந்த குழந்தை அறியாது. காரணம், அதற்கு அதை அறிந்துக் கொள்கின்ற அளவிற்கு (மனம்) புத்திசக்தி இன்னும் வளரவில்லை.

இதையே, நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கின்ற இந்த பொம்மலாட்ட நிகழ்வுகளை அந்தந்த பொம்மையின் (உடலின்) உள்ளே இருந்துக் கொண்டு ஒருவன் ஆட்டுவிக்கின்றான் என்பதை அறியக்கூடிய (மனம்) புத்தி சக்தி பெரும்பாலானவர்களுக்கு இன்னும் உண்டாகவில்லை எனலாம்.

இந்த ஜீவர்கள் என்ற பொம்மைகளை ஆட்டுவிக்கின்றவன் ஆட்டத்தை நிறுத்திவிட்டால், இந்த பொம்மை (உடல்) செயல்படாது. 

இதனை நாம் இறப்பு என்கின்றோம்.

இறப்புக்கு முன்பு, தன்னுடைய உண்மை இருப்பு நிலையான “நான் இருக்கின்றேன்” என்பதை மனிதனை தவிர மற்ற எந்த ஜடப்பொருட்களும், மிருகங்களும் அறியாது. 

காரணம், அவைகளுக்கு தன் இருப்பை அறியும் ஆற்றலான ஆறாவது அறிவு கொடுக்கப்படவில்லை. ஆனால், மனிதனும் அந்த ஆறாவது அறிவைக் கொண்டு தன்னை அறியாமல் இருப்பது மனிதப்பிறவியில் மிகப்பெரிய இழப்பு எனலாம்.

அந்த இருப்பு உள்ளே இருப்பதினால்தான் அவனது கண்கள் காட்சியைக் காண்கின்றது. காதுகள் கேட்கின்றது. மூக்கு நுகர்கின்றது, நாக்கு சுவைக்கின்றது, தோல் உணர்கின்றது. இந்த இந்திரியங்களின் அனைத்து அனுபவங்களுக்கும் அந்த இருப்பே (ஆத்மாவே) காரணமாக இருக்கின்றது.

அதுவே, அந்த இருப்பு வெளியேறியவுடன் இறப்பு ஏற்பட்ட உடலில், இந்த அனைத்து இந்திரியங்களும் இருக்கின்றன. 

இருப்பினும், அதனால், தன்னை சுற்றிலும் அமர்ந்துக் கொண்டிருக்கின்ற உறவுகளை காண முடிவதில்லை, காதுகள் இருந்தும் மற்றவர்கள் கதறி அழுவதை கேட்க முடியவில்லை. மூக்கு இருந்தும், அருகே ஏற்றி வைக்கப்பட்ட ஊதுவற்தியின் நறுமணத்தை முகர முடியவில்லை. நாக்கு இருந்தும் தனது வாயில் போடும் வாக்கரிசையை சுவைக்க முடியவில்லை. தோல் இருந்தும் கட்டிய மனைவி தொடுவதை உணர முடிவதில்லை.

ஆக, இந்த இறப்பு ஏற்பட்ட உடல், இயங்கிக் கொண்டிருந்ததற்கு காரணமான இருப்பு எது? 

என்பதை இந்த மனம் (புத்தி) அறிந்துக் கொள்வதில் அக்கரைக் காட்டாமலேயே இருந்து விட்டு, இறந்த ஸ்தூல உடலில் இருந்து, சூக்ஷுமமாக வெளியே வந்து, சேகரித்துக் கொண்ட சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப தனக்கு உடலை தேர்ந்தெடுக்க விரும்புகின்றது.

அதாவது, இந்த ஸ்தூல உடலை பயன்படுத்தி், புலன்களின் வாயிலாக அறிந்துக் கொண்ட விசயங்களையும், பூர்வ சம்ஸ்காரங்களையும் கொண்டு, அவைகளின் ஒட்டுமொத்த தொகுப்பான  இந்த  சூக்ஷுமமான மனம் உண்டாகி, அவைகளை ‘இன்னது’, ‘இன்னது’ என்று புரிந்துக் கொள்ள புத்தி சக்தியாக மாறி, அவைகளை சித்தத்தில் சேகரித்து, அதனை அஹங்காரமாக இதுவரை வெளிப்படுத்தி வந்தது. 

இந்த மனமே பரு உடல் கிடைக்க காரணமாக இருந்தது. 

அதாவது, அதன் இதற்கு முந்தைய பல்வேறு பிறவிகளினால் உண்டான பூர்வ சம்ஸ்காரங்களின் பதிவுகளுக்கு ஏற்ப அவைகளை அனுபவிக்க விரும்பி அதற்கேற்ற உடலை உருவாக்கிக் கொண்டது.

இதிலிருந்து இந்த மனம் அழியாமல், உடல் எடுக்கின்ற பிறவி நிற்காது என்பது உறுதி செய்யப்படுகின்றது.

இந்த மனம் ஆத்மாவை மறைத்துக் கொண்டு, ஆனந்தத்தை நாடுகின்றது. 

இது எவ்விதம் ஆத்மாவை மறைக்கின்றது எனில், பிரகாசமான சூரியனை, மேகம் மறைப்பது போன்று காணப்படுவதைக் கண்டு, மேகம் சூரியனை விட பெரியது என்று கூறிவிட முடியாது. அதுப்போல, மனம் ஆத்மாவை மறைப்பதைக் கண்டு, அதைவிட பெரியது என்று தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது.

அனைத்து நினைவுகளுக்கும் மனமே காரணம். நாம் ஏற்கனவே அறிந்து கொண்டதுபோன்று, விழிப்பு நிலை, கனவு நிலை ஆகிய இரண்டுமே, நம் மனதின், எண்ணங்களின் விருத்தியே. 

நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தங்களோ, பின் விளைவுகளோ, பலன்களோ இருக்கின்றதா எனப் பார்த்தால், ஒன்றுமில்லை என்றே தெரிகின்றது. 

கனவில் நாம் காணும் உலகங்கள் யாவற்றையும், மனமே படைக்கின்றது. கனவு காணும் போது, அந்த உலகமும், அதில் வரும் உருவங்களும், அதில் நிகழும் நிகழ்ச்சிகளும், நமக்கு நிஜம் போலவே இருக்கின்றன. 

விழித்து எழுந்ததுமே, அவை ஏதும் நிஜமல்ல எனத் தெளிவாகின்றது. (கனவு காணும் தருணத்தில், அது கனவு என நாம் அறிவதில்லை. விழித்து, புற உலகை அறிந்தவுடன், அதுவரை நாம் கண்டதெல்லாம் கனவு என அறிகின்றோம்).

இதைப் போலவே, விழிப்பு நிலையில் நாம் காணும் உலகக்காட்சிகள் அனைத்துமே மனதாலேயே தோற்றுவிக்கப்படுகின்றது. இவைகள் யாவும் மனதின் விருத்திகளே ஆகும். 

கனவு நிலை அனுபவங்களை, கனவு கலைந்து விழித்தவுடன் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதைப் போன்று, விழிப்பு நிலை அனுபவங்களை மரணத்திற்கு பிறகு யாருடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாது. 

ஆனால், மனம் தன்னுடைய விழிப்பு நிலை அனுபவங்களின் பதிவுகளுக்கு ஏற்ப சேகரித்துக் கொண்ட ஆகாமிய கர்மாவை, கொண்டு சென்று, சஞ்சித கர்மாவுடன் இணைத்துக் கொண்டு, ஏற்கனவே, அதில் சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப, அவைகளில் இருந்து சிறிது மட்டும் பிராரப்த கர்மாவாக எடுத்துக் கொண்டு, அவைகளை அனுபவிக்கும் பொருட்டு, அதற்குத்தக்க உடலை மீண்டும்  தேர்ந்தெடுத்து பிறவிக்கு வருகின்றது. 

இது ‘மனம் செய்யும் செயல்’ என்பதை ஒருவன் இந்த மனதைக்கொண்டு, புத்தியினால் விசாரித்து அறிய வேண்டும்.

தொடரும்…🙏பராவித்யா Swami Prabanjanathan

ஸ்ரீ  விக்னேஸ்வராய
********************** நமஹ!
********
நாராயணீயம்....ஓர்
********************* அருமருந்து.
************

தசகம்....
--------------
ஸ்லோகம்.....6
--------------------------

ஏவம் பூத-மநோஜ்ஞதா நவஸுதா நிஷ்யந்த ஸந்தோஹநம்
த்வத்ரூபம் பரசித்ரஸாயனமயம்  சேதோஹரம் ச்ருண்வதாம்! 
ஸத்ய ப்ரேரயதே மதிம் மதயதே ரோமாஞ்சயத்யங்ககம்
வ்யாஸிஞ்சத்யபி சீதபாஷ்ப -விஸரை: ஆநந்த மூர்ச்சோத்பவை:!!

பொருள்:-
***********
உன் திருவுருவம் அழகாகிய புதிய அமுதத்தைப் பெருக்குகின்ற பரப் பிரம்ம வடிவாக உள்ளது.உள்ளத்தைக் கவர்கிறது.அது உன்னைப் பற்றி கேட்கின்றவரின் அறிவை மறுபடியும் கேட்கும்படி தூண்டுகின்றது.ஆனந்தம் அடையும்படி செய்கின்றது.உடலை மயிர்க்கூச்செரியும்படி செய்கிறது.ஆனந்தமிகுதியால் உண்டாகின்ற குளிர்ந்த கண்ணீரின் பெருக்கினால் நனைக்கிறது.

க்ருஷ்ணார்ப்பணம்.
            (தொடரும்....)

ஸ்ரீ விக்னேஸ்வராய
*********************** நமஹ!
********
ஸ்ரீ நாராயணீயம்.....ஓர்
************************ அருமருந்து.
************
தசகம்.....2
------------------
ஸ்லோகம்......7
-------------------------

ஏவம் பூததயா ஹி பக்த்யபிஹிதோ யோக:ஸ யோகத்வயாத் 
கர்மஜ்ஞாநமயாத் ப்ருசோத்தமதரோ யோகீஸ்வரைர்கீயதே!
ஸெளந்தர்யைக -ரஸாத்மகே த்வயி கலு ப்ரேமப்ரகர்ஷாத்மிகா பக்திர் -நி:ச்ரமமேவ விஷ்வ-புருஷைர் லப்யா ரமாவல்லப!!

பொருள்:-
--------------
இலக்குமியின் தலைவனே! பக்தியோகம் மிக்க பெருமைவாய்ந்ததாக இருக்கின்றது.அதனால்தான் கர்மயோகம்,ஞான யோகம் ஆகிய இரண்டை காட்டிலும் உயர்ந்தது என்று யோகீஸ்வரர்களால் புகழ்ந்து பாடப்படுகின்றது.அழகையே வடிவாகக் கொண்ட உன்னிடத்தில் அன்பின் எழுச்சியாகிய பக்தி எல்லா மக்களாலும் எளிதில் அடையக்கூடியதன்றோ?

க்ருஷ்ணார்ப்பணம்.
           (தொடரும்.....)


ஸ்ரீ விக்னேஸ்வராய
********************** நமஹ!
********
ஸ்ரீ நாராயணீயம்
*******************
தசகம்.....2
------------------
ஸ்லோகம்.....8
-------------------------

நிஷ்காமம் நியதஸ்வதர்ம சரணம் யத் கர்ம யோகாபிதம்
தத்தூரேத்யபலம் யதெளபநிஷத ஜ்ஞாநோபலப்யம் புந:
தத்த்வவ்யக்ததயா ஸுதுர்கமதரம் சித்தஸ்ய தஸ்மாத்விபோ
த்வத் ப்ரேமாத்மக பக்திரேவ ஸததம் ஸ்வாதீயஸி ச்'ரேயஸீ!!

பொருள்:-
----------------
தலைவனே!கர்ம யோகம் என்பது பயனை எதிர்பார்க்காமல் செய்வது.நீண்ட காலத்திற்குப்பின் பயனளிப்பது.உபநிடதங்களால் பெறும் ஞான யோகம் இந்திரியங்களுக்கு புலனாகாதது.மனதிற்கு எட்டாதது.ஆனால் உன்னிடம் செலுத்துகின்ற பக்தியோ இனிமையானது.பேரின்பத்தை அளிக்கக்கூடியது.
க்ருஷ்ணார்ப்பணம்.
         (தொடரும்.....)


ஸ்ரீ கணேஸாய நமஹ!
*************************
ஸ்ரீ நாராயணீயம்.....ஓர்
************************* மாமருந்து.
************
தசகம்.....2
------------------
ஸ்லோகம்......9
--------------------------

அத்யாயாஸகராணி கர்மபடலாந்யாசர்ய நிர்யந்மலா:
போதேபக்திபதேsதவாsப்யுசிததாம் ஆயாந்தி கிம் தாவதா!
க்லிஷ்ட்வா தர்கபதே 
பரம் தவ வபுர் ப்ரஹ்மாக்ய -மந்யே புந:
சித்தார்த்ரத்வம்ருதே விசிந்த்ய பஹுபி: ஸித்யந்தி ஜன்மாந்தரை:!!

பொருள்:-
************
மிகுந்த சிரமத்தை தரும் கர்மவினைகளை வெல்ல உன்னை அனுஷ்டித்து மனமாசு நீங்கியவராய் ஞான மார்க்கத்திலோ பக்தி மார்க்கத்திலொ செல்லும் தகுதி அடைந்தாலும் பயனில்லாமல் மன நெகிழ்ச்சியில்லாமல் வெறும் தர்க்க வாதத்தில் ஈடுபட்டு முடிவில் பரப்ரும்ம வடிவத்தை த்யானித்து பல பிறவிகளுக்கு பிறகு பேரானந்தத்தை அளிக்கும் மோட்சத்தை அடைகின்றனர்.
க்ருஷ்ணார்ப்பணம்.
            (தொடரும்.....)

ஸ்ரீ விநாயாக போற்றி!
************************
ஸ்ரீ நாராயணீயம்......
***********************
ஓர் அருமருந்து....
*******************
        பக்தி ப்ரார்த்தனா
        ------------------------------
தசகம்.....3
-------------------
ஸ்லோகம்.....1
-------------------------

படந்தோ நாமாநி ப்ரமத பரஸிந்தெள நிபதிதா:
ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குணகதா: சரந்தோ யே பக்தா: த்வயி கலு ரமந்தே பரமமூந் அஹம் தந்யான்மந்யே ஸமதிகத ஸர்வாபிலஷிதான் !!

பொருள்:-
---------------
வரதனே! பக்தர்கள் உன் திருநாமங்களைப் பாடிக்கொண்டும், உன் திவ்ய வடிவத்தை த்யானித்துக்கொண்டும்  ஆனந்தக்கடலில் திளைக்கிறார்கள்.உன் குணங்களையும்லூ கதைகளையும் கூறிக்கொண்டு உன்னிடத்தில் இன்புற்றவர்களாய் தாம் விரும்பும் எல்லாவற்றையும் அடையும் பக்தர்களையே நான் பேறு பெற்றவர்களாக கருதுகின்றேன்.

க்ருஷ்ணார்ப்பணம்.
            (தொடரும்.....)

ஸ்ரீ விக்னராஜாய நம:
************************
ஸ்ரீ நாராயணீயம்.......
***********************
ஓர் மாமருந்து.......
******************-
தசகம்......3
-------------------
ஸ்லோகம்.......2
----------------------------
கதக்லிஷ்டம் கஷ்டம் தவ சரணஸேவாரஸபரேsபி
அநாஸக்தம் சித்தம் பவதி பத விஷ்ணோ குரு தயாம்!
பவத்பாதாம்போஜ ஸ்மரண ரஸிகோ நாம நிவஹாந் 
அஹம் காயம் காயம் குஹசந விவத்ஸ்யாமி விஜநே!!

பொருள்:-
----------------
விஷ்ணுவே! நோயால் துன்புற்ற என் மனம் உன் திருவடிகளை வணங்குவதால் உண்டாகும் ஆனந்தப் பெருக்கிலும்கூட பற்றற்று இருக்கிறது.
ஐயோ!இது பெருந்துன்பமே ஆகும்.நான் உன் திருவடிகளை த்யானிப்பதில் ஆசையுடையவனாய் உன் திருப்பெயர்களைப் பாடிக்கொண்டு எங்கேயாவது தனியான ஓரிடத்தில் வாழ ஆசைப்படுகிறேன்.அதற்கு நீயே அருள் புரிய வேண்டும்.
க்ருஷ்ணார்ப்பணம்.
         (தொடரும்.....)

ஸ்ரீ விக்னேஸ்வராய
*********************-*
நமஹ:
*******
ஸ்ரீ நாராயணீயம்......
**********************
ஓர் மாமருந்து.....
******************
தசகம்....3
-----------------
ஸ்லோகம்.....3
-------------------------

க்ருபா தே ஜாதா சேத் கி (கிமிவ) நஹி லப்யம் தநுப்ருதாம்
மதீயக்லேசெள'க -ப்ரச'மநதசா'நாம கியதி!
ந கே கே லோகேsஸ்மின் அநிச'மயி சோ'காபிரஹிதா;
பவத்பக்தா முக்தா:ஸுககதி-மஸக்தே விதததே!!

பொருள்:-
***********
இறைவனே குருவாயூரப்பா! உன் அருளால் தேகத்தை அடைந்தவர்களுக்கு முடியாதது என்று என்ன இருக்கின்றது?என் துன்பங்களை அகற்றுவது உனக்கு அரிதன்று.இவ்வுலகில் உன் பக்தர்கள் எத்தனைபேர்கள் எப்போதும் துன்பமற்றவர்களாகவும், முக்தர்களாகவும்,பற்றற்றவர்களாகவும் இன்பநிலையை அடைகிறார்கள்?

க்ருஷ்ணார்ப்பணம்.
           (தொடரும்.....)


ஸ்ரீ விக்னேஸ்வராய
********************** நமஹ:
********
ஸ்ரீ நாராயணீயம்.....
*********************
ஓர் மாமருந்து.....
*******************
தசகம்....3
-----------------
ஸ்லோகம்.....4
-------------------------

முநிப்ரெளடா ரூடா: ஜகதி கலுகூடாத்மகதய:
பவத்பாதாம்போஜ ஸ்மரண விருஜோ நாரதமுகா:!
சரந்தீச'ஸ்வைரம் ஸதத பரநிர்பாதபரசித் 
ஸதானந்தாத்வைத -
ப்ரஸர-பரிமக்நா:கிமபரம்!!

பொருள்:-
---------------
ஈசனே! நாரதர் போன்ற மகாமுனிவர்கள் அறியமுடியா ஆன்ம அறிவைப் பெற்று உலகில் புகழ்பெற்றவர்கள்.உன் திருவடித் தாமரைகளை துதிப்பதால் துன்பத்தை ஒழித்தவர்கள்.எப்போதும் ஒளிரும் சச்சிதானந்த வடிவில் மூழ்கி திளைப்பவர்கள்.அதனாலன்றோ தம் விருப்பம் போல் உலகெங்கும் சஞ்சரிக்கின்றனர்.இதைவிட அவர்களுக்கு வேறென்ன வேண்டும்?

க்ருஷ்ணார்ப்பணம்.
          (தொடரும்......)


ஸ்ரீ விக்னேஸ்வராய
********************** நமஹ:
********
ஸ்ரீ நாராயணீயம்.....
*********************
ஓர் மாமருந்து.....
*******************
தசகம்....3
-----------------
ஸ்லோகம்.....4
-------------------------

முநிப்ரெளடா ரூடா: ஜகதி கலுகூடாத்மகதய:
பவத்பாதாம்போஜ ஸ்மரண விருஜோ நாரதமுகா:!
சரந்தீச'ஸ்வைரம் ஸதத பரநிர்பாதபரசித் 
ஸதானந்தாத்வைத -
ப்ரஸர-பரிமக்நா:கிமபரம்!!

பொருள்:-
---------------
ஈசனே! நாரதர் போன்ற மகாமுனிவர்கள் அறியமுடியா ஆன்ம அறிவைப் பெற்று உலகில் புகழ்பெற்றவர்கள்.உன் திருவடித் தாமரைகளை துதிப்பதால் துன்பத்தை ஒழித்தவர்கள்.எப்போதும் ஒளிரும் சச்சிதானந்த வடிவில் மூழ்கி திளைப்பவர்கள்.அதனாலன்றோ தம் விருப்பம் போல் உலகெங்கும் சஞ்சரிக்கின்றனர்.இதைவிட அவர்களுக்கு வேறென்ன வேண்டும்?

க்ருஷ்ணார்ப்பணம்.
          (தொடரும்......)




ஸ்ரீ விக்னேஸ்வராய
********************* நமஹ:
*******
ஸ்ரீ நாராயணீயம்......
***********************
ஓர் மாமருந்து.......
********************
தசகம்.....3
------------------
ஸ்லோகம்......5
-------------------------

பவத்பக்தி:ஸ்ஃபீதா பவது மம சைவ ப்ரச'மேயத் 
அசே'ஷக்லேசெள'கம் ந கலு சந்தேக கணிகா!
ந சேத்வ்யாஸஸ்யோக்தி: தவ ச வசனம் நைகமவச:
பவேந்மித்யா ரத்யா புருஷ வசன ப்ராயமகிலம்!!

பொருள்:-
-----------------
குருவாயூரப்பா! எனக்கு உன்னிடத்தில் உள்ள பக்தி முழுமையாக இருக்க வேண்டும்.அதுதான் எல்லா துன்பங்களையும் வேறறுக்கும்.இதுபற்றி சிறிதளவும் ஐயமில்லை. அப்படியில்லையென்றால் வ்யாஸரின் சொல்லும், உன் உபதேசமும்,வேத வாக்கியங்களும் எல்லாம் ஏதும் அறியா பாமரனின் பேச்சைப்போல் பொய்யாக அல்லவா ஆகிவிடும்!!


ஸ்ரீ விக்னேஸ்வராய
********************** நமஹ:
********
ஸ்ரீ நாராயணீயம்.....
**********************
ஓர் மாமருந்து.......
********************
தசகம்...3
----------------
ஸ்லோகம்......6
---------------------------

பவத்பக்திஸ்-தாவத் ப்ரமுகமதுரா த்வத்குணரஸாத்
கிமப்யாரூடா சேத் அகில- பரிதாப- ப்ரச'மநீ!
புநச்'சாந்தே ஸ்வாந்தே விமலபரிபோததயமிளந்
மஹாநந்தாத்வைதம் திச'தி கிமத :ப்ரார்த்தய-மபரம்!!

குறிப்பு:-
-------------
ச' ......என்று வரும் இடங்களில் Sha என்று உச்சரிக்கவும்.

பொருள்:-
---------------
உன்னிடம் செலுத்தப்படும் பக்தியானது உன் குணங்களை கேட்பதனால் உண்டாகும் சுவையினால் ஆரம்பித்திலேயே சுவையாக உள்ளது.அப்பக்தியே சிறிது சிறிதாக வளர்ந்து எல்லாதுன்பங்களையும் ஒழிக்கிறது.முடிவில் தூய்மையான அறிவின் தோற்றத்தோடு கூடிய ப்ரம்மானந்தத்தில் இரண்டறக் கலக்கிறது.இதற்கு மேல் என்ன வேண்டும்?

க்ருஷ்ணார்ப்பணம்.
          (தொடரும்.....)




ஸ்ரீ விக்னேஸ்வராய
********************* நமஹ:-
*******
ஸ்ரீ நாராயணீயம்.....
***********************
ஓர் மாமருந்து......
*******************
தசகம்.....3
------------------
ஸ்லோகம்......7
--------------------------
விதூய க்லேசா'ந் மே குரு சரணயுக்மம் த்ருதரஸம்
பவேத்க்ஷேத்ர ப்ராப்தெள கரமபி ச தே பூஜநவிதெள !
பவந்மூர்த்யாலோகே நயநமதே பாததுளசி 
பரிக்ராணே க்ராணம் ச்'ரவணமபி தே சாருசரிதே!!

குறிப்பு:-
-------------
ச'.....வரும் இடங்களில் Sha என்று உச்சரிக்கவும்.

பொருள்:-
----------------
குருவாதபுரியீசா!
துன்பங்களைவிலக்கி என் கால்கள் உன் திருக்கோவிலையே நாடவேண்டும்.கைகள் உன்னையே வழிபட வேண்டும்.கண்கள் உன்திருவுருவையே கண்டுகளிக்க வேண்டும்.மூக்கு உன் திருவடித்தாமரையிலுள்ள துளசியின் மணத்தை நுகர வேண்டும்.காதுகள் உன் திவ்ய சரித்திரத்தையே கேட்க வேண்டும்.ஆகையால் இவற்றிலெல்லாம் என் 
கைகள் கால்கள் காதுகள் கண்கள் நாசி ஆகியவை சுவைபெறும்படி நீயே செய்தருள வேண்டும்.

க்ருஷ்ணார்ப்பணம்.
     (தொடரும்......)


ஸ்ரீ விக்னேஸ்வராய
********************** நமஹ:
*******
ஸ்ரீ நாராயணீயம்......
***********************
ஓர் மாமருந்து.....
******************-
தசகம்....3
----------------
ஸ்லோகம்.....8
-------------------------
ப்ரபூதா திவ்யாதி-ப்ரசபசலிதே மாமகஹ்ருதி
த்வதீயம் தத்ரூபம் பரமரஸ-சித்ரூபமுதியாத்!
உதஞ்சத் ரோமாஞ்சோ
களித-பஹு ஹர்ஷாச்'ருநிவஹோ
யதா விஸ்மர்யாஸம் 
துருபச'மபீடா-பரிபவாந்!!

பொருள்:-
----------------
குருவாயூரப்பனே! என்னை ஆனந்தக் கண்ணீர் பெருகவும் மயிர்க்கூச்செரியவும் செய்து நீக்கமுடியாத துன்பங்களை நான் மறக்கும்படி அருளவேண்டும்.மிகுந்த கவலைகளாலும் நோயாலும் சோர்ந்திருக்கின்ற என் மனதில் உயர்ந்த சச்சிதானந்த வடிவமாயுள்ள உன் திருவுருவமே தோன்றவேண்டும்.

க்ருஷ்ணார்ப்பணம்..
       (தொடரும்.....)


ஸ்ரீ விக்னேஸ்வராய
***********************
நமஹ:
*******
ஸ்ரீ நாராயணீயம்.....
*********************
ஓர் மாமருந்து.....
*******************
தசகம்.....3
------------------
ஸ்லோகம்.......9
---------------------------

மருத்கேஹாதீசா'  த்வயி கலு பராஞ்சோsபி ஸுகின:
பவத்ஸ்நேஹி ஸோsஹம் ஸூபஹுபரிதப்யே ச கிமிதம்!
அகீர்திஸ்தே மாம் பூத் வரத கத பாரம் ப்ரச'மயந்
பவத்-பக்தோத் தம்ஸம் ஜடிதி குரு மாம் கம்ஸதமன!!

பொருள்:-
---------------
குருவாயூரின் தலைவனே! உன்னைப் பொருட்படுத்தாதவர்கள் கூட இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்க உன்னிடம் பக்தி கொண்ட நானோ மிகவும் வருந்துகிறேனே! இது ஏன்? வரதனே! பக்தனை காக்கவில்லை என்ற பழிச்சொல் உனக்கு  உண்டாக வேண்டாம். கம்ஸனை கொன்றவனே! அதற்காகவாவது என் நோய்களையகற்றி என்னை உன் பக்தர்களுள் சிறந்தவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

க்ருஷ்ணார்ப்பணம்.
      (தொடரும்.....)


ஸ்ரீ விக்னேஸ்வராய
**********************
நமஹ:
********
ஸ்ரீ நாராயணீயம்.....
**********************
ஓர் மாமருந்து......
********************
தசகம்.....3
-----------------
ஸ்லோகம்......10
----------------------------

கிமுக்தைர் பூயோபி: தவ ஹி கருணா யாவதுதியாத் 
அஹம் தாவத்தேவ ப்ரஹித விவிதார்த்த ப்ரலபித:!
புர:க்லுப்தே பாதே வரத தவ நேஷ்யாமி திவஸான்
யதாச'க்தி வ்யக்தம் 
நதி-நுதி-நிஷேவா விரசயன்!!

பொருள்:-
----------------
தேவனே! குருவாயூரப்பனே! மிகுதியாகச் சொல்வதால் என்ன பயன்? வரதனே! உனக்கே என்னிடம் அருள் உண்டாகிறபோது உண்டாகட்டும்.அதுவரையில் பலவாறு புலம்புவதை விடுத்து என் முன்னே விளங்கும் உனது திவ்ய திருவடிகளில் எனது சக்திக்கு தக்கவாறு தோத்திரம், வணக்கம்,வழிபாடு முதலியவற்றைச் செய்துகொண்டு எனது வாழ்நாட்களைக் கழிப்பேன்.

க்ருஷ்ணார்ப்பணம்.
      (தொடரும்......)


No comments:

Post a Comment